Monday, March 14, 2022

SURDAS

 ஸூர்தாஸ் -  நங்கநல்லூர்  J K  SIVAN 



35.  கால் பிடித்தேன் கை தூக்கு
 
படிப்புக்கும் ஒருவருடைய பக்திக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. படிப்பு  எவர் மூலமோ  எதையோ கற்றுக் கொள்வது. பக்தி தானாகவே  ஊற்று போல இதயத்தில் சுரந்து மனதை நிரப்புவது. இளநீர்,  கோகா  கோலா,  ரெண்டும்  ஒன்றாகுமா?

சூர்தாஸ் கண்ணற்றவர், கல்வி யற்றவர் என்றும்  படிக்காதவர்கள் எல்லாருமே  முட்டாள்கள் என்று  படித்த முட்டாள்கள் தான் சொல்வார்கள்.  ஸூர்தாஸ்  அகக்கண் எப்போதும் திறந்தே இருந்தது. பிரபஞ்சத்தை அதில் கண்டு வியந்தது. அந்த பிரபஞ்சம் சர்வம் க்ருஷ்ண மயமாக இருந்ததைத் தான் அனுபவித்தார். பக்தி பல வேதங்கள் உபநிஷதங் களை அவர் மனதில் விதைத்தது.  அந்த கலவையில் உருவான அவரது  சில பாடல்களை தான் நாம்ஆனந்தமாக  ரசித்து ருசித்து வருகிறோம். பிடிக்கிறதா?

'' கிருஷ்ணா, மாதவா, நீ ஒன்று செய்.  என்னை இட்டுச் செல். வண்டியில் வைத்து ஓட்டிச் செல். நீ தான் ரதம் ஓட்டுவதில் தேர்ந்தவனாயிற்றே. படகில் கடத்திச் செல்.  நீ கருணைக்கடல். இந்த பவ சாகரத்திலி ருந்து என்னை மீட்டுச் செல்.  இந்த உலக வாழ்வு எனும்  ஜலப்ரளயம் என்னை மூழ்கடிக்கிறது.

சமுத்திரத்தில் அலைகள் நுரைத்து மேலெழும்புமே  அது போல்  இந்த  சம்சாரக்  கடலில் பேராசை அலைகள் அங்கும் இங்குமாக  நிலை கொள்ளாமல் தூக்கி எறிகின்றன. இது  போதாதென்று  காமவெறி என்ற நீர்வாழ் முதலைகள் பசியோடு  எல்லோரையும்  விழுங்க காத்திருக்கின்றன.

அடேயப்பா,  இந்த வெறி,  கோபம்,பேராசை  எல்லாம் சூறைக் காற்றுகள் என்றும் சொல்லலாம். உன் நாமத்தை நினைக்கவே  விடாமல் வேறு பக்கம் ஒருவனை உலக  வாழ்க்கையில் இழுப்பவர்கள் தான்  மனைவியும் பிள்ளை குட்டிகளும். உன்னை மட்டும் நான் மனதில் பூரணமாக நினைத்து  மகிழ்வேனானால் இந்த உலக மாயை என்னை என்ன செய்யும்?

குளங்களில் கால் வைத்தவர்களுக்கும் ,  ஆற்றில் குளிப்பவர்களுக்கும்  நன்றாக தெரியும்,  குட்டி குட்டி மீன்கள் வெடுக் வெடுக் என்று காலை உடம்பை எல்லாம் நம நம வென்று கடித்து அழுக்கை தின்னும். ஒரு பக்கம் சுகமாக இருக்கும், ஒரு பக்கம்  அருவருப்பாக இருக்கும்.  இந்த ஐம்புலன்களின் தொந்தரவு அப்படித்தான். சதா ஏதாவது பிடுங்கிக் கொண்டே இருக்கும். என் பல ஜென்ம  சேமிப்பான  பாவ மூட்டையை எப்போதும்  வேறு சுமக்கிறேன். எப்படி நான் வேகமாக நகர முடியும்?   பாசி எப்படி நீர் நிலையில் படிகளில்  நீரில் ஒட்டிக் கொண்டிருக்கி
றதோ
அப்படி ஆழ்ந்து போய் நான் உலக வாழ்வின் வாதனைகள்,  சோதனைகளில்,   பிரி பட முடியாமல் ஒட்டிக் கொண்டு விட்டேனே.

''அப்பா  கிருஷ்ணா,  என் நிலையை உணர்ந்து  என் களைப்பை அறிந்து,  பரிதாபப்  பட்டு,  என் மேல் கொஞ்சம் கருணை வை.  என் குறையைக்  கொஞ்சம் காது கொடுத்து கேளேன்.
வ்ரஜபூமி தெய்வமே,  ஷ்யாம கிருஷ்ணா,  உன் காலைப் பிடித்த என்னைக்  கொஞ்சம்  கை தூக்கி  ஆள்  தெய்வமே.

अब तो माधव मोहि उबार - Ab to Maadhav mohe ubaar
दिवस बीते रैन बीती बार बार पुकार divas beete rain beeti, baar baar pukaar.
अब तो माधव मोहि उबार..Ab to Maadhav mohe ubaar

नाव है मझधार भगवन तीर कैसे पायें naav hai majhdhaar bhagwan teer kaise paayen
घिरी है घनघोर बदली पार कौन लगाए ghiree hai ghanghor badli paar kaun lagaaye
अब तो माधव मोहि उबार...Ab to Maadhav mohe ubaar

काम क्रोध समेंत तृष्णा रही पल छिंन घेर
kaam krodh samet trishna rahee pal chhin gher
नाथ दीनानाथ कृष्णा मत लगाओ देर Naath Deena Naath Krishna mat lagaao der
अब तो माधव मोहि उबार...Ab to Maadhav mohe ubaar

दौड कर आये बचाने द्रोपदी की लाज Daud kar aaye bachaane Dropadi ki laaj
द्वार तेरा छोड़ के किस द्वार जाऊं आज Dwaar tera chhod kar kis dwaar jaaon aaj
अब तो माधव मोहि उबार Ab to Maadhav mohe ubaar

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...