Friday, January 21, 2022

GAYATHRI MANTHRA

 காயத்ரி மந்திரம் - நங்கநல்லூர்  J  K SIVAN 


காயத்ரி மந்த்ரத்தை பற்றி  சொல்லவேண்டியது ஏராளம் இருக்கிறது.  அது ஒரு அதி அற்புத மந்த்ரம். மிகுந்த  சக்தி வாய்ந்த  கை மேல் பலன் அளிக்கும்  மந்திரம். ஒவ்வொருநாளும் விடியற்காலையில் கட்டாயம் சொல்லவேண்டிய மந்திரங்கள் என்று நமது முன்னோர்கள் ஒரு சிலவற்றை நமக்கு அளித்திருக்கிறார்கள். அதில் இது  முதலாவது.

விடியற்காலை வேளை   என்பது நமக்கு தேடாமல், நாம் கேட்காமலேயே  கிடைத்த வரப்பிரசாதம். உற்சாகம் புத்துணர்ச்சி யை தருகின்ற நேரம். அவசியம் இதை பயன் படுத்திக் கொள்ளவேண்டியது நமது கடமை. சூர்யஉதயத்திற்கு ரெண்டு மணிநேரம் முன்பான வேளை அற்புதமானது. ப்ரம்ம முஹூர்த்தம் என்று சொல்லி இதை நமது முன்னோர்கள் போற்றினார்கள்.  இந்த நேரத்தில் மனம் இனிக்க சில ஸ்லோகங்களை சொல்வதால் நாம் முழுதுமாக ரீ சார்ஜ் செய்யப்படுகிறோம். ஸ்லோகங்களை அர்த்தம் புரிந்து கொண்டு சொல்வதால் மனது இனிக்கிறது. எதற்கு ஏன் செய் கிறோம் என்று எதையுமே தெரிந்து கொண்டு செய்வதால் பயன் உண்டு. அதில் உற்சாகம் ஏற்படும். தெய்வீக உணர்ச்சி நம்மில் பரவுவதை உணர்வோம்.

முதலில் காயத்ரி மந்திரம். சுருக்கமாக அர்த்தமும் சொல்கிறேன்

''ॐ भूर्भुवः॒ स्वः ।तत्स॑वितुर्वरे॑ण्यं ।भ॒र्गो॑ दे॒वस्य॑ धीमहि। ।धियो॒ यो नः॑ प्रचो॒दया॑त्॥ ।
1.Oṃ bhūr bhuvaḥ svaḥ tát savitúr váreṇ(i)yaṃ bhárgo devásya dhīmahi dhíyo yó naḥ prachodáyāt.
1. ஓம் பூர் புவ ஸ்வ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன ப்ரசோதயாத்

காயத்ரி மந்திரம் குருவினால் உபதேசிக்கப்பட்ட பின் பழக்கத்தில் கொண்டு வரவேண்டியது என்று வைக்கப்பட்டுள்ளது. ப்ரம்மோபதேசம் என்று இதற்கு பெயர். வேதகாலத்தில் அரை இருட்டில் நதிகளில் நின்று கிழக்கு நோக்கி இதை குரு உபதேசிக்க, இருட்டைநோக்கி சிஷ்யன், மாணவன், அதை உச்சரித்தான். இருளைக் கிழித்துக்கொண்டு தண்ணீர்லிருந்து மேல் நோக்கி சூரியன் உதயமாவதை எதிர்பார்த்து இந்த மந்திரம் சொல்லப்பட்டது. இருளில் வாழ்ந்த காலம். சூரியனை அதிக ஆர்வத்தோடு, ஆவலோடு வேண்டினார்கள். ஒளி, வெளிச்சம், என்பது வாழ்வில் உள்ளும் புறமும் அவசியம் அல்லவா?

மந்த்ரங்களில் எவரெஸ்ட் சிகரம் போன்றது காயத்ரி மந்திரம். இதை பற்றி எத்தனையோ தலைகாணி திண்டு புஸ்தகங்கள் இருக்கின்றன அத்தனையும் போதாது அதன் சக்தியை விவரிக்க. இங்கே  நான்  சொல்வது  ஒரு சின்ன கடுகு போன்ற சுருக்கம்:

ஓம் (Aum),   அதி உன்னத பகவானே அதிபதியே, (Bhur),  இந்த நாம் வாழும் பூமியை பாதுகாப்பவனே , இந்த பிரபஞ்சத்தின் ஆதார ஜீவ நாடியே,  உள்ளங்காலில் இருந்து நாபி மத்யமம், தொப்புள் வரை புவ:(Bhuvah) பூமியை குறிக்கிறது: 
உயிர் மூச்சிழுத்து ஆகாசம் எட்டும்படியாக வேண்டுகிறேன். எங்கும் எதிலும் நிறைந்து நிற்கும் பகவானே, சகல துன்பங்களும் தீர்ப்பவனே.
நாபியிலிருந்து தொண்டைக்குழி கழுத்து வரை அடுத்து (Svahah) ஸ்வஹ: விண்ணைக் குறிக்கிறது:
பகவான் ஆனந்த ஸ்வரூபன் சகலரையும் ரக்ஷிப்பவன். சுகத்தை, சந்தோஷத்தை வாரி வழங்குபவன்
கழுத்து முதல் ஆயிர தாமரை இதழ் உச்சி சிரசு வரை: (tat ) தத்:  நீயே ஸவிதுர் (Savitur) சூர்யன், படைப்பவன், காப்பவன், ஸ்வயமாக ஒளிர்பவன், சூரியமண்டல விஞ்ஞானத்தின் பிரதான மந்திரன், வரேண்யம் (Varenyam)  வழிபட தகுந்தவன் , பர்கோ: (Bhargo)  சூரியனின் உஷ்ண கிரணங்கள் அஞ்ஞானத்தை அறியாமையை சுட்டெரிக்க வல்லது, அதன் மூலம் துக்கம், துன்பம் அகலும். தேவஸ்ய: (Devasya) விண்ணுலக தேவ நாதன் எனும் ஆனந்த ஸ்வரூபன்தீமஹி: (Dheemahi) ,
 உன்னை மனதார வணங்குகிறேன் தியானிக்கிறேன் தீயோயோன:(Dheeyo Yo Na)இதை என் அறிவும்
 ஞானமும் உணர்த்துகிறது ஊக்குவிக்கிறது. ப்ரசோதயாத்: (Prachodayat)

அதாவது: இந்த பூமி (bhur), கிரஹங்கள்; (bhuvah), பிரபஞ்சம் (swah) எல்லாமே மிக வேகமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத அளவு அதிவேகத்தில் சுழல்பவை. அப்போது உண்டாகும் பிரம்மாண்ட மான அண்டம் எதிரொலிக்கும்சப்தம் ''ஓம்காரம் ' (om ) இதை தான் ப்ரணவ ஸப்தம், ஸ்வரூபம் என்று அருவமான கடவுளாக ஏற்கிறோம். (tat), அவன் சூரிய ஒளியாகவும் நமக்கு காண்கிறான்.(savitur) அவனே போற்ற வழிபட, தகுந்தவன் (varenyam). எனவே அவனை தியானிப்போமாக: (dheemahi) ஒளிமயமாக (bhargo) அந்த தேவாதிதேவனை (devasya) ஓம் என்று உச்சரித்து வழிபடுவோம். அவன் நம்மை (yo) நல்வழியில் இட்டுச் செல்லட்டும் (prachodayat) நமது (nah) புத்தியை பண்படுத்தி வளரச்செய்யட்டும் (dhiyo.)

காயத்ரி  மந்திரம் ஜபிக்கும்  எல்லோருக்கும்  ஒரே பலன் மனத்தூய்மை தான். மனோபலம்தான். மனோ பலத்தையும், மனத் தூய்மையும்  வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும்.    இன்றைக்கு மனோ பலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே   காயத்ரி  அனுஷ்டானம் குறைந்து இருப்பதுதான். 
அடுத்த பதிவில் காயத்ரி மந்த்ர கதை ஒன்று சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...