Thursday, March 17, 2022

surdas

   ஸூர்தாஸ்   -   நங்கநல்லூர்   J K  SIVAN


37.  யார் அவனை தூங்க விட்டார் தாலேலோ?

''ஆராரோ, ஆரிரரோ'' என்று எல்லா குழந்தைகளையும் போல் குட்டி கிருஷ்ணனையும் ஒரு அம்மா தொட்டிலிலோ, தூளியிலோ போட்டு ஆட்டினால் தானே அவனும் தூங்கியிருப்பான்?  அவன் நடிகன். பிறவி நடிகன். தூங்குவது போல் பாவனை செய்பவன். அவன் தூங்கிவிட்டால் பிரபஞ்சமே தூங்கி விடும்  என்பதை அறிந்தவன்.   காவல்காரன் தூங்கிவிட்டால் பாதுகாப்பு ஏது?. அவன் என்ன காசு வாங்கிக் கொண்டு   ஒரு  விசிலடித்துவிட்டு   சுகமாக கண்ணயரும் கூர்க்கா வா?

யசோதை ஹரியை தூங்கப்   பண்ணுகிறாள். லேசில் தூங்கமாட்டானே. நம்மை அறியாமை அஞ்ஞானம் எனும் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்புபவனை அவள் தூங்கப் பண்ணுகிறாள்!!

பட்டுக்குட்டி , செல்லக்குட்டி என்று அவனை கொஞ்சுகிறாள், தடவிக் கொடுக்கிறாள், சில குழந்தைகளை மெல்ல தட்டினால் அந்த சுகத்தில் தூங்கும்.   தட்டா  விட்டால் கொட்ட கொட்ட முழிக்கும். பாடுகிறாள். ராமனை கோசலை தூங்க வைக்க பாடினதை கிருஷ்ணனுக்கு யசோதை அவனுக்கு பாடுகிறாள். அவன் தான் இவன் என்று அவளுக்கு எப்படி தெரியும்.

''சரி சரி போ.   நான் ஏற்கனவே கேட்ட பாட்டு தான் என்றாலும்  பரவாயில்லை உன் குரலில் பாடு'' என்று அவனும் ரசிக்கிறான். சிரிக்கிறான். தூங்க  மட்டும் முடியாது'' என்று விஷமம் பண்ணுகிறான்.

சில குழந்தைகள் கெட்டிக்காரர்கள். அம்மாவின் கர்ண கொடூர பாட்டை நிறுத்தவேண்டுமானால் உடனே நாம் தூங்கிவிட வேண்டும் என்று தெரிந்தவை. கண்ணன் விஷயத்தில் அப்படியில்லை. கோசலையே மீண்டும் வந்து பாடுவது போல் உணர்கிறான். பழைய ஞாபகத்தின் சுகத்தில் மெதுவாக கண் இமைகளை மூடுகிறான். என் தாய்  என் அண்ணா பெண்ணை தூளியில்  போட்டு ஆட்டி பாடிய பாட்டு காதில் ரீங்காரம் செய்கிறது:

''மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!  --   நீலாம்பரி  ஒரு அற்புதமான சுக ராகம்.
இதைக் கேட்டும்  தூங்காதவன் நிச்சயம் ஒளரங்க சீப் தான்.

''என் செல்லத்திற்கு தூக்கம் வந்து விட்டது. ஏ தூக்கமே,  நீ ஏன் சீக்கிரம் வரவில்லை?'' அவளுக்கு காரணம் தெரியுமா? தெரிந்தால் பாடுவாளா?

ஆகவே தூக்கத்தைக்  கெஞ்சுகிறாள். தூக்கமே சீக்கிரம் வாயேன். என் கண்மணியை தூங்க வையேன். நாள் முழுதும் விஷமம் செய்து களைத்து போயிருக்கிறான். கொஞ்சம் ஓய்வெடுக்க வைக்கிறாயா?''

சில குழந்தைகள் தூக்கத்தில் சிரிக்கும். உதடுகள் ஏதோ முணு முணுக்கும் சில அழும். உடனே சிரிக்கும். ''கடவுள் தாமரைப் பூ விளையாட காட்டுகிறார்'' என்று என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன்.

யாரோ ஒரு சேடி ''அம்மா'' என்று கூவிக்கொண்டே ஏதோ சொல்ல யசோதையிடம் வருகிறாள்.  உதட்டின் மேல் விரல் வைத்து ''உஷ் மெதுவாக. கிருஷ்ணன் தூங்குகிறான்'' என்று சொல்லி பாட்டை நிறுத்துகிறாள் யசோதை.

மெதுவாக திரும்பி பார்க்கிறாள். தொட்டிலில்...

கிருஷ்ணன் எழுந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறான். ''உம் பாடு சாந்தா பாடு ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்'' என்று டயலாக் பேசுவதுபோல் இருக்கிறது அவன் பார்வை.

மீண்டும் மேலே எழுதியதை படியுங்கள். ''ஆராரோ ஆரிரரோ..... யசோதை மீண்டும் பாடுகிறாள்.....
அவளுக்கு தான் எத்தனை சந்தோஷம் இப்படி கண்ணனை தூங்க வைப்பதில்.
நாம் கிருஷ்ணன் காலத்தில் இல்லை என்ற குறை வேண்டாம். சூர்தாஸ் கண்ணில்லாமலேயே நம்மை கோகுலத்திற்கு கூட்டிச் செல்கிறார். நாம் தான் தொட்டில் அருகே நிற்கிறோமே.

Yasoda lulling Hari to sleep,
Shaking the cradle, cuddling and fondling,          
 Singing to Him a song
My darling is sleepy
Why doesn't sleep come along?
Come sleep, come quickly
Kanha for you does long.
Sometimes He closes His eyes
Sometimes His lips are aflutter.
Thinking He has fallen asleep
Yasoda stops her singing.
Awake still, He's up suddenly
Enjoying Yasoda's song.
Such joy as Yasoda feels
Is unattainable to the gods.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...