Saturday, January 15, 2022

MOOKA PANCHASATHI 2

 மூக  பஞ்ச சதி-  நங்கநல்லூர்   J K   SIVAN 

ஆர்யா சதகம் -  ஸ்லோகம் 1 -5

1.  कारणपरचिद्रूपा काञ्चीपुरसीम्नि कामपीठगता ।
काचन विहरति करुणा काश्मीरस्तबककोमलाङ्गलता ॥ १॥

1. Karana para chidroopaa, Kanchi puraseemni, Kama peeta gatha,
Kachana viharathi karunaa Kasmeera sthabhaka Komalangalatha.

காரணபரசித்ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீடகதா |
காசன விஹரதி கருணா காஶ்மீரஸ்தபககோமலாங்கலதா ||1||

பரமேஸ்வரன்  பர சித் ஸ்வரூபன்.  அம்பாள் காமாக்ஷி பரசித் ஸ்வரூபிணி.  வெவ்வேறாகவும் தனித்தும் தோற்றம் கொண்டவர்கள்  சக்தியும்  சிவனும்.  கஷ்மீரம் என்றால்  குங்குமப்பூ.  கஷ்மீரம்  நிறைய  இருப்பதால் அந்த பிரதேசம் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது.  51 சக்தி பீடங்களில் முக்கியமான நான்கு  ஒட்யாண , ஜாலந்தர, பூர்ணகிரி,  காமராஜ பீடங்கள். காமராஜ பீடம் தான் காமகோடி பீடம். காஞ்சிபுரத்தில் உள்ளது.  காமாக்ஷி குங்குமப் பூவை போன்றவள். ம்ருதுவானவள். அஹம்  என்றால் நான்.  இதம்  என்றால் மற்றவை.  இந்த ரெண்டுமாக  ஜகத்தில் காட்சி அளித்து  ரட்சிக்கும்   பர பிரம்மத்தின் விளையாட்டு தான் பிரபஞ் சத்தில் ஓயாமல் ஒழியாமல்  மாயையாக  நடைபெறுகிறது.  நம்மிடம் அளவிலா கருணை கொண்டவள் காமாக்ஷி தேவி.  ஜகத் காரணி.


कंचन काञ्चीनिलयं करधृतकोदण्डबाणसृणिपाशम् ।
कठिनस्तनभरनम्रं कैवल्यानन्दकन्दमवलम्बे ॥ २॥

2. Kanchana Kanchi nilayam, kara dhrutha kodanda bana sruni paasam,
Katina sthana bhara namram Kaivalya aananda kanda mavalambe.

கம்சன காஞ்சீனிலயம் கரத்றுதகோதண்டபாணஸ்றுணிபாஶம் |
கடினஸ்தனபரனம்ரம் கைவல்யானன்தகன்தமவலம்பே ||2||

ஸ்ரீ லலிதாம்பிகையே  காமாக்ஷி என்று ஸ்தாபிதமானவள் அம்பாள். லலிதாம்பாளின் கையில் உள்ள  கரும்பு கோதண்டம், பாச, அங்குச, புஷ்ப பாணங்கள்  காமாக்ஷியிடமும்  காணப்படுகிறது. காஞ்சியில்  திலகமாக  குடிகொண்டு நம்மை ரக்ஷிப்பவள். அவள்  திருவடியில்   தாயே என்று,  மனதார  விழுந்து வணங்குவோம்.

चिन्तितफलपरिपोषणचिन्तामणिरेव काञ्चिनिलया मे ।
चिरतरसुचरितसुलभा चित्तं शिशिरयतु चित्सुखाधारा ॥ ३॥

3. Chinthitha phala pari poshana chinthamani reeya Kanchi nilayaa may,
Chira thara sucharitha sulabhaa, chitham sisirayathu chith sukhaa dharaa.

சிந்திதபலபரிபோஷணசின்தாமணிரேவ காஞ்சினிலயா மே |
சிரதரஸுசரிதஸுலபா சித்தம் ஶிஶிரயது சித்ஸுகாதாரா ||3||

காமாக்ஷி அம்பாள்  காஞ்சிபுரநிவாஸினி.  அவளை  எத்தனையோ ஜன்ம  நற் காரிய பலனாகத் தான் நாம் அடைய  முடியும்.  மனதால் நினைத்தாலே போதும்.  விருப்பங்களை நிறைவேற்றுபவள். அவளை சிந்தாமணி என்று அதனால் அழைக்கிறோம். சித் ரூபி யான  அம்பாள்  வாளிப்பான தேகமுடைய சக்தி தேவி.  கருணையை, தயையை,   மழையாக பொழிபவள். அவளை வணங்கி மனம் குளிரட்டும். வணங்குகிறோம் தாயே.

कुटिलकचं कठिनकुचं कुन्दस्मितकान्ति कुङ्कुमच्छायम् ।
कुरुते विहृतिं काञ्च्यां कुलपर्वतसार्वभौमसर्वस्वम् ॥ ४॥

4. Kutila kacham, katina kucham, kunda smitha kanthi, kunkuma chayam,
Kuruthe vihruthim kanchyaam kula parvatha saarva bhouma sarvaswam.

குடிலகசம் கடினகுசம் குன்தஸ்மிதகான்தி குங்குமச்சாயம் |
குருதே விஹ்றுதிம் காஞ்ச்யாம் குலபர்வதஸார்வபௌமஸர்வஸ்வம் ||4||

पञ्चशरशास्त्रबोधनपरमाचार्येण दृष्टिपातेन ।
काञ्चीसीम्नि कुमारी काचन मोहयति कामजेतारम् ॥ ५॥

அலை அலையாக  திரண்ட சுருண்ட கூந்தலை உடையவள் அம்பாள் காமாக்ஷி. குந்த புஷ்பம் போன்ற  மென்மையானவள்.  அன்னையின் வதனத்தில்  எப்போதும்  பாசம் நிரம்பிய புன் சிரிப்பு.  கடைந்தெடுத்த குங்குமப்பூ நிற  தேகம்.  பர்வதங்களில் 7  சிறந்தவை.  மகேந்திர பர்வதம், ஸஹ்ய பர்வதம், ஹிமாசலம்,  விந்திய பர்வதம், மலயமாருத பர்வதம், பரியாத்ர பர்வதம், ருக்ஷ பர்வதம். இவற்றில் முதன்மையானது,  தலைவன்  ஹிமாசல பர்வதம் .  அம்பாள்  ஹிமவான் புத்ரி,  இம்மகிரி தனயே , சர்வ சௌபாக்கிய மூர்த்தியாக,   காஞ்சியில் குடியேறி நம்மை ரக்ஷிக்கிறாள்.  

5. Pancha sara sashtra bodhana paramacharyena drushti pathena,
Kanchi seemni Kumari kachana mohayathi Kama jetharam.

பஞ்சஶரஶாஸ்த்ரபோதனபரமாசார்யேண த்றுஷ்டிபாதேன |
காஞ்சீஸீம்னி குமாரீ காசன மோஹயதி காமஜேதாரம் ||5||

परया काञ्चीपुरया पर्वतपर्यायपीनकुचभरया ।
परतन्त्रा वयमनया पङ्कजसब्रह्मचारिलोचनया ॥ ६॥

மன்மதனுக்கு கையில் ஐந்து புஷ்ப  பாணங்கள்  உண்டு. அவை என்னென்ன புஷ்பங்கள்? நீலோத்பலம், அரவிந்தம், அசோகம், கஞ்சதளம் , மல்லிகை.   அதனால் மன்மதனுக்கு பஞ்சதரன் என்று ஒரு பெயர். விருப்பங்களை ஏற்படுத்துபவன் காமன். எல்லோரையும் வசப்படுத்துபவன்.  அவனையே எரித்து ஜெயித்த  நெற்றிக்  கண்ணன்  சிவன்.  அம்பாளின் சொடுக்குப் பார்வையில்  பரமாச்சார்யனான  மௌன  குருவான  அந்த   பரமேஸ்வரனையே  மோஹமடைய செய்பவள் காமாக்ஷி. 

6. Paraya, Kanchi paraya parvatha paryaya peena kucha bharaya,
Para thanthra vayamanaya pankaja sa Brahmachari lochanayaa.

பரயா காஞ்சீபுரயா பர்வதபர்யாயபீனகுசபரயா |
பரதன்த்ரா வயமனயா பங்கஜஸப்ரஹ்மசாரிலோசனயா ||6||

காமாக்ஷி திடகாத்திர சரீரம் கொண்ட  ஸ்த்ரீ ரூபிணி. காஞ்சியில் குடிகொண்ட ஹிமாசல பர்வதம் என்பதால் பார்வதி என்ற பெயர் கொண்டவள்.  தாமரை போன்ற கண்ணுடையாள் . இப்படிப்பட்ட திவ்ய ஸ்வரூபிணியை  தரிசித்து  பரவசமடையாதவர்கள் உண்டா?

ऐश्वर्यमिन्दुमौलेरैकात्म्यप्रकृति काञ्चिमध्यगतम् ।
ऐन्दवकिशोरशेखरमैदम्पर्यं चकास्ति निगमानाम् ॥ ७॥

7. Aiswarayamindu moule aikathmya prakruthi Kanchi madhya gatham,
Aindhava kisora shekharam aidamparya chakrasthi nigamaanam.

ஐஶ்வர்யமின்துமௌலேரைகத்ம்யப்ரக்றுதி காஞ்சிமத்யகதம் |
ஐன்தவகிஶோரஶேகரமைதம்பர்யம் சகாஸ்தி னிகமானாம் ||7||

பிரபஞ்சத்தில் சகலமும் உற்பத்தியாக காரண வஸ்து  தான் ப்ரக்ருதி.  அம்பாள் தான் அந்த மூல ப்ரக்ருதி. புருஷன் எனப்படும் பரமேஸ்வரனுடன் அபேதமாக இருப்பவள். சேர்ந்து இணை பிரியாதவள். அர்த்தநாரி.  இது தான் சக்தி சிவ ஐக்கியம். பரமேஸ்வரனைப் போலவே அம்பாளுக்கும் சிரசில்  பால சந்திரன், பிறைச்சந்திரன் தான்  அணிகலன். ஆபரணம். அம்பிகையால் தான் சிவனுக்கு சகல  ஐஸ்வர்யமும்.    சக்தியில்லையேல்  சிவனில்லை.

श्रितकम्पसीमानं शिथिलितपरमशिवधैर्यमहिमानम् ।
कलये पटलिमानं कंचन कञ्चुकितभुवनभूमानम् ॥ ८॥

8. Sritha kampasi maanam shidhiltha parama shiva dhairya mahi maanam,
Kalaye patalimaanam kanchana kanchukitha bhuvana bhoomaanam.

ஶ்ரிதகம்பஸீமானம் ஶிதிலிதபரமஶிவதைர்யமஹிமானம் |
கலயே படலிமானம் கம்சன கஞ்சுகிதபுவனபூமானம் ||8||

காஞ்சியில் பரிமளிக்கும்  கம்பா நதிக்  கரையில் வாசம் செய்பவள். பரமேஸ்வரனின் திட வைராக்கிய சித்தத்தையே தளர்த்துபவள்.  சகல புவனமும் ஆடையாக, வஸ்திரமாக தரித்தவள்.  வெண்மையும் சிவப்பும் கலந்த நிறம் கொண்டவள். அம்பா,  உன்னை  நமஸ்கரிக்கிறேன்.

आदृतकाञ्चीनिलयमाद्यामारूढयौवनाटोपाम् ।
आगमवतंसकलिकामानन्दाद्वैतकन्दलीं वन्दे ॥ ९॥

9. Aadrutha Kanchi nilayam aadhyaam aarooda youvana topaam,
Aagama vathamsa kalikam, aananda adwaitha kandhalim vande.

ஆத்றுதகாஞ்சீனிலயமாத்யாமாரூடயௌவனாடோபாம் |
ஆகமவதம்ஸகலிகாமானன்தாத்வைதகன்தலீம் வன்தே ||9||

பெண்கள் சிரத்தில் மலர் மொட்டுகளை அணிவது வழக்கம்.  காஞ்சி வாஸினி அம்பாள் சிரத்தில் எது மொட்டு தெரியுமா? வேதங்களின் சாரமான உபநிஷத்துக்கள் தான்  அவள் சிரத்தில் பூஷணம். சிரோபூஷணம்.  அம்பாள் ப்ரபஞ்சம்  தோன்ற  ஆதி காரணி.  யௌவனம் மிக்கவள். அத்வைதம் தரும் ஆனந்த ஸ்வரூபிணி.

तुङ्गाभिरामकुचभरश‍ृङ्गारितमाश्रयामि काञ्चिगतम् ।
गङ्गाधरपरतन्त्रं श‍ृङ्गाराद्वैततन्त्रसिद्धान्तम् ॥ १०॥

10. Thungabhirama kucha bhara srungareetham aasrayami Kanchi gatham,
Ganga dhara para thanthram srungara advaitha thanthra sidhantham.

துங்காபிராமகுசபரஶ்றுங்காரிதமாஶ்ரயாமி காஞ்சிகதம் |
கங்காதரபரதன்த்ரம் ஶ்றுங்காராத்வைததன்த்ரஸித்தான்தம் ||10||

பர  தந்த்ரம்  என்றால்  பிறருக்கு வசப்பட்டிருப்பது.  புருஷன் காமேஸ்வரனுக்கு வசப்பட்டவள் காமேஸ்வரியான காமாக்ஷி.  பதிவ்ரதை.  ஸ்ருங்கார சாஸ்திரத்தின் சித்தாந்தம் காமாக்ஷி.  சத்வ குணத்திலிருந்து ஏற்படும் பிரம்மானந்தம். ஸ்வயம்பிரகாசமாக ஒளிவிடும்  ஆனந்த ரூபிணி. குண்டலியை மூலாதாரத்திலிருந்து  ஸஹஸ்ராரம்  வரை கொண்டு சென்று, அம்ருதப்ரவாஹமாக தேஹமுழுதும் வர்ஷிப்பவள்.  நித்ய சரீரி.  பக்தியோடு அவளை வணங்கி சகல சௌபாக்கியமும் பெறுவோம்.

தொடரும் 
 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...