Friday, March 11, 2022

adhithya hrithayam

 சூர்யா உனக்கு  நமஸ்காரம்  ---   நங்கநல்லூர்   J  K  SIVAN

ஆதித்ய ஹ்ருதயம் 

சூர்யா,  இதோ என் நமஸ்காரம் -3

व्योमनाथ स्तमोभेदी ऋग्यजुःसाम-पारगः ।
घनावृष्टि रपां मित्रो विन्ध्यवीथी प्लवङ्गमः ॥ 13 ॥

vyomanadha sthamobhedi rig yajur sama paraga
ghana vrushtirapam mithro vindhya veedhi plavangama

வ்யோமனாத ஸ்தமோபேதீ றுக்யஜுஃஸாம-பாரகஃ |
கனாவ்றுஷ்டி ரபாம் மித்ரோ வின்த்யவீதீ ப்லவங்கமஃ || 13 ||

சூர்யா,  வானவெளி மன்னவனே, இருள் நீக்கியே, நான்கு வேதம் உணர்ந்த நிபுணனே, உலகம் ஜீவிக்க உன் ஒளியுடன் மழையும் அளிப்பவனே, வருணனின் நண்பனே, விந்திய மலை போன்ற எந்த உயரமான மலைகளையும் தாண்டி உலவுபவனே,  உன்னால் அல்லவரோ  ஒளியும் உயிர் ஆதாரமும் பெறுகிறோம், நீ என்ன எதிர்பார்த்து இதெல்லாம் தினமும்  நேரம்  தவறாமல்  அருள்கிறாய். நேரமே உன்னால் அல்லவோ நாங்கள் அறிகிறோம். 
உனக்கு நமஸ்காரம்.

आतपी मण्डली मृत्युः पिङ्गलः सर्वतापनः ।
कविर्विश्वो महातेजा रक्तः सर्वभवोद्भवः ॥ 14 ॥

aathapee mandali mruthyu pingala sarva thapana
kavir viswo maha thejaa raktha sarvodbhava

ஆதபீ மம்டலீ ம்றுத்யுஃ பிங்களஃ ஸர்வதாபனஃ |
கவிர்விஶ்வோ மஹாதேஜா ரக்தஃ ஸர்வபவோத்பவஃ || 14 ||

''சூரியதேவா, நீ உஷ்ணத்தை அளித்தாலும் அதன் தாபத்தையும் போக்குபவன். சக்ரம் போன்ற உருளை வடிவானவன். காலனின் மறு உருவே, ஹிரண்மயன் எனும் பொன்னனே , உயிர்வாழ தீயை அளிப்பவனே, ஞானத்தை அளிக்கும் உன்னைத் தானே ஞான சூரியன், ஞான பானு, என்று வாழ்த்துகிறோம், பிரபஞ்சத்தை நிர்வகிப்பவனே நீ தானே சூர்யா, உலகின் ஒளியே, ஒவ்வொருவர் மனத்திலும் உறைந்து ஒவ்வொரு செயலும் நிறைவேற்றுபவனே, சூர்யநாராயணா, உனக்கு  கோடானுகோடி  நமஸ்காரங்கள்.

नक्षत्र ग्रह ताराणाम् अधिपो विश्वभावनः ।
तेजसामपि तेजस्वी द्वादशात्मन्-नमो‌உस्तु ते ॥ 15 ॥

nakshtra gruha tharanam adhipo viswa bhaavana
thejasam aphi thejaswi dwadasathman namosththe

நக்ஷத்ர க்ரஹ தாராணாம் அதிபோ விஶ்வபாவனஃ |
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஶாத்மன்-நமோ‌உஸ்து தே || 15 ||

நமஸ்காரம் நமஸ்காரம் சூர்ய நாராயணா,   நக்ஷத்திர, நவக்ரஹ, புவன மண்டலாதிபதி, சர்வ பிரகாச காரணா , ஒளிக்கு ஒளியூட்டுபவனே,  நவகிரஹங்களுக்கும்  
தலைவா,  இந்த அகிலத்தை உருவாக்கிக் காக்கின்றவனே . ன் பன்னிரெண்டு (தத, அர்யாமா, மித்ரா, வருணா, இந்த்ரா, விவஸ்வன், த்வஷ்டா, விஷ்ணு, அம்ஷுமான், பாகா, புஷா, பரஞ்ஜா) உருவிலும் ஒளி மயமாக  நிலைத்திருப்பவனே . ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். நமஸ்காரம் நமஸ்காரம் 

nama poorvaya giraye, paschimayadraye nama
jyothirgananam pathaye dhinadhipathaye nama

நம: பூர்வாய கிரயே பஷ்சிமாயாத்ரயே நம: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம: || 16 ||

ஸூர்யன் உதிக்கும் கிழக்கு மலைகளுக்கும் ஸூர்யன் அஸ்தமிக்கும் மேற்கு மலைகளுக்கும் நமஸ்காரம். வானுலகில் உள்ள அனைத்து தேவதைகளுக்கும் தினமும் உதிக்கும் நாளுக்கும் சூர்யா நீயே  அதிபதி.

சூரிய பகவானே, கிழ்வானம் சிவக்க உதயமாகின்றவனே, அன்றைய பிரயாணம் முடித்து மேலைவானில் செக்கர்வானமாக மறைபவனே, எதையும் பொன்னிறமாக்குபவனே, தினமும் நாம் வழிபடும் தினகரனே ஆதித்யா உனக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்

जयाय जयभद्राय हर्यश्वाय नमो नमः।
नमो नमः सहस्रांशो आदित्याय नमो नमः॥

jayaya jaya bhadraya haryaswaya namo nama
namo nama sahasramso adithyaya namo nama

ஜயாய ஜயபத்ராய ஹர்யஶ்வாய நமோ நமஃ |
நமோ நமஃ ஸஹஸ்ராம்ஶோ ஆதித்யாய நமோ நமஃ || 17 ||

''சூர்யா, நீ வெற்றிக்கு காரணமானவன், ஜெயன். ஜெய பத்ரன். பச்சை குதிரை பூட்டிய ரதன் . உனக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள். அதிதி புத்ரா,  அசகாய சூரா, சூர்யநாராயணா, உன்னை வணங்கும்போதே நெஞ்சில் தைர்யம் நிரம்புகிறதே. எடுத்த காரியம் யாவினும் வெற்றி தருபவனல்லவா நீ.

nama ugraya veeraya sarangaya namo nama
nama padma prabhodaya, marthandaya namo nama

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நமஃ |
நமஃ பத்மப்ரபோதாய மார்தாண்டாய நமோ நமஃ || 18 ||

சூர்யநாராயணா, பாபம் செய்தவர் அஞ்சும் பரிசுத்தனே, ரட்சிக்கும் நாயகனே, வேகத்தில் ஈடற்றவனே, காலத்தை நடத்திச் செல்பவனே, காத்திருக்கும் தாமரை மொட்டுக்களை மொட்டவிழச் செய்பவனே, உயிர்கொடுப்பவனே, உயிர் காப்பவனே, உனக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.

brihamesanachuthesaya sooryadhithya varchase
bhaswathe sarva bhakshaya roudraya vapushe nama

ப்ரஹ்மேஶானாச்யுதேஶாய ஸூர்யாயாதித்ய-வர்சஸே |
பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரௌத்ராய வபுஷே நமஃ || 19 ||

சூர்யா நாராயணா , சுட்டெரிக்கும் செழுஞ்சுடரே, நீயே பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரின் தேவனாகவும், அதிதி மைந்தனாகவும், சாஸ்வத பிரகாசனாகவும்,சர்வத்தையும் சாம்பலாக்கும் சக்தி படைத்தவனாகும் எதிரிகள் கண்டஞ்சும் பறக்க்ரமனாகவும் உள்ளாய். இதோ எங்கள் நமஸ்காரங்கள் உனக்கு.

तमोघ्नाय हिमघ्नाय शत्रुघ्नायामितात्मने।
कृतघ्नघ्नाय देवाय ज्योतिषां पतये नमः॥ 20

Tamoghnāya himaghnāya śatrughnāyāmitātmane
kṛtaghnaghnāya devāya jyotiṣāṃ pataye namaḥ

தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயா மிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிசாம் பதயே நம:

தமோகுணம் என்னும் அஞ்ஞான இருளைப் போக்குபவனே, சூர்யதேவா, பனியையும் குளிரையும் அதேபோல் விலக்குபவனே, கெட்டவர்களுக்கும் தீயோருக்கும் நெருப்பானவனே, சூரியமண்டலத்தில் மற்ற கிரஹங்களின் பிரதம தலைவனே, உலகெங்கும் உன் ஒளியால் ஜீவசக்தி அளிப்பவன், உனக்கு நமஸ்காரம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...