Sunday, January 23, 2022

MOOKA PANCHA SATHI

 மூக பஞ்ச சதி   -  நங்கநல்லூர்  J  K  SIVAN 

ஸ்லோகங்கள்  41-50

बाधाकरीं भवाब्धेराधाराद्यम्बुजेषु विचरन्तीम् ।
आधारीकृतकाञ्ची बोधामृतवीचिमेव विमृशामः ॥ ४१॥

41. Bhaadhaa karim bhavabdhe aadhara dhyambujeshu vicharantheem,
AAdharee krutha kancheem bodhamrutha veecheemeva vimrusaam.

பாதாகரீம் பவாப்தேராதாராத்யம்புஜேஷு விசரன்தீம் |
ஆதாரீக்றுதகாஞ்சீ போதாம்றுதவீசிமேவ விம்றுஶாமஃ ||41||

காமாட்சியின்  அருளாசியினால் தான்  ஸம்ஸார  சாகரத்திலிருந்து  விடுபட்டு கரையேற முடியும்.  அந்த ஸம்ஸார  இடையூறுகளை, தடைகளை  விலக்கும் சக்தி அவளுக்கு மட்டுமே உண்டு.  அம்பாள்  மூலாதாரம் போன்ற சக்ரங்களில் வாசம் செய்பவள்.  அவளையே குண்டலினி ரூபிணி என்று சொல்வதுண்டு.  காஞ்சிபுரத்தை  வாசஸ்தலமாக கொண்டு  சஞ்சரிப்பவள்.   ஞானாம்ருத  சமுத்ரத்தின் அலைகளாக காட்சி தருபவள். அம்பாள் ஞானாக்நி.  அவளை தரிசித்து தியானம் செய்வோம்.

कलयाम्यन्तः शशधरकलयाऽङ्कितमौलिममलचिद्वलयाम् ।
अलयामागमपीठीनिलयां वलयाङ्कसुन्दरीमम्बाम् ॥ ४२॥

42. Kalayamyantha sasa dhara kalayankitha moulim amala chid valayaam,
Alayaam aagama peeta nilayam valayanga sundharim Ambaam.

கலயாம்யந்தஃ ஶஶதரகலயா‌உங்கிதமௌலிமமலசித்வலயாம் |
அலயாமாகமபீடீனிலயாம் வலயாங்கஸுன்தரீமம்பாம் ||42||

அம்பிகை  சந்திரனுடைய  கலைகளாலான  பளபள வென்று  ஜொலிக்கும் கிரீடத்தை அணிந்து கொண்டு அதற்கு  மேலும் அதிகமான ஒளியூட்டுபவள். நிர்மலமான சித்தத்தை கொண்டவள்.  பரத் திலேயே சிந்தனை உடையவள். ஞானஸ்வரூபிணி, அழிவற்றவள், நிரந்தரமானவள், வேதங்களை பீடமாக கொண்டு  அமர்ந்தவள்,  பாரதியார் இதை தான் வேதத்தின் உட்பொருளாவாள் என்று பாடினார், கலகலவென ஒலிக்கும்  வளைகளை  அணிந்த  அழகிய கரங்களை கொண்டவள்.  ஜகன்மாதா,  என் மனதில் என்றும் குடிகொண்டு உன்னை நான் தியானம் செய்ய அருள வேண்டு கிறேன்.

शर्वादिपरमसाधकगुर्वानीताय कामपीठजुषे ।
सर्वाकृतये शोणिमगर्वायास्मै समर्प्यते हृदयम् ॥ ४३॥

43. Sarvaadhi parama sadhaka gurvaaneethaya kama peeta jushe,
Sarvaa krythaye sonima garvaaya samarpyathe hrudayam.

ஶர்வாதிபரமஸாதககுர்வானீதாய காமபீடஜுஷே |
ஸர்வாக்றுதயே ஶோணிமகர்வாயாஸ்மை ஸமர்ப்யதே ஹ்றுதயம் ||43||

அம்பிகே,  உனக்கு எத்தனையோ  பக்தர்கள் சாதகர்கள், உபாசகர்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும் பிரதம உபசாகர் ஆதி குரு ,  ஆதி நாதர், முதல்  உபாசகர்  என்று போற்றப்படும் பரமேஸ்வரன் தான்.  உயர்ந்த காமகோடி பீட நிவாஸினியே , பரமேஸ்வரன்  சக்தி சிவம் எனும் இரு அம்சங்களாக, சிஷ்ய பாவத்தோடு இருந்து உபாசிப்பது உன்னையல்லவா?  குருமண்டலத்தை  விவரிக்கும்போது  சதாசிவ ஸ்மாரம்பம் என்று தானே சொல்கிறோம்.   சிவந்த நிறமுடைய  தாயே, உனக்கு என் ஹ்ருதயத்தை அர்ப்பணிக்கிறேன்.

समया सान्ध्यमयूखैः समया बुद्धया सदैव शीलितया ।
उमया काञ्चीरतया न मया लभ्यते किं नु तादात्म्यम् ॥ ४४॥

44. Samayaa saandhyama yukhia, samayaa budhyaa sadaiva sheelathayaa,
Umayaa Kanchi rathayaa na mayaa labhyetha kim nu thadhathmyam.

ஸமயா ஸான்த்யமயூகைஃ ஸமயா புத்தயா ஸதைவ ஶீலிதயா |
உமயா காஞ்சீரதயா ன மயா லப்யதே கிம் னு தாதாத்ம்யம் ||44||

அம்பா,  நீ சந்தியா காலத்தில், தகதக வென  பொன்னிறத்தில் ஜொலிக்கும் சூரிய கிரணங்கள் போன்றவள். எண்களைப்போல் எப்போதும்  மாறி மாறி  தவிக்கும் மனதைப் போல் இல்லாமல் , என்றும் ஒரே நிலையான, சமமான மனதை, புத்தியை கொண்டவள்,  சதா ஸர்வ காலமும் பக்தர்களால்  உபாசிக்கப் படுபவள்,  காஞ்சி க்ஷேத்ரத்தின் மீது தனியாக  ஒரு அபிமானம், பிரியம் கொண்டவளே, உமாதேவியே, உன்னோடு ஐக்யமாகவும் பாக்யம் எனக்கு கிடைக்குமா? 

जन्तोस्तव पदपूजनसन्तोषतरङ्गितस्य कामाक्षि ।
वन्धो यदि भवति पुनः सिन्धोरम्भस्सु बम्भ्रमीति शिला ॥ ४५॥

45. Janthothsava pada poojana santhosha ragithasya kamakshi,
Bandho yaadhi bhavathi puna sindhorambhasu babrameethi shilaa.

ஜந்தோஸ்தவ பதபூஜனஸன்தோஷதரங்கிதஸ்ய காமாக்ஷி |
வன்தோ யதி பவதி புனஃ ஸின்தோரம்பஸ்ஸு பம்ப்ரமீதி ஶிலா ||45||

அம்மா,  நான் ஒரு பிராணி.  உனது தாமரைத் திருப்பாதங்களை பணியும் வழிபடும்  சந்தோஷம் நிறைந்த ப்ராணி. உன் பாதம் பணிவோர்க்கு  மறு பிறவி, புனர்ஜன்மம் உண்டு என்று யார் சொல்லமுடியும்?  அப்படிச்சொன்னால், அது  ஜலத்தில் பெரிய  கற்பாறை மிதக்கும் என்று சொல்வது போல் அசம்பாவிதமாக அல்லவோ இருக்கும்?

कुण्डलि कुमारि कुटिले चण्डि चराचरसवित्रि चामुण्डे ।
गुणिनि गुहारिणि गुह्ये गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि ॥ ४६॥

46. Kundali Kumaari Kutile Chandi Chara chara savithriChamunde,
Guninee Guhaarini guhye Guru murthe thwam namami Kamakshi.

குண்டலி குமாரி குடிலே சண்டி சராசரஸவித்ரி சாமுண்டே |
குணினி குஹாரிணி குஹ்யே குருமூர்தே த்வாம் னமாமி காமாக்ஷி ||46||

காமாக்ஷி அம்பிகே,  ஆஹா  எவ்வளவு அழகிய தாடங்கங்களை, செவியில் அணிந்து அழகுக்கு  அழகூட்டுகிறாய். பச்சிளம்குழந்தையாக, பாலையாக  உன்  திவ்ய சௌந்தர்யம் மனதை கொள்ளை கொள்கிறதம்மா.  குண்டலினி ஸ்வரூபியே, நீயல்லவோ, பூவுலகில் சகல  தாவர ஜங்கம  வஸ்துக்களும் உயிரினங்களும் தோன்ற காரணமானவள் . அவற்றை ரக்ஷிப்பவள்.  புஜகநிபம்  அத்யுஷ்டவலயம் என்று சொல்லும்படியான  மூன்று சுற்றுகளைக் கொண்டு சுருண்டு நிற்கும்
 ஸர்ப்பம் போன்ற குண்டலினி தேவி, சண்டியாக  பக்தர்களின் விரோதிகளை அழிப்பவளே, சாமுண்டேஸ்வரி, த்ரிகுணங்களையும் தன்னில் கொண்டவளே,  அஞ்ஞான இருள் போக்குபவளே , ஹ்ருதய குகையில் வாசம் செய்பவளே, சகல தேவ தேவதைகளுக்கும்  குருவே,  காஞ்சி காமாக்ஷி உன்னை தியானித்து வணங்குகிறேன் அம்மா.

अभिदाकृतिर्भिदाकृतिरचिदाकृतिरपि चिदाकृतिर्मातः ।
अनहन्ता त्वमहन्ता भ्रमयसि कामाक्षि शाश्वती विश्वम् ॥ ४७॥


47. Abhidha kruthlr bhidha kruthir, achidhakruthir api chida kruthir matha,
Anahantha thwamahantha bramayasi Kamakshi saswathi viswam.

அபிதாக்றுதிர்பிதாக்றுதிரசிதாக்றுதிரபி சிதாக்றுதிர்மாதஃ |
அனஹன்தா த்வமஹன்தா ப்ரமயஸி காமாக்ஷி ஶாஶ்வதீ விஶ்வம் ||47||

शिव शिव पश्यन्ति समं श्रीकामाक्षीकटाक्षिताः पुरुषाः ।
विपिनं भवनममित्रं मित्रं लोष्टं च युवतिबिम्बोष्ठम् ॥ ४८॥

அம்பாள்  பேதமில்லாதவளாகவும், பேதங்கள் உள்ளவளாகவும்,   சித்  ஸ்வரூபிணியாகவும்,   சித்  ரூபமே இல்லாதவளாகவும்,  அஹங்காரமே  உருவானளாகவும், அஹங்காரம் சற்றும் இல்லாதவளாகவும், பல வித குணங்கள் உடையவளாக, நிர்குணமாகவும்  உள்ள  சாஸ்வத  மாய ஜகத் காரிணி.  ஒரு சிறந்த நடிகை  பல வித  குணாதிசயங்களை காட்டுபவது  போல் அல்லவா காமாக்ஷி காட்சி தருகிறாள்.

48. Shiva shiva pasyanthi samam Sri Kamakskshi kadakshitha purusahaa,
Vipinam bhavana mithram loshtam cha yuvathi bimbhoshtam.

ஶிவ ஶிவ பஶ்யன்தி ஸமம் ஶ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதாஃ புருஷாஃ |
விபினம் பவனமமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதிபிம்போஷ்டம் ||48||

அம்பாள்  காமாக்ஷி தேவியின் கடாக்ஷம் ஒரு பக்தனுக்கு கிடைத்துவிட்டால்  அவன் முற்றிலும் மாறிவிடுகிறான்.  காடு வீடாகிறது. எதிரி, சத்ரு  நண்பனாகிறான்,  பெண்கள் கவர்ச்சி அவனை துளியும்  ஈர்க்காமல்  ஏதோ  ஒரு   ஓட்டாஞ்சல்லியை பார்ப்பது போல் பண்ணிவிடுகிறது என்கிறார் மூகர் .   

कामपरिपन्थिकामिनि कामेश्वरि कामपीठमध्यगते ।
कामदुघा भव कमले कामकले कामकोटि कामाक्षि ॥ ४९॥

49. Kama pari pandhi kamini Kameswari Kama peeta madhya gathe,
Kamadughaa bhava kamale Kamakale kama koti kamakshi.

காமபரிபன்திகாமினி காமேஶ்வரி காமபீடமத்யகதே |
காமதுகா பவ கமலே காமகலே காமகோடி காமாக்ஷி ||49||

அம்பாள்  சிதாக்னி  குண்டத்திலிருந்து வெளிப்பட்டது, தேவர்களுக்கு கவலை வந்துவிட்டது, இவளுக்கு யார்  தகுந்த கணவனாகமுடியும் என்றபோது தான் காமேஸ்வரனாக  பரமேஸ்வரன் தோன்றுகிறான்.   பரமேஸ்வர நாயகியும்,  காமராஜ  பீடத்தன் மத்தியில் உள்ளவளும், காமகோடி என்ற பெயரை அடைந்தவளுமான, மஹா லட்சுமி ஸ்வரூபியே,   காமாக்ஷி தேவி, என் விருப்பங்களை அனுகிரஹித்து  அருள் புரியவேண்டும்.   காஞ்சி யில் உள்ள பிலத்துக்கு காமகோடி என்று பெயர். ஸர்வ  தீர்த்தத்துக்கு மூன்று அம்சம் தள்ளி, ஈசான்ய பாகத்தில், காமாக்ஷி ஆலயத்தில்  உள்ளது. அதற்கு  காமகோடி என்பதைத் தவிர பல வேறு பெயர்களும் உண்டு.  காஞ்சியில் பெரிய பிரதேசம் காமகோஷ்டம் எனும் காமகோடி. ருத்ர சாலைக்கும் விஷ்ணு சாலைக்கும் நடுவே பெரிய அளவில் உள்ளது. பஞ்சபாண நிகேதனம் என்ற பெயரும் உண்டு.    காஞ்சியின் நடுவே, மத்ய , பிரதேசம்.   காமாக்ஷி ஆலயம் உள்ள இடம். இங்கு யார்  தங்கள் இஷ்ட தேவதையின் மந்த்ரங்களை  ஜெபிக் கிறார்களோ அவர்கள் எதை விரும்பினாலும் பெறுவார்கள்.   காமகோடி என்ற பதமே  மோக்ஷத்தை தருவது. மோக்ஷத்தை குறிப்பிடுவது.  அந்த பெயரே அங்கு குடியிருக்கும் காமாக்ஷிக்கும்  ஆகிவிட்டது. 

मध्येहृदयं मध्येनिटिलं मध्येशिरोऽपि वास्तव्याम् ।
चण्डकरशक्रकार्मुकचन्द्रसमाभां नमामि कामाक्षीम् ॥ ५०॥

50. Madhye hrudayam madhye nitilam madhye siro aapi vasthavyam,
Chanda kara sakra karmuka chandra samaabhaam namami kamakshim.

மத்யேஹ்றுதயம் மத்யேனிடிலம் மத்யேஶிரோ‌உபி வாஸ்தவ்யாம் |
சண்டகரஶக்ரகார்முகசன்த்ரஸமாபாம் னமாமி காமாக்ஷீம் ||50||

உண்மையான பக்தனின் சரீரத்தில் காமாக்ஷி உறைகிறாள்.  ஹ்ருதயத்தில் மத்தியில்  சூர்யன் போலவும், , நெற்றியின் நடுவே இந்திரனின் வில், தனுசுவைப் போலவும்,  சிரசின் நடுவே சந்திரன் போல காந்தி யுடையவளாகவும்  உள்ளவளே , காமாக்ஷி தேவி,  உன்னை நமஸ்கரிக்கிறேன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...