Sunday, January 9, 2022

ADVICE

 நம்ம உடம்பு -8    -    நங்கநல்லூர்  J K  SIVAN


பழைய  காலத்தவர்களுக்கு  ''தேவன்''  என்ற  அருமையான  நகைச்சுவை  எழுத்தாளர்   R  மகாதேவனை  தெரிந்திருக்கும்.  கல்கியால்  கண்டுபிடிக்கப்பட்டு  ஆனந்தவிகடனை  அடைந்தவர்  அந்த   ஆனந்த விகடன் ஆசிரியர்.  அவருடைய  துப்பறியும் சாம்புவிற்கு  மூக்கு கழுகு போல வளைந்திருக்கும்.    சாம்பு  எப்போதாவது  அதை ஆசையாக தடவிக் கொடுத்தால்  எந்த  குற்றத்திற்கும்   துப்பு கிடைத்துவிடும்.  கோபுலு அருமையாக  சாம்பு படம் போடுவார்.  

மூக்கு நீளம் வேண்டாம்  என்றால் இன்னொருத்தர்  விஷயத்தில் தலையிடாதே  என்று அர்த்தம். 

மூக்கு நீளமாக நுனிகூர்மையாக இருந்தால் புத்தி கூர்மை என்பார்கள்.  

இப்படிப்பட்ட  மூக்குக்கு  வாசனை பிடிக்க தெரியும்.,   விஞ்ஞான பூர்வமாக பார்த்தால்   நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. அடேயப்பா.  ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?  ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் நம்மை விட  அதற்கு  மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை அதற்கு தான் முதலில் கிடைக்கும். அதை இழுத்துக் கொண்டு அதன் பின்னே ஓட தான் நமக்கு வேலை கிடைக்கும்.

இதயத்தைப்  பற்றியும் சொல்கிறேன்.  நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும். கண்ணதாசன் இதைத்தான்  கையளவு உள்ளம் வைத்தான்  அதில் கடலளவு ஆசை வைத்தான்  என்று பாடினார்.

புஸுபுஸு  வென்று நுரை மாதிரி இருக்கும்  ஈரல்  நம்ம உடம்பில் இருக்கிறதே  அது தான்  ஈயம் பூசுபவர்  வைத்திருக்கும் துருத்தி  மாதிரி  சுருங்கி விரியும் நுரையீரல்.  காற்றை சுத்தப்படுத்தி வடிகட்டி அனுப்பும் வேலையை செயகிறது.  அற்புதமாக  குட்டி குட்டியாக  அறைகள் அதில் ஒரே அளவில் நிறைய இருக்கும் அது தான் வடிகட்டி.   அனாவசியமாக சுருட்டு, பீடி, சிகரெட் பிடித்து, குடித்து  அதை கெடுத்துக் கொள்ளும் நமக்கு அதன் அற்புதம்  தெரியாது.  நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள ‘ஆல்வியோலர் ’ alveolar walls   என்னும் சிறிய காற்று அறைகள்  நிறைய  இருக்கிறது.  அவை  எத்தனை என்று தெரியுமா?  பக்கத்தில் தூண் அல்லது சுவர்  இருந்தால் கெட்டியாக பிடித்துக் கொண்டு கேளுங்கள். சொல்கிறேன். அதன் எண்ணிக்கை மட்டும் சுமார்  30 கோடி.  ஒரு சிறிய  அறை  அதுபோல் நம்மால் உற்பத்தி செய்ய முடியுமா? அது தான்  ப்ரம்மா. கிருஷ்ணன்.

''
அந்த  சுப்பிரமணிக்கு  பார் எத்தனை  வாய் கொழுப்பு''  என்கிறோமே. நாம் சொல்வது அவன் உடலைப் பார்த்து.  ஆனால் நம்ம உடம்பில்  மூளை தான்  65 சதவீதம் முழுக்க முழுக்க  கொழுப்பு பொருளால் ஆனது. அதனால்  தான் நாம் எடுக்கும்  முடிவுகள்  அநேர்கருக்கு வழவழா  கொழ கொழாவாக எதிலும்  போட்டுக்கொள்ளாமல் உறுதியில்லாமல் தீர்மானமில்லாமல் இருக்கிறதோ?

முன்பே சொன்னேனே.  நமக்குள் கருப்பு சிவப்பு கிடையாது.  வெளியே தான் அது  எங்காவது கொடியில்  இருக்கும். 
வெள்ளை சிவப்பு தான்  நமக்குள்ளே  நம்  உடம்பில்  இருக்கும் ரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.

'' அந்த  வரதன் பயல், ஆள் ரொம்ப அழுத்தம். லேசில்  எதிலும்  பட்டுக்க மாட்டான். சுயகாரியப்புலி. அவனுக்கு வயத்தில் பல்லு'' என்போம். இது  அன்றாட  சொல் வழக்கு. ஆனால்  விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பில் நம் ஒவ்வொருவருக்கும்   3 வகையான பற்கள் உண்டு.  இதற்கு மேல்  அதற்குள்  போனால்  நான் விஞ்ஞான  பாடம் நடத்தவேண்டும்.

இன்னும் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...