Wednesday, January 26, 2022

MOOKA PANCHASATHI

 

மூக பஞ்சசதி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஆர்யா சதகம் -  ஸ்லோகங்கள்  51-60 


अधिकाञ्चि केलिलोलैरखिलागमयन्त्रतन्त्रमयैः ।
अतिशीतं मम मानसमसमशरद्रोहिजीवनोपायैः ॥ ५१॥

51. Adhikanchi keli lolai akhilaagama yanthra manthra thanthra mayai,.
Athi seetham mama maanasam sasama saradrohi jeevanopayai

அதிகாஞ்சி கேலிலோலைரகிலாகமயன்த்ரதன்த்ரமயைஃ |
அதிஶீதம் மம மானஸமஸமஶரத்ரோஹிஜீவனோபாயைஃ ||51||

அம்பாள் காமாக்ஷிக்கு காஞ்சிபுரம்  என்றால்  ரொம்ப  பிரியம்.  அந்த  இளைய குழந்தை, பாலை, (BAALA )  அங்கே  விளையாட மிகவும் விருப்பமானவள்.  அவளே  மிகச்  சிறந்த  மந்த்ர, தந்த்ர, யந்த்ரங்களாகவும்,  ஸர்வ வேத சாஸ்த்ர பொருளாகவும் காமத்தை எல்லோர் மனத்திலும் புகுத்தும் மன்மதனை எதிர்ப்பவரான பரமேஸ்வரனின்  ப்ராண மூச்சாகவும் உள்ளவள் காமாக்ஷி தேவி.  அவளை நினைக்கும்போதே என் மனம் ஆனந்தமாக குளிர்கிறது. 

नन्दति मम हृदि काचन मन्दिरयन्ता निरन्तरं काञ्चीम् ।

इन्दुरविमण्डलकुचा बिन्दुवियन्नादपरिणता तरुणी ॥ ५२॥


52. Nandhathi mama hrudhi kaachana mandhirayanthi nirantharam Kanchim,
Indhu ravi mandala kuchaa bindu viyan nnadha parinatha tharuni.

நந்ததி  மம ஹ்றுதி காசன மன்திரயன்தா னிரன்தரம் காஞ்சீம் |
இந்து ரவிமண்டலகுசா பின்துவியன்னாதபரிணதா தருணீ ||52||

காமாக்ஷி அம்பாள், காஞ்சிநகரத்தை  தனது நிரந்தர  வாசஸ்தலமாக கொண்டவள். சூர்ய சந்திரர்களை மார்பில் கொண்டவள், நேத்ரமாக கொண்டவள், தாடங்கங்களாக கொண்டவர்கள் என்று சொல்வது வழக்கம்.  வ்யோம,  பிந்து,  நாதத்தை  வெவ்வேறு  ரூபமாக கொண்டவள்.  வேதங்களில்  பரமேஸ்வரனை  ஸுக்ல பிந்து ரூபமாகவும், காமாக்ஷியை சோண பிந்து ரூபமாகவும்,  அவர்கள் இருவரின்  பரஸ்பர  சம்பந்தத்தால், மிஸ்ர பிந்து வியோம,  பிந்து, நாதம் பிறந்து அதுவே  ஜகத் காரணமாக ஆகிவிட்டது  என  சொல்லப்பட்டுள்ளது.    மொத்தத்தில் எல்லாமே  அம்பாளின் பரிமாணங்கள் தான். 

शम्पालतासवर्णं सम्पादयितुं भवज्वरचिकित्साम् ।
लिम्पामि मनसि किंचन कम्पातटरोहि सिद्धभैषज्यम् ॥ ५३॥

53. Sampa latha savarnam sampaadayithum bhava jwara chikithsam,
Limpaami manasi kinchana kampathata rohi sidha baishajyam.

ஶம்பாலதாஸவர்ணம் ஸம்பாதயிதும் பவஜ்வரசிகித்ஸாம் |
லிம்பாமி மனஸி கிம்சன கம்பாதடரோஹி ஸித்தபைஷஜ்யம் ||53||

ஸம்ஸார துக்கம்  ஒரு பெரிய  வியாதி, அதற்கு ஒரே மருந்து, ஒளஷதம், அம்பாள் காமாட்சியின் திருப்பாதங்கள். மின்னல் கொடி போல் ஒளி வீசும் கம்பெனி தீரத்தில் அவதரித்த அந்த அம்பாள் எனும்  திவ்ய மருந்தை எப்படி  உபயோகப்படுகிறேன் தெரியுமா?   கடும் ஜுரம் வந்தால் எப்படி மருந்தை உடம்பெல்லாம் பூசிக்கொள்வேனோ அப்படி  அம்பாள் திருநாமத்தை உருவத்தை  மனது  நிறைய  பூசிக்கொள்வேன்.  அப்புறம் என்ன?  ஸம்ஸார தாபம், வியாதி பறந்து விடாதா?

अनुमितकुचकाठिन्यामधिवक्षःपीठमङ्गजन्मरिपोः ।
आनन्ददां भजे तामानङ्गब्रह्मतत्वबोधसिराम् ॥ ५४॥

54. Anumitha kucha katinyaam adhi vaksha peetam anga janma ripo,
Anandhadhaam bhaje Aananga brahma Thathwa botha siraam.

அனுமிதகுசகாடின்யாமதிவக்ஷஃபீடமங்கஜன்மரிபோஃ |
ஆனன்ததாம் பஜே தாமானங்கப்ரஹ்மதத்வபோதஸிராம் ||54||

மன்மதன் மனது சம்பந்தப்பட்டவன் .  மனதினால் தான் காமம் காதல் என்றெல்லாம் ஒருவன்  ஒருவளிடம்  தன்னை இழக்கிறான். அப்படி மனதை வசியப்படுத்துபன் மன்மதன், காமன், அவனுக்கு  அங்கன் என்று பெயர், அங்கம்  என்றால் மனது என்றும் ஒரு அர்த்தம். மனதை  வேறு ஒரு வஸ்துவை நாட, கவரச் செய்வதால், மனஸிஜன் என்றும் அவனுக்கு பெயர்.  பரமேஸ்வரன்,  காமேஸ்வரன் மனதில்  முழுதும் நிறைந்தவளான  காமாக்ஷி தேவியை  தியானித்து நமஸ்கரிக்கிறேன்.

ऐक्षिषि पाशाङ्कुशधरहस्तान्तं विस्मयार्हवृत्तान्तम् ।
अधिकाञ्चि निगमवाचां सिद्धान्तं शूलपाणिशुद्धान्तम् ॥ ५५॥

55. Iykshishi pasangusa dhara hathanthaam, vismayarha vruthaanthaam,
Adhi Kanchi nigama vaachaam sidhantham soola pani shuddhanthaam.

ஐக்ஷிஷி பாஶாங்குஶதரஹஸ்தான்தம் விஸ்மயார்ஹவ்றுத்தான்தம் |
அதிகாஞ்சி னிகமவாசாம் ஸித்தான்தம் ஶூலபாணிஶுத்தாந்தம்  ||55||

காமாக்ஷி எனும் ஸ்ரீ லலிதை எப்படிப்பட்டவள் !  அவளது சரித்திரம் அற்புதமானது. மிக பலம் வாய்ந்த எவராலும் வெல்லமுடியாத  பண்டாசுரன், மஹிஷாசுரன்  போன்ற ராக்ஷஸர்களை வென்று  அருமையான சரித்திரம் படைத்தவள்.  சகல வேதங்களின் முடிவும்   ஸாரமு மானவள் ,   திரிசூலம் பினாகம் தரித்த பிநாகபாணி பரமேஸ்வரனே போற்றி மகிழும்  பார்வதி தேவி.  கரங்களில் பாசம் அங்குசம் தரித்தவள்.  காஞ்சிபுர வாஸினி  ஹிமவான் குலரத்னம் அம்பாளை நமஸ்கரிக்கிறேன். 

आहितविलासभङ्गीमाब्रह्मस्तम्बशिल्पकल्पनया ।
आश्रितकाञ्चीमतुलामाद्यां विस्फूर्तिमाद्रिये विद्याम् ॥ ५६॥

56. Aahitha vilasa bangeem Aabrahma sthambha shilpas kalpanaya,
Aasritha Kanchim athulaam aadhyaam visphoorthi maadriye vidhyaam.

ஆஹிதவிலாஸபங்கீமாப்ரஹ்மஸ்தம்பஶில்பகல்பனயா |
ஆஶ்ரிதகாஞ்சீமதுலாமாத்யாம் விஸ்பூர்திமாத்ரியே வித்யாம் ||56||

ப்ரளயத்தில்  மறைந்த  அனைத்து ஜீவன்களும் மீண்டும்  புத்துயிர் பெற்று வளர்ந்து வாழ காரணமாக இருப்பவள் அம்பாள் ஒருவளே .  புழு முதல் பிரம்மன் வரை  அனைத்து ஜீவன்களும் தோன்ற காரணம் அவளே.  உஷ்ணம் ஏற்பட்டு பால் எப்படி பொங்குமோ  அப்படி அவளிடமிருந்து உருவானவையே சகல ஜீவராசிகளும். அவள் மாயை,   காஞ்சியை அரசாளும்  காமாக்ஷி மஹாராணி. பரமேஸ்வரன் உள்ளத்தை கொள்ளை கொண்டவள். அவளை நமஸ்கரிக்கிறேன்.

मूकोऽपि जटिलदुर्गतिशोकोऽपि स्मरति यः क्षणं भवतीम् ।
एको भवति स जन्तुर्लोकोत्तरकीर्तिरेव कामाक्षि ॥ ५७॥

57. Mookopi jatila durgathi , sokopi smarathi ya kshanam bhavatheem,
Yeko bhavathi sa janthur lokothara keerthiriva Kamakshi.

மூகோ‌உபி ஜடிலதுர்கதிஶோகோ‌உபி ஸ்மரதி யஃ க்ஷணம் பவதீம் |
ஏகோ பவதி ஸ ஜன்துர்லோகோத்தரகீர்திரேவ காமாக்ஷி ||57||

அம்மா, உன் மஹிமையை என்னவென்று சொல்வேன்?  வாய் பேசாத ஊமையை, அஞ்ஞான இருளில்,  இருண்ட காட்டில்,  வாடி  துன்பமுற்று தவிக்கிறதோ,அதைக்கூட,   ஒரு கணம் மனதில் உன்னை நினைத்தால்  பேசவைத்து, சகல கஷ்டங்களிலிருந்தும் விடுவித்து, உலகில் மென்மையோடு புகழோடு வாழவைப்பவள் அல்லவா நீ! உன்னை தியானிக்கிறேன். நமஸ்கரிக்கிறேன்.

पञ्चदशवर्णरूपं कंचन काञ्चीविहारधौरेयम् ।
पञ्चशरीयं शम्भोर्वञ्चनवैदग्ध्यमूलमवलम्बे ॥ ५८॥

58. Pancha dasa varna roopaam kanchana Kaanchi vihara dhoureyam,
Pancha sareeyam SAmbho vanchana vaidakdhya moolam avalambe

பஞ்சதஶவர்ணரூபம் கம்சன காஞ்சீவிஹாரதௌரேயம் |
பஞ்சஶரீயம் ஶம்போர்வஞ்சனவைதக்த்யமூலமவலம்பே ||58||

அம்பாளுக்கு  பஞ்சதசாக்ஷரி என்று ஒரு நாமம். லலிதா சஹஸ்ரநாமத்திலும் வரும்.  காஞ்சிக்ஷேத்ரத்தில்  லீலைகள் புரிபவள்.  மன்மதனை விட  சிறந்த காமரூபிணியாக  காமேஸ்வரனை தன் வயப்படுத்திய சாமர்த்திய சாலி. அம்பா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

परिणतिमतीं चतुर्धा पदवीं सुधियां समेत्य सौषुम्नीम् ।
पञ्चाशदर्णकल्पितमदशिल्पां त्वां नमामि कामाक्षि ॥ ५९॥

59. Parinathivathim chathrdhaa padavim sudhiyaam samethya soushumneem,
Panchasatharna kalpitha pada shilpaamthwaam namami Kaamakshi.

பரிணதிமதீம் சதுர்தா பதவீம் ஸுதியாம் ஸமேத்ய ஸௌஷும்னீம் |
பஞ்சாஶதர்ணகல்பிதமதஶில்பாம் த்வாம் னமாமி காமாக்ஷி ||59||

அம்பாள்  காமாக்ஷி, வித்யா ஸ்வரூபிணி, ஸப்த (SABTHA ) ஸ்வரூபிணி, ஒலி  வடிவானவள். ஒலியை  ஸப்தம் என்கிறோமே அது நாலு வகைப்படும்.  மூலாதாரத்தில் இருக்கும்போது  ''பரா''  என்று பெயர்.
மூலாதாரத்திலிருந்து மேலே கிளம்பி, ஸ்வாதிஷ்டானத்துக்கு   ஸுஷும்னா நாடியில் செல்லும்போது ''பஸ்யந்தி'' என்று பெயர்.  அனாகத்தை  அடையும்போது அந்த நாதத்தின் பெயர் ''மத்யமா ''.  இன்னும் மேலே  விசுத்தியை அடையும்போது, கண்டத்திலிருந்து வெளிப்படும் போது அதன் பெயர்  வைகரீ.   அதை தான் வாக்கு  என்கிறோம்.  ஞானிகளின்  சுஷும்னா நாடியில் இப்படி   ''அ''  முதல்  ''க்ஷ'' வரையான  ஐம்பது  ஸம்ஸ்க்ரித அக்ஷரங்களாக  ஒலிக்கும்  ஸப்த ஸ்வரூபிணி,  அம்பா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

आदिक्षन्मम गुरुराडादिक्षान्ताक्षरात्मिकां विद्याम् ।
स्वादिष्ठचापदण्डां नेदिष्ठामेव कामपीठगताम् ॥ ६०॥

60. Aadhikshan mama guru rad Aadhi kshanthaa aksharathmikaam vidhyam,
Swadhista chapa dandaam nedishtameva kama peeta gathaam.

ஆதிக்ஷன்மம குருராடாதிக்ஷான்தாக்ஷராத்மிகாம் வித்யாம் |
ஸ்வாதிஷ்டசாபதண்டாம் னேதிஷ்டாமேவ காமபீடகதாம் ||60||

மூகர்  இந்த ஸ்லோகத்தில்  இப்படி தனது குருவினால் தான் பெற்ற அனுக்ரஹத்தை,
இனியவளாக,  கரும்புவில்லேந்திய  காமாக்ஷியின்  அருளை, தரிசனத்தை  பெற்றதாக  நன்றி கூறுகிறார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...