Saturday, January 22, 2022

OUR BODY

 நம்ம உடம்பு -10    -    நங்கநல்லூர்  J K  SIVAN


நாம்  நெருப்பு மாதிரி சுடுபவர்கள் .  ஆங்கில  தெர்மோ மீட்டர் நமது உடலின்  உஷ்ணம் 98.4 டிகிரி F  என்று  காட்டினால் நாம்  நார்மல்.  99வரை கூட  காட்டுகிறது. தப்பில்லை.  நம்முடைய உடம்பில்  கந்தகம் இருக்கிறது.  ஒருவனைப் பிடித்து அவன் உடலிலுள்ள  பாஸ்பரசை PHOSPHOROUS ஐ உபயோகித்து  சுமார்  20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்.  எப்படி?

அதேபோல்  நம் உடம்பில் உள்ள  கரி எனப்படும்  கார்பனைக் CARBON  உபயோகித்து  900 பென்சில்களை உரு வாக்கலாம்.  கடையில் போய் வாங்கவேண்டாம். பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவர்களுக்கு இலவசமாக தரலாம். 

அதேபோல் சோப் வெளியே தேட வேண்டாம். நம் உடம்பிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்.   கொழுப்பு ஜாஸ்தி அவனுக்கு/அவளுக்கு என்று  சொல்கிறோமே அவர்களை பிடித்து கசக்கி பிழிந்தால் இன்னும் நிறைய பார் சோப்பு கிடைக்குமோ என்று தோன்றுகிறது.

நம் உடம்பில்  இரும்பு சத்து இருக்கிறது. அது குறைந்து போனால் டாக்டர்  சீட்டு எழுதிக் கொடுத்து  மாத்திரை, மருந்து விழுங்குகிறோமே. நம்முடைய உடம்பில்  உள்ள  இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம். 

பல், நகம், தலை முடி,  எலும்பு  ஆகியவற்றின் வளர்ச்சி அத்யாவஸ்யமானது  கால்ஷியம். நம் உடம்பில்   அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம் தான் .

அடிக்கடி நாம்  நமது நாட்டில்   ரயில்கள்  ஓடும்  நீளமான   இருப்பு பாதைகள், நீண்ட  ஆறுகள், நதிகள  பற்றி பேசுகிறோமே , நம் உடம்புக்குள் எவ்வளவு நீளமான ஒரு ரயில் பாதை, ஆறு,  இருக்கிறது தெரியுமா?  சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து ரத்தம்,  இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது. அடேயப்பா  கிருஷ்ணா, நீ பெரிய  இன்ஜினீயர் டா!

இதைப்படிக்கும்போதே  உங்களில் சிலருக்கு கொட்டாவி வருகிறதா? என்னடா இந்த சிவன் இப்படியெல்லாம் எழுதி உயிரை வாங்குகிறான் என்று தோன்றுகிறதா. கொட்டாவி பற்றி உங்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.  நாம்  உள்ளே இழுக்கிறோமே  மூச்சு,  அப்படி  உள்ளே செல்லும் காற்றில்  ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்.  தேவையான காற்றை உள்ளே பெற   கொட்டாவி என்கிற ஒரு அருமையான  அட்ஜஸ்ட்மென்ட்  நடக்கிறது.  

நாம் ஒவ்வொருவரும்  நாளொரு வண்ணம் பொழுதொரு  கொரோனா என்று வளர்கிறோமா என்றால் இல்லை ஸார் .  நமக்கு  21 வயது முடிந்ததும் உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. காது வளர்வதை   நம்மால்  கண்டுபிடிக்க முடியவில்லை.  நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சின்னூண்டு  வளர்ச்சி.

நான் எழுதுவது  உபயோகமா?  பொழுதை வீணாக்கும்  வேலையா?  எதுவாக இருந்தாலும் நான் நிறுத்தப் போவதில்லை.  ஆனால்  நேரம் வீணாவதைப்  பற்றி நீங்கள் ஒரு முக்கியமான தகவல் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவன்  சுமாராக  60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5  மாதங்கள் வீணாக்கப்படுவதாக ஒரு கணக்கு போட்டிருக்கிறார்கள். இது வீண் வேலையல்ல. 

இது வரை  நமது உடம்பைப்  பற்றிய  எத்தனையோ விஷயங்கள் சொன்ன காரணம். பகவான் எப்படி  அற்புதமானதாக நமக்கு உடம்பை ததிருக்கிறான் என்று எல்லோரும் அறியவேண்டும் என்ற முயற்சி.    ஆண்டவனின் படைப்பின் நுட்பத்தை நவீன விஞ்ஞானத்தின் மூலம் காணும் போது பெரும் வியப்பில் ஆழ்த்தும் அத்தனை ஆச்சரியங்களையும்  என்னால் எழுதி தீர்க்க முடியுமா? ஏதோ முடிந்தவரை அவ்வப்போது ஆன்மீகத்தைத் தவிர  இந்த மா திரி விஷயங்களும் தருவேன்.  உதாரணமாக  நம் உடம்பிலுள்ள  பகவான் அளித்த மூளையைப் பற்றி நவீன விஞ்ஞானம் அறிந்து கொண்டது மிக  மிக அற்பமானது, சொற்பமானது.   எத்தனையோ  ரஹஸ்யங்கள் அடங்கி இருக்கிறது. அவை இன்னும்  தெரியாத புரியாத புதிர்கள். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...