Saturday, March 5, 2022

jayadevar ashtapathi 16

 பிருந்தாவன  ராதா கிருஷ்ணன் -   நங்கநல்லூர்  J K   SIVAN 


பிருந்தாவனம்  ஆனந்த புரி. பூலோக வைகுண்டம் கண்ணன்  ராசா லீலைகள் புரியும் போது.அங்கு  காலை இல்லை,  மாலை இல்லை, பகல் இல்லை,   இரவில்லை ,எந்நேரமும் எப்போதும்  ஆனந்தம். சதானந்தம்,  பரமானந்தம். ஏனென்றால்  பரமன்   அங்கே பாமரனாக  புல்லாங்குழலேந்தி  அதில்  புனித கீதம் இசைத்து மக்களை மாக்களை, மற்றவற்றையெல்லாம் தன்வசம் காந்தமென  கவர்ந்து கொண்டி ருந்த காலம் அது.   ஆனந்தம் நிறைந்த இடம்.  
சந்தோஷமாக,  ஆனந்தமயமாக ஒரு இடம் இருந்தால் நாம் என்ன சொல்கிறோம்?
''ஸார், இது  பிருந்தாவனம் போல  இருக்கு''   என்கிறோம்.  அப்படி என்றால் கிருஷ்ணன் அங்கே இருந்த போது  பிருந்தாவனம் எவ்வளவு ஆனந்தமயமாக  இருந்திருக்கவேண்டும்.  ஆகவே  ஒருநாள்  அவனைக் காணாமல்  ராதை  கண்ணன் பிரிவால்  துடிக்கிறாள்:

ஒரு மேடையில்   மலய மாருத  பூங்காற்றின்  இன்சுகத்தில்  ராதை தோழியிடம் என்னவோ சொல்கிறாளே, நமது காதில் விழுகிறதே.  

'' தோழி, அங்கே தெரிகிறதே  தாமரைக்குளத்தில் இதழ்  விரிந்த தாமரை மலர். அதன் அழகு  அதை எங்கோ பார்த்தது போல் தோன்றுகிறதே, எங்கே, எப்போது? மெல்லிய  பச்சை நிற தண்டுகளால் தாங்கப்பட்டு , அந்த மலர்கள் காற்றில் அங்கும் அங்குமிங்கும் அசையும்போது, அவை கண்ணனின் அலைபாயும் கண்களை அல்லவோ நினைவுறுத்துகிறது.  கண்ணனை தேடும்   என் கண்கள்... அவன்  மேல் கொண்ட அளவற்ற நேசத்தால், பாசத்தால்  ஒளிவீசுகிறது.   சூரியனின் ஒளி விரிந்த  தாமரை மலர்களை ஒளி பெறச்  செய்வது போல் அல்லவோ இருக்கிறது.
மலய மருதம்....  ஆம்  மலைகளை அணைத்து குளிர்ச்சி பெற்று வீசும் தென்றல் என்னை மகிழ்விப் பதை  விட  அந்த மாயாவி கிருஷ்ணன், தேனினும் இனிய குரலில் என்னுடன்  சம்பாஷிக் கும்போது நான் பெரும் சுகம் முற்றிலும் சுகம், இனிமையானது.

பகல் நகர்ந்து போய் இரவு நெருங்குகிறது. சூரியன் இருந்த  இடத்தில் இப்போது சந்திரன். குளுமையை வாரி வீசுகிறான்.  நீரில் இப்போது அல்லி மலர்கிறது. அது அசைவது கிருஷ்ணன் மெதுவாக  தாமரைப் பாதங்களை அடிமேல் அடிவைத்து எடுத்து அசைந்து வருவது போல் அல்லவோ  இருக்கிறது.

கண்ணனைக் காணோம்...கண்கள் அவனை தேடுகிறது.  சூல் கொண்ட கார் மேகம்  எந்த நேரமும் ஜோ என்று மழையை பொழியலாம். அந்த மேகத்தை பார்த்தாலாவது கிருஷ்ணனை  நேரில் கண்ட சமாதானம் ஏற்படுகிறது. அதே நிறம் அதே கம்பீரம், அதே அழகு அல்லவா அவனும்?

அவனை  நினைக்கும்போது, அவனது மஞ்சள் பீதாம்பரம் தகதகவென்று சொக்கத்தங்கத்தை  சூரிய ஒளியில் பார்த்தது போல் இருக்குமே, அந்த எண்ணம் தரும் சுகத்தில் நான் திளைத்திருக்கும்போது  என்னை நீங்கள் எல்லோரும் கேலி செய்து பேசுவது கிட்டவே நெருங்கவில்லை.  அவனைக் காணோமே என்ற ஏக்க பெருமூச்சு அதை அகற்றி விடுகிறது.

கண்ணனின் நினைவு தரும்,புத்துணர்ச்சி, என்னை மட்டுமா, இந்த அகில லோகத்தையும் மயக்கும் வேளையில், எனக்கு அவனைக் காணாத துக்கம்,  ,பிரிவு,  என்ன செய்யும். ''
கேளடி  தோழி, எங்கேடி ஓடுகிறாய். நின்று நான் சொல்வதை கேள்.   வண்ண வண்ண வன மாலைகளை தரித்த  என் கிருஷ்ணனுடன் ஓடி விளையாடுவதால் என்னைப்  போல்  துன்பங்கள் எதையும்  நீ  அனுபவிக்க வில்லை, உணரவில்லை.  அவனுக்கு என் மேல் அலாதி பிரேமை உண்டு. அவன் இல்லையேல் மரணம் ஒன்றே எனக்கு முடிவு.

அவனைத் தேடித் தேடி   அழுது, நீ சொல்வாயே,  என்  கண்கள்  குவளை மலர்கள் போல் இருக்கிறது, அதன் கதியை  இப்போது  பார்.  எப்படி அழுது அழுது சிவந்து நீர்  நிரம்பி வழிந்து கொண்டிருக் கிறது.

கிருஷ்ணனுடன் விளையாடுபவள் முகத்தை பார். எவ்வளவு  புத்தம் புது மலர் மொட்டவிழ்ந்தது
போல் மலர்ந்திருக்கிறது.  அது அவள் ராசி.    என்னைப் போல் அவள் வேதனையில்  வாடவில்லையே.

அவன்  தேனொழுகப்  பேசுகிறவன்.  எனக்கு மலய மாருத  தென்றல் கூட  கொதிக்கும் கோடை வெயில் போல் தஹிக்கிறதே. அவர்களுக்கு தெரியுமா என் அவஸ்தை?

நடனமாடும் கிருஷ்ணன் பாதங்களை பார்த்தாயா?  எப்படி  தாமரை மலர்கள் போல் இருக்கிறது. சந்திரன்  ஒளியில் எப்படி மின்னுகிறது பார்த்தாயா?  மூன்று லோகங்களில் தேடினாலும் அவனைப் போல் ஒரு அழகனை காண முடியாது.
 என்னைப் பார் அவனைப் பிரிந்து  எப்படி உருண்டு புரண்டு அழுது புழுதி நிரம்பி நிறம் மாறி இருக்கிறேன்.

அவன் கார்மேக வண்ணன்.  அவனோடு விளையாடுபவர்கள்  சந்தோஷமாக  சுற்றி ஓடுகிறார்கள்.  கண்ணனைத் தேடி காணாமல்  மார்பு துடித்து  உஷ்ணப்பெருமூச்சு விட்டு  வெடித்து விடும் என்
 நிலையிலா என் இதயம் போலவா அவர்களுக்கு உள்ளது?

அவன் பீதாம்பரதாரி. உருக்கி வார்த்த தங்கம் போல் கண்ணைக் குருடாக்குமே .  அதை அணிந்து அல்லவோ அவன் ஓடுவான் ஆடுவான்.  என் பெருமூச்சு அவனுக்கோ அவனுடன் விளையாடுபவர்களுக்கோ  கேட்குமா?  அவர்களை அது சுடுமா?
இந்த ஜெயதேவன் எழுதிய இந்த  பாடல் கிருஷ்ணனை, ராதையை, அவர்கள் இருவரையும் தொழும் பக்தர்கள் மனதில் எவ்வளவு ஆனந்தத்தை உருவாக்குகிறது.

இது ஏதோ ஒருவர்ணனை அல்ல. ஜெயதேவரின் கீத கோவிந்தத்தில் ஒரு அஷ்டபதி.  இதை அழகாக ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா  பாடி தந்திருக்கிறார். அதை நானும் பாட முயற்சித்து சந்தோஷம் அடைகிறேன்  THE YOUTUBE  LINK  


https://youtu.be/Pq50G4MrTcI

yā ramitā vana-mālinā  - saki 3
anila-tarala-kuvalaya-nayanena |
tapati na sā kisalaya-śayanena ||1||

vikasita-sarasija-lalita-mukhena |
sphuṭati na sā manasija-viśikhena ||2||
saki  yaaramita...   

amṛta-madhura-mṛdu-tara-vacanena |
jvalati na sā malayaja-pavanena ||3||
sthala-jala-ruha-ruci-kara-caraṇena |
luṭhati na sā hima-kara-kiraṇena ||4||
YAARAMITA 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...