Thursday, January 20, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN


106    விந்திய மலை பிரதேச பிரயாணம்.

 ஆந்திர மஹாராஷ்ட்ரா  பிரதேசத்ங்களை இணைத்தவாறு  பைங்கங்கா,  அல்லது பெங்கங்கா  என்ற பேரில் ஒரு நதி.  புதானா, ஹிங்கோலி, நந்தேத், யாவத்மல், சந்திரபூர் , வாசிம் ஜில்லாக்கள் வழியாக ஓடுகிறது.அதன் பெயரில் ஒரு ரயில்வே நிலையம் கூட இருக்கிறது.  495 கி.மீ நீளம்.  அஜந்தா மலைத் தொடரில் ஒளரங்காபாத் ஜில்லாவில் உற்பத்தியாகிறது.  கோதாவரியின் உபநதி என்பார்கள். அந்த நதிக்கரையில் மஹா பெரியவா 1934ம்  வருஷ சங்கர ஜெயந்தி கொண்டாடினார்.

பல்வேறு பகுதிகளிலிருந்து, முக்யமாக, மஹாராஷ்ட்ராவை சேர்ந்த  வேத சாஸ்த்ர நிபுணர்கள்,  பண்டிதர்கள் மஹா பெரியவா  தரிசனம் பெற வந்துவிட்டார்கள்.  அங்கிருந்து யாத்திரை தொடர்ந்து மேலும் பல ஊர்களை கடந்து சென்றபோது சில ஊர்கள்  பெயர் மட்டும் சொல்கிறேன்.  கரஞ்சி, மர்சடா,  வன் , வேறொரு, தேமுட்டா,  வழியாக  31.5.1934 அன்று  நந்தூரி என்ற ஊருக்கு வந்துவிட்டார்.
ஜாம்  என்ற  ஒரு ஊரில் ஒருநாள் தங்கி விட்டு  ஜூன் 1ம் தேதி  கந்தினி,  அசோகா, தங்கர் தாம், வழியாக  நாக்பூருக்கு 5ம் தேதி சென்றடைந்தார். மஹா பெரியவா வருகை அறிந்து பெரிய நகரமான நாக்பூரில் பிரம்மாண்டமான வரவேற்புக்கு  தமிழ், தெலுங்கு  மராத்தி பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நாக்பூர் பிரதான வீதிகளில் மஹா பெரியவா  ஊர்வலம் பல மணி நேரங்கள் நடந்திலோ ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு  தரிசனம் பெற்றார்கள்.  ஹிந்தி, தமிழ் மராத்தி என்று பல மொழிகளில்  அவருக்கு வரவேற்பு கொடுத்து  பேசினார்கள்.     தன்னுடைய உரையில் மஹா பெரியவா அனைவரையும் ஹிந்து சனாதன தர்மங்களை விடாமல் பின் பற்ற வேண்டிய அவசியத்தை எடுத்துக்  கூறி,  உலக நன்மைக்கு அது அத்யாவசியமானது என்றார்.

நாகபூர் கிருஷ்ணய்யர் தனது  வீட்டில் மகா பெரியவா தங்க ஏற்பாடுகள் செயதிருந்தார். ஜூன் 18 வரை  நாகபூரில் பெரியவா இருந்தார்.  அங்கிருந்த பக்தர்கள் விருப்பத்துக்கு இணங்கி  பாதபூஜை, பிக்ஷா வந்தனம்  ஏற்றார் .  பக்தர்கள்  ஒன்று கூடி   மேற்கொண்டு அவருடைய யாத்திரைக்கு வேண்டிய வசதிகள் செய்தார்கள்.  பாதபூஜை  பிக்ஷா வந்தனம், தரிசனம்,   செய்து வர்களில் முக்யமாக  ஜட்ஜ் பாண்டே, ஸ்ரீ வார்னேகர், ஸ்ரீ தானே  சாஸ்திரி ஆகியோர் பெயரை குறிப்பிடலாம்.
 அவர்களுக்கு  மஹா பெரியவா  காஷ்மீர்  சால்வை பரிசுகள் எல்லாம் அளித்து கௌரவித்தார்.
ஜூன் 19, 1934  அன்று மஹா பெரியவாளின் கங்கா யாத்திரை  நாக்பூரிலிருந்து தொடர்ந்தது. காம்டி ,மான்செர், த்யோல்பார், கவாஸா, கோரை, மோர்காவுன்  போன்ற  ஊர்களை கடந்து சியோனி என்ற ஊரை அடைந்தார்.   மேலே சொன்ன ஊர்கள்  எல்லாம்  விந்திய மலைத்  தொடரைச்  சேர்ந்த இடங்கள்.
பெரியவா  சென்றபோது நல்ல  கடும் கோடை வெயில் அங்கே. தண்ணீருக்கு வறட்சி  என்று சொல்லும்போது  உணவுக்கும்  திண்டாட்டம் தானே.  மடத்து சிப்பந்திகள் எப்படியோ தங்கள் கஷ்டத்தை பொறுத்துக்கொண்டு  மஹா பெரியவாவுக்கு தேவையான  ஸ்னானம், பூஜா, மிருகங்களுக்கு தேவையான ஜலம்  சேகரித்து கொண்டு வந்தார்கள்.
பகல் நேரத்தில்  தங்கி பூஜை பண்ண  கூடாரம் நடுக்காட்டில் அமைத்துக்கொண்டார்கள். இரவில் தீவட்டி வெளிச்சத்தில் பிரயாணம் தொடர்ந்தார்கள்.  ஒரு நாளைக்கு இருப்பது மைல்  தூரம் இவ்வாறு கடந்தார்கள்.  என்ன பொறுமை என்ன பக்தி பெரியவாளிடம் அவர்களுக்கு என்று உணரும்போது மெய் சிலிர்க்கிறது. உற்சாகம் சற்றும் குறையாமல்  பேசும் தெய்வம் மஹா பெரியவாளுக்கு சேவை பண்ணினவர்கள்.விந்தியமலை பிரதேச  ஊர்களை  இவ்வாறு கடந்ததற்கு இன்னொரு காரணம் மத்திய பிரதேச  காவல் துறையும் கூட.   ஸ்வாமிகளுக்கும் மடத்தை சேர்ந்தவர்களுக்கு  காட்டுப்பாதையில்  ஜாக்கிரதையாக  பிரயாணத்துக்கு  பாதுகாப்பு அளித்தது.

சியோனியில் வாழ்ந்த  மக்கள்  பெரியவா வருகையை முன்பே அறிந்து ஏற்பாடுகள் செயதிருந்தார்கள்.. ''பெரியவா குறைந்தது  நான்கு நாட்களாக  எங்களோடு இந்த ஊரில் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்''.

''ரொம்ப சந்தோஷம்  தான் உங்களோட  இன்னும் சில நாள்  இங்கே இருக்க.   நேரம் ஓடிக்கொண்டே இருக்கே.  சாதுர்மாஸ்ய   வ்யாஸ பூஜை  ப்ரயாகையிலே  நடக்கணும். ரொம்ப தூரம்  375 மைல்  இருக்கே.  டயத்துக்கு  போய்   சேர  பிரயாசை பண்றோம்.''

பிரியா விடை கொடுத்த  சியோனி பக்தர்களுக்கு ஆசி வழங்கிவிட்டு மஹா பெரியவா பிரயாணம் தொடர்ந்தது.  மண்டோல், சாப்ரா, லக்னா தூம், தூமா, ஷுக்ரி, பர்கி , என்று பல ஊர்களை வழியே  பார்த்துக்கொண்டே  1934.ஜூலை மாதம் 3ம் தேதி ஜபல்பூர் வந்து சேர்ந்தார் 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...