Thursday, December 23, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -  நங்கநல்லூர்  J K SIVAN

ஸ்லோகங்கள்:  127-129  நாமங்கள் 637 -657
   
विश्वगर्भा स्वर्णगर्भाऽवरदा वागधीश्वरी ।
ध्यानगम्याऽपरिच्छेद्या ज्ञानदा ज्ञानविग्रहा ॥ 

Viswa Grabha Swarna Garbha Avaradha Vagadeeswaree
Dhyanagamya Aparichedya Gnadha Gnana Vigraha

விஶ்வகர்பா, ஸ்வர்ணகர்பா, ‌உவரதா வாகதீஶ்வரீ |
த்யானகம்யா,‌உபரிச்சேத்யா, ஜ்ஞானதா, ஜ்ஞானவிக்ரஹா || 127 |

सर्ववेदान्त-संवेद्या सत्यानन्द-स्वरूपिणी ।
लोपामुद्रार्चिता लीला-कॢप्त-ब्रह्माण्ड-मण्डला ॥ १२८॥

Sarva Vedhantha Samvedya Satyananda Swaroopini
Lopa mudrarchitha Leela kluptha brahmanda mandala  128

சர்வ வேதாந்த சம்வேதய சத்தியானந்த  ஸ்வரூபிணி
லோப முத்திரார்ச்சித  க்ளுப்த பிரமாண்ட மண்டலா

अदृश्या दृश्यरहिता विज्ञात्री वेद्यवर्जिता ।
योगिनी योगदा योग्या योगानन्दा युगन्धरा ॥ १२९॥

Adurshya Drusya rahitha Vignathree Vedhya varjitha
Yogini Yogadha Yogya Yogananda Yugandhara 129

அதுர்ஷ்ய  திருஸ்ய  ரஹித  விஞ்ஞாத்ரீ  வேத்யவர்ஜிதா
யோகினி யோகதா, யோக்யா ,  யோகானந்தா  யுகந்தரா

 லலிதா ஸஹஸ்ரநாமம் - (637-657   ) அர்த்தம்

 *637 *  विश्वगर्भा   விஶ்வகர்பா -*
இந்த பிரபஞ்சத்தையே  தனது  கர்ப்பத்தில் கொண்டவள். தாய்.  லோக மாதா.  விஸ்வமாதா.
 
* 638 * स्वर्णगर्भा  ஸ்வர்ணகர்பா *  
தங்கமயமானவள் அம்பாள்.  பொன்னம்மா. 17ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு வேதாந்த நூலான வேதாந்த ப்ரபாஸா என்ன சொல்கிறது தெரியுமா? “ப்ரம்மா விஷ்ணு  சிவனை விட வேறான  முதன் முதலாக  ஜனித்தவன்  ஹிரண்யகர்பன். பஞ்ச பிராணனை கொண்ட  ஜீவன். அதிலிருந்தே, அவனிலிருந்தே  பிரபஞ்சம் உருவானது.  சுவர்ணா  என்கிற வார்த்தையில்  ''சு'': அற்புதமான  என்ற அர்த்தம் கொண்டம். '' ஆர்ணா'' : மந்த்ர அக்ஷரங்கள்:  ஆகவே  சுவர்ணா என்றால் அம்பாள் தனது கர்ப்பத்தில் புனித மந்த்ராக்ஷரங்களை உருவாக்கியவள்  என்ற அர்த்தம் கொண்ட  நாமம் ஸ்வர்ணகர்பா:

 639 * ऽवरदा  ‌உவரதா  -
தவறுசெய்தவர்களை, செய்பவர்களை தண்டிப்பவள் .அம்பாள். செயல்களால் மட்டுமா  தீயவை நிகழ்கின்றன?. எண்ணத்திலேயே எத்தனையோ  கோடி தவறுகள்  தீயவைகள் உருவாவதால் அவற்றையும்  நீக்குபவள்  அம்பாள்.

 640 *  वागधीश्वरी  வாகதீஶ்வரீ  *
சொல்லின் செல்வி.  வார்த்தையின் தாய்.  சொல்லரசி.  சௌந்தர்ய லஹரி 100வது  ஸ்லோகம் ''அம்மா, நீ  சப்தமாதா,  இதெல்லாம்  உன் நாவிலிருந்து எழுந்தவை அல்லவா?'' என்று முடிகிறது.

641 * ध्यानगम्या    த்யானகம்யா *  -  
த்யானம் செய்த பலனாக அடையப்படுபவள் அம்பாள்.  ஆத்ம சக்தியை உணர அத்தியாவசியம்  த்யானம்.    ஸ்வேதஸ்வதர உபநிஷத் (I.ii.3)  “ரிஷிகள் ஆழ்ந்த  த்யானத்தில்  ஈடுபட்டு பிரம்மாண்டமான பர  ஒளி மயமான ஒரு சக்தி  பிரபஞ்சத்தை உருவாக்குவதை  அறிந்தனர்.பரமாத்மாவை  மாயை திரையாக பிரபஞ்சம் பூரா சூழ்ந்து கொண்டிருப்பதை  அறிந்தனர்.  .

  642 * ‌ऽपरिच्छेद्या அபரிச்சேத்யா  *-
ஓரிடத்தில் இருப்பவள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதவள் அம்பாள். எங்கும் நிறைந்தவள்.  பிரம்மத்தின் உருவம். அவளை  தியானத்தில் அறியலாம்.

*643 *  ज्ञानदा   ஞானதா -  
 தியானத்தின் மூலம் ஞானத்தை அள்ளி  வாரி  வழங்குபவள் அம்பாள். தன்னை,  பிரம்மத்தை அறிய புலன்களுக்கு அப்பாற்பட்ட  அறிவைத்  தருபவள்.   சிவ சூத்ரம்  (I.2) '' ஞானம்  பந்தா'' என்பது  குறைந்த  ஞானம் ஒரு எல்லைக்குள், கட்டுப்பாட்டுக்குள்  உள்ளதை  தான்  குறிக்கும்.  கட்டுப்பாட்டில் இருப்பது. ப்ரம்மஞானம் எல்லையற்றது.

* 644 * ज्ञानविग्रहा    ஞானவிக்ரஹா  -  
அம்பாள் அப்படிப்பட்ட  பரம ப்ரம்ம ஞானத்தின் உருவம் எனலாம்  .ஞானமயம் அவள். ரமண மகரிஷி எந்த  மந்திரத்தையும் உபதேசிக்கவில்லை. கண் பார்வை யிலேயே  சகல ஞானமும் பெறச்  செய்தவர். நமது சிற்றறிவுக்கு எட்டிய விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது இந்த பேரறிவு. ஐம்புலன்களை தாண்டி  ஆன்மாவால் உணரமுடிவது.

645 * सर्ववेदान्त-संवेद्या 
சர்வ வேதாந்த சம்வேதய   -  
உபநிஷதங்கள்  கூறும் அம்பாளை உயர்ந்த ஞானமான வேதாந்தத்தில் அறியலாம். வேதங்களின் முடிவு  வேதாந்தம். வேதாந்தத்தின் சுருக்கம்  உபநிஷத். உபநிஷதங்களின்  சாரம்  ப்ரம்ம சூத்ரம். அதுவே அம்பாள்.   'கீதையில்  (XV.15) “ அர்ஜுனா, நான் தானப்பா வேதங்களின் கருப்பொருள்.  வேதாந்தத்தின் தந்தை. வேதங்களின் மூலம்''  என்கிறார் கிருஷ்ணர் . சகல ஜீவன்களிலும் உள்ளது  ஆத்மா.  அத்தனை  ஜீவாத்மாக்களும் ஒன்று சேர்ந்தது தான் ப்ரம்மம். பரப்பிரம்மம்.பரமாத்மா.

*646* 
 सत्यानन्द-स्वरूपिणी । சத்தியானந்த  ஸ்வரூபிணி  -  
அம்பாள் லலிதை  சத்தியத்தின் பரிபூர்ண ஆனந்தத்தின் மொத்த உருவம். தைத்ரிய உபநிஷத் (II.vi)  “ப்ரம்மம் ஒன்றே எங்கும் எதிலும்  நிறைந்து ஜீவன்களாக, வஸ்துக்களாக நமக்கு கண்ணில் காண்கிறது.  அதை  பிரபஞ்சம் முழுதுமாக நிறைந்த சத்யம்   என்று  ஞானிகள் உணர்வார்கள்''  என்கிறது.

*647'*
लोपामुद्रार्चिता  லோபாமுத்திரார்சித-    
லோபாமுத்ரை  வழிபடும்  அம்பாள்.    லோபாமுத்ரை  ரிஷி அகஸ்தியர்  மனைவி.   லலிதா த்ரிசதியில்   பூர்வ பாகத்தில் ஒரு சம்பவம் வருகிறது.  ஹயக்ரீவருக்கு   லலிதாம்பாளின்  ரஹஸ்யத்தை  காக்கவேண்டும் என்று எண்ணம்.   அகஸ்தியருக்கு   அதை உபதேசிக்க  விருப்பமில்லை.  இதை அறிந்த  லலிதாம்பாள் சிவபெருமானோடு  ஹயக்ரீவர் முன் தோன்றி   '' மகரிஷி  லலிதா  த்ரிசதியின்  காரணமே  நாங்கள்  இருவரும் தான்.  அதனால் தான் அதற்கு  ''சர்வ பூர்த்திகரி''  ( எல்லாவற்றையும்  நிறைவு செய்வது)   என்றும் பெயர் உண்டு.   நீங்கள்  தாராளமாக  லலிதா  த்ரிசதியை அகஸ்தியருக்கு  உபதேசிக்கலாம் என்கிறார்கள்  சிவனும்  அம்பாளும்.  
அம்பாளும் சிவனும் சேர்ந்து உண்டான த்ரிசதி தான்  கர்மங்களின்  பயன் விலகி  முக்தி பெற வழி.

 * 648 *  
लीला-कॢप्त-ब्रह्माण्ड-मण्डलाலீலா க்ளுப்த பிரமாண்ட மண்டலா -   
இந்த  பிரபஞ்சத்தை , அண்ட சராசரத்தை   ஒரு  விளையாட்டாக  ஸ்ரிஷ்டித்தவள் அம்பாள்.  சிருஷ்டி  ஸ்திதி  லயம்  என்ற முத்தொழில்களை வகுத்து அளித்தவள்  சர்வசக்தியான அம்பாள்.  கர்மாக்களை, அதன் பலன்களை, நிவர்த்தியை  தொகுத்தவள்.

* 649 
अदृश्या दृश्यरहिता विज्ञात्री वेद्यवर्जिता ।
योगिनी योगदा योग्या योगानन्दा युगन्धराஅத்ருஷ்ய -  எளிதில் காணமுடியாதவள் அம்பாள்.  புலன்களால் உணரமுடியாதவள், அகக்கண்ணால் காண முடிந்தவள்.

* 650 *
अदृश्या दृश्यरहिता அத்ருஷ்ய த்ருஷ்ய  ரஹித - 
எதையும்  வித்தியாசமின்றி காண்பவள்.   நமது பார்வைக்கும் அம்பாள் பார்வைக்கும் எத்தனையோ வித்யாசங்கள் உண்டு.  நாம் காணமுடியாத அவள்,  நாம் காணமுடியாததை காண்பவள்.

*651*  
विज्ञात्री விஞ்ஞாத்ரீ -  
சர்வமும்  அறிந்தவள். சர்வ ஞானி அம்பாள். ப்ரம்ம ஸ்வரூபம்.  -- எதெல்லாம்  அறிய முடியுமோ, அறிய வேண்டியதோ, அது அத்தனையும் அம்பாள் ஸ்ரீ லலிதா ஒன்றே.   ப்ரஹதாரண்யக உபநிஷத் (II.iv.14) அறிபவன், அறியப்படுவது, அறிவு எனும் ஞானம் அனைத்தும் ஒன்றே ஆனவள் அம்பாள் என குறிப்பிடுகிறது.

*652* 
वेद्यवर्जिता ।வேத்யவர்ஜிதா -  
அம்பாள் அறியாதது ஒன்றில்லை. சர்வம் ப்ரம்மமயம். அதுவே அம்பாள் லலிதா மயம்.

*653* 
योगिनी யோகினி   -  
யோகத்தின்  உருவகம் அம்பாள்.  ஜீவாத்மா பரமாத்வாவோடு இணைவது தான் யோகம். பரமேஸ்வரனோடு ஐக்யமானவள் அம்பாள். அர்த்தநாரி.   யோகம் எனும் பயிற்சி மூலம்  நாம் மனது உடல் ஆத்மா அனைத்தும் ஒன்று சேர முயல்கிறோம். அதுவே  முக்தி சாதனம்.

*654*  
योगदा யோகதா-  
தனது எண்ணற்ற பக்தர்கள் மீது கருணையோடு  தனது யோகத்தை அம்பாள் ஸ்ரீ லலிதா அருள்பவள்.  அவள் அருளின்றி  ஜீவத்மா  பரமாத்மாவை  ஒன்று  சேர முடியாது.

*655*  
योग्या  யோக்யா  - 
அம்பாள் ஸ்ரீ லலிதாவை  யோகத்தினால் அடையலாம். அவளே  யோகமயம் தானே.  ஸ்வேதஸ்வதர உபநிஷத்  (I.12)  ''  ஒவ்வொருவரும் தனக்குள்ளே உறையும் பிரம்மனை அறியவேண்டும், அதைக்காட்டிலும்  பிரமத்தை அறிய உயர்ந்த ஞானம் எதுவுமில்லை. '' என்கிறது.

*656*  
योगानन्दा யோகானந்தா -   
யோகத்தால் விளையும் ஆனந்தம் தான்  அம்பாள் ஸ்ரீ லலிதை. யோகத்தால் தான் பரமேஸ்வரனை அவள் அடைகிறாள். யோகத்தால் நாம் அவளை பெறுகிறோம்.  எல்லாம் ஒன்றே, அது அவளே.  மனது மட்டும் தான் வேலை செய்யாது மற்ற உறுப்புக்கள் அதன் வேலையை செய்யும். இது தான் யோகம். விஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்மன் யோகானந்தர். நந்தா  கங்கையை குறிக்கும் சொல். நந்தா நந்த கோபனிலிருந்து உருவானாள் என்று பாகவதம் சொல்கிறது.  . கங்கை  விஷ்ணு பாதத்திலிருந்து என்று சொல்வார்கள்.

*657* 
युगन्धरा யுகந்தரா  -  
யுகம்  என்பது  ஒரு காலத்தை குறிக்கும் வார்த்தை. இந்த பிரபஞ்சம் உருவானதிலிருந்து  நான்கு காலங்களாக, யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  குறித்த/சத்ய யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம்.  மொத்தம்  4.32 மில்லியன் வருஷங்கள் அதில் நமக்கே உரித்தான  கலியுகம்  17-18 பிப்ரவரி 3102  கி.மு.வில் பிறந்து  கிட்டத்தட்ட 5000 வருஷங்கள் ஒட்டிவிட்டோம்.  இன்னும் நிறையவே இருக்கிறது. காலத்தை நிர்ணயிருப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை.
   
சக்தி பீடம்:      நாசிக்  பத்ரகாளி                                        
 
தாக்ஷாயனியின் உடலை சுமந்து  சிவன்  தாண்டவமாடியபோது அவள் முகவாய் விழுந்த இடம்  நாசிக் என்று சொல்கிறார்கள். இந்த சக்திபீடத்தில் அம்மன் பெயர்  ப்ரம்மரி.    தேவி மா என்று பக்தியோடு  அழைக்கிறார்கள். சிபுகா என்றும் பெயர்.   பரமேஸ்வரன் இங்கே  விக்ரிதாக்ஷ பைரவர் என்றும்  சர்வ சித்திஸ்வரர் என்றும் பெயர் கொண்டவர்.

அம்பாள்  ஏழு கரங்களை கொண்டதால்   ஏழு மலைச் சிகரங்களில் வாசம் செய்வதாலும்   சப்த ஸ்ருங்கி என்றும் பெயர் கொண்டவள். நாசிக்கில்  வாணி  எனும் சிறிய கிராமத்தில் ஆலயம்.

ப்ரம்மரி  கரிய நிறம் கொண்ட காளி .கரு வண்டுகள் சுற்றி சூழ்ந்து கொண்டுள்ளன.  அவற்றை ஒரு கையில்  தாங்கியவள்.   ப்ரமரம் என்றால் வண்டு  என்று ஒரு அர்த்தம்.  அம்பாள் ஸ்வயம்பு விக்ரஹம் . 10 அடி  உயரம். சிந்தூரத்தால் காப்பு.  .மகிஷாசுர மர்தினி அம்சம்.
தண்டகாரண்யம்  சப்த ஷ்ருங்கி மலைகளை  சேர்ந்தது.   அருணன் எனும் ஒரு  ராக்ஷஸன் ப்ரம்மாவை நோக்கி தவமிருந்து உலகில் யாராலும் மரணம் அடையாத வரம் பெற்றான். அவனது  கொடுமைகளிலிருந்து காப்பாற்ற  அம்பாளை அனைவரும் வேண்ட அவள் உடலிலிருந்து புறப்பட்ட  வண்டுகள் அவனை துளைத்து கொன்றுவிட்டன.   நாசிக்கிலிருந்து  40 கி.மீ. தூரம் இந்த  சக்தி பீடம்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...