Sunday, December 26, 2021

ADHI SANKARA - SADHANA/UPADESA PANCHAKAM

 ஆதி சங்கரர் -   நங்கநல்லூர்  J K  SIVAN

சாதன/உபதேச பஞ்சகம் 5

இந்த பதிவுடன் ஆதிசங்கரரின் உபதேச பஞ்சக 40 படிகளையும் கடந்து உயrர்ந்து  நிற்கிறோம். அவரது உபதேசங்கள் நம்மை அவ்வளவு உயர்த்திவிட்டன. இந்த அற்புத அனுபவத்துக்கு வாழ்நாள் பூரா ஆச்சார்யாருக்கு நன்றியுடன் நாம் செய்யும் கடன் அவர் உபதேசத்தை பின் பற்றி நம்மைப்போல் மற்றவர்களையும் உயர்த்தி விடுவது ஒன்றே.

एकान्ते सुखमास्यतां परतरे चेतः समाधीयतां
  पूर्णात्मा सुसमीक्ष्यतां जगदिदं तद्बाधितं दृश्यताम्‌।
प्राक्कर्म प्रविलाप्यतां चितिबलान्नाप्युत्तरैः श्लिष्यतां
  प्रारब्धं त्विह भुज्यतामथ परब्रह्मात्मना स्थीयताम्‌॥५॥

ekānte sukhamāsyatāṁ paratare cetaḥ samādhīyatāṁ
  pūrṇātmā susamīkṣyatāṁ jagadidaṁ tadvādhitaṁ dṛśyatām |
prākkarma pravilāpyatāṁ citibalānnāpyuttaraiḥ śliṣyatāṁ
  prārabdhaṁ tviha bhujyatāmatha parabrahmātmanā sthīyatām ||5||
ஏகாந்தே ஸுக²மாஸ்யதாம் பரதரே சேத: ஸமாதீ⁴யதாம்
பூர்ணாத்மா ஸுஸமீக்ஷ்யதாம் ஜக³தி³த³ம் தத்³பா³தி⁴தம் த்³ருʼஶ்யதாம் ।
ப்ராக்கர்ம ப்ரவிலாப்யதாம் சிதிப³லாந்நாப்யுத்தரை: ஶ்லிஷ்யதாம்
ப்ராரப்³த⁴ம் த்விஹ பு⁴ஜ்யதாமத² பரப்³ரஹ்மாத்மநா ஸ்தீ²யதாம் ॥ 5॥

வள்ளலார் இப்படி தான் உயர்ந்தவர் . அவர் என்ன சொல்கிறார் ஞாபகம் இருக்கிறதா?. தனித்திரு  விழித்திரு. பசித்திரு,  தனிமையில் தான் மனம் ஒருமிக்கும். அந்த ஒருங்கிணைப்பு தான் மனத்தையும் மஹேஸ்வரனையும் ஒன்று சேர்ப்பது. ஆத்மாவின் எல்லையில்லா பரிணாமத்தை உணர வைக்கும். இந்த உலகத்தின் மாயா ஜால ஈர்ப்புகளில் இருந்து நம்மை விடுவிக்கும். இந்த ஆத்ம உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக பூர்வ ஜென்ம கர்மாக்களின் வாசனையை அழிக்கும். எதிர்கால கர்மா சத் கர்மாவாக உருவெடுக்க உதவும்.  இதோ  கடைசி  8 படிகள்  அதையும் கற்று உயர்வோம்.

33 தனியாக சௌகர்யமாக தொந்தரவுகள் எதுவுமில்லாமல் ஒரு இடத்தில் உட்கார்   இது தான் தனித்திரு 
34. ஆத்மா என்று ஒன்று எங்கே உள்ளே இருக்கிறது என்று மனதை தேடலில் செலுத்து.  இது தான் பசித்திரு.
35. அந்த ஆத்மா எனும் சத்தியத்தை, உண்மையை உணர்ந்து அனுபவி. இது தான் விழித்திரு.
36. இந்த உலகத்தில் அந்த பேருண்மையான ஆத்மாவை மட்டுமே காண். அது எதிலும் நிறைந்திருப்பதை காண்பாய்\விழித்த்திருந்தால  பெறுவது..
37. முன் வினை பயன்களை அழிக்க முயன்றால் அப்போது தான் முடியும்.
38. புதுசு புதுசாக கர்மாக்கள் மூட்டையில் இடம்பிடிக்காமல் பார்த்துக் கொள் .
39. இந்த நிலையில் தான் விதியின் செயலை கட்டுப்பாட்டை குறைக்கமுடியும்.
40. எல்லாம் அந்த பேருண்மை, சத்தியமே என்று அறிந்தபின், தெரிந்த பின், அதே ஆனபின் விதி எங்கே ?? அதன் செயலுக்கு இடமெங்கே?

ya sloka panchakamidham padathe manushya,
Sanchithyanudhinam sthirathamupethya,
Thasyasu samsruthi dhavanala theevra ghora,
Thapa prasanthi muyathi chithi prasadhal. 6

இந்த 40 அறிவுரைகளை, உபதேசத்தை, ஒரு சாதகன் தினமும் சிரத்தையோடு கற்று உணர்ந்து அதை விடாமல் பின் பற்றுவானானால் அவனே நம் குருவின் வாரிசு. நிதானம், வைராக்கியம் அனைத்தும் அவனை வந்தடையும். வாழ்க்கையின் துன்பம் அவனை நெருங்குவது. அவனது தவம் அதை சுட்டெரிக்கும்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...