Tuesday, December 21, 2021

SRI LALITHA PANCHARATHNAM

 ஆதி சங்கரர்  -    நங்கநல்லூர்  J  K  SIVAN


ஸ்ரீ லலிதா பஞ்சகம்/லலிதா பஞ்ச ரத்னம் 

விடியலில் வணங்குவோம்.  விடியட்டும். விடியலை தான்  அனைவரும்  அனவரதமும் வேண்டுகிறோம்.
பஞ்சகம் என்றால் ஐந்து. பஞ்ச பாண்டவர், பஞ்ச பூதங்கள்,  பஞ்ச பிராணன், பஞ்சாக்ஷரம்  என்று  ஐந்து விஷயங்கள் எல்லாம் தெரியுமல்லவா? ஆதி சங்கரர் இந்த  ஐந்தை மனதில் நினைத்து தான்  ஸ்ரீ லலிதாம்பிகை மேல் ஐந்து ஸ்லோகம் இயற்றி இருக்கிறார். இதை  எல்லோரும்  விடிகாலையில் அவளை மனதில் நிறுத்தி தொழுவதற்கு சுகமாக  இருக்கும்படியாக  அமைத்திருக்கிறார்.  முடிந்தவரை இதை விடிகாலையில் சொல்லுவோம். அன்றைய பொழுது மனதுக்கு  நிம்மதியாக  விடியட்டும்.

1.  प्रातः स्मरामि ललितावदनारविन्दं
विम्बाधरं पृथुलमौक्तिकशोभिनासम् ।
आकर्णदीर्घनयनं मणिकुण्डलाढ्यं
मन्दस्मितं मृगमदोज्ज्वलभालदेशम् ॥१॥

Praatah Smaraami Lalitaa-Vadana-Aravindam
Vimba-Adharam Prthula-Mauktika-Shobhi-Naasam |
Aakarnna-Diirgha-Nayanam Manni-Kunnddala-[A]addhyam
Manda-Smitam Mrgamado[a-U]jjvala-Bhaala-Desham ||1||

ப்ராதஃ ஸ்மராமி லலிதாவதனாரவிம்தம்
பிம்பாதரம் ப்றுதுலமௌக்திகஶோபினாஸம் |
ஆகர்ணதீர்கனயனம் மணிகும்டலாட்யம்
மம்தஸ்மிதம் ம்றுகமதோஜ்ஜ்வலபாலதேஶம் || 1 ||

அம்மா  லலிதே, உன் தாமரை மலர் போன்ற அழகிய வதனத்தை காலை எழுந்ததும்  தரிசித்து வணங்குகிறேன் தாயே.  அன்றலர்ந்த தாமரைக்கு  இன்னொரு  பெயர்  தேவி லலிதா திரிபுர சுந்தரியா? உனது சிவந்த அதரங்கள் தான்  மாதுளையா?  உனது  நாசியால்  முத்துக்கு அழகா?  முத்து மூக்குத்தியால்  நாசிக்கு அழகு மற்ற பெண்களுக்கு என்று வேண்டுமானால் சொல்லலாம். காது வரை கண் என்று கேட்டிருக்கிறேன்  இப்போது பார்க்கிறேன் தாயே.   விஸா.. ஸா.. ஸா.. லாக்ஷி  முகத்தில் தான் என்ன பாசமிக்க, அன்பில் தோய்த்த  தாயின் புன்சிரிப்பு..    நெற்றியில் கமகம   வென்று  மானின் கஸ்தூரி ஜவ்வாது  வாசனை...

प्रातर्भजामि ललिताभुजकल्पवल्लीं
रक्ताङ्गुलीयलसदङ्गुलिपल्लवाढ्याम् ।
माणिक्यहेमवलयाङ्गदशोभमानां
पुण्ड्रेक्षुचापकुसुमेषुसृणिदधानाम् ॥२॥

2.  Praatar-Bhajaami Lalitaa-Bhuja-Kalpavalliim
Rakta-Angguliiya-Lasad-Angguli-Pallava-[A]addhyaam |
Maannikya-Hema-Valaya-Anggada-Shobhamaanaam
Punnddrekssu-Caapa-Kusume[a-I]ssu-Srnni-Dadhaanaam ||2||

ப்ராதர்பஜாமி லலிதாபுஜகல்பவல்லீம்
ரக்தாம்குளீயலஸதம்குளிபல்லவாட்யாம் |
மாணிக்யஹேமவலயாம்கதஶோபமானாம்
பும்ட்ரேக்ஷுசாபகுஸுமேஷுஸ்றுணீர்ததானாம் || 2 ||

கல்பவல்லி  என்று கொடிக்கு  அழகான பெயர். நினைத்ததை நிறைவேற்றும் தன்மை வாய்ந்த  செடிகளில் கேட்பதை தருவது கல்ப விருக்ஷம்,   பசுக்களில்  கேட்பதெல்லாம் தருவது காமதேனு.  அதை போன்ற  அழகிய  மென்மையான கரங்களை உடையவளே   காலையில் நான் வணங்கும்  தேவி நீ தானம்மா, லலிதா திரிபுரசுந்தரி.  பிஞ்சு வெண்டைக்காய்க்கு  வெள்ளைக்காரன் கூட  லேடீஸ் பிங்கர்   LADY"S FINGER  என்று தானே  பெயர் வைத்தான்., அழகிய  பளபளக்கும் முனைகளைக்  கொண்ட  சிவந்த விரல்களில்  சிவந்த மோதிரங்கள் அணிந்தவளே.  கரங்களில் தான் எத்தனை அழகிய  கங்கணங்கள் , வளையல்கள், கண்ணைப்பறிக்கும்  நவரத்ன மணிகள்  பதித்த வாகு வளையங்கள்..  அழகுக்கு இனிமை சேர்க்கவென்றே  அம்மா, நீ கரும்பு வில்லை கையிலேந்தி இருக்கிறாயா?  அதற்கு ஏற்ப  மலர்க்கணைகள், அம்புகள்,  அங்குசம் வேறு.  தேவி  அம்பா லலிதா திரிபுரசுந்தரி,  உன்னை காலையில் பஜிக்க நான் என்ன புண்யம் செய்திருக்கவேண்டும்.

3. प्रातर्नमामि ललिताचरणारविन्दं
भक्तेष्टदाननिरतं भवसिन्धुपोतम् ।
पद्मासनादिसुरनायकपूजनीयं
पद्माङ्कुशध्वजसुदर्शनलाञ्छनाढ्यम् ॥३॥

Praatar-Namaami Lalitaa-Caranna-Aravindam
Bhakte[a-I]sstta-Daana-Niratam Bhava-Sindhu-Potam |
Padmaasana-[A]adi-Sura-Naayaka-Puujaniiyam
Padma-Angkusha-Dhvaja-Sudarshana-Laan.chana-[A]addhyam ||3||

ப்ராதர்னமாமி லலிதாசரணாரவிம்தம்
பக்தேஷ்டதானனிரதம் பவஸிம்துபோதம் |
பத்மாஸனாதிஸுரனாயகபூஜனீயம்
பத்மாம்குஶத்வஜஸுதர்ஶனலாம்சனாட்யம் || 3 ||

பொழுது விடிந்து விட்டது.  அருணன் சிவந்து  கிழக்கே  தலை தூக்குகிறான்.  உன் தாமரைத் திருவடியைப்  போற்றுகிறேன் அம்பா தேவி லலிதா திரிபுரசுந்தரி.  ஆச்சர்யமாக  இந்த திருவடிகள் துளியும் ஒய்வு ஒழிவு  இல்லாமல்  எத்தனை கோடி பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியதை வாரி வழங்குகிறது. ,சம்சார சாகரத்தை கடக்கும் படகாக அல்லவோ  செயல்படுகிறது.  நான் மட்டுமா  உன்னை விடிகாலையில் தேடி வந்து வணங்குபவன்? அதோ எனக்கு முன்னே  தாமரை மலர் மேல் அமரும் ப்ரம்மதேவனே  தேவர்கள் சுரர்கள்  புடை சூழ உன் னருள் வேண்டி நிற்கிறான். தாமரை, அங்குசம், கொடி , சுதர்சன சக்ரம்  தாங்கி நிற்கும்  அம்பா,  தேவி, லலிதா திரிபுர சுந்தரி உன்னை விடிகாலையில் வணங்குகிறேன்.

4.  प्रातः स्तुवे परशिवां ललितां भवानीं
त्रय्यन्तवेद्यविभवां करुणानवद्याम् ।
विश्वस्य सृष्टिविलयस्थितिहेतुभूतां
विद्येश्वरीं निगमवाङ्मनसातिदूराम् ॥४॥

Praatah Stuve Para-Shivaam Lalitaam Bhavaaniim
Trayyanta-Vedya-Vibhavaam Karunnaa-[A]navadyaam |
Vishvasya Srsstti-Vilaya-Sthiti-Hetu-Bhuutaam
Vidyeshvariim Nigama-Vaang-Manasa-Ati-Duuraam ||4||

ப்ராதஃ ஸ்துவே பரஶிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யம்தவேத்யவிபவாம் கருணானவத்யாம் |
விஶ்வஸ்ய ஸ்றுஷ்டவிலயஸ்திதிஹேதுபூதாம்
வித்யேஶ்வரீம் னிகமவாங்மமனஸாதிதூராம் || 4 ||

எப்போதுமே  விடிகாலை புத்துணர்ச்சியோடு செயல்பட உதவும் நேரம். எல்லோரும்  விரும்பும்  நேரம்.  நம்பிக்கை தரும் புத்துணர்ச்சி தரும் புது  நேரம். இந்த சுகமான நேரத்தில்  தேவி லலிதா பவானி,  உன்னை எண்ணி என் மனம் பொங்கி வழிகிறது. எண்ணம் மனம் இதற்கெல்லாம் எட்டாதவளே. வேதாந்த  ஞானம்  இருந்தால்  தான்   கொஞ்சமாவது உன்  கம்பீரம், இரக்கம், புனிதம் எல்லாம் புரிபடும் என்று தோன்றுகிறது.  சிருஷ்டி, ஸ்திதி, லயம் , எனும் முத்தொழில்களையும் புரியும் தாயே, தெய்வமே , பிரபஞ்ச  காரணி,  வேதங்களும் அறியமுடியாதவளே,  வார்த்தைக்கு அப்பாற்பட்டவளே, மனதில் எல்லையற்று அறியப்படுபவளே, அம்பா, தேவி லலிதா திரிபுரசுந்தரி,  தாயே  உன்னை விடிகாலையில் வணங்குகிறேன்.

5. प्रातर्वदामि ललिते तव पुण्यनाम
कामेश्वरीति कमलेति महेश्वरीति ।
श्रीशाम्भवीति जगतां जननी परेति
वाग्देवतेति वचसा त्रिपुरेश्वरीति ॥५॥

Praatar-Vadaami Lalite Tava Punnya-Naama
Kaameshvari-Iti Kamale[a-I]ti Maheshvarii-[I]ti |
Shrii-Shaambhavii-[I]ti Jagataam Jananii Pare[a-I]ti
Vaagdevate[a-I]ti Vacasaa Tripureshvarii-[I]ti ||5||

ப்ராதர்வதாமி லலிதே தவ புண்யனாம
காமேஶ்வரீதி கமலேதி மஹேஶ்வரீதி |
ஶ்ரீஶாம்பவீதி ஜகதாம் ஜனனீ பரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேஶ்வரீதி || 5 ||

உள்ளும் புறமும் அமைதி நிறைந்த சூழ்நிலையில் விடிகாலையில் அம்பே, தேவி லலிதா திரிபுரசுந்தரி உனது நாமங்களை நாவினிக்க  உச்சரிக்கிறேன்.   காமேஸ்வரி, கமலா, மஹேஸ்வரி, ஸ்ரீ சாம்பவி, ஜகத் ஜனனி, பரா, வாக் தேவி, திரிபுரேஸ்வரி ........  எவ்வளவோ  இன்னும்..இன்னும்  இன்னும்.  ....

यः श्लोकपञ्चकमिदं ललिताम्बिकायाः
सौभाग्यदं सुललितं पठति प्रभाते ।
तस्मै ददाति ललिता झटिति प्रसन्ना
विद्यां श्रियं विमलसौख्यमनन्तकीर्तिम् ॥६॥

Yah Shloka-Pan.cakam-Idam Lalitaa-[A]mbikaayaah
Saubhaagya-Dam Sulalitam Patthati Prabhaate |
Tasmai Dadaati Lalitaa Jhattiti Prasannaa
Vidyaam Shriyam Vimala-Saukhyam-Ananta-Kiirtim ||6||

யஃ ஶ்லோகபம்சகமிதம் லலிதாம்பிகாயாஃ
ஸௌபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே |
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா
வித்யாம் ஶ்ரியம் விமலஸௌக்யமனம்தகீர்திம் |


நண்பர்களே, அம்பாளின் புகழ் பாடும் இந்த ஐந்து ஸ்லோகங்களை விடாது விடிகாலை மனம் ஒருமித்து சொல்லுங்கள்.  நல்ல காலம் பிறக்கும், வீட்டிலே அடைபட்டிருக்க வேண்டாம். முன் போல் செயல்படுவோம்,    ஆனால் இனிமேல் கொஞ்சம் சுத்தம் சுகாதாரத்தோடு,   தொடாமல் யார் மேலும்  படாமல் கரம் கூப்பி வணங்கி வாழ்த்தியவாறு,   வெளியே  அதிகம் சுற்றாமல், வீட்டு உணவோடு.அசாத்யமான  எதிர்கால நம்பிக்கையோடு  வாழ்க்கையை ஒவ்வொருநாளும் துவங்குவோம்..., .

அம்பாள் இப்படி வணங்கும் பக்தனுக்கு  செல்வத்துட் சிறந்த செல்வமான  வித்யை, ஞானம்,பொருள் வளம், பரிபூர்ண சந்தோஷம், நிலையான புகழ் பெருமை  எல்லாம் தர காத்திருக்கிறாள். நாம் தான் நெருங்க வில்லை. இனியாவது அவளை கெட்டியாக பிடித்துக் கொள்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...