Friday, February 5, 2021

HAYAGREEVA

 

'மட்டி '' கத்திரிக்காய் J K SIVAN


மத்வ மத குரு ஸ்ரீ வாதிராஜ தீர்த்தரைத் தெரியுமா - சொண்டா கிராமத்தில் ஹயக் ரீவ (குதிரை முகம் கொண்ட பெருமாள்) கோவில் உள்ளது. வாதிராஜர் அந்த ஆலய ஹயக்ரீவ பக்தர்.


ஹயக்ரீவருக்கு கத்திரிக்காய்க்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறதே. அந்த கதையை தான் சொல்கிறேன். அந்த கத்திரிக்காய் உருண்டை யாய், குண்டாய், பச்சை பசேல் என்று இருக்கும். ''மட்டி குல்லா'' (GULLAA என்றால் கத்திரிக்காய் 'மட்டி கத்திரிக்காய்'' என்று பெயர். உடுப்பியில் மட்டி கிராமத்தில் அமோக விளைச்சல். அதில் செய்யும் பிரசாதம் ஹயக்ரீவ மட்டி (MADDI )எனப்படும். கடலைப்பருப்பு, வெல்லம் , நெய் தேங்காய் துருவல் எல்லாம் கலந்து ஒரு உணவு. தினமும் ஹயக்ரீவருக்கு இது தான் நைவேத் தியம். 

தலையில் ஒரு பாத்திரத்தில் நிறைய  இந்த ஹயக்ரீவ மட்டியை வாதிராஜ தீர்த்தர் சுமந்து நிற்க ஹயக்ரீவர் சந்தோஷமாக உண்டு அந்த பாத்திரத்தை காலி செய்து விடுவார். ஒரு துளி மீதி இருக்கும் . அதை வாதிராஜர் பிரசாதமாக உண்பார்.

ஹயக்ரீவருக்கு பூஜை, அர்ச்சனை எல்லாம் பண்ணிவிட்டு நைவேத்தியம் சமர்ப்பிப்பார். சந்நிதி கதவை அப்போது சாத்தி விடுவார். சற்று நேரம் கழித்து கதவைத் திறந்து வெளியே வரும்போது பெரிய நைவேத்திய பாத்திரம் காலியாக இருக்கும். பக்தர்களிடம் காட்டுவார்.
ஆச்சர்யமும் சந்தேகமும் சிலருக்கு . திரைக்குப் பின் யார் பாத்திரம் நிறைய இருந்த நைவேத்திய பிரசாதங்களை சாப்பிடுவது ? ஹயக்ரீவரா, அது சாத்தியமில்லையே ? நிச்சயம் வாதிராஜர் வேலை இது. அவரை நேரடியாக எப்படி கேட்பது? வாதி ராஜர் மீது கோபம் பொறாமை கொண்டவர்கள் மடப்பள்ளி சமையல்காரருக்கு தெரியாமல் ப்ரசாதத்தில் விஷம் கலந்து வைத்தார்கள். வாதி ராஜர் தான் சாப்பிடுகிறார் என்றால் இறந்து விடுவாரே!.

அன்றும் வாதிராஜர் வழக்கம்போல் கதவைச் சாத்திவிட்டு நைவேத்தியம் அர்ப்பணித்தார். ஹயக்ரீவர் உண்ணவில்லை. அசையாமல் நின்றார்.

''வாதிராஜா இந்த உணவில் விஷம் கலந்துள்ளது. நான் சொல்வது போல் செய்.   விஷம்  கலந்த  உணவை உண்டதால்  என் நிறத்தை பச்சையாக மாற்றிக் கொண்டேன். விஷம் கலந்த விஷமிகள் யமலோக விருந்தாளிகளாகப் போகிறார்கள். மட்டி கிராமத்தில் சில விஷமிகள் திட்டம் இது. அவர்களை மாற்றவேண்டும். இந்த விதை களை அந்த கிராமத்து விவசாயிகளிடம் கொடுத்து பயிரிடச்சொல். ஒருமண்டலத்தில் கத்திரிக்காய் காய்க்கும். அதை கொண்டு வந்து ஒரு மண்டலம் ஹயக்ரீவ மட்டி தயார் செயது நைவேத்தியம் செய்தால் விஷம் நீங்கி நான் பழையபடி ஆகி விடு வேன்' ' என்கிறார் ஹயக்ரீவர். 

அதேபோல்  வாதிராஜஸ்வாமிகள்  சொற்படி  கிராமத்தார்  கத்திரிக்காய்  பயிரிட்டு  ஒரு மண்டலத்தில் அது விளைந்து அதில்  ஹயக்ரீ வருக்கு  பிரசாதம் தயாரிக்கப்பட்டு  நைவேத் தியம் செயது  ஒரு மண்டலத்தில்  ஹயக்ரீவர் பழையபடி ஆகிவிட்டார்  என்று கதை சொல் கிறது.   க்ராமத்தார்களும்  பழையபடி  ஹயக்ரீவர் விஷம் நீங்கி காட்சியளித்ததில் மகிழ்ந்தார்கள்.

உடுப்பி கத்திரிக்காய் தனி ருசி கொண்டது. அதன் நிறமும் உருவமும் நாக்கில் நீர் சுரக்க வைக்கும். வடக்கே வங்காளத்தில் கங்கை கடலில் கலக்கும் இடத்தில் விளைகிறது.

கிருஷ்ணனுக்கு பிடித்த உணவு கத்திரிக் காய். நான் சொல்லவில்லை. ஸ்ரீ கிருஷ்ண சைதன் யர் (1486-1533), 1525ல் எழுதிய க்ரிஷ்ண மங்களா எனும் நூலில் பிருந்தாவனத்தில் கோபியர் இந்த வகை கத்திரிக்காயில் உணவு தயாரித்து அளிக்க, கிருஷ்ணன் ருசித்து சாப்பிட்டான் என்கிறார்.

கிருஷ்ண சைதன்யர் உடுப்பி மடம் வந்திருக் கிறார். வாதிராஜரை சந்தித்திருக்கிறார். கிருஷ்ணன் பற்றி நிறைய பேசி இருக்கி றார்கள். அப்போது இந்த கத்திரிக்காய் விஷயம் கூட அதில் இருக்கலாம்.வாதிராஜர் மட்டி கிராமத்தில் அதை விளைக்க ஏற்பாடு செய்திருக்கலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...