Monday, March 21, 2022

surdas

 



ஸூர்தாஸ் -    நங்கநல்லூர்  J K SIVAN

''காக்க வா  கேசவா''


ஏழையாகவே  பிறந்து  ஏழையாகவே வளர்ந்து ஏழையாகவே  வாழ்பவர்களுக்கு எந்த குறையும் இல்லை. அவர்களுக்கு என்று ஒரு வித வாழ்க்கை முறை அமைந்துவிடுவதால்  ஒரு பணக்காரனுக் குள்ள  கஷ்டம் அவர்களுக்கு தெரியாது. திடீரென்று அவர்களுக்கு ஒரு புதுவித வாழ்க்கை கொடுத்து அதை சிறிது காலத்திற்கு பிறகு பிடுங்கி கொண்டால் தான்  அவர்களால் முன்பிருந்த நிலைக்கு திரும்ப வருவது கஷ்டமாக,  துன்பமாக, இருக்கும்.  

ஸூர்தாஸ்  பிறவிக்குருடர் என்பதால் பார்வை என்றால் என்ன என்றே தெரியாததால்  ஒரு துன்பமுமில்லை. அவர் மனது முழுதும் கிருஷ்ணன்  அவன் நண்பர்கள், ராதை, பிருந்தாவன வாழ்க்கை முறை தான் திரும்ப திரும்ப  காட்சியாக  அன்றாட வாழ்க்கையாக அமைந்தது.  ஒரு வரியில் சொன்னால் ஸூர்தாஸ்  கிருஷ்ணனோடு பிருந்தாவனத்தில் வாழ்ந்தவராகிவிட்டார். 
கிருஷ்ணன்   ராதையைத் தவிர  வேறு ஒரு சில கோபிகளோடு  ராஸலீலை நடத்துவது  ராதைக்கு   ஜீரணிக்க முடியவில்லை. கோபம், ஏமாற்றம், ஏக்கம் எல்லாம் அவளைப்  பிடித்து வாட்டினதை நினைத்துப் பார்க்கிறார்  ஸூர்தாஸ்:

''ஏன் இந்த   நந்தவனம், தோப்பு, குளிர்ந்த கொடிகளும் செடிகளும் இப்போது எனக்கு  முள் புதராகி விட்டது?  புஷ்பங்கள் கொத்து கொத்தாக   என்னை மகிழ்வித்ததே, ஏன் இப்போது தீப்பந்தங்க ளாகிவிட்டது? யமுனா நதி  ஏதோ ஓடவேண்டுமே என்று  ஏன் வெட்டியாக ஓட ஆரம்பித்துவிட்டது . அதன்  பழைய கிளுகிளுப்பு எங்கே போயிற்று?  பறவைகள் போடும் சப்தம் பக்ஷி ஜாலம் என்று சொல்வேன்.   அதெல்லாம் ஏன் இப்போது எனக்கு  நாராசமான  கூச்சலாகிவிட்டதே. 

என் கண்ணன் என்னை விட்டு  வேறு யாரிடமோ  விளையாடுகிறான் என்பதால் எல்லாமே  எனக்கு வெறுத்து விட்டதா?.  இந்த வண்டுகளின் ரீங்காரம் எரிச்சலை மூடுகிறதே. எதற்கு இந்த தாமரைகள் மலரவேண்டும். யார் இவற்றை மலரச்  சொன்னது? 

 ராதைக்கு கண்ணன் பிரிவு  ஏமாற்றத்தை,  ஒரு வெற்றிடத்தை மனதில் ஏற்படுத்திவிட்டதால் எல்லாமே  வெறுத்து விட்டதோ?

”என்னடி ராதே, உன் வழக்கமான என்மேல் உள்ள அன்பு எங்கே போயிற்று. எதற்கு என்னை எதிரியாக  சுட்டெரிப்பதுபோல் பார்க்கிறாய்?'  எல்லாம் உன் கிருஷ்ணன்  உன்னை மறந்துவிட்டான் என்ற நினைப்பாலா? சொல்?

''யாரடி  நீ சொல்லும் அந்த கிருஷ்ணன்.?  கருப்பா? வெளுப்பா? எங்கே  வாழ்கிறவன்? எவர் பிள்ளை அவன்?   பையனா பெரியவனா,  குழந்தையா? ஒன்றுமே  அவனைப்  பற்றி எனக்கு தெரியாதே.

''என்ன  அழிச்சாட்டியம் பார்த்தாயா இந்த ராதைக்கு,? கிருஷ்ணன்  என்பதே   யார் என்று கேட்கிறாள் என்னிடம்?''

தன்னைத்தவிர  வேறு யாரிடமும் கண்ணன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்பது அவள் கட்டளை. அவனோ  பூவைத்தேடும் வண்டுகள் போல் யார் யாரோடெல்லாமோ விளையாடும்  சிறுவன்.'' இதனால் அவன் மீதான பிரேமை ராதைக்கு முன்பைவிட இன்னும்  அதிமாக கூடியது.

ஏ, வண்டே , எதற்கு என்னிடம் வருகிறாய்?  நேற்று நீ சுவைத்த  அந்த மஞ்சள் மல்லிகைத்  பூ தேன்  என்னிடம் இல்லை. போ. இரவெல்லாம்  மலரும் அல்லிகளிடம் போய் தேடு. உனக்கு  வேண்டுமா
னால்  என்னைப்  பிடிக்காமல் போனாலும் எனக்கு நீ  அத்தியாவசியம். உன்னைப் பிரிந்து வாழ முடியாது என்னால்.  உன் பிரிவு என்பது ஏறமுடியாத மலை எனக்கு. 

என் தலைவா, கிருஷ்ணா,  என் தவறுகளை மன்னித்து விடு. எல்லோரையும் நீ சமமாக பாவிப்பவன் என்பது தெரியாமலேயே  வார்த்தைகளை அள்ளி  வீசிவிட்டேன்.  என்னைக்  காப்பாற்றுவது உன் வேலை. கடமை.  

இரும்பு ஒன்றே ஆனாலும்  கசாப்பு கடையில் அது உயிரை வாங்குகிறது.. இன்னொரு வீரன் கையில்  உயிர் காக்கிறது.  தங்க முலாம் பூசினால் ரெண்டும் ஒன்றே தான்.  உனக்கு நாங்கள் எல்லோரும் ஒன்றே. நல்லோரைக்  காப்பது போல் என்னையும் ரக்ஷிக்கவேண்டும். 

நீ தானே  கிருஷ்ணா, ''அர்ஜுனா , என்   பக்தர்கள் யாராக இருந்தாலும் துன்பம் நேரும்போது  அவர்களுக்கு உதவ  நானே வெறுங்  காலோடு கூட  ஓடுவேன். எனக்கு வெட்கமோ கர்வமோ இல்லை.  என் பக்தனின்  விரோதிகள் என் விரோதிகள். அதற்கு தான் உன் தேரை நான் ஓட்டுகிறேன். உன் எதிரிகளை நோக்கி  அதை செலுத்துகிறேன்.   உன் ஜெயமே என்  வெற்றி.  உன் தோல்வி என்னுடைய  தோல்வி. அதை நடக்க விடமாட்டேன்''  என்று  வாக்களித்தவன்.   

ஸூர்தாஸ்  தன்னையும் ராதையின் சார்பாக,   அர்ஜுனனை   கிருஷ்ணன்  ரக்ஷித்து போல்  காக்க வேண்டும்  என பாடுகிறார்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...