Saturday, January 22, 2022

gayathri manthram



காயத்ரி மந்த்ரம்   எனக்கும் தெரியும் -- நங்கநல்லூர் J.K. SIVAN

காயத்ரி மந்த்ரத்தை பற்றி நிறைய பேசியாச்சு. எழுதியாச்சு. அந்த காயத்ரி மந்த்ர மஹிமையைப் பற்றி சொன்னால் தானே அதன் மஹத்வம் புரியும். எனவே இப்போதே ஒரு குட்டிக்கதை.

காயத்ரி மந்த்ரத்தை பற்றி அதன் மகிமை பற்றியெல்லாம் என்னதான் எழுதினாலும் ஒரு கதை மூலம் அதை வலியுறுத்தினால் கப் என்று பிடித்துக்கொள்ளும். எனவே தான் இந்த குட்டிக் கதை.

இந்த  பரந்த  பாரத தேசத்தில்  எங்கோ ஒரு மூலையில்,  ஒரு காலத்தில்  அந்த  சுண்டைக்காய் ராஜ்ஜியம் இருந்தது. அதற்கு ஒரு சிம்பிள் ராஜா. அவனுக்கு ஒரு அமைதியான மந்திரி. அந்த மந்திரி ஒரு வேதாந்தி. அடிக்கடி  ராஜா மந்திரி வீட்டுக்கு செல்வதுண்டு. 

ஏதோ அர்ஜண்டாக கேட்க வேண்டு மென்று ஒரு நாள் ராஜா தன்னுடைய மந்திரி வீட்டுக்குச் சென்றான். மந்திரி மனைவி ராஜாவை வரவேற்றாள் .

''அவர் காயத்ரி மந்த்ரம் சொல்லிக் கொண்டு தியானத்தில் இருகிறார் இதோ முடித்துவிட்டு வந்துவிடுவார் அமருங்கள்'' என்றாள் .

ராஜா ஊஞ்சலில் ஆடிக்கொண்டு காத்திருந்த பின் மந்திரி வந்தார்.

'' நீ ஏதோ காயத்ரி மந்திரம் என்று ஒன்றை சொல்லிக்கொண்டிருந்தாயாமே. அதை எனக்கும் சொல்லிக் கொடு'' என்றான் ராஜா.

"ராஜா, நான் காயத்ரி மந்திரத்தை தங்களுக்கு உபதேசிக்கும் அளவுக்கு தகுதி யானவனில்லையே. யாராவது  தக்க  குருவினிடமிருந்து உபதேசம் பெறுவது தான் முறை" என்றான்.

ராஜாவுக்கு யாரோ ஒரு குரு கிடைத்து காயத்ரி மந்திர உச்சரிப்பு தெரிந்து கொண்டான். ஒருநாள் , மந்திரி வீட்டிற்கு வந்தபோது

 ''மந்திரி, நானும் காயத்ரி மந்த்ரம் கற்றுக்கொண்டு விட்டேன். உனக்கு சொல்லிக் காட்டட்டுமா? என்று மந்திரி மனைவி கொடுத்த  பஜ்ஜி தின்று கொண்டே, உரத்த குரலில் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே ஒப்பித்தான்.  சரியாக சொன்னேனா ? 

'' ராஜா, நீங்கள் சொன்ன உச்சரிப்பு சரி ஆனால் இப்படி மந்திரத்தை உச்சரித்தால் பயன் கிடைக்காது''
''ஏன்?'' மந்திரி யோசித்தான். ராஜாவுக்கு எப்படி புரிய வைப்பது. ஆ! ஒரு ஐடியா கிடைத்தது. அருகில் இருந்த தனது சேவகனைக்  கூப்பிட்டான்.

" டேய் ! இந்த ராஜாவை உடனே ஒரு கயிறால் இந்த தூணில் கட்டிப் போடு'' என்றான்."
ராஜாவுக்கு ஷாக். ஆனால் சேவகன்  மந்திரி கட்டளையை துளியும் லக்ஷியம் செய்யாமல் ராஜாவையே பார்த்துக் கொண்டு நின்றான்.

"என்னடா நிற்கிறாய், காதென்ன செவிடா?   உடனே சொன்னதைச்  செய், ராஜாவை கம்பத்தில் கட்டு" என்று உரத்த குரலில் மந்திரி கட்டளையிட்டான்.

''ஹுஹும் !! சேவகன் அசையவே இல்லை. ராஜாவுக்கு மந்திரி தன்னை கொன்று விட்டு ராஜ்யத்தை எடுத்துக்கொள்ள ஏதோ சதி செய்கிறானோ என்று மந்திரி மீது சந்தேகம் வந்தது.

''அடேய் ! சேவகா, இன்னும் ஒரு நிமிடத்தில் இந்த மந்திரியை கை கால் கட்டி அரண்
மனைக்கு இழுத்து வா. இவனுக்கு எல்லோர் முன்னிலையிலும் தக்க தண்டனை வழங்குகிறேன்" என்றான். சேவகன் புலி போல் பாய்ந்து மந்திரியைக் கட்ட விரைந்தான். அப்போது மந்திரி சிரிக்கவே ராஜாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

' என்ன சிரிக்கிறாய். சொல் இல்லையேல் உன் கழுத்தை இந்த வாளால் இப்போதே சீவி  விடுவேன்'' என்று ராஜா மந்திரியிடம் சொன்னான்.

"ராஜாவே! நான் இதைத் தான் நான் உங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். கட்டளை ஒன்று தான். நான் சொன்னால் கேட்காத சேவகன் நீங்கள் சொன்ன அடுத்த கணம் அதை நிறைவேற்ற வில்லையா"காயத்ரி மந்த்ரமும் வேதங்கள் சொல்லும் முறையாக உச்சரித்தால் தான் பலன் கொடுக்கும்என்றான்.  ராஜாவும்   மந்திரங்களை  முறைப்படி உச்சரிக்காமல்,  அஸ்ரத்தையுடன்  சினிமா பாட்டு மாதிரி பாடுவது  சொல்வது பலனளிக்காது என்று நம்மைப் போல் புரிந்துகொண்டான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...