Thursday, February 18, 2021

RATHA SAPTHAMI

 ரத சப்தமி -- J K SIVAN ( ENGLISH VERSION GIVEN BELOW)


ரிஷி காஷ்யபரின் மனைவி அதிதி பூரண கர்ப்பிணி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் நின்றான்.

''பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு''

'' இரு கொண்டு வருகிறேன்'' .

அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .

''ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறந்து போகட்டும்'' . பிராமணன் கோபித்து சாபமிட்டான்.

பிராமணனின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல,

''நீ இதற்கெல்லாம் வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்'' என்கிறார் காஸ்யபர் .

பிரகாசமான ஒளி வீசும் சூரியன் அவர்களுக்கு மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என புராணங்கள் சொல்கிறது. இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.
ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும். ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஒரு கதை சொல்கிறேன்.
மகாபாரதப் போரில் அர்ஜுனனால் / சிகண்டி எனும் அம்பையால் வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர் விட அம்புப் படுக்கையில் காத்திருந்தார். உத்தரா யணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை. அவரைப் பார்க்க வேத வியாசர் வந்தார்.

''வியாஸா, நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்றார் பீஷ்மர்.
"பீஷ்மா, நீ மனோ வாக்கு காயத்தால் தீங்கு புரியாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்தது பாபம். அதற்கான தண்டனையிலிருந்து தப்பமுடியாது.'' --வியாசர்.
சபை நடுவே பாஞ்சலியின் உடையை துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என பீஷ்மர் உணர்ந்தார்.

''வியாஸா இதற்கு விமோசனம் எது ?

'பீஷ்மா எப்பொழுது உன் தவறை உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போது அகன்று விட்டாலும் அனைத்தையும் கண்டும் காணமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டுப் பொசுக்குமாறு வேண்டுகிறார் பீஷ்மர்.
இதற்கு எருக்க இலையை காட்டிய வியாசர், ''அர்க்கம்'' என்றால் சூரியன். இதை தலையில் சூடியுள்ளார் சூரியன். பிரம்மச்சாரியான விநாயகருக்கு உகந்தது எருக்கஇலை.அதேபோல் பிரம்மச்சாரியான உனக்கும் இந்த எருக்கஇலையால் அலங்கரிக்கிறேன் என்றார். உடனே சிறிது சிறிதாக அமைதியடைந்த பீஷ்மர் ஏகாதசி அன்று உயிர்நீத்தார்''.

நமது பாபங்கள் தீர நாமும் எருக்க இலையை என்று தலையில் வைத்து ஸ்நானம் செய்வது இதற்காகத்தான்.
எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு காரணம் உண்டு அல்லவா?

RATHA SAPTHAMI - SIGNIFICANCE.
Today, we observe Ratha Sapthami, It is a day of great importance in worshipping Lord Sun. Soorya. Adhiti, wife of sage Kashyap, was in advanced pregnancy. One day while she was serving food to her husband, Rishi Kasyap, a brahim knocked the door. She opened the door and found a brahmin asking for food. She invited him and seated him. As she was serving food to Kashyap, she attended to the guest brahmin after serving food to Kashyap. When she brought food to the brahmin, he got offended and was angry for the delay in her attention to him. He cursed her angrily saying the ''baby in her womb would die '' and left the house. .
Adithi was very sad and upset. She cried and reported the matter to Kashyap who consoled her that she did not anything wrong and she will deliver a very beautiful baby boy who will shine bright like gold and that he would be immortal. On the 7th day of Magha, in the shukla paksha Lord Surya was born to her.
There is another story as well. Emperor Yashovarman of Kamboj, was issueless. He prayed and was blessed with a son. The king was not still happy because his son was terminally ill. A saint visited the king and advised that the sick boy should perform the Ratha Saptami pooja (worship) with reverence to rid of his past sins. Accordingly the prince performed the surya pooja, and got his health restored to good condition and ruled the kingdom for many more years.
The greatest warrior Bhisma breathed his last on the fourth day after the Rathasaptahmi day on ekaadashi day. It is symbolically represented by the Sun God, Surya turning his Ratha (Chariot) drawn by seven horses (representing seven colours) towards the northern hemisphere, in a north-easterly direction. It also marks the birth of Surya and hence celebrated as Surya Jayanti (the Sun-god’s birthday). Season changes to Spring from then on. Farmers welcome this.
Sun worship has been in practice from time immemorial and our Vedas praise the Sun God as manthras and slokas.In the Rig Veda Mandala 10/Hymn 85, the sun god's bride seated on a chariot pulled by two steeds is mentioned. This symbolism is therefore common to both Norse mythology and Vedic history. The relevant verses in English translation convey:
''10. Her spirit was the bridal car; the covering thereof was heaven: Bright were both Steeds that drew it when Surya approached her husband's home.
11. Thy Steeds were steady, kept in place by holy v

erse and Sama-hymn: All cars were thy two chariot wheels: thy path was tremulous in the sky,
12. Clean, as thou wentest, were thy wheels wind, was the axle fastened there. Surya, proceeding to his Lord, mounted a spirit-fashionied car.''
Ratha Saptami is symbolically refers Surya's chariot (Ratha) driven by his charioteer Aruna, tied to seven horses, being turned towards Northern hemisphere, in north-easterly direction.
It symbolises the seven colours of the rainbow. The seven horses are the weekly seven days commencing from Sun's day, (sunday) . The 12 wheels of the chariot are the Astrological signs of Zodiac (each of 30 degrees x 12 = 360 degrees) which in other words mean a year named Samvatsara. The Sun’s own house is Leo (Simha) and he moves from one house to the next every month and the total cycle takes 365 days to complete. The Ratha Saptami festival seeks the benevolent cosmic spread of energy and light from the Sun God.
Ratha Saptami also marks the gradual increase in temperature across South India leadig to peak summer in May/June awaiting the Spring. It is celebrated as Ugadi or the Hindu lunar New Year day in the month of Chaitra.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...