Friday, January 28, 2022

RAI DAS

 ரை தாஸ்   -  நங்கநல்லூர்   J K  SIVAN


பலே பலே  

மரகதத்தை தேடிப்  போகும்போது  வைடூர்யம் ஒன்று கிடைக்கிறது. நமது பாரத தேசத்தில் ஆன்மீக புதையல்கள் ஏராளம்.  புதையலைத் தேடுவோர் தான்  அதிகம் இல்லை,

ஸூர்தாஸ்  பாடல்கள் ஹிந்தியில் ஆங்கில  அர்த்தத்தோடு கிடைக்குமா என்று தேடும்போது கிடைத்தவர்  ரை  தாஸ். அவரைப் பற்றி நிறைய அறிந்து கொள்ளவேண்டும். ரொம்ப  விஷயம்  அறியமுடியாத  மறைந்து போன ஒரு மஹான் இவர் என்று தெரிகிறது. பெயரே கூட ரவி தாஸா அல்லது ரைதாஸா  என்று தெரியவில்லை.  உ.பி.யில் எங்கோ பிறந்தவர். 
 ராய்தாஸ்  என்கிற  ரவிதாஸ் ஒரு  15ம் நூற்றாண்டு பிறந்த  செருப்பு தைக்கும் வகுப்பினர் என்றாலும்  அபரிமிதமான கிருஷ்ணபக்தராக இருக்கிறார்.  சீக்கியர்கள் வேத புத்தகம்  க்ராந்த் சாஹேப்  பில் கூட இவர் பெயர் இருக்கிறது.   மீராபாய் இவரை குருவாக ஏற்று வாங்கியவள்.

இறைவனை மறக்காத நெஞ்சங்கள் தம்மை  எப்படி  அவனோடு இணைத்துக் கொள்ளும்?   நீ கண்ணானால் நான் இமையாவேன்,  நீ  நிஜமென்றால்  நான் உன் நிழலாவேன் ,   நீ பாட்டானால், நான் அதன் இசையாவேன்,
ராதாவும்  கிருஷ்ணனை இப்படித்தான்  தன்னை அவனோடு ஒன்றிணைந்தவள்.  

சூர் தாஸ்  பாடல்கள்  போலவே  நெஞ்சை அள்ளுகிறது  ரை  தாஸ் எழுததும். சிந்தனையும்.   பாடல் என்னை கவர்ந்ததால் அதை அளிக்கிறேன்.


நீ மண்ணானால்  நான் மரமாவேன்  மாதிரி இருக்கிறது இவர் பாடல்.

நீ  சந்தனம் என்றால் நான்  அந்த  சந்தன  குழம்புக்கு நீராவேன் . அந்த சந்தன  மணம்  என்னை இட்டு நீங்காமல் என் உடல் பூரா  அப்பிக்கொள்வேன்.  

நீ கருமேகம் என்றால் நான் உன் அழகில் மயங்கி ஆடும் மயிலாவேன்.

சகோர பக்ஷி வாயைத் திறந்து ஒரு சொட்டு மழை நீருக்காக காத்திருப்பது போல்   நீ சந்திரன் என்றால் நான் சகோர பக்ஷி.

நீ நல்  முத்தானால் நான் அதைக் கோர்க்க உதவும் நூல்.பட்டுக்கயிறு.

நீ  தங்கமென்றால் அதை உருக்கும்  ஒரு தூள்  நான்  

நீ   தீபமென்றால் நான் அது எரியும் திரி நான்  இரவும் பகலும் நீ ஒளிவீச நான் எரிந்து கொண்டே இருப்பவன்.

என்னப்பா, நீ எஜமானன் நான் உன் அடிமை சேவகன்.

இதுதான் ரை தாஸனின் பக்தி.  படிப்பவர்கள் என்னோடு சேர்ந்து பலே  ரைதாஸ் என்று ஒரு முறை கை  தட்டுவோம். இன்னும் தேடுவோம்.

  प्रभु जी तुम घन बन हम मोरा। जैसे चितवत चंद चकोरा॥
प्रभु जी तुम दीपक हम बाती। जाकी जोति बरै दिन राती॥
प्रभु जी तुम मोती हम धागा। जैसे सोनहिं मिलत सोहागा।
प्रभु जी तुम स्वामी हम दासा। ऐसी भक्ति करै 'रैदासा॥

Prabhu ji tum chandan hum paani
Jaki ang ang baas samayi
Prabhu ji tum ghanban hum mora
JAise chitwat chandra chakora
Prabhu ji tum deepak hum baati
JAki jyot bare din rati
Prabhu ji tum moti hum dhaga
Jaise sonehu milat suhaga
Prabhu ji tum swami hum dasa
Aisi bhakti kare Raidasa

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...