Friday, January 28, 2022

sri lalitha sahasranam




 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்   --   நங்கநல்லூர்   J K   SIVAN

ஸ்லோகங்கள்  164-166     நாமங்கள்  880 -897

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(880 -897)

संसारपङ्क -निर्मग्न -समुद्धरण -पण्डिता ।
यज्ञप्रिया यज्ञकर्त्री यजमान-स्वरूपिणी ॥ १६४॥

Sansara pankanirmagna samudharana sandita
yagyna priya yagynakartri yajamana svarupini – 164

ஸம்ஸாரபங்க நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதா |
யஜ்ஞப்ரியா யஜ்ஞகர்த்ரீ யஜமான ஸ்வரூபிணீ || 164 ||

धर्माधारा धनाध्यक्षा धनधान्य-विवर्धिनी ।
विप्रप्रिया विप्ररूपा विश्वभ्रमण-कारिणी ॥ १

Dharmadhara dhanadhyaksha dhanadhanya vivardhini
viprapriya viprarupa vishvabhramanakarini – 165

தர்மாதாரா தனாத்யக்ஷா தனதான்ய விவர்தினீ |
விப்ரப்ரியா விப்ரரூபா விஶ்வப்ரமண காரிணீ || 165 ||

विश्वग्रासा विद्रुमाभा वैष्णवी विष्णुरूपिणी ।
अयोनिर् योनिनिलया कूटस्था कुलरूपिणी ॥ १६६॥

Vishvagrasa vidrumabha vaishnavi vishnuruini
ayoniryoninilaya kulasdha kularupini – 166

விஶ்வக்ராஸா வித்ருமாபா வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ |
அயோனிர் யோனி நிலயா கூடஸ்தா குலரூபிணீ || 166 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - (880-897) அர்த்தம்

*880* 
सम्सार-पङ्क-निर्मग्न-समुद्धरण-पण्डिता    ஸம்ஸாரபங்க நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதா  - 
அம்பாள் நம்மை சம்சார பந்தங்களிலிருந்து விடுவிப்பவள். ஸம்ஸாரம் என்றால் மனைவி என்று தான்  நமக்கு தெரியும்.  உண்மையில் ஸம்ஸாரம்  மனைவி மட்டும் ஆல். மனைவி மக்களோடு சுற்றங்களோடு வாழ்கிறோமே  இந்த உலக வாழ்க்கை. அதில்  நாம்  உழல்வது, எதிர்ப்புகள், ஏமாற்றங்கள், துயரங்கள், கவலைகள், எல்லாம்  எதிர்கொள்கிறோமே , அது தான்  ஸம்ஸாரம் . அதில் பொருளீட்டுவது தான் முக்கியமான அம்சமாக கருதி  நாம்  ஈடுபடுகிறோம்.  அதற்காக எதை செய்ய  வேண்டுமானாலும், தவறுகள் தப்புகள்  செய்யவும்  தயங்குவதில்லை.  கடைசியில் துன்பத்திலிருந்து விடுதலை இல்லை.

அம்பாள் அவள் மீது மனதை பதித்தால் அவள் அருளால் இந்த ஸம்ஸார பந்தம் நீங்கும் என்று அனுபவ சாலிகளான யோகிகள் கூறுகிறார்கள். கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னது  காதில்  கேட்கிறதா? ''அர்ஜுனா, என் மீது மனதை செலுத்தியவனை வெகு விரைவாக நான் பிறப்பு இறப்பு எனும் பெருங்கடலிலிருந்து விடுவிப்பேன் “(Gīta XII.7)

.*881*
यज्ञ-प्रिया  யஜ்ஞப்ரியா  -
 ஸ்ரீ லலிதை யாகங்களில் பக்தர்கள் அர்ப்பணிப்பதை விரும்பி ஏற்பவள். நவாவரண பூஜை யாகங்கள் அதனால் தான் ஸ்ரேஷ்டமானவை.

*882* 
यज्ञ-कर्त्री யஜ்ஞகர்த்ரீ  - 
யஞம் என்பது அர்ப்பணிப்பது . எஜமானி. எஜமானனின் மனைவி அவள். யாகத்துக்கு சொந்தக்காரி. நமது வீடுகளிலே வைதிக காரியங்கள் மனைவி இல்லாமல் துவங்க முடியாது. யாகங்கள் மூன்று அக்னியினால், தீயால் உருவாகுபவை . ஆஹவனீயம், காருகபத்யம், தக்ஷிணாக்னி. வீட்டில் உபயோகப்படும்  ஹோம அக்னி. யாகங்களில் மூட்டப்படுவது, மூன்றாவது தென்திசைத்தீ. எல்லாமே களிமண் யாக குண்டத்தில்  உண்டானவை.   முற்காலத்தில் நமது வீடுகளில் அடுப்பு களிமண்ணால் செய்யப்பட்டு உபயோகித்தது ஞாபகம் வருகிறதா? இந்த அக்னிகளை வளர்ப்பவன் தினமும்     நித்ய அக்னி ஹோத்ரி.

*883* यजमान-स्वरूपिणी  யஜமான ஸ்வரூபிணீ  - 
அம்பாள் எஜமானன் ஸ்தானத்தில் இருப்பவள். சிவனின் அஷ்ட ரூபங்களில் ருத்ர ரூபம் அக்னி. மற்ற ஏழு உருவங்கள் பூமி, நீர், மனது, ஆகாசம், ஆத்மா, சூர்யன், சந்திரன் .யாகத்தீ. 
அம்பாள் யாகமானவள் . சிவன் அக்னி என்றால் அம்பாள் யாகத்தீ ஸ்வரூபம் அல்லவா?  பிரிக்கமுடியாதவர்கள் அல்லவா இருவரும்?

*884* 
धर्मा-धारा - தர்மாதாரா  வாழ்வதற்கு சிறந்தது தர்ம வழி. அப்படித்தான் வேத சாஸ்திரங்கள் சொல்கிறது. ஒவ்வொருவருக்கும் ஸ்வதர்மம் உண்டு. ஒன்றே எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் என்று இல்லை. ரிஷிகள் வாழ்ந்து காட்டிய பாதை. ஆசாரத்தில் இருந்து உருவாவது தர்மம். ஆசாரத்தின் உருவாக இருப்பவன் என்பதால் விஷ்ணு அம்சமான அச்சுதன் என்று அர்த்தம்..

*885* 
धनाध्यक्षा  தனாத்யக்ஷா - 
செல்வத்திற்கு அதிபதி குபேரன். யக்ஷர்கள் குபேரனின் உதவியாளர்கள். குபேரனுக்கு அதனால் யக்ஷேஸ்வரன் என்று பெயர். குபேரன் அம்பாள் ஸ்ரீ லலிதையின் பன்னிரண்டு பக்தர்களில் ஒருவன். ஆகவே தான் அம்பாள் குபேரனுக்கு தலைவியாக உள்ளதால் இந்த நாமம் பொருத்தமாகிறது.

*886* 
धन-धान्य-विवर्धिनी தனதான்ய விவர்தினீ -  
செல்வத்தையும் அமோகமான தானியங்களையும் அதிகரித்து தருபவள் அம்பாள்.

*888* 
विप्र-प्रिया  விப்ரப்ரியா -
அம்பாளுக்கு கற்றோரை, பண்டிதர்களை ரொம்ப பிடிக்கும். ஆத்ம விசாரத்திற்கு ஞானம் கல்வி அல்லவோ முக்கியமான தேவைகள்.

*889*  विप्र-रूपा விப்ரரூபா 
கற்றோரை, பண்டிதர்களை பிடிப்பது மட்டுமல்ல. அம்பாளே ஞானத்தின் வடிவம் என்று தெளிவாக சொல்கிறது இந்த நாமம். பசு வைக்கோல் முதலிய தீவனங்களை  உண்டு  வளர்கிறது. பிராமணனுக்கு வேதம் சாஸ்திரம், ஜபம், யாக யஞம்,ஹோமம், இதெல்லாம் தான் அவனை வளர்க்கும் ஆகாரம்.

*889* 
विश्व-भ्रमण-कारिणी  விஶ்வப்ரமண காரிணீ -  
விஸ்வம் என்பது அகிலம். எல்லையற்றது. பிரபஞ்சம் முழுதும். பிரம்மாண்டமானது. ப்ரம்மாண் டத்தில் எத்தனையோ ஐக்கியம். ப்ரம்மம் என்பது சர்வ வியாபியான ஒன்றே. அம்பாளை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்கிறோம். ப்ரம்மம் அவள் தானே. ஆத்மா தான் ப்ரம்மம் ஒவ்வொரு உயிரிலும் இதயத்தில் உள் நின்று அவற்றின் கர்மாவுக்கு தக்கவாறு இயக்குவது.

*890* 
विश्वग्रासा  விஶ்வக்ராஸா- . 
பிரபஞ்சத்தை தன்னுள் வைத்திருப்பவள் என்பதை பிரபஞ்சத்தையே விழுங்குபவள் என்று சொல்லலாம் அல்லவா. இந்த நாமம் அந்த அர்த்தத்தை தருகிறது. கதோபநிஷத் இதை கருத்தில் கொண்டு தான் (I.ii.25) மனிதருள் ஸ்ரேஷ்டமானவர்கள் ஆத்மாவின் ஆகாரம் என்கிறது. மரணம் எல்லோரையும் கவ்வுகிறது. ஆனால் ஆத்மாவுக்கு அது தொட்டுக்கொள்ள ஊறுகாய் என்கிறது பிரம்மசூத்திரம். வேடிக்கையாக இல்லை? (I.ii.9)

*891* 
 विद्रुमाभा வித்ருமாபா - 
பவழ நிறம். சிகப்பாக இருக்கும். ரத்தச் சொட்டு மாதிரி. மாதுளை முத்து மாதிரி அவளது நிறம். நேரில் பார்க்க எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்? இன்னொரு அர்த்தம் ஞான விருக்ஷம். . ஒரு மரத்திலிருந்து எத்தனை மரங்கள் உருவாகிறது. அம்பாள் ஞான குரு. பக்தர்களை உருவாக்குபவள்.

*892* 
वैष्णवी   வைஷ்ணவீ - 
விஷ்ணுவின் சக்தி அம்பாள் தான். அதால் தான் அவளுக்கு வைஷ்ணவி என்று பெயர். வைணவர்க
ளின் பெண்பால் என்று அர்த்தம் கொள்வது சாதரணமானது.

*893*
विष्णुरूपिणी   விஷ்ணுரூபிணீ -  
லலிதை விஷ்ணுவின் வடிவம் என்று விஷ்ணு  ஸஹஸ்ரநாமம் முதலான ஸ்தோத்திரங்கள் போற்றுகிறது. ''நான் பிறப்பு இறப்பு அற்றவன் என்றாலும் என்னுடைய யோக மாயையினால் வெவ்வேறு ரூபங்களாக தோன்றி இந்த பிரபஞ்சத்தை கட்டி மேய்க்கிறேன்'' என்கிறான் கீதையில் கிருஷ்ணன்.  அவன் பசுக்களை பராமரிப்பவன் அல்லவா. நம்மை அப்படி பரிபாலிக்கிறான். அவனே அவள் தானே. ஆகையால் அம்பாளுக்கு இப்படி ஒரு நாமம்.

*894* 
अयोनिः அயோனி -   
ஒரு தாய் வயிற்றில் பிறக்காத ஞானம் மிக்க தெய்வீக உருப்பெற்றவள். கர்ப்ப வாசம் அற்றவள்.

*895* 
 योनि-निलया   யோனி நிலயா - 
முண்டக உபநிஷத் (III.i.3) ''ருக்மசரணம் கர்த்தாரமீசம் புருஷம் ப்ரம்ம யோனிம்'' என உரைக்கும் போது ஒளிமிகுந்த ப்ரம்மம் தான் காரணமாக ஸ்ரிஷ்டிக்கிறது, அதை ஹிரண்ய கர்பன் பரமாத்மா'' என்கிறோம். ப்ரம்ம ஸுத்ரமும் இதையே (I.iv.27) பிரம்மத்தை தான் யோனி, ஆதார காரணம் என்கிறது.

*896* कूटस्था  கூடஸ்தா  - 
புரிபடாதது - மாயையினால் தோன்றும் அறியாமை. சம்சாரத்தில் அறியாமையால் தானே உழல்கிறோம்.

*897* 
 कुल-रूपिणी    குலரூபிணீ -  
உயர்ந்த, சிறந்த சுயநலமற்ற எண்ணங்கள் உடையவர்கள் உயர்  குலத்தோர், சக்தி அப்படிப்
பட்டவள்.   அவளுக்கு நம்மை, பக்தர்களை விட்டு வேறு எந்த சிந்தனையும் இல்லை. இன்னொரு உள்ளர்த்தம் குலா என்றால் மூலாதார சக்ரம். கௌலன் என்றால் குரு.   குருவை  மூன்று வகையாக  கொள்ளலாம்.   ஜபம், பூஜை, ஹோமம் இதில் சம்பந்தப்பட்டவர் அடித்தட்டு வகை. நடுத்தரம் என்பது தியானம் சமாதி இந்த விதத்தில் ஈடுபடுபவர். ஆத்ம ஞானிகள் ப்ரம்ம வித்யை அறிந்தவர்கள் முதல் ரகம்.அவர்கள் இரக்கம், கருணை, அன்பு, தயை நிரம்பியவர்கள். அம்பாள் முதல் ரகத்தில் முதன்மை யானவள் .

சக்தி பீடம் :    பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம் (சேது பீடம்)

இந்தியாவில் இருக்கும் சக்தி பீடங்களில் வட இந்தியாவில் பத்ரிநாத், கிழக்கு பக்கம் பூரி ஜகன்னாத், மேற்கு பக்கம் குஜராத்தில் துவாரகை,  தென்னிந்தியாவில் தமிழகத்தில் இராமேஸ்வரம் ஆகியவை வெகு முக்கியமான ஸ்தலங்கள். இராமேஸ்வரம் ஒன்று தான் சிவாலயம் மற்ற மூன்றுமே விஷ்ணு ஸ்தலங்கள்.

இராமநாதபுரம் இராமசுவாமி திருக்கோயிலின் விசேஷம் என்னவென்றால் அது  மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்பு பெற்றது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் தமிழகத்தில்  இருக்கும் ஒரே சிவாலய  க்ஷேத்ரம்  இராமேஸ்வரம்.   அம்பாளின் சக்தி பீடங்களில் இது சேதுபீடம் என்று அறியப்படுகிறது.
ராமர் ராவணனை வதம் செய்து விட்டு,  சீதையை மீட்டு,  திரும்புகையில், ராவணனைக் கொன்றதால் உண்டான ப்ரம்ம ஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் பரிஹாரம் பண்ண முடிவெடுத்தார். ''ஹனுமா, உடனே நீ காசிக்கு போய் ஒரு சிவலிங்கம் கொண்டு வா'' என்று அனுப்பினார். அனுமன் திரும்ப தாமதமாகி விட்டதால் சீதை ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்த மணலைக் கொண்டு லிங்கம் செய்கிறாள். அந்த லிங்கம் தான் ராமலிங்கம். அதற்கு பூஜை செய்து ராமரின் ப்ரம்மஹத்தி தோஷம் விலகுகிறது.

ஹனுமான் கொண்டு வந்த  சிவலிங்கம் சீதை செய்த மணல் லிங்கம் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டு அதற்கு தான் அன்று  முதல் இன்றுவரை பூஜைகள் ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது.

அனுமன் கொண்டு வந்த லிங்கம் காசி விஸ்வநாதர் என்று பெயர் பெற்றுவிட்டது. அவருக்கு தான் இன்றும் முதல் அபிஷேகம். ராமன் தொழுத ஈஸ்வரன் என்பதால் சிவனுக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர்.

கிழக்கு பார்த்த ராமலிங்கம். இந்த லிங்கத்தின் மீது அனுமனின் வால்பட்ட தழும்பை காண முடிகிறது என்கிறார்கள். நன் தரிசிக்க சென்றபோது தேடினேன்.  என் கண்ணுக்கு எதுவும்  தெரியவில்லை.  ரொம்ப தூரத்திலிருந்து பார்த்தபோது என் பார்வை அவ்வளவு கூர்மையாயில்லை. .

மூலவர் ராமலிங்கம்.  சன்னிதிக்கு இடது புறம் காசி விஸ்வநாதர். முன் மண்டபத்தில் ராமன், சீதை, லக்ஷ்மணன் இவர்களுக்கு தெற்கே ஆஞ்சநேயரும் அருள் பாலிக்கிறார்கள். ராமநாதருக்கு வலப்பக்கம் அம்பிகை பர்வத வர்த்தினியின் சன்னிதி அமைந்திருக்கிறது.

இங்கே ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்துக்கு, தினமும் காலை 5 மணிக்கு அபிஷேகம் அற்புதமாக நடைபெறுகிறது. நான் கண்ணார தரிசனம் செய்தேன்.  விடிகாலையில் குளித்துவிட்டு  விபூதி அணிந்த  பக்தர்கள் ஏராளமாக நெரிசலாக நின்றார்கள். அம்பாள்
பர்வதவர்த்தினி அம்பிகையின்  பீடத்துக்குக் கீழே, ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்கரம்  இருக்கிறது.  பதஞ்சலி  ரிஷி முக்தியடைந்த ஸ்தலம் இது.

''என்னய்யா உளறல் இது?   சிவ லிங்கம் மணலால் செய்யப்  பட்டிருந்தால்  இத்தனை காலம் அபிஷேகங்கள் பண்ணும்போது தண்ணீறில் கரைந்திருக்காதா?  என்று நாத்திகர்கள்  குரல் எழுப்பினார்கள்.  பாஸ்கரராயர் என்னும் அம்பாள் பக்தர் தண்ணீரில் கரையும் உப்பைக் கொண்டு அவர்கள்  எதிரிலேயே  லிங்கம் பிடித்து, அபிஷேகம் செய்தார்.   என்ன ஆச்சர்யம்?  உப்பில் அவர் செய்த லிங்கம் தண்ணீரில் பல குடம் குடமாக  அபிஷேகம் செய்தும்  துளிக்கூட  குறையவில்லை!

' அன்பர்களே,  சாதாரண மனிதன் நான்.   என்னால் உப்பில் செய்யப்பட்ட  இந்த சிவ லிங்கமே நீரில் கறையாதபோது,   மஹாலக்ஷ்மி அவதாரம், சீதா தேவி மண்ணால் பிடித்து வைத்த லிங்கம் எப்படி கரையும்?    பாஸ்கர ராயர்   கேள்விக்கு இன்னும் பதில் இல்லை.

பாஸ்கரராயர் செய்த உப்பு லிங்கத்தை ராம நாதர் சன்னிதிக்கு பின்புறம் இப்போதும் காணலாம். உப்பின் சொர சொரப்பை இப்போதும் அந்த லிங்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பித்ருக்கள் பூமிக்கு கூட்டமாக வந்து தம் சந்ததியினர் அளிக்கும் தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களை செய்தவர்களுக்கு தமது ஆசிகளைப் பரிபூரணமாக வழங்கு வார்கள். பிதுர் காரியம் செய்ய சிறந்த தலமாக இராமேஸ்வரம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த க்ஷேத்ரத்தில்  உள்ள மூன்றாம் பிரகாரம், உலக அளவில் புகழ் பெற்ற சிற்ப வேலைப்பாடு நேர்த்தியாக  பெற்றது.     இராமேஸ்வர   சமுத்ரம்  அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிக்க இராமன் தீயில் இறங்க சொன்னார். சீதையைத் தீண்டிய பாவம் நீங்க அக்னி பக்வான் இத்தலத்தில் நீராடி தோஷம் கழித்தார். இராமநாத  ஸ்வாமியின் தலத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலிலும் நீராடினால் நன்மைகள் நாடிவரும்.  வரிசையில் ஊர்ந்து கொண்டு   ஒவ்வொரு கிணறாக  சென்று, நிறைய  வாளிகளில் குளிர்ந்த ஜலத்தை  சிரசில் பெற்ற  அனுபவம் என்றும்  மறக்க முடியாதது.

பிரார்த்தனைகளை கேட்க பக்தன் மறந்தாலும் கோயில் தீர்த்தத்தில் நீராடினால் உரிய பலன் கேட்காமலேயே கிட்டும். இறைவனின் அருளும், இறந்தோர்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...