Saturday, February 6, 2021

thevittadha vittala



தெவிட்டாத விட்டலா: J K SIVAN

''ஒரு சன்யாசியின் கல்யாணம் ''

விட்டல பக்தர் ஞானதேவ் பற்றி தெரிந்து கொள்ள அவருடைய பூர்விகம், முன்னோர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த கதை தான் இன்று.

கங்கை நதி தீர கிராமம் ஒன்றில் கோவிந்த பந்த், நீரா பாய் என்ற சாது பிராமண தம்பதியர், மிக்க புண்யம் பண்ணினவர்களாக இருந்திருக்க வேண்டும். விஷ்ணுவின் அருளால் ஒரு சத்புத்திரன் பிறந்தான்.

பிற்காலத்தில் அறிவுக் கனலாகவும் உலக வாழ்வில் பந்தம் பாசம் ஒன்றுமில்லாத பரம ஞானியாகவும் இருக்கப் போகும் அந்த குழந்தைக்கு அவர்கள் வைத்த பெயர் விடோபா. எட்டாம் வயதிலேயே சகல சாஸ்திர வேதங்களும்தெரிந்து கொண்ட அவனுக்கு உபநயனமும் செய்தாகி விட்டது விளையும் பயிர் முளையிலேயே தெரியும் அல்லவா?

''அம்மா, அப்பா, நான் தீர்த்த யாத்ரை சென்று பல க்ஷேத்ரங்களை தரிசிக்க ஆவலாக இருக்கிறேன்"

என்றான் விடோபா. ஆசிர்வதித்து அவனை அனுப்பினர் பெற்றோர். எங்கெல்லாமோ சென்று எத்தனையோ ஆலயங்களில் சிவ, விஷ்ணு மூர்த்திகளை விடோபா தரிசித்தார்

தூங்கும்போது பாண்டுரங்க ஸ்மரணை. விழித்துக் கொண்டிருக்கும் போது கையில் ஸ்ரீமத் பாகவதம் ஓலைச்சுவடி. அன்றாட பிக்ஷை இப்படியே காலம் தள்ளினார் விடோபா. ஒரு தடவை பாண்டுரங்கன் தரிசனத்துக்காக பண்டரிபுரம் வந்து அன்று இரவு சந்திர பாகா நதிக்கரையில் தூங்கும்போது கனவில் விட்டலன் வந்து என்ன சொன்னான் தெரியுமா?

"விடோபா, நாளைக்கு உன்னை தேடி இங்கே ஒரு பிராமணர் வருவார்.அவரோடு ருக்மணி என்ற ஒரு பெண்ணும் வருவாள். அவளை நீ விவாகம் செய்து கொள்ளவேண்டும். உனக்கும் அவளுக்கும் குழந்தை களாக நான்கு தேவ புருஷர்கள் பூமியில் அவதாரம் எடுக்கப் போகிறார்கள்.""

அமைதியாக நிம்மதியாக ஓடிக்கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் ஏன் விட்டலன்

செய்கிறான்? எனக்கெதற்கு இப்போது கல்யாணம்? நான் தான் அகப்பட்டேனோ? பாண்டுரங்கன் சோதனை புரியவில்லையே ? என்று கலங்கினார் விடோபா.

வழக்கம் போல மறுநாள் காலை நதிக்கரையில் அவரது அன்றாட ஸ்நான பான த்யானம் எல்லாம் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஒரு பிராமணர் அங்கே வந்தார். அவரையே உற்று நோக்கினார். த்யானம் செய்யும் இந்த வாலிபரை பார்த்ததில் மகிழ்ந்தார். விடோபா அருகே வந்து எதிரே நின்றார்.

'' யார் நீங்கள்?'' என்று கேட்டார் விடோபா

என் பெயர் ''சித்தோபந்த்'' ... உங்கள் பெயர் என்னவோ??? என்றார் சக்ரதீர்த்ததில் ஸ்நானம் பண் ண வந்தவர் .

''என் பெயர் விடோபா''

"ஓஹோ , தாங்கள் தான் விடோபாவா?” ஏற இறங்க அவரை பார்த்த விடோபா “ஆம்” என்று தலை அசைத்தார்.

பிறகு மெதுவாக அந்த பிராமணர் ''சுவாமி, எனது கனவில் நேற்றிரவு விட்டலன் தோன்றி என் பெண்ணை

உங்களுக்கு மாங்கல்ய தாரணம் செய்விக்க கட்டளையிட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி". வி

ட்டலன் தங்களை இங்கு இன்று காண எனக்கும் கனவில் உத்தரவிட்டான்.'' மென்று விழுங்கிக்கொண்டே சித்தோபந்த் விஷயத்தை சொன்னார்.

.விடோபா, “ஆம் சுவாமி, என் கனவிலும் விட்டலன் தோன்றி நான் தங்கள் பெண்ணை மணந்துகொள்ள உத்தரவிட்டான்'' என்று வந்த விஷயத்துக்கு முற்றுபுள்ளி வைத்தார். ஊர் திரும்பிய விடோபாவுக்கு இறைவன் வாக்குக்குக் கட்டுப்பட்ட சித்தோபந்த் தின் பெண்ணுடன் மணம் முடிந்தது

விடோபாவின் இல்லற வாழ்க்கை ஒரு சக்கரமாக இயங்கியது. ஆடி மாதம் வந்தது ''நான் அவசியம் பண்டரிபுரம் சென்று விட்டலனை தரிசிக்க வேண்டும் என்ற விடோபவிடம் '' நானும் வருகிறேன்'' என்று அவர் மனைவியும் கிளம்பினாள் . சித்தோபந்த் குடும்பம் பண்டரிபுரம் சென்று விட்டல தரிசனம் செய்தது. பிறகு விடோபா கொஞ்சம் கொஞ்சமாக தனியாகவே வெளியே செல்ல ஆரம்பித்தார். ராமேஸ்வரம் சென்றார். தெற்கே எல்லா கோவில்களுக்கும் சென்றார். வடக்கே காசி போக முயற்சித்தார்.

குடும்பத்தில் ஈடுபாடு ஆரம்பத்திலிருந்தே விடோபாவுக்கு கிடையாது என்பதால் அவர் மனைவி ருக்மா பாய்க்கு அவர் சன்னியாசியாகி விடுவாரோ என்ற பயம் உள்ளூர இருந்தது

பல வருஷங்களாகியும் புத்திர பாக்கியம் இல்லை. விடோபா ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறினார்.

கிரகஸ்தாஸ்ரமத்தில் இருப்பவன் புத்ரபாக்யமின்றி சன்யாசம் கொள்வது சாஸ்திரத்தில் இல்லையே. காசிக்கு போகிறேன் என்று சொல்லி கிளம்பிவிட்டார் விடோபா. வழியில் ஒரு மகானின் கீதா சொற்

பொழிவால் ஈர்க்கப்பட்டு அவருடனேயே தங்கி அவருக்கு சிஸ்ருஷைகள் எல்லாம் செய்து அவர் அபிமானத்தைப் பெற்றார். பிறகு தான் தெரிந்தது அவர் தான் மஹான் ராமானந்தர் என்று. இந்த ராமானந்தர் தான் கபீர் தாசரின் குரு.

''குருவே என்னை யும் ஒரு சந்நியாசி, சிஷ்யனாக ஏற்று அருள்வீர்களா?'' என்று ஒருநாள் வேண்டினார் விடோபா.

குரு ராமானந்தர் " அப்பனே நீ பிரம்மச்சா ரியா?கிரகஸ்தனா ?என்று கேட்டபோது "நான் தனிக்கட்டைஎனக்கென்று யாருமில்லை" என்று பொய் சொல்லிவிட்டார் விடோபா. அவரிடம் சன்யாச தீக்ஷை பெற்று அவரோடு காசியில் ஐக்கியமானார்.

ஊரில் பாவம் அவர் மனைவி ருக்மணி, காசிக்கு போன கணவன் வீடு திரும்பவில்லையே என்று கவலையோடு வாடினாள். ஒரு தகவலும் இல்லாமல் சில வருஷங்கள் ஓடிவிட்டது. கணவனைக் காணோமே என்று மாதக்கணக்கில் எங்கெல்லாமோ தேட யாரோ "அரச மரத்தை சுற்று அம்மா, போன புருஷன் வீடு திரும்புவான்" என்று சொன்னதை கேட்டு அந்த ஊர் கிருஷ்ணன் கோவில் அரசமரத்தை நாடினாள் . ரொம்ப பெரிய மரம். பல யோகிகள் ரிஷிகள் வந்துகூட அதன் அடியில் இருந்த மேடையில் தங்குவது உண்டு. பல வருஷங்களாக அரச மரத்தை சுற்றிக்கொண்டு அவள் வாழ்க்கை நடந்தது.

ஒரு நாள் ராமானந்தர் தனது சிஷ்யர்களோடு தெற்கே தக்ஷிண பாரத யாத்ரை க்ஷேத்ராடனம் செய்தபோது ருக்மாபாய் இருந்த கிராமத்துக்கு வந்தார். தனது பூர்வ வாழ்க்கையில் யாரையும் சந்திக்க விரும்பாத

விட்டோபா குருவோடு வரவில்லை. ராமானந்தரும் சிஷ்யர்களும் விடோபாவின் ஊருக்கு வந்தபோது கிருஷ்ணன் கோவில் பெரிய அரசமரத்தடி மேடையில் அமர்ந்திருந்தபோது ஊரில் அனைவரும் வந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர். தற்செயலாக அரசமரம் சுற்ற வந்த ருக்மாபாய் யாரோ ஒரு மகான் இருக்கிறாரே என்று அவரை தரிசித்து நமஸ்கரிக்க, குழந்தை பாக்கியம் வேண்டி தானே பெண்கள் அரச பிரதட்சிணம் செய்வார்கள் என்று தீர்மானித்து ராமானந்தர் "சீக்ரமேவ புத்திர சந்தான ப்ராப்தி

ரஸ்து" என்று அவளை ஆசிர்வதித்தபோது அவள் அக்கணமே தடால் என்று கீழே விழுந்து

அவர் காலைப் பிடித்துகொண்டு அழுது தீர்த்தாள். கடல் மடை திறந்தாற்போல் கண்ணீர் பிரவாஹத்தோடு அவள் கதற அவர் விஷயம் என்ன என்று கேட்க அழுகைக்கு நடுவே அவள் சொன்னது:

"சுவாமி என் கணவன் காசிக்கு போகிறேன் என்று சென்றவர் எங்கோ ஒரு சந்யாசியாகப் போய்

விட்டார். உங்களை போல் மகான்கள் ஆசிர்வாதத்தில் அவர் எனக்கு மீண்டும் கிடைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது . அதற்காகவே பலர் சொல்லி இந்த அரச பிரதக்ஷணம் செய்கிறேன் ''என்றாள்.

"உன் கணவன் யார், பெயர் என்ன, எங்கிருக் கிறானாம், யார் சன்யாசம் கொடுத்தார் களாம் இதெல்லாம் உனக்கு தெரியுமா அம்மா'

'அவர் பெயர் விடோபா, காசியில் இருக்கிறாராம். அது எங்கிருக்கிறது என்று எனக்கு தெரியாது. அவருக்கு ராமானந்தா என்று ஒரு குருவாம்" தன்னிடம் சிஷ்யனான விடோபா தான் அவள் கணவன் என்கிற விஷயம் அவருக்கு புரிந்துவிட்டது.

''அடேடே, என்ன ஆச்சர்யம். நான் தான் அந்த ராமானந்தர் எப்போது அந்த ஸ்ரீராமன் என் மூலமாக உனக்கு

"புத்ரவதி ஆக கடவாய்" என்று ஆசீர்வாதம் வழங்கினானோ அது நிச்சயம் நிறைவேறும்ஒரு கிரகஸ்தன சன்னியாசியாக்

கியது என் தவறு.அவன் சொன்ன பொய்யை நம்பிவிட்டேன். அதற்குப் பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று ராமணந்தருக்குப் பட்டது. ராமானந்தர் ருக்மாபாய் தந்தை சித்தோபந் தை அழைத்து வரச் செய்தார்.




''நான் இங்கிருந்து ராமேஸ்வரம் வரை போவதாக பிரயாணம் தொடங்கினேன். இங்கு நடந்த நிகழ்ச்சிக் கு பிறகு நான் உடனே காசிக்கு திரும்பவேண்டிய கடமை வந்துவிட்டது. நீங்கள் இருவரும் என்னோடு காசிக்கு வாருங்கள்" என்று அவர்களுடன் காசிக்கு திரும்பினார். காசியில் தனது மடத்துக்கு திரும்பின

ராமானந்தர் " உடனே சைதன்யாவை கூப்பிடுங்கள்" என்றார். விடோபா சன்னியாசியானவுடன் அவருக்கு நாமகரணம் "சைதன்யா" என்று ராமனந்தர் சூட்டி இருந்தார்.




விடோபா, தனது குருவுக்கு அருகே தனது மனைவி மாமனார் ஆகியோரைப் பார்த்ததும் விஷயம் ஒருவாறு யூகித்தார். மிகச் சிறந்த சிஷ்யனை இழக்கவேண்டியிருந்தும் தனது கடமையில் தானோ சிஷ்யனோ தவறக்கூடாது என்பதற்காக ராமானந்தர் ''விடோபா உடனே ஊர் திரும்பு. மீண்டும் மனைவியோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது உன்னுடைய தர்மம் ஆகும். இனி நீ சந்நியாசி இல்லை" என கட்டளையிட்டார்.

குரு வாக்கு தட்டாத விடோபா ருக்மணியுடன் ஊர் திரும்பினார்.



ஊர் திரும்பிய விடோபாவை அக்ரஹார மக்கள் ஏற்கவில்லை. ஒரு சந்நியாசி எப்படி மீண்டும் கிரகஸ்

தனாகலாம் என்று ஊர்க்கட்டு கொண்டுவந்து அவர் குடும்பத்தைப் புறக்கணித்தார்கள், ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். ஊருக்கு வெளியே காட்டில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு யாசகத்தில் குடும்பம் நடந்தது. மற்ற நேரத்தில் கீதை, பாகவதம் அவரை மேற்கொண்டது.
விடோபா ருக்மாபாய் இவ்வாறு 12 வருஷம் காட்டில் குடிசையில் தனித்து வாழ்ந்தபோது தான் நான்கு குழந் தைகள் அவர்களுக்கு பிறந்தனர். மகா விஷ்ணுவின் விருப்பத்திற்கேற்ப சிவபெருமான் தானே

முதல் பிள்ளை நிவ்ரித்தி நாதராகவும், மகா விஷ்ணுவே ஞானதேவராகவும் பிரம்மன் சோபன் தேவாகவும் ஆதி பராசக்தி முக்தாபாய் ஆகவும் பிறந்தனர் என்று நம் கதை முடிந்தால் நல்லது தான்.

ஆனால் சில விஷயங்கள் சொல்லாமல் விட்டுப்போய்விடுமே . கலியுகத்தில் இறைவனை அடைய சுலப வழியான பஜனை நாமஸ்மரணைக்கு இந்த நால்வர் தான் வித்திட்டவர்கள். ஸ்ரீமத் பக்த விஜயம் அவர்களை பற்றி அமைந்தது தான்.

விடோபாவைப் பொறுத்தவரை சன்யாச ஆஸ்ரமத் திலிருந்து கிரகஸ்தாச்ரமம் திரும்பியது பெரும் பாபம். குருவின் வார்த்தை தட்டாமல் ஒப்புக்கொண்டாலும் உள்ளே இது உறுத்திக்கொண்டே இருந்தது. இதற்கு பிராயச்சித்தமாக கங்கையில் மூழ்கிப் பிறவியை தொலைப்பதே உசிதம் என்று முடிவு செய்தார் அவர் மனைவி ருக்மணியும் ''சுவாமி நானும் தானே இதற்கு ஒரு காரணம்'' .ஆகவே என் பாபம் தொலைக்க தானும் அவ்வாறே உங்கள் முடிவை ஏற்கிறேன்'' என்றாள் .

இருவரும் பிரயாகையில் கங்கையோ டு கலந்தனர். எனவே அந்த நான்கு குழந்தைகளும் மிகச் சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்து தாங்களே சொந்த முயற்சியில் ஜீவிக்க நேர்ந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...