Friday, December 3, 2021

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - நங்கநல்லூர்  J K  SIVAN  ஸ்லோகங்கள்   108-110   நாமங்கள்  524 – 541



मज्जासंस्था हंसवती-मुख्य-शक्ति-समन्विता ।
हरिद्रान्नैक-रसिका  हाकिनी-रूप-धारिणी ॥ १०८॥

 Majasansdha hansavati mukhyashakti samanvita
Haridranai karasika hakinirupa dharini – 108

மஜ்ஜாஸம்ஸ்தா, ஹம்ஸவதீ  முக்யஶக்தி ஸமன்விதா |
ஹரித்ரான்னைக ரஸிகா, ஹாகினீ ரூபதாரிணீ || 108 ||

सहस्रदल-पद्मस्था सर्व-वर्णोप-शोभिता ।
सर्वायुधधरा शुक्ल-संस्थिता सर्वतोमुखी ॥ १०९॥

Sahasradala padmasdha sarvavarnopashobhita
Sarvayudhadharashukla sansdhita sarvatomukhi – 109  

ஸஹஸ்ரதள பத்மஸ்தா, ஸர்வவர்ணோப ஶோபிதா |
ஸர்வாயுததரா, ஶுக்ல ஸம்ஸ்திதா, ஸர்வதோமுகீ || 109 ||

सर्वौदन-प्रीतचित्ता याकिन्यम्बा-स्वरूपिणी ।
स्वाहा स्वधाऽमतिर् मेधा  श्रुतिः स्मृतिर् अनुत्तमा ॥ ११०॥

Sarvaodana pritachitta yakinyanba svarupini
Svahasvadha mati rmedha shrutih smrutiranuttama – 110

ஸர்வௌதன ப்ரீதசித்தா, யாகின்யம்பா ஸ்வரூபிணீ |
ஸ்வாஹா, ஸ்வதா,‌உமதி, ர்மேதா, ஶ்ருதிஃ, ஸ்ம்றுதி, ரனுத்தமா || 110 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - s(524- 541 ) அர்த்தம்  

* 524*  मज्जासंस्था -  மஜ்ஜாஸம்ஸ்தா --  
ஒவ்வொரு உடலிலும் உள்ள   எலும்பினுள் காணும் மஜ்ஜை , கொழுப்பு சத்து   ஹாகினியாக, அம்பாளாக கருதப்படுகிறது,  என்பது இந்த நாமத்தால் புரிகிறது. ஐந்தாவது சக்ரம் இது.  மஜ்ஜை என்பது எலும்புக்குள் இருக்கும்  ஜவ்வு.  உடலின் ஆறாவது பகுதி.  சருமம்,  ரத்தம்,சதை, கொழுப்பு,எலும்பு, எலும்பினுள் மஜ்ஜை.

 *525*  हंसवतीमुख्यशक्तिसमन्विता -   ஹம்ஸவதீ முக்யஶக்தி ஸமன்விதா--  
ஹாகினிக்கு  ரெண்டு  உதவியாளர்கள்.  அவர்கள்  பெயரைத்தான் இந்த  நாமம் குறிப்பிடுகிறது. ஹம்ஸவதி, க்ஷமாவதி.  ரெண்டுபேருமே  யோகினிகள்.

*526* हरिद्रान्नैकरसिका -ஹரித்ரான்னைக ரஸிகா--
மஞ்சள் பொடி  கலந்த  சாதம் (அன்னம்) விரும்பி உண்பவள்.  
 
*527 *हाकिनीरूपधारिणी -  ஹாகினி  ரூபதாரிணீ -  
குங்குமப்பூ  சேர்த்து சமைத்த அன்னத்தை விரும்புபவள்  ஹாகினி என்ற பெயர் தாங்கிய உருவமா னவள் என்கிறார்  ஹயக்ரீவர்.

* 528 * सहस्रदलपद्मस्था -ஸஹஸ்ரதள பத்மஸ்தா -  
ஆயிரம்  இதழ் தாமரை மலர் மேல் வாசம் செய்பவள்  அம்பாள்  அம்சமான  யாகினி   என்கிறது இந்த நாமம். யோகினிகளில் கடைசி யோகினி இவள். இந்த நாமம்  ஸஹஸ்ரார சக்ரத்தைக் குறிப்பது. ஆயிரம்  என்றால் ஸஹஸ்ரம் ஸம்ஸ்க்ரிதத்தில்.  இது  சக்ரம் இல்லை.  விளக்க அரிதான விஷயம். உச்சிக்குழியில் காணும் சிறு  துளை ப்ரம்மரந்திரம். அதன் வழியாக ஜீவாத்மா பரமாத்மாவை அடைகிறது. பிறந்த குழந்தையின் சிரத்தில் உச்சிக்குழி மிகவும் மென்மையான பகுதி.  அதை ஜாக்கிரதையாக பாதுகாப்பார்கள். முழு நிலவை விட ஒளியும் தண்மையும்  அதிகம் கொண்டது. இந்த ஸஹஸ்ராரத்தின்  மையத்தில் உள்ள பிந்துவுக்கு  சூன்யம் என்று பெயர். மோக்ஷ சாதனத்துக்கு இன்றியமையாதது. சிதானந்தந்தை தருவது. ப்ரம்மத்தோடு கலந்து பிரம்மானந்தம் பெற காரண மானது.  சக்தி மூலாதாரத்திலிருந்து எழும்பி பல சக்ரங்களை கடந்து முடிவில் இணைந்து ஆனந்தத்தை குண்டலினி  தருவது இங்கு  தான்.

* 529 * सर्ववर्णोपशोभिता -   ஸர்வ  வர்ணோப ஶோபிதா --
 எந்த வண்ணமாக இருந்தாலும் அதில்  ஜொலிக்கிறவள் அம்பாள் ஸ்வரூப  யாகினி.  ஆயிரம் இதழ் தாமரையாக பொருள் படும் அக்ஷரங்களில் ஒளியும் சக்தியும்  மிகுந்து காணப்படுபவள்.

* 530 * सर्वायुधधरा -  ஸர்வாயுத தரா--  
யாகினி  எண்ணற்ற பல விதமான ஆயுதங்களை தாங்கி அருள் புரிபவள்.  காப்பவள்.

* 531* शुक्लसंस्थिता - ஶுக்ல ஸம்ஸ்திதா --
உடலின்  ஜீவ சக்தியானவள். உயிர்ச்சத்தானவள். மனிதமனத்தில் எண்ணமாக தோன்றுபவளும் அவளே. மனோநாசம் என்னும்  மனத்தை அழிப்பவளும் அவளே.

* 532 * सर्वतोमुखी -ஸர்வதோமுகீ --  
எங்கும் முகம் கொண்டவள் அம்பாள். யாகினி யாதுமாகி நிற்பவள்.  முண்டகோபநிஷதத்தில் (I.13) “ எங்கு  நோக்கினும்   கண்கள்,  கரங்கள், திருப்பாதங்கள்  தெரிகின்றது  ''  என்கிறது.  புருஷ சூக்தம் ஆரம்பிக்கும்போதே  ஆயிரம் சிரங்கள் கொண்ட... என்று தானே தொடங்குகிறது.  பாரதியார்  ஆயிரம் கண்ணுடையாள் என்று அவளை போற்றுவார்.

*533* सर्वौदनप्रीतचित्ता -  ஸர்வௌதன ப்ரீதசித்தா --  
எல்லாவித  அன்னமும்  நைவேத்தியமாக ஏற்பவள்   யாகினி . யார் எதை  அர்பணித்தாலும் கொள்பவள். எங்கும் எதுவுமானவளுக்கு  தனியாக ஒன்று வேண்டும் வேண்டாம் என்பதில்லையே.  

* 534* याकिन्यम्बास्वरूपिणी -யாகின்யம்பா ஸ்வரூபிணீ --
ஸ்ரீ லலிதைக்கு   யாகினி அம்பாள் என ஒரு பெயர்.   ஸஹஸ்ராரத்தின் பிரதான யோகினி தான் யாகினி.

*535 * स्वाहा -  ஸ்வாஹா:  
யாக யஞங்களில்    நெய்  போன்ற  திரவியங்களை  ஸ்வாஹா என்ற அக்னி தேவதைக்கு  ''ஸ்வாஹா உனக்கு அர்ப்பணிக்கிறேன்''  என்று பெயர் சொல்லி அர்ப்பணிப்போம்.   அம்பாள் அந்த  யோகினியான  ஸ்வாஹா ஸ்வரூபத்திலும் உள்ளாள்  என்கிறது இந்த நாமம். அக்னிக்கு  த்ரிப்தியளிக்க அர்ப்பணிப்பதை தான் இந்த  நாமம்  குறிக்கிறது. 
* 536 *स्वधा - ஸ்வதா  
பித்ருக்களுக்கு   ஸ்ரத்தையோடு   எள்ளும் நீரும் விட்டு  தர்ப்பணம் பண்ணும்போது,   ஹோமத்தில் நெய்யும்  ஹவிஸும்  அர்ப்பணிக்கும்போது  ஸ்வதா என்று சொல்லி  அளிப்போம். அவர்கள் திருப்தி அடைகிறார்கள்.  அம்பாள்  அந்த  ஸ்வதாவாகவும் இருந்து அருள்கிறாள்.  அம்பாள் நம் அனைவருக் கும்  தாய்.   எனவே பெற்றோர்க்கு நன்றி செலுத்தி அவர்களைத்  திருப்தி அடைய வைக்கும்போது அவளும் திருப்தி அடைகிறாள்.  ஒரு  புதிய சேதி.  மார்க்கண்டேய புராணம் (26.6.9).  க்ரஹஸ்தனை  பசுவுக்கு  உதாரணமாக  சொல்கிறது.  பசுவின் பின் பாகம் ரிக்வேதம். மடி தான்  யஜுர்வேதம். முகம் கழுத்து தான்  சாமவேதம். கொம்புகள்  தான் நல்ல கர்மாக்கள்.  பசுவின் ரோமம்  தான் பண்டிதர்களின் சொல்,  பசுவின் சாணம்  கோமூத்ரம்  தான் மௌனம் அமைதி மற்றும்  வளமை. செல்வம். பசுவின் நான்கு கால்கள் நான்கு வர்ணங்கள். பசுவின் பால் சுரப்பிகள், காம்புகள்  தான் ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், ஹந்தா.  ஸ்வாஹா   ஸ்வதா  இருவருமே  அக்னியின் மனைவிகள்.

* 537 *अमतिः -அமதி --அஞ்ஞானத்தை  அமதி  என்று சொல்வதுண்டு. அம்பாளின் ஒரு ஸ்வரூபம் அதுவும் கூட.
*538* मेधा -மேதா --  அஞ்ஞானத்தை போலவே  ஞானமும் தான்  அம்பாளின் ஸ்வரூபம். சிவபெருமான் மேதா  தக்ஷிணாமூர்த்தியாக  ஞானம் பொழிகிறார்.  அம்பாள் அதேபோல்  மேதா ஸ்வரூபமாக அருள்கிறாள் என்கிறது இந்த நாமம்.
*539* श्रुतिः - ஶ்ருதி-    வேதங்களை ஸ்ருதி  என்று சொல்கிறோம்.  அம்பாள்  தான்  வேத ஸ்வரூபம் என்கிறார் ஹயக்ரீவர் இந்த நாமத்தை விளக்கி சொல்லும்போது.  அவள் வேதங்களாக ஒளிர்கிறாள். வேதங்கள் அவளையே சொல்கின்றன.
*540* स्मृति  -  ஸ்ம்ருதி -   வேதங்கள்  எளிதில் புரிந்து  கொள்ளும்படியாக  எழுதப்படவில்லை, சொல்லப்படவில்லை. அர்த்தம் நிறைந்தவை, மந்த்ர சக்தி வாய்ந்தவை.  அவற்றின் உட்பொருள் ரஹஸ்யமாக  ஜாக்கிரதையாக வைக்கப்பட்டுள்ளது.   அவற்றை சரிவர அறிந்துகொள்ள  ஆச்சார்யன்  உதவி வேண்டும்.  உபதேசம் பெறவேண்டும். இப்படி பாரம்பரியமாக காக்கப்பட்ட வேதங்களை அறிந்து கொள்ளும்  வழிமுறை தான் ஸ்ம்ரிதி.  சரியான உச்சரிப்பு,   வேதங்களே இவற்றை நிர்ணயித்து  இப்படித்தான் வேதங்களை அறிய வேண்டும்,  அப்படித்தான் அறிய முடியும்  என்று  உண்டாக்கப்பட்டது ஸ்ம்ரிதி.  அம்பாள்  ஸ்ம்ரிதி ஸ்வரூபமானவள் என்கிறது இந்த நாமம்.  வேதத்தின் உயர்வும், அதன் மஹிமையும்  இதனால் உணரமுடியும்.   சுருதி எனும் வேதத்தை  கிரமமாக  சப்தமாக  மனதில் பதிய வைக்கும் சாதனம் தான்  ஸ்ம்ரிதி.  உபநிஷதுகள் இப்படித்தான்  பல எண்ணற்ற தலைமுறைகள் தாண்டி நம்மிடம்  வந்தவை. கீதையில் கண்ணன்   (Bhagavad Gīta X.34) “  நான் தான்  வாக்கில் உருவாகும்,  மனதில், புத்தியில்,  மனதில் பதிந்து கிரஹித்துக்கொள்ளும்   சக்தி'' என  கூறுவதை இங்கே நினைவு கொள்வோம். 
*541*  अनुत्तमा --  அநுத்தமா - அம்பாளை  விட உயர்ந்தவர்  கனவில் கூட  இருக்க முடியாது.  ப்ரம்ம ஸ்வரூபம் அல்லவா  அம்பாள்.
சக்தி பீடம்  :   தாந்தேஸ்வரி -  சட்டிஸ்கர்  

வட தேசத்து கோவில்களும் சரி,  விக்ரஹங்களும் சரி,  கோபுர அழகும் சரி,  எதுவுமே தென்னிந்தி யாவில் நாம்  காணும், சிற்ப, கலைச்செல்வங்கள் போல் இல்லை.  அதனால்  பக்தி இல்லை என்று சொல்ல முடியாது.  வடக்கே தான் பக்தி அதிகம். கட்டுப்பாடு, பக்தர்களுக்குள்  பண வசதி வித்யாசம் இல்லை. எவர் வேண்டுமானாலும் சரிசமானமாக தரிசிக்கலாம். வழிபடலாம்.
ஸ்ரீ   அம்பாள்,  தாந்தேஸ்வரி,     52 சக்திபீடங்களில் ஒன்றாக  இங்கே  வீற்றிருக்கிறாள். இந்த ஆலயம் 14ம் நூற்றாண்டு கோவில். தாந்தேவாடா எனும் இந்த ஊர், சட்டிஸ்கர்,  ஜக்தல்பூரிலிருந்து  80 கி.மீ. தூரத்தில் உள்ளது.   அம்பாள் பெயரால் உண்டான ஊர். காகதீய மன்னர்களின் குலதெய்வம் இந்த சக்திவாய்ந்த அம்பாள்.  பரமேஸ்வரன் சதியின்  உடலை சுமந்து  தாண்டவம் ஆடியபோது  சதியின்  பல் விழுந்த இடமாம் இது.    தாந்த் என்றால் பல்.  யானையின் பல்லுக்கு தந்தம் என்று பெயர் அல்லவா?  ஒரு பல்பொடிக்கே  வஜ்ரதந்தி என்று பெயர் உண்டே. மறந்துவிட்டதா?
தசரா சமயம் இங்கே  நிற்க கூட இடம் கிடையாது. தாந்தேஸ்வரி  ஊர்வலமாக வருவாள். எல்லோருக்கும் தரிசனம் தருவாள். ஜ்யோதி கலசங்கள் ஏற்றி ஊரே  ஜகஜ்ஜோதியாக  இருக்கும் வைபவம் அது.   தாந்தேஸ்வரி  கருமையான கல்லில் வடித்த உருவம். கர்ப க்ரஹம், மஹா மண்டபம், முக்கிய மண்டபம், சபா மண்டபம் என்ற அமைப்பு கொண்ட  ஆலயம்.
இந்த ஆலயம்  ஷங்கிணி  தங்கிணி  என்று  ரெண்டு  நதிகளின் சங்கம க்ஷேத்திரம். ரெண்டு நதிகளின் நீரும் வெவ்வேறு  நிறம் கொண்டவை.   ஆலயத்தில் காகதீய  சிற்ப வேலைப்பாடுகளை கண்டு ரசிக்கலாம்.  வாழ்க்கையில் ஒரு முறை  இந்த அம்பாளைக் கண்டு தரிசிக்க முடிந்தால் பெரும் பாக்கியம். அது எனக்கு என்று நிறைவேறுமோ ?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...