Saturday, January 22, 2022

SRI LALITHA SAHASRANAMAM

 


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -  நங்கநல்லூர்  J K  SIVAN
ஸ்லோகங்கள்   157-158     நாமங்கள்  838 -  850

मुकुन्दा मुक्तिनिलया मूलविग्रह-रूपिणी ।
भावज्ञा भवरोगघ्नी भवचक्र-प्रवर्तिनी ॥ १५७॥

Mukunda muktinilaya mulavigraharupini
bhavagyna bhavarogaghni bhavachakra pravartini – 157

முகும்தா, முக்தி னிலயா, மூலவிக்ரஹ ரூபிணீ |
பாவஜ்ஞா, பவரோகக்னீ பவசக்ர ப்ரவர்தினீ || 157 ||

छन्दःसारा शास्त्रसारा मन्त्रसारा तलोदरी ।
उदारकीर्तिर् उद्दामवैभवा वर्णरूपिणी ॥ १५८॥

  Chandasara shastrasara mantrasara talodari
udarakirti rudhamavaibhava varnarupini – 158  

சம்தஸ்ஸாரா, ஶாஸ்த்ரஸாரா, மம்த்ரஸாரா, தலோதரீ |
உதாரகீர்தி, ருத்தாமவைபவா, வர்ணரூபிணீ || 158 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - (838-850) அர்த்தம்
 

*838*   मुकुन्दा   முகுந்தா
 பிரபஞ்சத்தில் அனைத்து ஜீவர்களுக்கும்  முக்தி அளிப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை. மஹா விஷ்ணுவிற்கும் அவளுக்கும் ஒரே பெயர் தான். முக்தி கொடுப்பது யாராயிருந்தாலும் முகுந்தா தான்.     முக்தி மூன்று வகை. க்ரம முக்தி. அதாவது ஒரு கிரமமாக தொடர்ந்து முன்னேறி அடைவது ஒருவித முக்தி. விதேக முக்தி என்பது உடலை, தேகத்தை, துறந்து, கர்மபந்தங்களிலிருந்து விடுபட்டு, சுதந்திரமாக என்றும் முக்தி நிலையில் இருப்பது, மூன்றாவது முக்திக்கு சாத்ய முக்தி என்று பெயர். நினைத்த உடனே பெறுவது. மிகப்பெரிய ஞானிகளுக்கு அது எளிது. எல்லா துன்பங்களிலிருந்தும்  விடுதலை பெறுவது தான் முக்தி. பிரம்மத்தில் திளைப்பது.

*839* मुक्ति-निलया  முக்திநிலயா
முக்தி என்றால் அது அம்பாளையே குறிக்கும். முக்தி என்பதே அம்பாள் தான். அவளிடம் இருப்பதை ஒரு தாய் போல் பக்தர்களோடு பரிமாறிக் கொள்கி றாள். முக்தி என்றால் என்ன? எந்த நிலையில் ஆத்மா புத்தியிலிருந்து தனித்து விடுபடுகிறதோ அந்த நிலை. உலகிலிருந்து எதிலும் இணையாமல், ப்ரக்ரிதியிலிருந்து தனித்து ஆத்மா இயங்குவது தான். மனது, விஷயங்கள் அனைத்திலிருந்தும் ஆத்மா தன்னை பிரித்துக்கொண்டு இருப்பது.

*840* मूल-विग्रह-रूपिणी   மூலவிக்ரஹ ரூபிணீ  
எல்லா சக்திகளுக்கும் ஆதார சக்தி லலிதாம்பிகை. விக்ரஹம் என்றால் ரூபம். உருவம். மூலம் என்றால் ஆதாரம். அம்பாள் ஸ்ரீமாதா. அவள் தான் முழு முதல் ஆரம்பத்தில் இருந்தவள். அவளை ப்ரம்மம் எனலாம். அவளிலிருந்து தோன்றியவர்கள் ப்ரம்மா விஷ்ணு ருத்ரன். மஹா திரிபுரசுந்தரி.

*841*  भावज्ञा  பாவஜ்ஞா
பாவம் (bhaavam ) என்பதற்கு எத்தனையோ அர்த்தங்கள் உண்டு. ஒன்றாக ஆகிவிடுவது, மாறுவது, தொடர்ந்து அதே நிலையில் இருப்பது, குணம், முடிவாக நிலைப்பது, ஞானி, பிரபஞ்சன், இதை உணர்வான்.

*842* भव-रोगघ्नी  பவரோகக்னீ -
பவம் ( bha) இங்கு சம்சாரம் எனப்படும் உலக வாழ்க்கையை குறிக்கும். நோய் நொடி, வியாதி, நரை, திரை துக்கம் அனைத்தும் தருவது. அம்பாள் இதிலிருந்து விடுவிக்கிறாள். பவா என்றால் சிவனை யும் குறிக்கும். சக்தி சிவனும் ரெண்டும் ஒன்று தானே.

*843* भव-चक्र-प्रवर्तिनी  பவசக்ர ப்ரவர்தினீ  
சம்சாரத்தை ஒரு சக்ரமாக உருவாக்கப்படுத்திக் கொள்வோம். அதை சுழற்றுவது அம்பாள் ஸ்ரீ லலிதை. வாழ்க்கை சக்ரம் பிறப்பு இறப்பு ஆகியவற்றில் உழல்வது. சுழல்வது. ஆரம்பமே முடிவு. முடிவே ஆரம்பம்.

*844*  छन्दः सारा சந்தஸ்ஸாரா
 சந்தஸ் என்பது ஒரு ஸ்வரத்தோடு நீட்டி குறுக்கி காலப்ரமாணத்தில் சீராக உச்சரிப்பது. மீட்டர் என்பது. முண்டக உபநிஷத் (I.i.5) சொல்வது:   ''சந்தஸ் என்பது அபர ஞானம். ஆத்ம ஞானம் பர வித்யை என்கிறது. ஸாரம் என்றால் சாறு, பிழிந்தெடுத்தது. ஒரு வஸ்துவில், விஷயத்தில் முக்யமானதை சாறு எஸ்ஸென்ஸ் essence என்கிறோம்.    சந்தஸ் அக்ஷரங்களால் தொடுக்கப்பட்டது. வேதங்களை உச்சரிக்கும் சப்தம். உபநிஷதங்களின்  சாரம் அம்பாள் என்கிறது இந்த நாமம்.
சந்தஸ் களில்  முக்கியமானது காயத்ரி சந்தஸ். வரிவஸ்யா ரஹஸ்யம் (I. 6, 7) சொல்வது:  ''அம்பாளை 14 வித்யைகள் மூலம் அறியலாம் .  அதிலும் வேதங்களில் காயத்ரி தான் பிரதானம். ரெண்டு விதமாக அவள் தோன்றுவாள். வேதங்கள் மூலம் அறியும் ஸ்ரீ வித்யா, மற்றொன்று மனோபாவத்தில் புரிவது''

*845* शास्त्र-सारा ஶாஸ்த்ரஸாரா  
சகல சாஸ்திரங்களின் சாரம் அம்பாள் ஒருவளே . ப்ரம்ம சூத்ரம் அதனால் தான் அவளை (I.i.3) ஸாஸ்த்ர யோனித்வத் என்கிறது. ப்ரஹ்ம ஸ்வரூபம். வேத சாஸ்திரங்களில் உற்பத்தி ஸ்தானம். சர்வஞான ஆதாரம்.

*846*  मन्त्र-सारा  மந்த்ரஸாரா
எல்லா மந்திரங்களையும் பிடித்து சாறு பிழிந்தால் கிடைப்பது தான் அம்பாள்.பீஜங்களின் சேர்க்கை தான் மந்திரம் என்பது. அம்பாள் அதனால் தான் ஸப்த (sabdha . ஏழு என்னும் சப்த அல்ல) ப்ரம்மம்.

*847* तलोदरी  தலோதரீ  
மெல்லிடையாள் . இல்லாதது போல் தோன்றும் இடையுடையவள். அதல லோகம் எட்டாவது உலகம்.

*848*  उदार-कीर्तिः உதாரகீர்தி
அவளுடைய பிரதாபமும், தயை நிறைந்த கருணை உள்ள கீர்த்தியும் எங்கும் நிறைந்தவை. பக்தர்களுக்கு எல்லையில்லா அன்போடு வாரி வழங்குபவள். அவர்களுக்கு பெருமை தருபவள். மௌனத்தில் மோக்ஷ மார்க்கம் காட்டுபவள் . ப்ரம்மச்சர்யத்தில் கட்டுக்கடங்காத சக்தி தருபவள்.

*849* उद्धाम-वैभवा  உத்தாமவைபவா
அம்பாளின் பெருமை மஹோன்னதம் எனும் வார்த்தைகளுக் கப்பாற் பட்டது. தாம: என்றால் கயிறு. பொருள்களை கட்டுவது. அம்பாள் எல்லாவற்றையும் தனது கட்டுக்குள் கொண்டாலும் அவள் எல்லையற்றவள்.

*850* वर्ण-रूपिणी  வர்ணரூபிணீ  
அக்ஷரங்கள், எழுத்துக்களின் கூட்டு அமைப்பு தான் அம்பாள். அறுபத்து நான்கு எழுத்துக்கள், அக்ஷரங்கள் கொண்டு தான் வேதங்கள் படைக்கப்பட்டவை. அந்த அறுபத்து நான்கும் அம்பாளின் வடிவங்களே.

 சக்தி பீடம் :   காயத்ரி  அம்மன்  ஆலயம்.  சிதம்பரம்.

சிதம்பரம்  பஸ் டெர்மினஸ் விட்டு  இறங்கி  1.5. கி.மீ. நடந்தால்  அல்லது உள்ளூர்  பஸ்ஸில் சென்று  கஞ்சி தொட்டி எனும் இடத்தில் இறங்கினால் அங்கிருந்து   அரை கி.மீ. தூரத்தில் அம்பாளை தரிசிக்கலாம். காலை 9 to 10 am மற்றும் மாலை  6 to 7.30  வரை தான் வழக்கமாக திரண்டிருக்கும். இப்போது கொரோனா காலத்தில் எப்படியோ?

யாரோ  சொன்னபடி   கிட்டத்தட்ட  7 கோடி  மந்த்ரங்கள் நமது சநதனதர்ம த்தில் இருந்தாலும் அதில் பிரதானமானது காயத்ரி மந்திரம் தான். உச்சரிப்பும் ரொம்ப சுலபம். ரிக்வேதம், உபநிஷட்ஸ், பகவத் கீதை எல்லாமே அதன் சிறப்பை விடாமல் சொல்வன.  சாவித்ரி மந்திரம் என்றும் சொல்வதுண்டு.  காயத்ரி ஒரு சந்தஸ்.  வேதத்தை ஒலிக்க  ஸப்த  மீட்டர். ப்ரம்மாவிடமிருந்து தோன்றியது.  கிருஷ்ணனின் புல்லாங்குழல் ஒலி  ப்ரம்மாவின்  காதில் விழுந்தபோது  அது ஓம் என்ற சப்தத்தோடு செவியில் நுழைந்து அவர் உள்  வாங்கி வெளியே காயத்ரி மந்த்ரமாக   அவரால் உச்சரிக்கப்பட்டது.  நமது பூமிக்கு இந்த காயத்ரி மந்திரத்தை  விண்ணில் கேட்டு  அளித்தவர்  விஸ்வாமித்ர முனிவர்.  ஞானம் பெற  வேண்டி  தவம் இருந்து, யாகம் வளர்த்தபோது  காயத்ரி தேவி   விஸ்வாமித்ரர் முன் தோன்றி உபதேசித்தது தான் காயத்ரி மந்த்ரம் . அந்த முனிவரால் நமக்கெல்லாம் கிடைத்தது. 
காயத்ரி தேவிக்கு  அதிக கோவில்கள் இல்லை.   பழைய  கோவில் இன்று  சிதம்பரத்தில் உள்ளது.  ஸ்தலபுராணத்திலிருந்து  நாம் அறிவது என்னவென்றால்,  ஒரு காட்டில் நடுவே  சின்னதாக ஒரு காயத்ரி கோவில் இருந்தது.  அங்கே ஒரு பிராமணன் வெகுகாலம் வழிபட்டுவந்தான். அந்த ஊர்  ராஜா  தனது பாவங்களுக்கு பரிஹாரம் தேடி  ஒருநாள் காட்டுக்குள் வந்தபோது இந்த பிராமணனை சந்தித்து தனக்கு  பாபவிமோசனம்  வேண்டுமென்று கெஞ்சினான்.  பிராமணன் இதுவரை தான் காயத்ரியை வழிபட்டதால் கிடைத்த புண்யத்தை   ராஜாவுக்கு  பரிஹாரமாக  அளித்தான்.  பாபங்கள் தீர்ந்த ராஜா  ''ப்ராமணரே உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் உடனே  குரு சம்பாவனையாக தருகிறேன்''  என்றான்
'ராஜா, எனக்கு ஒன்றும்  வேண்டாம்.  உங்களால் முடிந்தால், இந்த கோவிலை பெரிதாக கட்டி எல்லோரும் காயத்ரியை வழிபட ஏற்பாடு செய்யுங்கள்''
''ஆஹா உடனே  அதை ஆரம்பிக்கிறேன்'' என்று அந்த ராஜா கட்டிய  கோவில் தான் இப்போது சிதம்பரத்தில் உள்ளது.  காயத்ரி தேவி மேற்கு பார்த்து வீற்றிருக்கிறாள்.  ஐந்து முகங்கள், பத்து கரங்கள், எதிரே ஒரு சக்ரம்.  ஒரு நந்தி வேறு எதிரே அமர்ந்திருக்கிறது.   காயத்ரி தேவி இங்கே  த்ரிமூர்த்திகளாக, த்ரிதேவிகளாக உள்ளாள்.   ஆலயத்தின் கோஷ்டங்களில் மஹாலக்ஷ்மி  அம்ருத கலசத்தை ஏந்தி நிற்கிறாள்.  சரஸ்வதி, அஷ்ட பூஜை  துர்கா ஆகியோர்  அருள் பாலிக்கிறார்கள். சிவப்பு நிற மலர்கள் அணிகிறாள்.  ,  வடை பாயசம் தினமும் நைவேத்தியம்.  சூரியனுக்கு சக்தி அளிப்பவள் காயத்ரி என்பதால்  விசேஷ  பூஜைகள் உண்டு.  1008  முறை காயத்ரி ஜபம் செயகிறார்கள்.  நவராத்ரி சமயம் லக்ஷார்ச்சனை. விஜயதசமி அன்று பாரிவேட்டை உண்டு  சகல  துர்  தேவதைகளையும்  தீய சக்திகளையும்  விலக்குபவள் காயத்ரி. 
        

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...