Monday, December 20, 2021

pesum dheivam

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN


101  மல்லிகார்ஜுனம் 

சாதூர்  மாஸ்ய   விரதம்,  நவராத்ரி வைபவம்  முடித்தவுடன் மஹா பெரியவா கங்கா யாத்திரை துவங்க  சகல ஏற்பாடுகளும்  நடந்தது.  வெள்ளைக்கார  அரசாங்க ஒத்துழைப்பும்,  முகலாய மன்னர்களின், சுல்தான்களின்  ஆதரவும்  அவருக்கு கிடைத்ததற்கு  காரணம்  மஹா பெரியவாளின் பரந்த நோக்கம், ஜாதி வித்தியாசமில்லாமல் எல்லோரிடத்திலும் அன்பு, காருண்யம்  செலுத்தியது தான். அவருடைய  பயணங்கள் வசதியாக  நடை பெற்றது. எங்கெல்லாம் வரி சலுகை கொடுக்க முடியுமோ அதற்கெல்லாம்  கொடுத்தார்கள்.

18-4-1792 கிழக்கிந்திய கம்பெனி வெள்ளை அரசாங்கம்  காஞ்சி மடத்திற்கு  25  காளை  மாட்டு வண்டிகள், 25  குதிரைகள்,  5 ஒட்டகங்கள், 3 யானைகள், 10 பல்லக்குகள்  ஆகியவற்றை  இலவசமாக அளித்தது.  அது அத்தனையும்  காஞ்சி பீடாதிபதியோடு திருப்பதி சென்றது. அங்கிருந்து கிருஷ்ணா நதிக்கரை  வழியாக  ஊர்களை கடந்து ராமேஸ்வரம் செல்லும் மார்கத்தில்  நடந்தன.  வெள்ளை  அரசாங்கம்  வழி முழுதும்  அதிகாரிகளுக்கு  ஆங்காங்கே  தேவைப்பட்ட  உதவிகளை காஞ்சி மடத்துக்கு செய்து தருமாறு  கட்டளை இட்டது.

1933ல்  மஹா பெரியவா கங்கா யாத்திரை செல்லும்போது  சென்னை அரசாங்கம்  ஒரு ஆணை இட்டிருந்தது.
(G.O.MS.612 Public Police Department d/26-11-1933)  அதன் மூலம்  மற்ற  ராஜ்ஜியங்கள், அரசாங்கங்களுக்கு  வேண்டுகோள் விடுத்திருந்தது.  மஹா பெரியவாளின்  கங்கா காசி யாத்திரைக்கு   ஆங்காங்கே  பல  பல  ராஜ்யங்களில் செல்லும்போது   தேவையான  வசதிகளை  ஏற்பாடு செயது தர சொல்லி  ஆணை இட்டிருந்தது. ஆகவே  ஹைதராபாத், மத்திய பிரதேசம், பீகார், ஒரிசா, வங்காளம், மேற்கு இந்திய ராஜ்ஜியங்கள்  வெள்ளை அரசாங்கத்தின் வேண்டுகோளை நிறைவேற்ற காத்திருந்தன

1933ம் வருஷம் செப்டம்பர் மாதம்  மத்தியில்  தஞ்சாவூரிலிருந்து  மஹா பெரியவா  யாத்திரை துவங்கினார். ஒவ்வொருநாளும் குறைந்தது 30 மைல்கள்  சென்றனர். திருவண்ணாமலை,  ஆரணி, வேலூர்,  சித்தூர், பழமனேரு வழியாக  மதனபள்ளி  அடைந்தார்.  சென்ற இடமெல்லாம்  பக்தர்கள்  ஆர்வமாக  எதிர்ப்பார்த்து  பாதபூஜை, பிக்ஷவந்தனம்  செய்தார்கள்.

மதனப்பள்ளி அருகே  சின்ன திப்பாசமுத்ரம்  கிராமத்தில் ஒரு மாத காலம்  மஹா பெரியவா  முகாம் போட்டார்
கதிரியில்  ஸ்ரீ நசிம்மமூர்த்தி சுவாமி  தரிசனம் செய்தார்  அங்கிருந்து  பெரியவா  தர்மாபுரம்   அனந்தப்பூர், தோணி, த்ரோணாச்சலம் வழியாக  கர்னூல் சென்றடைந்தார்.  அங்கே  ஒரு வார காலம் முகாம். ஒவ்வொரு  கிராமத்திலும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் பெற்றார்கள்.  சந்திரமௌலீஸ்வரர்  பூஜையை கண்டு களித்தார்கள் .

ஸ்ரீ சேலத்துக்கு  தக்ஷிண கைலாசம் என்று பெயர்  உண்டு.   ஆதி சங்கரர்  விவரித்த  12  ஜ்யோதிர் லிங்கங்களைப்பற்றிய  துவாதச லிங்க  ஸ்தோத்ரத்தில்  ஸ்ரீ சைலமும் ஒன்று. மல்லிகார்ஜுனம் என்று பெயர். மருத மரத்துக்கு அர்ஜுனம் என்று பெயர் .அது தான்  ஸ்தல விருக்ஷம்.  சிவனுக்கு இங்கே மல்லிகார்ஜுன ஸ்வாமி என்று பெயர்.  அம்பாள்  பிரம்மராம்பிகை.  வண்டுக்கு  ப்ரம்மரம் என்று சமஸ்க்ரிதத்தில் பெயர். 
 மல்லிகை இருக்குமிடத்தில் வண்டு இருக்குமல்லவா.  கர்னூலில் இருந்து  60  மைல்  தூரத்தில் உள்ள  இடம்  தான் பெத்தச்சரிவு. இரு புறமும்  மலைகள்  காடுகள் நிறைத்த இடம்.  அதன் வழியாக  12 மைல்  மலையில் ஏறினால்  ஸ்ரீ சைல க்ஷேத்ரம் அடையலாம்.  

வருஷா வருஷம்  சிவராத்ரி சமயம்  ஆயிரக்கணக்கானோர்  எங்கிருந்தெல்லாமோ ஸ்ரீ சைலம் வருவார்கள். மலைப்பாதையில் மணிக்கணக்காக  நடந்து வருவார்கள். நடந்த வழிநடைக் களைப்பெல்லாம்  மல்லிகார்ஜுன சுவாமி தரிசனம் பெற்றால் பறந்தோடிவிடும். மகர சங்கராந்தி அன்றும்   தெலுங்கு தேசமாதலால்  அவர்கள் வருஷ பிறப்பான  உகாதி பண்டிகைக்கும்  அநேக பக்தர்கள் கூட்டமாக வருவார்கள்.  விடுமுறை நாட்களில் மற்ற முக்கிய  பண்டிகை நாட்களிலும்  பக்தர்கள் வருவதுண்டு.  மற்ற  காலங்களில்  மலையேறி வருவோர்கள் கொஞ்சம் தான்.
நான் சென்றபோது ஒரு குரங்கு பட்டாளம் ரொம்ப சேஷ்டை பண்ணியது. என் கண்ணாடிக்கு  ஆபத்து வந்தது. கையில் கொம்புடன் செல்வோர்கள் அதிகம்.  இப்போது  கார்கள்  வண்டிகள் பஸ்  எல்லாமே   மலை மேல் ஏறி ஆலயம் அருகே நிற்க வசதி இருக்கிறது.    ஆதி சங்கரர்  மல்லிகார்ஜுணஸ்வாமி, பிரம்மராம்பிகை  தரிசனம் பெற    எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மலை ஏறி இருப்பார் என்று மனக்கண்ணால் காண முடிகிறது.

சிவானந்த லஹரியில் ஒரு ஸ்லோகத்தில்  ஆதி சங்கரர்  என்ன சொல்கிறார் என்று பார்த்தால் புரியும்:

सन्ध्यारम्भ-विजृम्भितं श्रुति-शिर-स्थानान्तर्-आधिश्ठितं
स-प्रेम भ्रमराभिरामम्-असकृत् सद्-वासना-शोभितम्
भोगीन्द्राभरणं समस्त-सुमनः-पूज्यं गुणाविश्कृतं
सेवे श्री-गिरि-मल्लिकार्जुन-महा-लिन्गं शिवालिन्गितम् 50


ஸன்த்யாரம்ப-விஜ்றும்பிதம் ஶ்ருதி-ஶிர-ஸ்தானான்தர்-ஆதிஶ்டிதம்
ஸ-ப்ரேம ப்ரமராபிராமம்-அஸக்றுத் ஸத்-வாஸனா-ஶோபிதம்
போகீன்த்ராபரணம் ஸமஸ்த-ஸுமனஃ-பூஜ்யம் குணாவிஶ்க்றுதம்
ஸேவே ஶ்ரீ-கிரி-மல்லிகார்ஜுன-மஹா-லின்கம் ஶிவாலின்கிதம் 50


“sandhayaramba vijrumbitham shruthi shirasthaanaantharaadhishtitham
saprema bramaraabhi raamamasakrut sadvaasanaa shobhitham
bhogeendraa bharanam samastha sumanaha pujyam gunaavishkrutam
seve Shree giri mallikarjuna mahaalingam shivaalingitham||”

பொன்மாலைப்பொழுதில்,  அஸ்தமனத்துக்கு  சற்று முன்பு, புஷ்பங்கள்  பூத்து குலுங்குவது போல்   தாண்டவமாடும்  சிவபெருமான்.  வேதங்களின் முடிவான  உபநிஷத்துக்களின்  உருவானவன்  ம்ம்ம் என்று  ரீங்காரமிடும் வந்து மல்லிகை மலரைச்சுற்றுவது போல்  பக்தி  பொங்க  தன்னை  பிரம்மராம்பிகை வலம் வர, நாகங்கள் ஆபரணமாக ஒளிர  சத்வ குணம் நிரம்பிய, தேவர்களால் அர்ச்சிக்கப்படும்  உமையொரு பாகனாக  விளங்கும்  மல்லிகார்ஜுனா உன்னை  சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன் என்கிறார்  ஆதி சங்கரர்.

மேலே சொன்ன  ஸ்லோகத்தை மஹா பெரியவா அடிக்கடி  சொல்லுவார். அவர்  தேனான குரலில்  மல்லிகார்ஜுனனை  ஸ்லோகமாக சொல்லும்போது காதுக்கு எவ்வளவு ரம்யமாக இருக்கும்?
மல்லிகார்ஜுன லிங்கம் சந்நிதிக்கு அடுத்த   வெளி ப்ரஹாரத்தில்  பிரம்மராம்பிகை  சந்நிதி உள்ளது.   இங்குள்ள தீர்த்தத்துக்கு  பாதாள கங்கா  கிருஷ்ணவேணி என்று பெயர்.  அந்த  குளத்துக்கு  செல்லவேண்டுமானால் 900 படிகள் கீழே இறங்க வேண்டும். இறங்கினால் போதாது. ரெண்டு மைல்  நடக்கவேண்டும்.  பக்தர்களுக்கு இது  ஜுஜுபி.  விடுவுவென்று நடந்து சென்று தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யும்போது கிடைக்கிற  திருப்திக்கு இந்த  கஷ்டம் ஈடல்ல.
அப்பர்  சுந்தரர்  சம்பந்தர்  ஆகியோர்  அப்படி நடந்தவர்கள் தானே.

தொடரும் 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...