Monday, February 1, 2021

THRUVAIYARU SAPTHASTHANAM

 திருவையாறு சப்தஸ்தானம் - J K SIVAN


திருவேதிகுடி வேதபுரீஸ்வரர்.

திருவையாற்றை மையமாகக் கொண்டு ஏழு ஊர்களில் உள்ள சிவன் பார்வதி பல்லக்கில் வருஷத்துக்கொரு முறை ஒவ்வொரு கோவிலு க்கும் செல்வார்கள். திருவையாற்றில் பஞ்ச நதீஸ்வரர் கோவிலில் சப்தஸ்தான ஏற்பாடுகள் பிரமாதமாக இருக்கும். ஐயாறப்பர் ஏழு ஊருக்கும் தர்ம சம்வர்த் தனியோடு ஏழு ஊர்களுக்கும்
செல்வார். அந்த ஏழூர் விழா தான் திருவை யாறு சப்தஸ்தானம். ஏழு சம்பந் தப்பட்ட ஊர்களில் இதுவரை திருவையாறு, திருப்ப ழனம், திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி ஆகிய ஐந்து க்ஷேத்ரங் களைப் பற்றி எழுதியாகிவிட்டது. இனி திருவேதிக்குடி, திருநெய்த்தானம் ஆகிய இரண்டு தான் எழுத வேண்டியவை. இன்று திருவேதிக்குடி பற்றி அறிவோம்.
திருமழபாடியில் நந்திகேஸ்வரன் கல்யாணத் தை சிறப்பாக நடத்திவிட்டு நேரில் பார்வை யிட்டு மகிழ்ந்து எண்ணற்ற பரிசுகளை விண்ணவர் க்கும் மண்ணவர்க்கும். நேரில் நின்று அளித்து விட்டு ஐயாறப்பர் திருவை யாறு செல்கிறார். திருமழபாடியிலிருந்து நந்தியெம்பெருமானும் தம்பதிசமேதராக திருவையாறு க்ஷேத்ரத்திற்கு பல்லக்கில் வருவார் என்றும் அறிந்தோம்.

திருவேதிக்குடி எனும் சப்தஸ்தானம், தஞ்சாவூர்- திருவையாறு பாதையில் திருக் கண்டியூருக்கு கிழக்கில் 4.கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமானின் பெயர் வேதபுரீஸ்வரர், அம்பாள் மங்கையர்க்கரசி. ஸ்தல விருக்ஷம் வில்வம். சோழநாட்டில் 128 சிவஸ்தலங்களில் இது 14வது. திருவையாறு ஸப்தஸ்தான ஸ்தலங் களில் நாலாவது.

பிரம்மனுக்கு வேதி என்று பெயர். ப்ரம்மா தவம் செயது பூஜித்த ஸ்தலம். சம்பந்தர் அப்பர் இருவரும் தேவாரம் பாடிய பாடல் பெற்ற ஸ்தலம். ஆலயம் ஆயிரம் வருஷங் களுக்கு முந்தையது. அருகே வெட்டாறு ஓடுகிறது. அதன் வடகரையில் அமைந்த ஆலயம். ரெண்டு ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பெரிய ஆலயம்.
மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி இருக்கிறது.

மூன்று நிலைகளுடன் கிழக்குப் பார்த்த வண்ணம் இராஜகோபுரம் அமைந்துள்ளது. ஒரே ஒரு ப்ரஹாரம் தான் இந்த ஆலயத்தில். வாயில் தாண்டி உள்ளே சென்றதும் சற்று தள்ளி நந்திகேஸ்வரன். மூலவர் சந்நிதி பின்புறம் சுப்பிரமணியர், மஹா விஷ்ணு, லட்சுமி சந்நிதிகள். வடக்கு பக்கம் சுற்றும் போது 108 சிவலிங்கங்கள். ஸ்தலவிருக்ஷம் வில்வமரத் தடியில் ஒரு லிங்கம். வடகிழக்கு மூலையில், சபாநாயகர் நடராஜர்.

மூலவருக்கு இன்னொரு பெயர் வாழைமடுநாதர். மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வர். வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவும், துர்க்கையும், மற்றும் சண்டேஸ்வரர். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி. இந்த புராதன ஆலயத்தில் நந்தி, மார்க்கண் டேயன், குபேரன், பிரம்மன், சூரியன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். ஸ்வயம்பு லிங்கம். வட்ட வடிவ ஆவுடையார், மேலே ருத்ராட்ச விமானம். நான்கு திசையிலும் வேதங்களை
உணர்த்தும் நந்திகள். வட திசையில் சிவனுடன் மநோன்மணி அம்பிகை சிலை..

அர்த்தநாரீஸ்வரர் சிலையில், வழக்கத்துக்கு மாறாக அம்பாள் வலப்புறம் தோன்றுகிறாள். சப்தஸ்தான ஸ்தல லிங்கங்கள் உள்ளது
பிரமன் நந்தி ஓதும் வேத சப்தங்களை இங்கே ஒரு ''வேத பிள்ளையார்'' காதைச் சாய்த்து கேட்கிறார். இதிலிருந்து தான் ''செவி சாய்த்துக் கேள் '' என்ற வாக்கியம் பிறந்ததோ?

உன்னியிரு போதுமடி பேணுமடி யார்தமிட ரொல்கவருளித்துன்னியொரு நால்வருட னானிழ லிருந்ததுணை வன்றனிடமாம்
கன்னியரொ டாடவர்கண் மாமணம் விரும்பியரு மங்கலமிக
மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய ரியற்றுபதி வேதிகுடியே - சம்பந்தர்

''சிவனை காலை, மாலை ரெண்டு வேளை தியானம் செய்தால் திருவடிகளைப் போற்றி வேண்டினால் துன்பம் தீரும். சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் எனும் முனிவர்களுக்கு கல்லாலமரத்தடியில் மௌனமாக உபதேசித்த தக்ஷிணா மூர்த்தி...எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் அருள்பவன். கன்னியர்களும், ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத் திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணி டையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்கிறார் சம்பந்தர் மேலே சொன்ன



தேவாரத்தில்.

முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் உருவான கோயில். கல்வெட்டில், "வேதிகுடி மகாதேவர் " "பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் " என்ற பெயர்கள் காண்கிறது. அமைதியான இந்த கோவிலில் அரைமணி நேரம் நின்றேன். அதற்கு மேல் அங்கேயே இருக்க ஆசைதான். வாசலில் நண்பர்கள் காத்திருந்தார்களே . சென்னைக்கு என்னோடு திரும்பும் அவசரம் அவர்களுக்கு.....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...