Tuesday, March 1, 2022

LINGASHTAKAM 2

 


ஆதி சங்கரர்  -   நங்கநல்லூர் J K  SIVAN
லிங்காஷ்டகம்  2


देवमुनिप्रवरार्चितलिङ्गं कामदहं करुणाकरलिङ्गम् ।
रावणदर्पविनाशनलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥२॥

தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்   காமதஹன கருணாகர லிங்கம் |
ராவண தர்ப வினாஶன லிங்கம்   தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 2 ||

ஹே,    மகாதேவா, உன்  பெயரே  விளக்குகிறதே,   நீ  தேவர்களுக்கெல்லாம் தலைவன், முதல்வன்,  பெரியவர்களுக்குள்ளேயே ஒருவரை நாமெல்லாம்  மகா பெரியவா  என்று  போற்றி வணங்கு கிறோமே அதே போல்   தேவர்களுக்குள்ளேயே  மிகப்  பெரிய  மகத்தான  பூஜிக்கத் தகுந்த  தேவனே,  நீ  மகா தேவன் என்பதால்  தான்  தேவர்களும்  முனீச்வரர்களும்  உன்னை வணங்குகிறார்கள். நீ  யார்?. தவத்தில் முதிர்ந்த, சிவந்த, பரம சிவன். உனது  தவத்தைக் கலைக்க முனைந்த அந்த  மன்மதனை நீ  ஒன்றும்  செய்யவில்லை. உன்னை  காமத்தால் வெற்றி  கொள்ளவந்த மன்மதன் மேல் நெற்றிக்கண் பார்வை சற்றே பட்டதும் எரிந்து போனான். அசுரனாக  இருந்தாலும்  உன் மீது  அளவில்லா பக்தி கொண்டவன் ராவணன்.  பத்து  தலை  இருந்தாலும் அவனுக்கு அது அத்தனை யிலும் அகம்பாவம் ''தலைக்கேறி'' விட்டதால்  உன்னையே  அசைக்கப்   பார்த்தான்.  பலசாலி யாயிற்றே. உன்னிடமே  வரம் பெற்றவன் அல்லவா? கயிலாயத்தையே  கையால்  தூக்க  முயற்சித்த  அவன்  கர்வம், அவன்  தற்பெருமை அனைத்தையும்  நீ உன்  கால் கட்டைவிரலில்  ஒரு ''அழுத்து'' அழுத்தி போக்கினவனாயிற்றே   மஹா தேவா, சதாசிவா, உன்னை  நெஞ்சிலிருத்தி நாவினிக்க மனம் மணக்க  போற்றுகிறேன்.  உன்னை ஒன்றும்  கேட்க மாட்டேன். எனக்கு  என்ன வேண்டும்  என்று  என்னைக்காட்டிலும் நீ   யல்லவோ  நன்றாக  உணர்ந்தவன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...