Monday, March 7, 2022

PESUM DHEIVAM




 பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN


117   மஹா பெரியவாளின் புயல் வேக விஜயம்

பன்னிரண்டு  ஜ்யோதிர் லிங்க  சிவாலயங்கள்,   துவாதச லிங்கங்கள், சிவ பக்தர்களுக்கு ரொம்ப முக்கியமானவை. அவற்றில் ஒன்று வடக்கே   பீஹார் அருகே இருக்கும்  தேவ்கார்  எனும்  க்ஷேத்ரத்தில் அமைந்துள்ள வைத்தியநாத சுவாமி  ஆலயம்.  லங்கேஸ்வரன்  சிவனை வழிபட்ட ஸ்தலம். ராவணன் ஒவ்வொன்றாக தனது பத்து தலைகளையும் வெட்டி  சிவனுக்கு அர்பணித்த போது அவனைத் தடுத்து காயமுற்ற அவன் தேகத்துக்கு  வைத்தியம் பார்த்தவர் இந்த  வைத்ய நாதன்.  வருஷா வருஷம்  சிவபக்தர்கள்  ''கான்வட''   யாத்ரா என்ற நிகழ்ச்சி மூலம், ஜார்கண்ட் பிரதேசத்தில் இருக்கும் வைத்யநாதருக்கு அபிஷேகத்துக்கு கங்கை நீர் மைல்  கணக்காக நடந்து சென்று எடுத்து வருவார்கள்.

இது ஒரு  மிகப் பழைய  சிவாலயம்.  சிவமஹா புராண  சத ருத்ர ஸம்ஹிதா வில்   இந்த ஆலயத்தை  பற்றி  சொல்லி இருக்கிறது.   தேவகார் என்ற இந்த ஊருக்கு பழைய காலத்தில்  சித்த பூமி என்று பெயர். ஆதி சங்கரர் ஸ்தோத்ரத்தில் இந்த ஸ்தலம் பற்றி எழுதியது:

Poorvothare prajwalika nidhane, sada vasantham girija sametham  surasuraradhitha padapadmam
srivaidyanatham thamaham namami

பூர்வோத்தரே ப்ரஜ்வாலிகா நிதனே , சதா வசந்தம், கிரிஜா  சம்மதம்,  ஸுராஸுரார்தித பாத பத்மம், ஸ்ரீ வைத்யநாதம்  தமஹம்  நமாமி.

என்ன அர்த்தம் என்றால்:  சிதபூமி எனும்  ப்ரஜ்வாலிகா நிதனமாகிய  ஸ்மஸான  பூமியில் வைத்யநாதம் எனும் சிவ க்ஷேத்ரம்  அமைந்திருக்கிறது. நமது தேசத்தில் வடகிழக்கு பகுதியில். சிவன் ஸ்மஸான  வாசி அல்லவா?  

வைத்யநாதன்  பரலி எனும் ஊரில் இருப்பதாக  இன்னொரு ஸ்லோகம் சொல்கிறது:  பேர் அடிக்கடி மாறும் அல்லவா? இது தான் தவாதசலிங்க ஸ்லோகம். மனப்பாடம் பண்ணலாம்.

सौराष्ट्रे सोमनाधञ्च श्रीशैले मल्लिकार्जुनम् ।
उज्जयिन्यां महाकालम् ॐकारेत्वमामलेश्वरम् ॥

पर्ल्यां वैद्यनाधञ्च ढाकिन्यां भीम शङ्करम् ।
सेतुबन्धेतु रामेशं नागेशं दारुकावने ॥

वारणाश्यान्तु विश्वेशं त्रयम्बकं गौतमीतटे ।
हिमालयेतु केदारं घृष्णेशन्तु विशालके ॥

एतानि ज्योतिर्लिङ्गानि सायं प्रातः पठेन्नरः ।
सप्त जन्म कृतं पापं स्मरणेन विनश्यति ॥

சௌராஷ்ட்ரே  சோமணந்தான்ச

Saurashtre Somanathamcha Srisaile Mallikarjunam|
Ujjayinya Mahakalam Omkaramamaleswaram ||
Paralyam Vaidyanathancha Dakinyam Bheema Shankaram |
Setu Bandhethu Ramesam, Nagesam Darukavane||
Varanasyantu Vishwesam Tryambakam Gautameethate|
Himalayetu Kedaaram, Ghrishnesamcha shivaalaye||
Etani jyotirlingani, Saayam Praatah Patennarah|
Sapta Janma Kritam pApam, Smaranena Vinashyati||

ஸௌராஷ்ட்ரே ஸோமனாதம்ச ஶ்ரீஶைலே மல்லிகார்ஜுனம் |
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரேத்வமாமலேஶ்வரம் ||

பர்ல்யாம் வைத்யனாதம்ச டாகின்யாம் பீம ஶம்கரம் |
ஸேதுபம்தேது ராமேஶம் னாகேஶம் தாருகாவனே ||

வாரணாஶ்யாம்து விஶ்வேஶம் த்ரயம்பகம் கௌதமீதடே |
ஹிமாலயேது கேதாரம் க்றுஷ்ணேஶம்து விஶாலகே ||

ஏதானி ஜ்யோதிர்லிம்கானி ஸாயம் ப்ராதஃ படேன்னரஃ |
ஸப்த ஜன்ம க்றுதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ||

இதிலிருந்து என்ன தெரிகிறது?  வைத்தியநாதம் என்ற பெயரில் மூன்று க்ஷேத்ரங்கள் தவாதச லிங்கத்தை சேர்ந்தவை என்று உரிமை கொண்டாடுகிறது.  ஒன்று  பைத்தியநாத் ஆலயம், தேவ்கர். அது பற்றி தான் மேலே சொன்னது.  அடுத்தது பரலி வைத்தியநாதம், இது மகாராஷ்டிரா தேசத்தில் உள்ளது. மூன்றாவது பைஜ்நாத்  ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ளது.  மூன்றையுமே  தரிசிக்கலாமே ?  போனஸ் தானே.

ஏறக்குறைய  150 வருஷங்களுக்கு முன்பு 1870ல்  யாரோ  வண்ணத்தில் தீட்டிய ஒரு உருவம் தேவ்கர் ஆலயத்தில் உள்ளது.  ஒருவர் நின்று கொண்டு மந்திரங்கள் உச்சரிக்க, நான்கு பேர் உட்கார்ந்துகொண்டு  வைத்யநாதனுக்கு கங்காஜல அபிஷேகம் செயகிறார்கள்.  படம் இத்துடன் இணைத்திருக்கிறேன்.

1935ல்  ஜூன்  21ம் தேதி அன்று மஹா பெரியவா தேவ்கர்  ஸமஸ்க்ரித  வித்யாலயத்துக்கு விஜயம் செய்தார். பண்டாக்கள், தேவஸ்தான நிர்வாகிகள், பக்தர்கள் அனைவரும் சேர்ந்து மஹா பெரியவருக்கு வரவேற்பளித்தார்கள்.   சிவகங்கையில் ஸ்னானம் முடித்து  தேவ்கர்  வைத்தியநாத சுவாமி, கிரிஜா தேவி தரிசனம்  செய்தார்.  விக்ரஹங்களுக்கு எல்லாம்  வஸ்திரங்கள் அளித்தார். நிர்வாகிகள் பண்டாக்களுக்கு ஷால் அளித்தார்.  

அடுத்தநாள் காலை   பாலாநந்த  பிரம்மச்சாரி என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட  ஸ்வர்காஸ்ரமம் எனும் மடத்துக்கு சென்றார்.  மடத்தில்  பிரம்மச்சாரி மஹா பெரியவாளுக்கு பாத பூஜை செய்தார். ஒரு  கௌரிசங்கர ருத்ராக்ஷ மாலை அளித்தார்.  பக்தர்களுக்கு சிவ  ஸ்வரூபமாக  வந்து நிற்கும் மஹா பெரியவாளைக்  கண்ணாரக்  கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.

அந்த வருஷ வ்யாஸ பூஜை கல்கத்தாவில் நடத்த மஹா பெரியவா முடிவெடுத்திருந்தார்.  கல்கத்தா 250 மைல் தூரத்தில் தென் மேற்கே இருக்கிறதே?  இன்னும் 23 நாட்களில் எப்படி அதை அடையமுடியும்?   
நடுவில் எங்கும் நிற்காமல் ஒவ்வொரு நாளும் 15-20  மைல்  தூரம் பிரயாணம் செய்தாக வேண்டும். ஆகவே  பகலிலேயே பூஜை முடித்து சூரியன் அஸ்தமனம் ஆனபின் விடாமல் பிரயாணம் செய்தால்  களைப்பு குறையும்.  வழியில்  கடக்க வேண்டிய  ஊர்கள்:   தும்கா, குரி , கட்வா பர்த்வான் போன்றவை.   ஜூலை 15 அன்று  கல்கத்தாவில்  ஹூக்ளி நதி தெற்கு கரையில் ஹௌரா மஹா பெரியவா பரிவாரத்தோடு வந்து சேர்ந்தார்.
  
கல்கத்தா பக்தர்களின் சந்தோஷத்துக்கு சொல்லவா வேண்டும்?  மஹா பெரியவாளை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் விஷயம் அறிந்து  கூடி விட்டார்கள்.  மொழி குலம் , ஜாதி வித்யாசம் பாராமல், வங்காளிகள், மராத்தியர், மார்வாடிகள், ஆந்திரர்கள், த்ராவிட தேசத்தவர், கேரள மலையாளிகள்,  கன்னடத்துக் காரர்கள், பஞ்சாபிகள், அடேயப்பா, எவ்வளவு பேருக்கு அவர் மேல் பக்தி பரவசம்! 

வசந்த குமார்  என்பவர்  ஒரு  பல்லக்கு தயார் செய்து விட்டார். கல்கத்தா  பிரதான  வீதிகளில் மஹா பெரியவா ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டார். தெருக்களின் இரு மருங்கிலும் மக்கள் வெள்ளம். ஊர் வலத்தில் மஹா பெரியவா தரிசனம்  பெற காத்திருந்தார்கள்.  கூட்ட  நெரிசலை தவிர்க்க, வெள்ளைக்கார அரசாங்கத்தின்  காவல் பணியாளர்கள் வந்து  கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார்கள்.
ஹௌராவில் ஒருநாள் இருந்து விட்டு மகா பெரியவா யாத்திரை தொடர்ந்தார்.   கங்கையை இரவு கடந்தார்.  அக்கரையில்  இருந்த  வர்ணாஸ்ரம ஸ்வராஜ்ய சங்கம் தலைமை  இல்லத்தில்   அதன் அங்கத்தினர்கள் அழைப்பை ஏற்று  தங்கினார்.

ஸ்வதேச ஸமஸ்தான ராயல்டி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்,  வங்காள அரசாங்க உயர் அதிகாரிகள்,  உத்யோகஸ்தர்கள், பக்தர்கள்  ஒருங்கிணைந்து பெரியவாளுக்கு வரவேற்பளித்தார்கள்.     அன்றிரவே  நாட்டுக்கோட்டை செட்டியார்கள்   ஆதி கங்கா நதி கரையில் காளி கட்டத்தில் அமைத்திருந்த சத்திரத்துக்கு சென்றுவிட்டார்.

1935ம் வருஷம்  ஜூலை 16ம் நாள்  மஹா பெரியவா சங்கல்பித்த படியே,  அந்த வருஷ  வியாச பூஜை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சத்திரத்தில் விமரிசையாக நடை பெற்றது.  விடிகாலையில் கங்கா நதி ஸ்னானம், வபனம், ஆகியது.  தமிழ் நாட்டின் பல ஆலயங்களிலிருந்து.  காசி, கயா மாற்று வட இந்திய சிவாலயங்களிலிருந்தெல்லாம்  பிரசாதங்கள் வந்து குவிந்தன.  ஸ்ரீ கிருஷ்ணர்,  வியாஸ ரிஷி, ஆதி சங்கரர், மற்றும் பல குருமார்கள்  விக்ரஹங்களை எல்லாம்  எலுமிச்சம் பழங்களில் ஆவாஹனம் செய்து  அபிஷேகித்து, அலங்கரித்து, பூஜித்து,  சம்ப்ரதாயமாக  வழிபட்டார்.  பூஜைகள் முடிந்தபின் பண்டிதர்களை அழைத்து  ப்ரம்ம சூத்ர வியாக்யானம் நடை பெற்றது.  

ரெண்டுமாதங்கள் அதற்குப் பின் மேலும்  ஒரு நாற்பது நாள்  என்று  சாதுர்மாஸ்ய விரதம் அங்கே தொடர்ந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...