Saturday, February 27, 2021

GEETHANJALI

 

கீதாஞ்சலி    ---      நங்கநல்லூர்  J K SIVAN 
     
 29.''எனக்கு, ''நான்' ''எனது'' வேண்டாம்

 29  He whom I enclose with my name is weeping in this dungeon.
I am ever busy building this wall all around;
and as this wall goes up into the sky day by day
I lose sight of my true being in its dark shadow.
I take pride in this great wall, and I plaster it with dust and sand
lest a least hole should be left in this name;
and for all the care I take I lose sight of my true being.

தாகூர் எதையும் நேரடியாக சொல்லாத ரகசிய மனிதர்.  அழுத்தமான  ஆன்மீகவாதி. ப்ரம்ம சமாஜத்தில்  அங்கத்தினர். விக்ரஹ  ஆராத னை விரும்பாதவர்கள்.  கிருஷ்ணா என்கிற  வார்த்தையே  இல்லாத  கீதாஞ்சலியை எழுதியவர்.   அவர் கருத்துக்களை  பரிமாறும் போது  தொட்டுக்கொள்ள  ''கிருஷ்ணா''  இல்லாமல்  என்னால் கீதாஞ்சலியை தொட  இயலவில்லை. நான்  வார்த்தைக்கு வார்த்தை  மொழி பெயர்ப்பாளன்  என்றுமே இல்லையே.
தாகூர்  வேதாந்தி, மனித நேயம் கொண்டவர். எங்கோ உள்ள  இறைவனை உள்ளே  கண்டவர் . அவனை நண்பனாய் , மந்திரியாய்,  நல்லா சிரி யனாய் கண்டவர்.   உள்ளத்தில்  பொங்கிய  எண்ண எரிமலைகளை   ஹிமாலய அமைதி யில்  போர்த்தியவர்  ஆகாயம் போல்  அன்பு எல்லோரிடத்திலும் கொண்ட  அதிசய கவிஞன் , சிந்தனை சிற்பி.

 நான்  உன் பெயர் கொண்ட ஒரு  ஜீவனா,  அல்லது   நீ  என் பெயர் தாங்கியவனா,  அல்லது  கிருஷ்ணா  நீயே தான்  நானா,  ரெண்டும் ஒன்று தானே,  இந்த ஜீவனுக்குள் அந்த ஆத்மா, அந்தராத்மா,   வெளிச்சம் பார்க்காத  இருட்டறையில் பார்க்கலாம்.  மனச்சிறையில்  மகிழ்ந்துரையும் மாதவன்.   உன்னைத் தேடுகிறேன்.
இரைச்சலோடு அல்ல. சதா விம்மி விம்மி அழுதுகொண்டே  அலைகிறது என் ஜீவன். பின்னே என்ன?  அதை சுற்றி நாலா பக்கமும் சுவர் எழுப்பியாகிவிட்டது.    சுவர் வளர்கிறது.   கொஞ்சம்  கொஞ்சமாக  அதன் உயரம்  அண் ணாந்து பார்க்க வைக்கிறது.விண்ணைத் தொடும் போல் இருக்கிறது.   அடடா  நான் எழுப்பிய சுவரைப்  பார்த்து   எனக்கே  எவ்வளவு பெருமை,  பிரமிப்பு.   அனார்கலி போல  என்  ஜீவன்,  அதற்குள்   ஆன்மா,  இதைச்  சுற்றிதான்  உயரமான  சுவர் .  அந்த  சுற்றுச் சுவர்களின்  வளர்ச்சியை , உயரத்தி

ல்   ஹா  வென்று   அண்ணாந்து பார்த்து மலைத்துப்  போகிறேன்.   அதன் நிழலில் நான், .ஓஹோ, ,,, நான் தான் உள்ளேயா  அல்லது   நான் தான் வெளியேயா?
சுவற்றை   நன்றாக புழுதி , மண்,  எல்லாம் கலந்து சிமெண்ட்  போட்டது  போல்  கெட்டி யாக  பூசி விட்டாயிற்று.    ஒரு துவாரம் கூட     என்னை சுற்றியுள்ள  அந்த   ''ஜீவ சமாதியில்'   கிடையாது. 
ஆமாம்  ''என்னை '' ப்பற்றிய  எதுவும் இனி இல்லை...   என்னைப் பற்றிய  எந்த விஷயமும்  வெளியே  கசியக்கூடாது  என்பது தான் என் எண்ணம்.    அதன் இருண்ட  நிழலுக்குள்   ''நான்,  எனது''   என்ற என் அடையாளமே மறைந்து போகட்டுமே. வெளியே தெரியவே  வேண்டாமே.
 நான் எதற்காக இவ்வளவு அக்கறையோடு இப்படி எல்லாம் செயகிறேன் தெரியுமா. '' நான்,  எனது '' என்பவை எல்லாம் என் கண் ணுக்கே கூட தெரிய வேண்டாம்.' ‘’அப்படி யென்றால்   யார்  அதற்குப்பதில் தெரிய  வேண்டும்???  நீ தான் கிருஷ்ணா
 நீ தான்''.  நீதானே  உண்மையில்  ''நான்'' . தனியாக  ''நான்'' தொலைந்து போகட்டும் என்று தானே இவ்வளவு முயற்சி. என்னை நான் வருத்திக் கொள்ளாமல்  ''அது''  தொலைய வழியே இல்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...