Wednesday, March 9, 2022

vainva vinnoli

 


வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN

ஒரு சிம்ஹாசனாதிபதி கதை  5

வேதாந்த தேசிகரை வேங்கடநாதனாக சிறு வயது குழந்தையாக பார்த்ததிலிருந்தே  ஸ்ரீ  நடாதூர் அம்மாளுக்கு  ரொம்ப பிரேமை.  ஒரு சிறந்த   வைணவ மகானாக  விளங்கப்போகிறார் என்று அடிக்கடி சொல்லுவார்.  பகவானிடம் வேங்கடநாதனுக்கு  சகல சம்பத்துகளும் நீண்ட ஆயுளும் வேண்டி பிரார்த்திப்பார்.

''ஹே,   வரதராஜா, என்னே உன்  அருள் என்று  அவர்  கண்களில் ஆனந்த பாஷ்பம் வழிய  ஒரு ஸ்லோகம் கடல் மடியாக  ஸ்ரீ நடதூர் அம்மாளின்  திரு இதழ்களிலிருந்து பிறந்தது.   வேங்கட நாதனை மெச்சி  அவர்  சொன்ன ஸ்லோகம் இது தான்:  

: பிரதிஷ்டாபிதா வேதாந்தா !பிரதிக்ஷிப்த  பாஹிர்மதா!ப்ஹூயாஸ்  த்ரை வித்யா மான்யஸ்த்வம்!
பூரி கல்யாண பஜனம்!

நாளாக  நாளாக  வேங்கடநாதனின்  தெய்வீக சக்தியை உணர்ந்த  ஸ்ரீ  நடாதூர் அம்மாள்   சுவாமி தேசிகனை (இது தான் பின்னர் வேங்கட நாதன்)  வேதாந்தத்தை  ஸ்திரமாக  நிலை நாட்ட கோரினார்  எதிர் வாதங்களை நிலைக்காமல் செய்தார்.

நடாதூர் அம்மாளுக்கு நான்கு  பிள்ளைகள். ஸ்ரீ  வரத விஷ்ணு,  ஸ்ரீ தேவராஜன், ஸ்ரீ சுதர்சனன், ஸ்ரீ யதீசன் என்று அவர்கள் பெயர். மீமாம்ச வல்லபர்  என்கிற  பௌராணிகர்  நடாதூர் அம்மாளின் வாழ்க்கை வரலாற்றை  எழுதியிருக்கிறார். வரத தேசிகாப்யுதாயம், வரத தேசிக  வைபவ பிரகாசிகா  என்று  அந்த நூல்களின் பெயர் . முதலில் சொன்ன நூல், சார்ய  தீபம் என்ற காவியத்தின்  எட்டு சர்கங்களை அடிப்படையாக கொண்டது.  இந்த  சாரிய தீபம் ஹேமமாலி தேசிகரால்  இயற்றப் பெற்றது.  இந்த  இரண்டு ஆசிரியர்களுமே  நடாதூர்  அம்மாளின் சந்ததியினர்.

எப்போதும்  அநேக  பண்டிதர்கள்  ஜடாவல்லபர்  எனும்  மீமாம்ச வல்லபர்  இல்லத்துக்கு வருவார்கள்,  வேதாந்தம், தாரக மீமாம்ச , வியாகரண வேத கருத்துகள்  கூட்டங்கள் நடைபெறும்,  அவரவர்  நூல்கள் குறிப்புகள், கணிப்புகள்  பரிமாறப் படும். பிரசங்கங்கள் தொடர்ந்து நடக்கும் .   அந்த  மீமாம்ச வல்லபர்  9 நூல்களில்    நடாதூர்  அம்மாள் சுவாமிகள் பற்றி  எழுதியிருக்கிறார். அவை:

1)  வரத  தேசிக சுப்ரபாதம்
2) வரத தேசிக தண்டகம்
3) வரத தேசிக கத்யம்
4)  வரத தேசிக பஞ்சஷத்
5)  வரத தேசிக அஷ்டோத்திர சதா நாம ஸ்தோத்ரம்
6) வரத தேசிக வைபவ பிரகாசிகா
7) வரத தேசிக சம்பாவன கிரமம்
8)  வரததேசிக பிரபாவ தீபம்
9) வரததேசிகாப்யுதயம்

நடாதூர்  அம்மாள்  ஸ்ரீ  பாஷ்யத்தை  ப்ரசங்கிக்கும்போது  சில  வைஷ்ணவர்கள்  ''சுவாமிகளே, ஒரு ஜீவாத்மாவிற்கு  பக்தியோகம் பண்ணுவது  ஸ்ரமம்  ஏனென்றால்,  அதற்கு  அநேக  அதிகாரங்கள் தேவையாக இருக்கிறதே, ஜீவாத்மா  ஆணாக இருக்கவேண்டும், திரிவர்கத்தை சேர்ந்திருக்க வேண்டும்,  (பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய)   இடைவிடாமல்  த்யானம்,  எம்பெருமானுக்கு சேவை, போன்று இத்யாதி இத்யாதிகள். இப்படி இருக்கும்போது பிரபத்தி பண்ண முடியாமல் இருக்கிறதே.  (ஜீவாத்மா எம்பெருமானையல்லவோ முற்றிலும்  சார்ந்திருக்கிறது எனும்போது  தனக்கென்றோ ஏதோ ஒரு லக்ஷியத்திற்காகவோ ஈடுபடுவது எம்பெருமானையே  சார்ந்திருப்பதற்கு விரோத மல்லவா?') இந்த நிலையில் ஜீவாத்மா  எவ்வாறு  ஸ்வதந்திரமாக பிரபத்தி பண்ண முடியும்?.

இந்த கேள்விக்கு  நடாதூர் அம்மாள்  கூறியதாவது  

 ''எம்பெருமானாரின் அபிமானம் ஒன்றே  இதற்கு  வழி. வேறெதுவும் இல்லையே. எம்பெருமானாரே, தங்கள் திருவடித்தாமரை ஒன்றே  சரணம்  என்று அவரை அடிபணிந்தால்  நாம்  காப்பாற்றப் படுவோம்.''
நடாதூர் அம்மாளின்  கீழ்க் கண்ட  ஸ்லோகம்  இதை  எடுத்துரைக்கிறது.

''ப்ரயாண காலே சதுரஸ் ச்வஸிஷ்யாந் பதாதிகஸ்தாந் வரதோ ஹி வீக்ஷ்ய பக்தி ப்ரபத்தி யதி துஷ்கரேவ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்''.

அவரது அந்திம காலத்தில் ''எங்களுக்கு  எது இனி  அடைக்கலம்?''  என்று சீடர்கள் வினவினார்கள்.
 “ பக்தியும் பிரபத்தியும் உங்கள் ஸ்வரூபத்துக்கு  ஒவ்வாதது.  எம்பெருமானார் திருவடி நிழலே சரணம் என்று  அவர் தாள் பணியுங்கள் அது ஒன்றே உங்களை உய்விக்கும் ''  என்கிறார்  ஸ்வாமிகள்.

நடாதூர் ஆழ்வான் தனியன்:

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம்
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி
நடாதூர் அம்மாள்  100 வயதிலும்  ஸ்ரீ பாஷ்ய ப்ரவசனம் செய்தார்.

ஸ்ரீ நடாதூர் அம்மாள்  காஞ்சியிலே  பிறந்து 110 வயது வரை வாழ்ந்து  கிபி. 1275 ல்  மாசி  சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று    காஞ்சி க்ஷேத்ரத்திலேயே  திருநாடு அடைந்தார்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...