Tuesday, March 22, 2022

ABEETHISTHAVAM

 

 ஸ்ரீ அபீtதி  ஸ்தவம் –   நங்கநல்லூர்  J K  SIVAN 
ஸ்ரீ சுவாமி தேசிகன். 

ஸ்ரீ ராமானுஜ‌ருடைய‌ கால‌த்திற்குப் பிற‌கு விசிஷ்டாத்வைத‌ ஸித்தாந்தத்திற்கு எதிர்ப்பு  பெருகிய நேரம்.  அதை  போஷித்து  நிலை  நிறுத்த‌ திருமலை வெங்கடேசன் தன்னுடைய  ''டாண்  டாண்''  ஆலயமணியையே  தூப்புல் கிராமத்தில் வேங்க‌ட‌ நாத‌னாக‌ அவ‌தாரம் செயவைத்தான்.  அதுவே  சுவாமி தேசிகன்.

அத‌னாலேயே ஒவ்வொரு ஸ்தோத்ர‌த்தின் முடிவிலும் “இதைப் ப‌டிப்போர் பெறும் ப‌ய‌ன் இது” என்று ப‌ல‌ ச்ருதியைக் கூறியிருக்கிறார்.  எல்லாம் ப‌க‌வ‌த் பிரீதியின் பொருட்டு என்று செய்வோருக்கு எல்லாப் ப‌ல‌னும் பலமும்  கிடைக்கும்.

 “அபீதிஸ்த‌வ‌ம்” என்ற‌ ஸ்தோத்ர‌த்தில் 29 ஸ்லோகங்கள்..  ஸ‌க‌ல‌ ப‌ய‌த்தையும் போக்கி ப‌க‌வான் 
அனுக்ர‌ஹ‌த்தால் ஸ‌க‌ல‌ நன்மைகளையும் அளிப்பது. 

ஸ்ரீதேசிக‌ன் ஸ்ரீர‌ங்க‌த்தில்  வாழ்ந்த  காலத்தில்  டெல்லியை ஆண்ட  மதவெறியன் அலாவுதீன் கில்ஜி. அவனது  தளபதி மாலிக்காபூர்  பெரும் படையோடு  தென்னகம் வந்து  பல  கோவில்களை சிதைத்தான்.. விக்ரஹங்களை பின்னப்படுத்தி, தங்கம் வெள்ளி என்று  அவற்றை  ஆபரணங்களாக கொள்ளையடித் துக் கொண்டு போனான்.  ஸ்ரீரங்கம் அவன் தாக்குதலுக்கு தப்பவில்லை.  

முன்னதாகவே  மாலிக் காபூர் கொலை  கொள்ளைகளைப் பற்றி  கேள்விப்பட்ட ஸ்ரீரங்கம் ஆலய நிர்வாகிகள்,  க‌த‌வைமூடி ஸ‌ந்நிதிக்கு முன் வேறொரு விக்ர‌ஹ‌த்தைப் பூஜிப்ப‌தாகக் காட்டிவிட்டு,
ஸ்ரீர‌ங்க‌நாத‌னையும் உப‌ய‌நாச்சிமார்க‌ளையும் ப‌ல்ல‌க்கில் எழுந்த‌ருளுவித்துக்கொண்டு ஸ்ரீர‌ங்க‌த்தை விட்டு வெளியேறினார்க‌ள்.   வ‌ய‌து முதிர்ந்த‌வ‌ரான‌ ஸுத‌ர்ச‌னாசார்ய‌ர்  தான் செய்த‌ சுருத‌ப்ர‌காசிகையையும் த‌ன் ம‌க்க‌ள் இருவ‌ரையும்  ஸ்ரீ தேசிக‌னிட‌ம் ஒப்பித்து, “உம்மால் ந‌ம் த‌ர்ச‌நத்திற்கு ந‌ன்மை ஏற்ப‌ட‌ப் போகிற‌து, ஆத‌லால் நீர் த‌ப்பிச் செல்லும் ” என்று கூறி அவ‌ரை அனுப்பினார்.  பிற‌கு த‌ங்க‌ள் உயிருள்ள‌வ‌ரையும் விரோதிக‌ள் உட்புகாமைக்காக‌வும் பெருமாளை எடுத்துச் செல்வோரை  அவ‌ர்க‌ள் பின் தொடராமல்  இருக்க  மாலிக் காபூர்  படைவீரர்களை த்தை எதிர்த்துப் போர் புரிந்து ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ப‌க்த‌ர்க‌ள் உயிர் நீத்த‌ன‌ர்.

ஸ்ரீதேசிக‌னும் ஸ்ரீர‌ங்க‌த்தை விட்ட‌து முத‌ல் ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌ங்கி, க‌டைசியாக‌ திருநாராய‌ண‌புர‌ம் வ‌ந்து சேர்ந்தார்.  வ‌ந்தது  முத‌ல் ஆச்ரித‌ ர‌க்ஷ‌ண‌த்தின் பொருட்டுவ‌ந்த‌ ஸ‌ர்வேச்வ‌ர‌னான‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னுக்கும் ஸூர்ய‌னும் பார்த்த‌றியாத‌ நாச்சிமார்க‌ளுக்கும் த‌ங்க‌ள் வாஸஸ்த‌ல‌த்தை விட்டு இட‌ம் தேடித்திரிய‌ வேண்டியிருந்த‌ நிலைமையையும் ராம‌னைப் பிரிந்த‌ அயோத்யைபோல‌  ஸ்ரீரங்கம்  த‌ன் நாத‌னைப் பிரிந்து பொலிவ‌ற்று நிற்ப‌தையும்,   இப்படி  அரங்கனை வழிபட  இயலாத நிலைக்கு தள்ளப்பட்டதில் மனம் ஒடிந்தார். “   இஸ்லாமியர்களால்   ஸ்ரீர‌ங்க‌த்திற்கும் அர‌ங்க‌
ன‌டியார்க‌ளுக்கும்   ஏற்பட்ட  ப‌ய‌த்தைப் போக்கி, ம‌றுப‌டியும் த‌ன்னையும் த‌ங்க‌ளையும் ஸ்ரீர‌ங்க‌த்தில்  பயமின்றி வாழ   அப‌ய‌ம‌ளிக்க‌ வேண்டும்” என்று   எழுதிய ஸ்லோகங்கள் தான்  “அபீதிஸ்த‌வ‌ம்”.

இந்த‌ ஸ்தோத்ர‌த்தின் ப‌ய‌னாக‌ கொப்ப‌ணார்ய‌ன் என்னும் செஞ்சிக் கோட்டையின் த‌லைவ‌னான‌ ப‌ர‌ம‌ ப‌க்த‌ன்  துருஷ்க‌ர்க‌ளை ஸ்ரீர‌ங்க‌த்திலிருந்து விர‌ட்டி விட்டு ஸ்ரீர‌ங்க‌த்தை நிர்ப்ப‌ய‌மாக்கி ஸ்ரீர‌ங்க‌த்தை விட்ட‌துமுத‌ல் சுற்றித் திரிந்து க‌டைசியில் திருப்ப‌தியில் எழுந்த‌ருளியிருந்த‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னையும் உப‌ய‌ நாச்சிமார்க‌ளையும் த‌ன் ஊரான‌ செஞ்சியில் கொஞ்ச‌ நாள்
 எழுந்த‌ருளுவித்து ஆராதித்து ம‌றுப‌டியும் ஸ்ரீர‌ங்க‌த்தில் தானே பிர‌திஷ்டை செய்வித்தான்.

மனிதர்களை  க‌வி பாடாத‌ தேசிக‌ன் இப்படிப்பட்ட  பெரிய‌ கைங்க‌ர்ய‌ம் செய்த கொப்ப‌ணார்
ய‌னைக் கொண்டாடி எழுதின‌ சுலோக‌ங்க‌ள் இர‌ண்டும் ஸ்ரீர‌ங்க‌த்தில் விஷ்வ‌க்ஸேன‌ர் ஸ‌ந்நிதிக்கு முன்பு பெரிய‌பெருமாள் ஸ‌ந்நிதியின் கீழ்ப்புற‌த்துச் சுவ‌ரில் க‌ல்லில் வெட்ட‌ப்ப‌ட்டு இன்னும் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌.  கல்வெட்டின் காலம்  ச‌காப்த‌   வருஷம்  1293 (கி.பி. 1371.) .  கல்வெட்டு என்ன சொல்கிறது:

''ஸ்வ‌ஸ்தி ஸ்ரீ:– (முகில் வ‌ண்ண‌ன் இருப்ப‌) முகில்க‌ள் த‌வ‌ழ‌ க‌றுத்துத் தோன்றும் த‌ன் சிக‌ர‌ங்க‌ளால் உல‌க‌த்தையே ம‌கிழ்வூட்டும் அஞ்ஜ‌னாத்ரியிலிருந்து ல‌க்ஷ்மி பூமி இருவ‌ருட‌ன் கூடிய‌ ஸ்ரீர‌ங்க‌நாத‌னை செஞ்சிக்கு எழுந்த‌ருளுவித்துக் கொண்டுவ‌ந்து அங்கு சில‌ கால‌ம் ஆராதித்து, பிற‌கு வில்லாளி
ளான‌ துருஷ்க‌ர்க‌ளை வென்று, பெருமாளையும் பிராட்டிமார்க‌ளையும் அவ‌ர்க‌ளுடைய‌ ந‌க‌ர‌மான‌ ஸ்ரீர‌ங்க‌த்திலேயே பிர‌திஷ்டை செய்து,கீர்த்திக்கோர் க‌ண்ணாடியான‌ கொப்ப‌ணார்ய‌ன் ம‌றுப‌டியும் சிற‌ப்பாக‌த் திருவாராத‌ன‌த்தைச் செய்தான்.   விருஷ‌ப‌கிரியிலிருந்து ஸ‌ர்வேச்வ‌ர‌னான‌ ஸ்ரீர‌ங்க‌ நாத‌னை த‌ன் ராஜ‌தானிக்குக் கொண்டு சென்று, க‌ர்விக‌ளான‌  துருஷ்க‌ ஸேனா வீரர்க‌ளை
 த‌ன் ஸைன்ய‌த்தால் கொல்லுவித்து,அத‌ன்  பின் ஸ்ரீர‌ங்க‌த்தை கிருத‌யுக‌த்தோடு கூடிய‌தாக‌ச் செய்து, ஸ்ரீ பூமிக‌ளோடுகூட‌ பெருமாளையும் அதில் ம‌றுப‌டி பிர‌திஷ்டை செய்வித்து அம்புய‌த்தோனான‌ ச‌துர்முக‌ன்போல‌ ந‌ல்லோர் கொண்டாடும் முறையில் கொப்ப‌ணார்ய‌ன் என்ற‌ பிராம‌ண‌ன் ந‌ம்பெருமாளை ஆராதித்து வ‌ருகிறான்.''

தெற்கே  இஸ்லாமிய வெறியர்களின் தாக்குதல் துவங்கியது 1311ல் என்று அறிகிறோம்.  மாலிக் காபூர்  படைகள் நெருங்கியபோது  அப்போது  ஸ்வாமி தேசிகனுக்கு 43 வயது.  பன்னிரண்டு வருஷங்கள் கழித்து இன்னொரு  வெறியன்  உலுக் கான்  ஆக்கிரமிப்பு நடந்தது. அப்போது 55 வயதான ஸ்வாமி  தேசிகனை எல்லோரும்  நடமாடும்  பெருமாளாக கொண்டாடின சமயம் அவர் சத்தியமங்கலத்தில் வசித்தார் .

ஒரு சமயம்  கந்தாடை லக்ஷ்மணாச்சார்யர்  தேசிகன்  மனம் வருந்தும்படியாக நடந்துகொண்டார். அதனாலோ என்னவோ  அவர் நோய்வாய் பட்டார்.  தனது தவறுக்கு வருந்தினார். ஸ்வாமிகளின்  ஸ்ரீ பாத தீர்த்தம் அவரை குணமடையச்செய்தது.  புத்ர பாக்கியமும் கிட்டியது.  தீர்த்த பிள்ளை  என்று நாமகரணம் சூட்டினார்.  உலுக் கான் வேறிப்படை  ஸ்ரீரங்கத்தை நெருங்கி  நாசமடைய செல்லலலாம்  என்று  அறிந்து   ஸ்ரீரங்க  ஆலய நிர்வாகி,  சுதர்சன பட்டாச்சாரியார் தான் இயற்றிய  ஸ்ருத ப்ரகாசிகா என்ற ஸ்ரீ பாஷ்ய வ்யாக்யான  க்ரந்தத்தை, தனது இரு சிறிய  மகன்களோடு  தேசிகர் வசம் ஒப்படைத்து  ஸ்ரீரங்கத்தை விட்டு  உடனே வெளியேற செய்தார்.. ஸ்ரீ ரங்கநாதர் மூல விகிரஹத்தை  மறைத்து ஒரு சுவர் எழுப்பி பாதுகாத்தனர்.  உத்சவ மூர்த்திகளை  திருப்பதிக்கு அனுப்பினார்.  கிரந்தத்தோடும்  சிறு பிள்ளைகளோடும் தேசிகர்  சத்தியமங்கலம் சென்றார்.

எங்கும்  பயமும் பீதியும் சூழ்ந்த நிலையில்  ஸ்வாமி  தேசிகன் இயற்றியது  பயம் வேண்டாம் என்ற பொருள் படும் அபீதிஸ்தவம் .அந்த  29 ஸ்லோகங்களின் அர்த்தத்தையும்  சுருக்கமாக  அறிவோம்:

अभीतिस्तवः
श्रीगणेशाय नमः ।
अभीतिरिह यज्जुषां यदवधीरितानां भयं
भयाभयविधायिनो जगति यन्निदेशे स्थिताः ।
तदेतदतिलङ्घितद्रुहिणशम्भुशक्रादिकं
 रमासखमधीमहे किमपि रङ्गधुर्यं महः ॥ 1

abheethir-iha yajjushAm yath avadheerithanAm bhayam bhayAbhaya vidhAyinO jagathy yannidhEsE sTithA: tath yEthath athilangitha dhruhiNa Sambhu SakrAdhikam RamAsakham adheemahE kimapi Rangadhuryam maha:

அபீதி ரிஹ யஜ்ஜூஷாம் யதவதீ ரிதா நாம் பயம்
பயாபய விதாயிநோ ஜகதி யந்நி தேச ஸ்திதா
ததே தததி லங்கித த்ருஹண சம்பு சக்ராதிகம்
ரமசா கமதீ மஹே கிமபி ரங்க துர்யம் மஹ–1-


நாம்  என்னதான் ஒருவருக்கொருவர்  தைரியம் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் நம்முடைய  பயங்களைப்  போக்குவதோடல்லாமல்  நம்மை  உற்சாகப்படுத்தி, பலப்படுத்தி, ரக்ஷிக்க பண்ணுபவன் அந்த வைகுண்டவாசன் ஸ்ரீமன் நாராயணன் எனும்  ரங்கநாதன் தான். அவன் காக்கும் கடவுள் அல்லவா?  அவனை  எதிர்த்து வெல்ல இன்னும் எவருமே பிறக்கவில்லையே.  அவனைச் சரணடைவோம்.  ரங்கநாயகியுடன் நம்மைக் காக்க அருள்புரிய நம் முன் ஸ்ரீ ரங்கத்தில் தோன்றுவது சர்வ சக்தி ஒளி. அவன்  சந்திக்காத  ஆபத்துக்களையா  நாம்  எதிர் கொள்ளப்போகிறோம்? 
அவனது  பெயரை நினைத்தாலேயே  எதிர்வரும் தீய சக்திகள் மடியுமே . பயம் கொள்ளாதே மனமே. 
இவ்வுலகில் மட்டும் அல்ல இவ்வுலகிலும் இனி பயம் உன்னை நெருங்காது. 

தொடரும்  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...