Sunday, December 12, 2021

ADHYATHMA RAMAYANAM EZHUTHTHACHAN

 அத்யாத்ம ராமாயணம் - ராமகீதை -  நங்கநல்லூர்  J K  SIVAN --

துஞ்சத்து எழுத்தச்சன்.

1 .   லக்ஷ்மணோபதேசம் 

தமிழ்,  தெலுங்கு,கன்னடம், மலையாளம்   போன்ற   பல மொழிகளிலும் கூட  அற்புதமான காவியங்கள்,  இலக்கியங்கள்,  கவிதைகள், எல்லாம் இருக்கிறது.  ஸம்ஸ்க்ரிதம் போல் அவையும்  நமக்கு இன்பம் .அளிப்பவையே.  எல்லா மொழிகளும் தெரியவில்லை என்பதால் மொழிபெயர்ப்புகளை நம்பி  புரிந்து கொள்வது சற்று  ரெண்டாம் தடவை  கிடைக்கும்  காப்பி டிகாக்ஷன் தான்.  நல்ல காப்பி என்பதால்  எத்தனை தடவை டிகாக்ஷன்   வடித்து எடுத்தாலும்
ருசியும் மணமும்  குன்றாதவை .

துஞ்சத்து எழுத்தச்சன்  மலையாளத்தில்  அத்யாத்ம ராமாயணம்  எழுதியிருக்கிறார்.    ஹிந்தியில் துளசி தாசர் எழுதியிருக்கிறார். லக்ஷ்மண உபதேசம் 62 ஸ்லோகங்கள்.  உத்தர    காண்டத்தில்  வருவது. அது தான்  ராம  கீதை.     எனது நண்பர்  மதிப்புக்குரிய   ஸ்ரீ P R  ராமச்சந்திரன் ஸார்   கணக்கில்லாமல் சமஸ்க்ரித, மலையாள ஸ்லோகங்களை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.  அவர்  விளக்கம் எழுதாத ஸ்லோகங்கள்,  காவியங்களே  இல்லை என்று சொல்லும்  அளவுக்கு அற்புதமான படைப்புகளை நமக்கு   அருள்பவர். அவர் நீடூழி வாழ நாம்  கிருஷ்ணனை  பிரார்த்திப்போம்.  ஸ்ரீ  P R  ராமச்சந்திரனின் ''அத்யாத்ம ராமாயண மலையாள மொழிபெயர்ப்பை  அனுபவிக்க இந்த  லிங்க்  கிளிக் செய்யுங்கள் https://rajathathas.blogspot.com/2012/05/preface-to-adhyatma-ramayanam-of.html

இனி நாம்  காணப்போவது துஞ்சத்து எழுத்தச்சன்  எழுதிய  அற்புதமான  ''ராமகீதா  எனும் பகுதியில் வரும் லக்ஷ்மணோபதேசம்.

''Lakshman oru dinam  yekanthe  Rama devan,
Trukkazhal  koopi vinaanwithanai  chonnan

 லக்ஷ்மணன் காட்டில்  ஒருநாள்  ராமன் முன் கைகட்டி வணங்கி நின்றவன்  ராமனிடம் என்ன கேட்டான்?

“Mukthi margathhe  yarul cheyyanam,
Bhakthanam   adiyanodu ajnanam neengum vannam,
Jnana  vijnana   bhakthi vairagya chihnamellam,
Manasanandam varumaru  arul cheytheedenam,
Aarum  ninthiruvadiyozhinjillivayellam,
Nerode yupadesicheeduvaan bhoomandale.”
Sri Raman  athu kettu Lakshmanan  thannodu appol,
Aarudanandamarul cheythithu vazhipole .

''அண்ணா,  ஸ்ரீ   ராமா, எனக்கு   அறியாமை விலக,  இன்று முக்தி அடையும் வழி என்ன  வென்று நீங்கள் சொல்ல வேண்டும். தெய்வீக  ஞானம், விஞ்ஞானம், பக்தி, பற்றற்று இருத்தல் எல்லாம் பற்றி போதிக்கவேண்டும். என் மனம் அமைதியுற வேண்டும். அஞ்ஞானம்  நீங்கி  .ஆனந்தம்  . அடைய வேண்டும்.  இந்த   பரந்த உலகில்  எனக்கு உங்களை விட்டால் வேறே  யார் இருக்கிறார்கள்? உங்களைத்  தவிர வேறு யார்  புரியும்படியாக உணர்த்தமுடியும்?''  என்றான் லக்ஷ்மணன்.

புன்முறுவலோடு ராமன்   தலையசைத்து பதில் சொன்னான்:

“Kettalum yengilathu  guhyamam upadesam,
Kettolam thernnu koodum vikalpa bramamellam,
Mumbinaal maya  swaroopathejnan  cholleduvan,
Ambodu pinne jnana sadanam chollamallo.
Vijnana sahithamaam jnanvum cholvan pinne,
Vijnayam mathma sawaroopatheyum cholaamedo ,
Jneyamayulla pramathmanam ariyumbol,
Maya sambanda  bhayamokke neengedumallo .”

லக்ஷ்மணா, எனக்கு    சந்தோஷமடா.   கேள்.  நான் சொல்லப்போவது ஒரு பரம ரஹஸ்யம்.  அதைக் கேட்டபின் உன் மனா சஞ்சலம்  அகலும்.  மாறுதல்கள் ஏன்,  எதற்கு,  என்ன என்பது  புரியும்.  முதலில்  உனக்கு மாயை பற்றி  விளக்குகிறேன்.  ஆத்ம  ஞானம் அதனால்  விளையும்  நல்ல  பலன் பற்றி அப்புறம் விலாவாரியாக  சொல்கிறேன்.  ஆத்ம விசாரம் பற்றியும்  அறிந்து கொள்ள உதவுகிறேன்.  அதை  அறிவதால்  மாயை பற்றிய  உன்  பயம் விலகும்.  

Athmavallatheyulla  dehadhi vasthukkalil,
Atmavennulla bodham  yadonnu jagathraye,
Mayayakunnathu nirnayam athinale  ,
Kaya sambandam aakum samsaram bhavikkunnu,
Undallo  pinne vikshepavarangal yennu,
Randu roopam mayaykennariyuga, soumithre  nee,
Yennathil munnethallo lokathe kalpikunnathu,
Yennariga  athi sthoola sookshma bedangalodum,
Lingadhibrahmanthamaam  avidhya roopamathum,
Sangadhi  doshangale   sambhavi pikkunnathum.”

லக்ஷ்மணா,  இந்த உலகத்தில்  அநேகர்  தங்கள் தேகத்தை தான் ஆத்மா என்று எண்ணி நம்பி மாயையில் சிக்கித் தவிக்கிறார்கள்.   உடல் அநேக  துன்பத்தை, துயரத்தை கஷ்டத்தை அளித்து அவர்களை  துன்புறுத்துகிறது.   உண்மையை  திரைபோட்டு  மறைந்துவிடுகிறது.   உண்மையான ஆத்மா அறியப்படவே இல்லை. இதைப் புரிந்துகொள் லக்ஷ்மணா.  பஞ்ச  இந்திரியங்கள் இழுத்துச் செல்லும் வழி படுகுழி. அஞ்ஞானம்  புத்தி  மனம்  அனைத்தையும் மாயையில் ஆழ்த்தி பிரம்மத்தை அறியாமல் .  ஆசை எனும்  தீயில் வெந்து மனிதன் சாகிறான்.

Jnana roopiniyakum  vidhyayathu,
Ananda  prapthi  hetha Bhootha yennarinjalum,
Maya kalpitham paramathmani  viswamedo,
Maya kondallo viswam undennu thonnikkunnu,
Rajju  gandathingale  pannaga  budhi pole  ,
Nischayam vicharikkil yetum onnillayallo ,
Manavanmaaral kana pettathum kelkkayathum,
Manasathingal smarikka pedunnathumellam,
Swapna sannibham vicharikkil  allathu onnallo,
Vibhramam kalanjaalum vikalpamudakenda.
 
 நிறையும்  புத்தகங்கள் படிப்பதனால் அவற்றைக்  கற்பதனால்  ஒருவன்    ஏதோ ஒரு வித ஞானம் பெறுகிறான்.   அது சந்தோஷத்தை அளிக்கிறது.  ஆனால்    இத்தகைய கல்விஞானம்   அவனை ஆத்மாவை   உணரச்செய்வதில்லை.   உலகம் ஆத்மாவின்   பிரதிபலிப்பாக  தவறாக உணர்கிறான். அது  இந்த  உலகம்  தான்  உண்மை, சாஸ்வதமானது என்று அவனை நம்ப  வைக்கிறது. இது தான்  உண்மையில் கயிறை  பாம்பாக பாவித்து  நடுங்கும்  ப்ரதிபாசிகம்.  அருகில்  சென்று ஆராய்ந்த  பின்னரே கயிறு தான்  உணர முடிகிறது.  ஒருவன் காண்பது  தொடுவது    எல்லாமே மாயை. மனத்தின் வெளிப்பாடு.   காண்பதெல்லாம் வெறும் கனவே..  இது தவறான வழி என்று முதலில் அறிந்துகொள் லக்ஷ்மணா.

இன்னும் வரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...