Sunday, December 26, 2021

LALITHA SAHASRANAMAM


 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்லோகங்கள்     130 -  132   நாமங்கள்   658 - 677

 इच्छाशक्ति-ज्ञानशक्ति-क्रियाशक्ति-स्वरूपिणी ।
सर्वाधारा सुप्रतिष्ठा सदसद्रूप-धारिणी ॥ १३०॥

Iccha shakthi-Gnana shakthi-Kriya Shakthi Swaroopini
Sarvaadhara Suprathishta Sada Sadroopa Dharini

இச்சாஶக்தி ஜ்ஞானஶக்தி க்ரியாஶக்தி ஸ்வரூபிணீ |
ஸர்வதாரா ஸுப்ரதிஷ்டா ஸதஸத்-ரூபதாரிணீ || 130 ||

अष्टमूर्तिर् अजाजैत्री लोकयात्रा-विधायिनी । or अजाजेत्री
एकाकिनी भूमरूपा निर्द्वैता द्वैतवर्जिता ॥ १३१॥

Ashta murthi, ajaajaithri, lokayathraa, vidhaayini
Ekakini Bhooma roopa Nirdwaitha Dwaitha varjitha

அஷ்டமூர்தி, ரஜாஜைத்ரீ, லோகயாத்ரா விதாயினீ |
ஏகாகினீ, பூமரூபா, வைதா, த்வைதவர்ஜிதா || 131 ||

अन्नदा वसुदा वृद्धा ब्रह्मात्मैक्य-स्वरूपिणी ।
बृहती ब्राह्मणी ब्राह्मी ब्रह्मानन्दा बलिप्रिया ॥ १३२॥

Annadha Vasudha Vriddha Brhmatmykya Swaroopini
Brihathi Brahmani Brahmi Brahmananda Bali priya

அன்னதா, வஸுதா, வ்றுத்தா, ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ |
ப்றுஹதீ, ப்ராஹ்மணீ, ப்ராஹ்மீ, ப்ரஹ்மானம்தா, பலிப்ரியா || 132 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - (658-677 ) அர்த்தம்

* 658 *
 इच्छाशक्ति- ज्ञानशक्ति-क्रियाशक्ति-स्वरूपिणी -    இச்சாஶக்தி ஜ்ஞானஶக்தி க்ரியாஶக்தி ஸ்வரூபிணீ - 
அம்பாள் மூவிதமான சக்திகளின் ஸ்வரூபம். அவற்றை திரிசக்தி என்போம். பிரியமாக செய்யும் காரியங்கள் இச்சை. அப்படி பிடித்ததை வழங்குபவள் லலிதை. அம்பாளின் சிரம் இச்சை. ஞானம் தான் தேஹம் . காரியம் தான் அவளது திருப்பாதங்கள். ஸ்ருஷ்டி ஸ்திதி லயம் என்ற மூன்று தொழில்களையும் புரிபவள். அவள் வேறு சிவன் வேறு அல்ல.

* 659 * 
सर्वाधारा  ஸர்வா தாரா - 
எல்லாவற்றுக்குமே ஆதாரமாக திகழ்பவள் அம்பாள். இந்த பிரபஞ்சம் இயங்குவதே அவளால் தான்.அவளது திரிசக்தியால் தான்.

* 660 *
सुप्रतिष्ठा॥ ஸுப்ரதிஷ்டா - 
பிரதிஷ்டை என்பது ஒரு இடத்தில் நிரந்தரமாக ஸ்தாபிப்பது. இருப்பது. அம்பாள் தான் நமக்கு சிறந்த சுகமான இருப்பிடம். அவளின்றி ஒன்றும்,அதாவது  ஓரணுவும்,  அசையாது

* 661 *
 सदसद्रूप-धारिणी  ஸதஸத்-ரூபதாரிணீ - 
சத்தியத்தின் உண்மையின் உருவகமானவள் அம்பாள். சத் என்றால் நிரந்தரமானது. அஸத் என்பது அழியக்கூடியது. பிரம்மத்தை தவிர்த்து எதுவும் நிரந்தரமில்லை. அதுவே அம்பாள்.

* 662 *
अष्टमूर्तिर्   அஷ்டமூர்த்தி - 
எட்டு விதமான உருவங்களை கொண்டவள் அம்பாள் என்கிறது இந்த நாமம். அவை பவா,
ஸர்வா,ஈசான, பசுபதி, ருத்ர, உக்கிர, பீம, மஹா என்பன. இந்த சக்தி கொண்ட அம்பாளை தான் பிராம்மி ,மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி , மஹேந்திரி , சாமுண்டி, மஹாலக்ஷ்மி என்று கொண்டாடுகிறோம். ஆத்மாவை அதுபோல் எட்டாக அறிகிறோம். ஜீவன், அந்தராத்மன் , பரமாத்மன், நிர்மலாத்மன், சுத்தஆத்மன், ஞானாத்மன், மஹாத்மன், பூதாத்மன்.

* 663 *
अजाजैत्री அஜாஜைத்ரீ - 
அஞ்ஞானத்தை வென்றவள் அம்பாள் .ஸ்ரீ லலிதை.

* 664 * 
लोकयात्रा-विधायिनी  லோகயாத்ரா விதாயினீ - 
இந்த பிரபஞ்சம் கோளங்களாக ,உருண்டு சதா சர்வகாலமும் ஓயாது ஒழியாது இயங்குவது அம்பாள் சக்தியால். பிறப்பு இறப்பு விடாது நிகழ்வது இந்த இயக்கத்தால் தான்.

* 665 * 
एकाकिनी  ஏகாகினீ, - 
எல்லாம் ஒன்று, அது .அவளே. ஒன்றே பலவாக காட்டுபவளும் அவளே. சாந்தோக்ய உபநிஷத் அழகாக சொல்கிறதே (VI.ii.1) “ekam eva advitiyam” ஏகம் ஏவ அத்விதீயம் '' - அதாவது இரண்டாவதாக வேறு இல்லாத ஒன்று. கதோபநிஷத் கூட (II.ii.9) ‘ ஒரே வஸ்து தான் எல்லாவற்றிலும் இருந்து அவற்றை வெவ்வேறு ரூபங்களில் வேறுபடுத்திக் காட்டுகிறது.''

* 666 * भूमरूपा பூமரூபா - 
நாம் நமது புலங்களினால் எதெல்லாம் காண்கிறோமோ, எஹெல்லாம் கேட்கிறோமோ, எதெல்லாம் புரிந்து கொள்கிறோமோ அதெல்லாம் அம்பாள் ஸ்ரீ லலிதாவின் ஸ்வரூபங்கள். பூம என்கிற வார்த்தை பிரம்மத்தைக் குறிக்கும் சொல். சந்தோக்யோபநிஷத் சொல்வதை அறிவோம். (VII.23)“ யா வை பூமா தத் சுகம் ' - எதெல்லாம் எல்லையற்ற, ப்ரம்மமோ அதுவே சுகம்'' எல்லை, வரையறைக்குட்பட்டது எதுவுமுமே இன்பத்தை தராது.

* 667 * 
निर्द्वैता நிர்த்வைத - 
இரண்டில்லாத, எல்லாமே ஒன்றேயானது எதுவோ அதுவே அம்பாள் ஸ்ரீ லலிதா என்கிறது இந்த நாமம். ப்ரம்மம் ஒக்கட்டே. ப்ரம்மம் ஒன்றே தானே.

* 668 * 
द्वैतवर्जिता  த்வைத வர்ஜிதா - 
ஒன்றுக்கு மேற்பட்டதாக காணும் எதற்கும் அப்பாற்பட்டவள் அம்பாள் ஸ்ரீ லலிதை என்று இந்த நாமம் வலியுறுத் துகிறது.

* 669 * 
अन्नदा அன்னதா - 
அவள் அம்பாளால் தான் சகல ஜீவராசிகளும் உயிர்வாழ உணவை, அன்னத்தைப் பெறுகிறது. அவள் அன்னலட்சுமி. அன்னதாதா என்கிறது இந்த நாமம். .

* 670 * 
वसुदा  வஸுதா - 
செல்வத்தை வாரி வழங்குபவள் அம்பாள். வசு என்றால், நவரத்ன கற்கள், விலையுயர்ந்த உலோகங்கள், செல்வம் என்று பொருள் படும். சிறந்த நிரந்தர செல்வங்களான அஷ்ட வசுக்கள் என்ன தெரியுமா? ஆப (நீர்) 2. துருவ (நக்ஷத்ரம்) 3. சோமன் (சந்திரன் 4. தாவா - தாரை 5. அனிலன் - வாயு, 6. அனலன் - அக்னி. 7. பிரத்யுஷன் - விடிவெள்ளி, 8 ப்ரபாஸன் - ஒளி. (ப்ரபாஸன் தான் பீஷ்மராக பிறக்கிறான்)

* 671* 
वृद्धा  வ்ருத்தா - 
மூத்தவள், முதியவள். ஸ்வேதாஸ்வதர உபநிஷத் (IV.3) அம்பாளை ''நீ ஒரு பெண், நீ ஒரு ஆன், நீ ஒரு பாலகன், நீ ஒரு சிறுமி, நீ முதியவள் கோல் ஊன்றி நகர்பவள், நீ எல்லா பருவங்களும் உருவங்களும் கொண்டவளாய் பிறந்தவள் '' என்கிறது.

* 672 *
 ब्रह्मात्मैक्य-स्व रूपिणी ।ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ - 
பிரம்மத்தில் கலந்தவள். முடிவான சத்தியமாக தோன்றுபவள்.''அஹம் ப்ரம்மாஸ்மி'' என்ற மஹாவாக்யத்தின் உருவம். நானே அந்த ப்ரம்மம் என்று உணர்த்துபவள்.

* 673 * 
बृहती ப்ருஹதீ -- 
ப்ரம்மாண்டமானவள் அம்பாள் என்னும் நாமம். பெரியதில் எல்லாம் பெரியவள்.

* 674 * 
ब्राह्मणी ப்ரஹ்மணி - 
பிரம்மத்தின் பெண் உருவம். சாந்தோக்ய உபநிஷத் (VIII.14). ப்ரஹ்மண்யத்தை, வேத சாரத்தை, கற்றுணர்ந்து தேர்ந்தவர் ப்ராஹ்மணர். இதை ஒரு குலத்தவரை குறிப்பதாக பொருள் கொள்ளக்கூடாது.

* 675 * 
ब्राह्मी ப்ராஹ்மீ- 
பிரம்மன் அம்சத்தை கொண்டவள் அம்பாள் என்கிறது பிரம்மனின் நாவில் வசித்து நாமகள் என்ற பெயர் கொண்ட சரஸ்வதியும் அவளே. வாக் தேவி. கலைமகள்.
அஷ்ட மாதாக்களில் ஒருவள்.

* 676 * ब्रह्मानन्दा ப்ரஹ்மானந்தா - 
பூரண ஆனந்தத்தை தரும் பிரம்மத்தின் ஆதார சக்தி அம்பாள். சர்வமும் ப்ரம்மத்திலிருந்து ஜனித்து முடிவில் ப்ரம்மத்திலேயே கலந்துவிடுகின்றன என்கிறது தைத்ரிய உபநிஷத் (III.6).

* 677 * 
बलिप्रिया பலிப்ரியா - 
பலி இங்கே இரு பொருள் கொண்டது. பலிஷ்டர்களை மெச்சுபவள் அம்பாள் என்றும் நித்யம் சகல ஜீவர்களுக்கு ஆகாரமாக சேரும் உணவை வழங்குபவள் என்றும் பொருள்படும். ஆலயங்களில் பலிபீடம் இருப்பது நைவேத்தியத்தை அற்பணிகத்தான் . பூத யஞம் என்று பெயர்.

சக்தி பீடம்: திருவையாறு தர்ம ஸம்வர்த்தனி

சோழநாட்டின் சிறப்பான புண்ய க்ஷேத்ரங்களில் ஒன்று திருவையாறு. பஞ்சநதிகள், எனும் ஐந்து ஆறுகள் ஓடும் செழிப்பான பூமி. ஐயாறு   எனும்  இந்த  க்ஷேத்ரம்   ''திரு''   வென்ற மரியாதை கலந்து திருவையாறு என்ற பெயர் பெற்ற ஸ்தலம்.   சிவன் இங்கே ஐயாறப்பர், அம்பாள் அறம் வளர்த்த நாயகி. வடமொழியில்,  இந்த திவ்ய தம்பதிகளுக்கு பஞ்சநதீஸ்வரர், தர்மசம்வர்த்தனி என்று நாமம்.   எத்தனையோ மஹான்கள் தரிசித்த ஆலயம். தக்ஷிண கைலாசம் என்று போற்றப்படுவது. ஐந்து பெரிய பிராஹாரங்கள்.மண்டபங்கள் சந்நிதிகள் கொண்டது. சப்தஸ்தான க்ஷேத்திரங்களில் ஒன்று. காவேரி வடகரை சிவாலயங்களில் ஒன்று. ஏழு நிலை கோபுரம். 15 ஏக்கரா நிலப்பரப்பு கொண்ட ஆலயம்.  திருவையாறைப்  பற்றி  நான் இங்கே சொல்லுவது  ரொம்ப  துக்கினியூண்டு.  ஒரு  பெரிய  புஸ்தகமே  எழுத விஷயம் இருக்கிறது. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...