Friday, December 24, 2021

THENANA VEMANA

 தேனான வேமனா  -3  -   நங்கநல்லூர்  J K   SIVAN 


அடேடே    இந்த  தெலுங்கு பட்டினத்தார்  வேமனாவை நம் வாசகர்களுக்கு  பிடிக்கிறதே.  இந்த தத்துவங்கள் வேதாந்தங்கள் எல்லாம்  ரசிக்கிறார்களே .  நாம்  நல்ல காரியம் தான் செய்த்திருக்கிறோம் என்று  ஆத்ம  திருப்தி ஏற்படுகிறது.  மேற்கொண்டு சில  பாடல்களை அறிவோம்:

வேமனா  தன்னுடைய  பாடல்களில்,  தத்துவங்களை தனக்கே  சொல்லிக்கொள்வது போல்  அமைந்திருக்கிறது.  என்னடா  வேமா, புரிகிறதா,தெரிந்துகொள்ளடா?  என்கிற டைப்பில் பாடி இருக்கிறார்.


Alpudeppudu palku adamburamu ganu..............ఆల్పుడెపుడు పల్కు ఆడంబురము గాను
Sajjanundu palku challaganu....................................సజ్జనుండు పల్కు చల్లగాను
Kanchu moginatlu kanakammu mroguna...................కంచు మోగినట్లు కనకమ్ము మ్రోగునా
Viswadhaabhiraama, Vinura Vema............................విశ్వధాభిరామ, వినుర వేమ
 

அடே வேமா, வெங்கலபாத்திரத்தை  தட்டினால்  வரும் சத்தம்  தங்கபாத்திரத்தை  சுண்டினால் வருமா?   அற்புதமான  வினோத  ஒலி  வராதா.  உலகமே  தனி அல்லவா?  நன்றாக  கற்றுணர்ந்த பண்டிதன் அமரிக்கையாக அமைதியாக தானே  இருப்பான்.  ஆழ்ந்த ஞானஸ்தன் அரைவேக்காடு  மாதிரியா வெளிலே  காட்டிக்கொள்வான். இதை புரிந்துகொள்ளடா. 

Anuvu gani chota Nadhikulamanaradu...................అనువు గాని చోట అధికులమనరాదు
Kochmayina nadiyu kodava gadu..........................కొంచమైన నదియు కొదవ గాదు
konda addamandu knochami undada...................కొండ అద్దమందు కొంచమై ఉండదా
Viswadhaabhiraama, Vinura Vema........................విశ్వధాభిరామ, వినుర వేమ

ஏண்டா,  வேமா,  நேரம்  இடம்   சரியில்லை என்றால்  வெற்றி யேது  நிம்மதியேது? அதனால்  உன்னுடைய  திறமை   சக்தியெல்லாம்  மட்டமாகி விடுமா? சின்னக்  கண்ணாடியிலே பார்க்கும் போது  பெரிய மலை   கூட  குட்டியாகத் தான்  தெரியும். ஞாபகம் வைத்துக்கொள்ளடா''

எனது  தெலுங்கு  தெரிந்த  நண்பர்களே,   மற்றவர்களை விட  உங்களுக்கு மிக்க பெருமை யளிக்கும்  பதிவு இல்லையா இது?  உங்களை விட  வேறு யார்  வேமனாவை ரசிக்க முடியும்.

 உங்கள்  அபிமான தத்துவஞானியைப் பற்றி  எழுதப்ப ட்ட  இந்த  பதிவுக்கு உங்கள் ஆதரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.  எனக்கு தெலுங்கு  எழுதவோ, படிக்கவோ, அவ்வளவாக பேசவோ தெரியாது என்பதில் மிக வருத்தம். ஆங்கிலத்தில்  யாரோ  எழுதியதை வைத்துக்கொண்டு  முடிந்தவரை  தமிழில் தருகிறேன்.

வேமனாவைப்பற்றி  ஒரு வார்த்தை  சொல்லவேண்டுமே.   அவர் சிவ பக்தர். பொய்மை வேஷம்  கொண்ட  பக்தர்களையோ  சந்நியாசிகளையோ சாடுவதில்  அவருக்கு  நிகர் அவரே   அதைப்பற்றி  பாடுவதை நான் எழுதுகையில் கோபம்  என்மீது திரும்ப வேண்டாம்.

 தெலுங்கில்  உள்ள   அவர்  பாடல்களில்    முதல்  அடி  அவர்  கருத்தைச்சொல்லும்.   அடுத்தது  தன்னைத்  தானே  "என்னடா  வேமா  சொல்கிறாய்,  சரிதானே?"  என்பது போல்  அமைந்துள்ளது

nIvu nilici yunDu nikhilambu niluvadu nilici yunDu enDu nIru valenu
nIvu niScayambu nikhilambu mAyayau viSvadAbhi rAma vinura vEma.

இந்த உலகமே    பரமனின்  அசைவில், இயக்கத்தில் தான் இயங்குகிறது,  ஜீவிக்கிறது. இறைவனின் அசைவு நின்றால்.......? 

''நான் அசைந்தால் அசையும் இந்த அகிலமெல்லாமே அறிவாய் மனிதா'' பாட்டு சிவாஜி கணேசன் கண்ணை உருட்டி விழித்து,  அதை  இரு ஓரங்களுக்கும் கொண்டு சென்று  அசைத்து சிரிப்பாரே   அது  ..... 

அசைவு நின்றால் பிரபஞ்சம் ஸ்தம்பிக்கும். அதனால் தான் இறைவன் நடராஜன். சதா ஆடிய பாதன், ஆடல் வல்லான்.    நீ ஒருவன் தான் அசைவில்லாத ஸாஸ்வதன். மற்றெல்லாம் அசையும் மாயை.


హింసఁ జేయకుండుటే ముఖ్య ధర్మంబు ఆనక హింసచేసి రవనిసురులు
చావుపశువుఁ దినెడు చండాలుఁడే మేలు విశ్వదాభిరామ వినర వేమ!

himsa cEyakumDuTE mukhya dharmambu Anaka himsa cEsir avani surulu
cAvu paSuvu tineDu camDAluDE mElu viSvad abhi rAma vinura vEma.

வேமனா வாழ்ந்த காலத்திலும் யாக யஞங்கள் உண்டு. புத்தருக்கு முந்திய காலத்தில் யாகத்தில் அஸ்வம், அஜம் என்று மிருகங்களை பலியிடுவதுண்டு.    புத்தர்   வேத வித்தகர்கள் பிராமணர்களே, நீங்கள்  நடத்தும் யாகத்தில் இந்த ஹிம்சை வேண்டாமே. உங்களுக்கும் மிருகங்களை வெட்டி உண்பவர்க்கும் என்ன வித்யாசம்?. பிராணிகளை வதைப்பது வேண்டாம் என்று கண்டித்தார்.

வேத சாஸ்திரம் அறிந்தவர்கள் கடவுளுக்கு சமானம். உயிர்  வதை, ஹிம்சை வேண்டாம். அஹிம்ஸா பரமோ தர்மா.. உயிர்களிடம் கருணை தான் தர்மங்களில் எல்லாம் தலையாயது.  இல்லையாடா  வேமா ? என்கிறார்  வேதாந்தி வேமனா.

చంద మెరిగి మాట చక్కగా చెప్పిన ఎవ్వడైన మాట మరికేల పలుకు
చంద మెరింగి యుండు సందర్భ మెరుగుమీ విశ్వదాభిరామ వినుర వేమ.

candam erigi mATa cakkagA ceppina evvaDaina mATa mArikEla paluku
canda meringi yunDu sandarbha merugumI viSvada abhirAma vinura vEma.

யாருக்காவது ஏதாவது மனதில் உறைக்கும்படியாக உபதேசம் பண்ணவேண்டு மானால் அந்த உபதேசம், அறிவுரையானது, எளிமையாக, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குட்டியாக இருக்கவேண்டும். அப்போது தான் அவன்  ''ஆஹா நான் இதை அறிந்துகொண்டேன். அப்படியே செய்வேன்'' என்று ஏற்றுக்கொள்வான்.

இன்னொரு சமாச்சாரம். நீ யாருக்காவது அறிவுரை வழங்கும்போது அவன் அதை ஏற்றுக் கொள்ள, கேட்டுக் கொள்ளும் மன நிலையில் இருக்கிறானா, சந்தர்ப்ப சூழ்நிலைகள் உச்சிதமாக இருக்கிறதா என்று வேறு பார்க்கவேணும். அவசரமாக ஆபிஸ் லேட்டாகிவிட்டது என்று பஸ்ஸில் ஓடுபவனுக்கு கீதை ஞான யோகம் சொல்லட்டுமா என்றால்....!   சரிதானேடா  வேமா  என்கிறார் வேமனா.

Apadaina velanarasi bandhula joodu................ఆపదైన వేళ నరసి బంధుల జూడు
bhayamuvela joodu bantu tanamu...................భయమువేళ జూడు బంటు తనము
Pedavela joodu pendlamu gunamu...................పేదవేళ జూడు పెండ్లము గుణము
Viswadhaabhuraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ

கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் உனக்கு வரும் வேளையில் தான் உன்மேல் உன் பந்துக்களின் அக்கறை எவ்வளவு என்பது தெரிந்துகொள்வாய் . உன் எதிரிகளின் பலத்தை நீ பயத்தில் இருக்கும்போது புரிந்துகொள்வாய். நீ எல்லாம் இழந்து பரம ஏழையாகும்போது தான் உன் மனைவி யார், அவளுக்கு உன்மேல் எவ்வளவு அக்கறை  என்பது புரியும்.  ''இல்லானை இல்லாளும் வேண்டாள்'' பாட்டு அர்த்தம் ''நச்'' சென்று புரியும்.

Chippalonabadda chinuku mutyambayye....................చిప్పలోనబడ్డ చినుకు ముత్యంబయ్యె
nitabadda chinuku nita galise....................................నీటబడ్డ చినుకు నీట గలిసె
Brapti galugu chota phalamela tappura......................బ్రాప్తిగలుగు చోట ఫలమేల తప్పురా
Viswadhaabhiraama, Vinura Vema........................... విశ్వధాభిరామ, వినుర వేమ

மழை பெய்கிறதே அதில் எங்கோ ஒரு சொட்டு வாய் திறந்த சிப்பிக்குள் வீழ்ந்தால் முத்தாகிறது.
பெரிய சமுத்ரத்தில் அது வீழ்ந்தபோது கடல் நீரோடு கலந்து அடையாளமில்லாமல் உப்பு நீராகிறது.
அடே  வேமா,  புரிந்துகொள்ளடா, . உண்மையான பக்தி உனக்கிருந்தால் அதன் பலன் மேன்மை யானதென்று. சரியாடா வேமா, என்கிறார்  வேமனா.

Veshabhashalerigi Kashayavastramul...................వేషభాషలెరిగి ఖాషాయవస్త్రముల్
gattagane mukti galugabodhu...............................గట్టగానె ముక్తి గలుగబోదు
talalu bodulina talapulu bodula.............................తలలు బోడులైన తలపులు బోడులా
Viswadhaabhiraama, Vinrua Vema.......................విశ్వధాభిరామ, వినుర వేమ

வெறும் வேஷம் போட்டுக்கொள்வதால் நீ மதிக்கபடமாட்டாய். கதர் சட்டை தொப்பி ஒருவனை காந்தி ஆகாது. கதர் வேஷ்டி காமராஜாக்கி விடாது. பேச்சின் தோரணை மாற்றிக் கொண்டதால் நீ உயர்ந்துவிட மாட்டாய். உன் காவியுடையும், மொட்டைத்தலையோ தாடியோ, ஜடாமுடியோ, உனக்கு மோக்ஷத்தை அளிக்காது. உன் எண்ணமும் செயலும் தான் உன் மதிப்பின் எடை கல். புரிந்துகொள்.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...