Tuesday, February 23, 2021

GEETHANJALI

 கீதாஞ்சலி    -   நங்கநல்லூர்   J K  SIVAN 


    26      கண்  காணாத  கண்ணன்




26. He came and sat by my side but I woke not.
What a cursed sleep it was, O miserable me!
He came when the night was still; he had his harp in his hands
and my dreams became resonant with its melodies.
Alas, why are my nights all thus lost?
Ah, why do I ever miss his sight
whose breath touches my sleep?

காரிருள். கும்மிருட்டு.
நடு நிசி  தாண்டிவிட்டது.  நான் தன்னந்தனியாக படுத்திருந்தேன்.  யாரோ அருகில் வந்து அமர்வது போல் தோன்றி யது.   கனவு காண்கிறேனா?  மெதுவாக வந்து என் பக்கத்தில் உட்கார்ந்த அந்த  உருவம்   என்னை யே  பார்த்துக் கொண்டிருக்கிறதா ? யாராக  இருக்கும்?  என்னையார் லக்ஷியம் செய்வார்கள்?  என் நினைப்பில்  வேறு யார் ?  என் கிருஷ்ண னாகத்தான் இருக்கவேண்டும்.

நான் கண்ணைத்  திறக்கவே இல்லை.  அப்ப டியே   அசையாமல் படுத்து கிடக்கிறேன்.  சே,  என்ன  தூக்கம் இது? பாழாய்ப்போன தூக்கம்.    சட்டென்று விழித்து அவனைக் காணக்கூட முடியாமல்?

எனக்கு கண் திறந்திருந்தாலும் மூடினாலும்  ஏன்  என்னை  அவன் எழுப்பவில்லை?
சே,  நான்  கும்பகர்ணன்.  என்ன தூக்கமிது?   மரணத்தை நினைவூட்டும் அன்றாட வெள்ளோட் டம்.
இருளில் சிறிய  மங்கிய  அகல் விளக்கொளியில்,  கிருஷ்ணன் கருப்பாக என் அருகில் வந்திருப் பதை ஏன்   நான் உணரவில்லை?.
அவன் கையில் ஏதோ இருக்கிறதே.   வழக்கம் போல் குழலோ?.வீணையோ?   கிருஷ்ணன் வீணை வாசித்தால் எப்படி இருக்கும்?  சரி.  ஏதோ ஒரு வாத்யம்.  எதுவாக இருந்தால்  என்ன?  எனக்கு  வீணைக்கும் தம்புராவுக்கும் எத்தனையோ வருஷங்கள் வித்யாசமே  தெரியாது.அந்த  வாத்யத்திலிருந்து  வரும் சுநாதம் என்னை மயக்கமுறச் செய்கிறதே. மயக்கத்தை
தருவது புல்லாங்குழலோ, வீணையோ, எதுவானால் என்ன?

ஓஹோ,   என் கனவுக்காட்சிகளுக்கு அது  திரை யிசையோ,பின்னணி சங்கீதமோ?  குறட்டைக்கு  பக்க வாத்யமோ?

ஆஹா,  அந்தரங்கத்தில்  அவனது ராகங்கள் மனதிலேயே ஆழத்தில் பதிந்து  இருக்கிறது.  ஆனால் எனக்கு பாட வரவில்லையே. திருப்பி  இசைக்க முடியவில்லையே?
அவனை அனுபவியாமல் என் வாழ்வில் தான்   எத்தனை இரவுகள் இப்படியே  சென்று விட்டன.  நிறையவே இழந்துவிட்டேனே .
மீண்டும் திரும்ப பெறமுடியாத இரவுகள். ஏன் அவற்றை கோட்டை விட்டேன்?
''உன்னைக்  காணாத கண்ணும் கண்ணல்ல'' என்று பாட தோன்றுகிறது.
அவன் மூச்சு என் ஸ்வாசத்தோடு கலக்க வேண் டும் என்று  ஒரு அசுர தாகம்.  ஆர்வம்.
அப்படியே அவன் மீதே உறங்க வேண்டும் ...விழிப்பில் காணமுடியாத உன்னை, உறக்கத்திலாவது அணைத்து உன்னோடு இருக்கிறேன் கிருஷ்ணா  ....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...