Tuesday, December 21, 2021

BAKTHA VEMANA

 தேனான  வேமனா-  2  நங்கநல்லூர்  J K SIVAN

ஒரு  தெலுங்கு ஞானியின் தத்துவம்

ஒரு தேசத்தின் முன்னேற்றத்துக்கு உயிர் நாடி அதன் கிராமங்கள். சில வசதிகளுக்காக ஏற்பட்டவை பட்டினங்கள். அங்கே வேலை, உத்யோகம், நீதி மன்றம், வங்கிகள், பெரிய பள்ளிக்கூடங்கள், காவல் துறை , வைத்யத்துக்கு
 நிறுவனங்கள், உயர்நிலை பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் ஒவ்வொன்றாக தோன்றிவிடும்.. இதெல்லாம் வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு வந்த மாற்றங்கள். அதற்கு முன்னர் நாடு முழுதுமே சில்லறை, நடுத்தர பெரிய க்ராமங்களாகத்தான் திகழ்ந்தன. வேண்டிய படிப்பு அங்கேயே கிடைத்தது. முக்கிய உத்யோகம் விளைச்சல், பயிர்த்தொழில், விவசாயம். அதுவே சுபிக்ஷத் தின் அறிகுறி. மற்றது அதற்கு மேல் தேவைப்பட்ட சௌகர்யங்கள். சோம்பேறித் தனத்தை வளர்த்தவை.

ஒவ்வொரு வீட்டிலும் கிராமத்தில் பெரிய நெல் குதிர்கள், களஞ்சியங்கள் இருக்கும். அதில் தான் அறுவடை, சாகுபடியான நெல்லை சேமித்து வருஷமுழுதும் உணவு எல்லோருக்கும் தாராளமாக கிடைத்தது. ஒவ்வொரு வீட்டின் கொல்லைப்புறத்திலேயே  தேவைக்கு மேல்  காய்கறிகள்  அன்றாட உயிர் வாழ்வுக்கு  கிடைத்தது. மின்சாரம் தேவைப்பட வில்லை. அதனால் நெல்லை உரலில் இடித்து உமி நீக்கி அரிசியாக முறத்தில் புடைத்து சமைத்தார்கள். கைக்குத்தல் அரிசி உடலுக்கு நல்லது என இன்று யாரோ ஒரு டாக்டர் சொல்லி நாம் அறிகிறோம். எந்த டாக்டரும் சொல்லாமலேயே நமது முன்னோர்கள் அதை உணர்ந்தவர்கள்.

நமது தமிழில் தவிர, பிறமொழிகளில் உள்ள அற்புத படைப்புகளை நான் நெல் களஞ்சியங் களாக அள்ள அள்ள குறையாதவைகளாகக் கருதி இந்த கட்டுரை எழுதுகிறேன். இன்று ஒரு கைப்பிடி அதில் எடுத்து கொடுக்கிறேன். நமது இலக்கிய களஞ்சியத்தில் தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்க்ரிதம், ஆங்கிலம் எல்லாமே இருக்கும். எல்லாமே மணிகள். ஆகவே எப்போதாவது ஒரு கைப்பிடி எடுத்து அனுபவிக்கும் போது அது தமிழ் மணியாக த்தான் இருக்க வேண்டும் என்பதே இல்லை. ஆப்ரிக்க மொழிகளில் மணிகள் கிடைத்தாலும் நமது களஞ்சியத்தில் இடம் பெறும். இன்று தெலுங்கு சிக்கியது.

1950 ல் யாரோ ஒரு வெள்ளையர் எழுதிய ஒரு புத்தகம் என்  கைக்கு எட்டியது. ழியில் வந்தது. அதைப் படிக்க ஆரம்பித்தேன்.   வேமனா  யார்  என்று  தெரிந்தது.

நமது நாட்டில் ரிஷிகள் எண்ணற்றவர், தவம் செய்யும்  முனிவர்கள் பலர், வேத சாஸ்திர விற்பன்னர்கள் அனேகர். கற்றுணர்ந்த பண்டிதர்கள் கணக்கற்றவர்கள். இதில் சேராத இயற்கையிலேயே ஞானிகளாக உலா வந்தவர்களோ சிலர் தான். இப்படிப்பட்ட  ஞானிகள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள். அவருள் பலரை நாம் முழுதும் அறிந்து கொள்வதற்குள் அவர்கள் மறைந்து விட்டனர்.  வாழ்ந்தபோது பைத்யங்களாக கருதப்பட்டு  அஞ்ஞானிகளுக்கிடையே வாழ்ந்தவர்கள் .

ஞானிகளுக்கிடையே  நாம் காணும் ஒரே ஒற்றுமை, அவர்கள் முறைப்படி கல்லாதவர்களோ அல்லது அன்றாட பேச்சு வழக்கிலேயே மிக உன்னத தத்துவங்களை உணர்த்தியவர்களோ, பலன் எதுவும் எதிர்பாராமல் விளம்பரம் தேடாமல், அமைதியாக நம்மில் ஒருவராக வாழ்ந்த வழி காட்டிகளாக வாழ்ந்தவர்கள் என்பது ஒன்றே தான்.    அவர்கள் அனைவருமே, பல வேறு மொழிகளில் தமது ஞானத்தை, பொன்மொழிகளை, தத்துவத்தை, சிந்தனை முத்துக்களை நமக்கு ஊட்டியவர்கள்.

வேமனாவின்  வார்த்தைகள்  மனதை தொடுத்தது: 
சந்தர்ப்பம், சூழ்நிலை, தகுதி இல்லாத இடத்தில் மகான்களைப் பற்றி பேசவேண்டாம்.    அறிமுகப்படுத்தாததால் மகான்களின் பெருமை குன்றாது. நாலே பேர் கூடினாலும் சத்சங்கம் தான் அங்கே பேசலாமே.   
கீதை ஒருவனுக்கு மட்டுமே  உபதேசிக்கப்பட்டது என்றாலும் உலகெங்கும் தேடப்பட்டு அறியப்படுகிறது.
ஒரு பெரிய மலையைக்கூட ஒரு சிறு மொபைல் டெலிபோன் கேமரா படம் பிடிக்கிறதே. வேமனாவுக்கு மொபைல் தெரியாது. ஒரு தெலுங்கு பாடலில் சிறு கண்ணாடித்துண்டு என்றாலும் அதில் பெரிய மலையின் பிம்பம் தெரியுமே என்கிறார். 
இப்படிப் பட்ட ஞானிகளின் வாக்குகள், வாசகங்கள் நம் வாழ்வின் இருளைப் போக்கும் தீபங்கள். இதை ஜப்பானிய மொழியிலோ,இத்தாலி பாஷையிலோ, தமிழிலோ அறிந்தாலும் உண்மை ஒன்றுதானே.   ஞானி  வேமனாவைப் பற்றி  அறிந்து ஆனந்தித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவல் அதிகரித்ததால் இந்த  தொடரை  எழுதுகிறேன்.  

கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு ஆந்திரா என்ற பிரிவினை   கிடையாது. அப்போது வாழ்ந்த  ரெட்டியார் வம்சத்தில் உதித்தவர்  வேமனா.   ஏறக்குறைய 7000 பாடல்களுக்கு மேல் இயற்றிப்பாடியவர் என்பது ஆச்சர்யம்.   வேமனாவைப்  போல் இன்னும் எத்தனை   தெய்வங்கள் எங்கிருந்தெல்லாமோ எந்தெந்த மொழிகளிலோ நமக்கு தந்ததை எல்லாம் நாம் இழந்து நிற்கிறோம்.

வேமனாவின்  வார்த்தைகள் எல்லாமே எளிய அன்றாட, கொச்சையான, புரியும்படியான தெலுங்கில், வழக்கில் உள்ளது.  ல க்ஷோப லக்ஷம் தெலுங்கர்கள், படித்தவர், படிக்காதவர் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் பழமொழியாக, வார்த்தைகளாக, சொல்லாக மிளிர்பவை வேமனாவின் சொல்லோவியங்கள்.
ஞானஸ்தர்களும் பண்டிதர்களும் கூட கையாள விரும்புவது இவையே. இந்த சிறு சிறு நல்வழிப் பாடல்கள் மக்களைத் திருத்தி இறைவன் பால் வழிகாட்டுபவனவாக இன்றும் நடைமுறையில் உள்ளதே இவற்றின் சிறப்பு .

கொண்டவீடு என்ற  ஒரு கிராமத்தை  ரெட்டியார்கள் ஆண்ட காலம். அந்த ராஜவம்சத்தைச் சேர்ந்தவரா யிருந்தாலும் வேமனா ஒரு எளிய ஞானி. மறைந்தது கத்தரப்பள்ளி என்கிற ஊரில். அங்கு வேமனாவின் சமாதி இன்னும் உள்ளது. ஒரு தரம் அந்த சமாதிமேல் மின்னலோடு இடி தாக்கி சமாதியைப் பிளந்தது. அதிலிருந்து வேமனா ஒரு பன்னி ரெண்டு வயதுள்ள பாலகனாக தாக்கிய இடி மின்னலைக் கையில் பிடித்துக் கொண்டு வெளிவந்து மீண்டும் அதனுள்ளேயே சென்றார் என்று பலர் நம்புவதை நாமும் நம்புவதால் தப்பு  இல்லை. மகான்களுக்கு எதுவும் சாத்தியம்.

வேமனாவின் பாடல்களில் தர்ம ஞாயம், நேர்மை, வாழ்க்கை நிலையில்லாமை, பண்பாடு, இடைவிடாத பக்தி, உலக இயல், மக்களின் எதிர்பார்ப்பு, சகலமும் அடங்கும்

தூங்குபவனை சாட்டையடி கொடுத்து எழுப்பி திசை திருப்புகிற தன்மை கொண்டவை அவரது சக்தி வாய்ந்த ரெட்டை அடி கவிதைகள்!!
 
அருமையான தெலுங்கில் சரளமாக இவற்றை அனுபவிக்க நமக்கு தெலுங்கு தெரியாதே! பரவாயில்லை. தெலுங்கை ருசிக்க முடியவில்லையானாலும் அர்த்தத்தை ரசிக்கலாமே என்ற எண்ணத்தோடு சிலவற்றை எனக்குத் தெரிந்த எளிய முறையில் எழுத இருக்கிறேன்.( மேலே கண்டவை போன்று)

Alaya ceesi malaci Ad`igamd`lu maligamd`lu ,
Tiripem id`ed`u kat`iki Deebel ellan,
Elami mannu tined`un Erral auduru sumii
Vis`vada abhi raama Vinura Veema!
 
" நாளைக்கு   வா"  என்று  கால்  ஓடிய   அலைய வைத்து   கடைசியில்   செல்லாத காலணாவை  அரை மனசோடு    கொடுக்கும்  பணத்தில் உழலும் லோபிகளே,    மறு ஜென்மத்தில்  சேறு ரெடி,  அதில் புழுவாய்   உழல தயாரா குங்கள்"

"Annam ad`ugani atanik Annambu pet`t`ina
Paara veeyu daana phalitam eemi?
Dhaniku nakun osamgu Daanambun at`u vale
Vis`vada abhi raama Vinura Veema!"

" தொப்புளுக்கு மேல் கஞ்சி  இருக்கும்  ஆசாமிக்கு ஏன் அன்ன தானம்?. அது வீண்?  . பசித்தவனுக்கு அது  சேராமல், அதை  வெளியே கொட்டி பாழானதற்கு அல்லவோ இது சமம் .

Kanaka mrugamu bhuvini kadhu Ledhanakanu....  .కనక మృగము భువిని కలదు లేదనకను
Tharuni veedi chaniye DhaasharathuDu.........................తరుణి వీడి చనియె దాశరధుడు
Budhi Lenivaadu Dhevudetlaayaraa............................బుద్ధిలేనివాడు దేవుడెట్లాయెరా?
Viswadhaabhiraama, Vinura Vema...............................విశ్వధాభిరామ, వినుర వేమ

"தங்கமான்  எங்கேப்பா இருக்கு? பாவம்  ராமன் மனைவியை   விட்டு  மானை  ஏன்  தேடினான். மாயை  எவ்வாறு  கஷ்டங்களை  எல்லாம்   அவனுக்கே   தந்தபோது  நாம் எங்கே தப்புவது?"

Gangi govu paalu garitadainanu chaalu...................గంగి గోవు పాలు గరిటడైనను చాలు
Kadivedainanemi kharamu paalu............................కడివెడైననేమి ఖరము పాలు
Bhakti kalugu koodu pattedainanu chaalu................భక్తి కలుగు కూడు పట్టెడైనను చాలు
Viswadhaabhiraama, Vinura Vema...........................విశ్వధాభిరామ, వినుర వేమ
 
"ஒரு உத்ரணி சுத்தமான காராம்பசுவின் பாலுக்கு  ஒரு குடம்   கழுதையின் பால்   ஈடாகுமா? .  அன்பாக உபசரித்து  உண்மையான  பாசத்தோடு ஒரு  கரண்டி சாதம் போதுமே,  "இந்தா  கொட்டிக்கோ"  என்று மனதில் நினைத்துகொண்டு  ஒரு வாழை இலை நிறைய விருந்து வைப்பதால்  ஒரு பயனுமில்லை. "

 Atmasuddhi leni acharamadi ela...................ఆత్మశుద్ధి లేని అచారమది ఏల
Bhandasuddhi leni pakamadi ela...................భాండశుద్ధి లేని పాకమేల
Chittasuddi leni sivpujalelara........................చిత్తశుద్ది లేని శివ పూజలేలర
Viswadhaabhiraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ

ஆத்மாவில்   சுத்தமில்லாமல்  ஆச்சாரமாக  மடியாக இருந்து   என்ன பயன்?   பாத்திரத்தை  சுத்தமாக  துலக்காமல்  பாயசம் அதில்  பண்ணி என்ன  புண்ணியம்?  சித்தத்தை அவன்   பாலே   வைக்காத சிவன்  பூஜையால் யாருக்கு  பலன் ?

வேமனா தொடர்வார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...