Friday, February 19, 2021

VAIRAGYA SATHAKAM

 


வைராக்ய சதகம்   ---   J K  SIVAN 

பர்த்ருஹரி 


क्षान्तं न क्षमया गृहोचितसुखं त्यक्तं न संतोषतः
      सोढा दुःसहशीतवाततपनक्लेशा न तप्तं तपः ।
ध्यातं वित्तमहर्निशं नियमितप्राणैर्न शम्भोः पदं
      तत्तत्कर्म कृतं यदेव मुनिभिस्तैस्तैः फलैर्वञ्चिताः ॥ ६॥

க்ஷாந்தம் ந க்ஷமயா க்³ருʼஹோசிதஸுக²ம் த்யக்தம் ந ஸந்தோஷத:
ஸோடா⁴ து:³ஸஹஶீதவாததபநக்லேஶா ந தப்தம் தப: ।
த்⁴யாதம் வித்தமஹர்நிஶம் நியமிதப்ராணைர்ந ஶம்போ:⁴ பத³ம்
தத்தத்கர்ம க்ருʼதம் யதே³வ முநிபி⁴ஸ்தைஸ்தை: ப²லைர்வஞ்சிதா: ॥ 6 ॥

இந்த உலகத்தில்  உழைக்காமல் எவனும் சுகமடையமுடியாது.  தான்  உழைக்க வில்லை யென்றாலும்  அவன் அப்பன் பாட்டன் உழைத்து   சேர்த்து வைத்த  சொத்து   பலனைத் தருவது வழக்கமாகிவிட்டது.  அவர்கள்  அந்த உழைப்பின் பலனைத் தாம்  துய்க்காமல் விட்டுக்கொடுப்பதில் எவ்வளவு கஷ்டங்களை, துன்பங்களை சகித்துக்கொள்ளவேண்டியிருந்தது என்று உழைத்தவர்களுக்கு தான் தெரியும். உலக இன்பங்களில் மட்டும் அல்ல,  ஆத்ம ஞான இன்பத்தை அடையவும் ஒருவன்   ரொம்ப  பிரயாசைப்பட்டால் தான் முடியும்.  இந்த  இரண்டு இன்பங்களில்  ஸ்ரேஷ்டமானது  ஆத்ம  ஞான இன்பம் தான்.  உலக இன்பத்தை அனுபவிப்பதில் திருப்தி கிடையாது. மேலும் மேலும்  தேவைகளை  நாடச் செய்யும்.  

மனதில் ஆசைகளுக்கு  இல்லையோ முடிவோ கிடையாது. எப்போதும் வளர்வது.  அதைத் தேடியே  வாழ்க்கை முடிந்துவிடும்.  ஆசை தான் துன்பத்துக்கு ஆதாரம்.   ஆத்ம ஞான இன்பம் அப்படியல்ல.  அதிருப்தியிலிருந்து திருப்தியான மனநிலைக்கு அழைத்துச்  செல்கிறது. 

யாக்ஞவல்கியர் தனது செல்வங்களையெல்லாம் சமமாக இரண்டாக பிரித்து தனது இரண்டு மனைவிகளான மைத்ரேயி, காத்யாயினி கொடுக்கும் போது, இரண்டாவது மனைவி மிகவும் சந்தோஷத்தோடு தனது பங்கை பெற்றுக் கொண்டு சென்று விட்டாள். ஆனால் முதல் மனைவியான மைத்ரேயி அதை வாங்குவதற்கு முன் ஒரு கேள்வி கேட்டாள்.
''இந்த செல்வம் எனக்கு முழுமனதிருப்தியை கொடுக்குமா?

''இல்லை மைத்ரேயி,  கொடுக்காது. மேலும் உலகத்திலுள்ள அனைத்தும் உடலுக்குத்தான் சுகத்தைக் கொடுக்கும், மனதுக்கு சுகத்தை கொடுக்கும் சக்தி கிடையாது. மனதை நிறைக்கும் சக்தி அவைகளுக்கு கிடையாது'' 

''குருநாதா,  மனநிறைவை கொடுக்கும் சக்தியற்ற இந்த செல்வங்களை யார் நாடுவார். எனக்கு மனநிறைவை கொடுக்கின்ற செல்வம்தான் வேண்டும். எனவே நீங்கள் குருவாக இருந்து மனநிறைவை கொடுக்கவல்ல உபாயத்தை உபதேசிக்க வேண்டும்.''  என்றால் மைத்ரேயி.
யாக்ஞவல்கியர மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தனக்கு ஒரு தகுதியான சிஷ்யை  கிடைத்ததில் மகிழ்ந்தார். 

மனநிறைவை  வெளியிலுள்ள எதைக் கொண்டும் அடைய முடியாது. ஜீவனுடைய இயல்பே எப்பொழுதும் மனநிறைவுடன் இருப்பது. 

भोगा न भुक्ता वयमेव भुक्ताः
      तपो न तप्तं वयमेव तप्ताः ।
कालो न यातो वयमेव याता-
      स्तृष्णा न जीर्णा वयमेव जीर्णाः ॥ ७॥

போ⁴கா³ ந பு⁴க்தா வயமேவ பு⁴க்தா:
தபோ ந தப்தம் வயமேவ தப்தா: ।
காலோ ந யாதோ வயமேவ யாதா-
ஸ்த்ருʼஷ்ணா ந ஜீர்ணா வயமேவ ஜீர்ணா: ॥ 7 ॥  

ஆசைகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. ஆனால் அவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சக்தியும், காலமும் குறைந்து கொண்டே செல்கின்றது. எனவே நிறைவேறாத ஆசைகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. வயதான காலத்தில் இந்த ஆசைகளின் பிடியிலிருந்து நம்மால் மீள முடியாது. நம் கவனத்தை வேறு வழியில் செலுத்துவதற்கு தேவையான சக்தியும் நம்மிடம் இருக்காது. நமக்கு உறுதுணையாகவும் யாருமே இருக்க மாட்டார்கள். ஆறுதலாகவும் யாரும் இருக்கமாட்டார்கள். ஆசை காலம்  இவைகளின் உடும்புப் பிடியிலிருந்து நாம்  தப்பவேண்டும்.  காலம்  ஓடுவதில்லை. நாம் தான் அதைவிட்டு ஓடுகிறோம். அது என்றும் நிரந்தரமாக இருந்து கொண்டே இருக்கிறது.   ரயிலில்  போகும்போது ஜன்னல் வழியாக பார்த்தால்  மரங்கள் வீடுகள் எல்லாம் ஓடுமே  அது போல..  நாம் தான் ஓடிக்கொண்டே இருக்கிறோம். மறைகிறோம். 

वलीभिर्मुखमाक्रान्तं पलितेनाङ्कितं शिरः ।
गात्राणि शिथिलायन्ते तृष्णैका तरुणायते ॥ ८॥

வலீபி4ர்முக2மாக்ராந்தம் பலீதேனாங்கிதம் ஶிர: |
கா3த்ராணி ஶிதி2லாயந்தே த்ருஷ்ணௌகா தருணாயதே || 8 ||


There are wrinkles on my face because of old age. All my hair on my head have turned white and my hand, legs have turned loose and feeble. But my hope is alike a young beautiful damsel. May everything cease and get destroyed but hope and desire never gets emaciated.

 பர்த்ருஹரி மீண்டும் சொல்கிறார், "ஒன்றே ஒன்றுதான் நம்மிடத்தில் தானாக வளர்ந்து கொண்டிருக்கிறது, அதுதான் ஆசை, மற்றதெல்லாம் சக்தியிழந்து கொண்டேயிருக்கும். முகம், உடல் இவைகளில் தோல் சுருக்கம் வரும், தலைமுடி நரைக்கத் தொடங்கும்.  என்னடா  சிவா இப்படி மாறிட்டே, தலை நரைச்சு, பல்லெல்லாம் காணோம். கசங்கிப்போன  நியூஸ்பேப்பர்  மாதிரி சுருக்கமா இருக்கு முகம். முதுகு  வளைஞ்சுடுத்து. நான்   ஒண்ணு  கேட்டால் நீ  ஒண்ணு  பதில் சொல்றே.  காது டமாரம்'' இது தான்  வாழ்க்கை. உலகம். 

வயதான காலத்தில் இந்த அறிவுடன் இருந்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கலாம்  இந்தக் காலத்தில்தான் நிதித்யாஸன தியானத்தை யாருடைய தொந்தரவு இல்லாமல் நன்றாக செய்யமுடியும். ஆனால் அறிவில்லாதவர்கள், மற்றவர்கள் தன்னுடன் பேசாமல் இருந்துவிட்டால் தன்னை ஒதுக்கிறார்கள், அவமதிக்கிறார்கள் என்ற வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...