Sunday, February 21, 2021

TAGORE FAREWELL


 


நட்புக்கு  நன்றி  ....  J K  SIVAN 
  
சிறந்த வேதாந்தி  ரவீந்திரநாத்  தாகூர் எப்போது  இதை எழுதினார் என்பதை விட எவ்வளவு  அற்புதமாக எழுதி இருக்கிறார் என்பது தான்  சிறப்பு.  உலக வாழ்க்கை ஆனந்தம் நிறைந்ததாக இருப்பதும், நரகமாக  மாறுவதும் நமது  கையில் தான்  இருக்கிறது.

சாவைக்கண்டு ஏன் பயப்படுகிறோம்? இந்த உலக வாழ்வின் பற்றுகள் திடீரென்று அறுந்து விடுமே, அப்புறம் நமக்கு இன்று இதுவரை இருந்தது இனி இல்லாமல் போகிறதே. சொந்த பந்தம் எல்லாம் அகலுமே , இனி எந்த ஆசையும் நிறைவேறாதே   இதிலிருந்து  தப்ப வழியில் லையே  என்ற  எண்ணத்தால் தான்...  

இதுவரை வாழ்ந்த வாழ்க்கை  இறைவன் தந்த பரிசு, நன்றியோடு அவனை நினைத்து வாழ்ந்து விடைபெறுவது ஒன்று தான் புத்திசாலித்தனம்.  ரவீந்திரநாத் தாகூரின் ஒரு அற்புத பாடல் ஒன்று எனக்கு இன்று நமது நண்பர்  திருமதி விஜயா க்ரிஷ்ணமுர்த்தி மூலம் கிடைத்ததற்கு  அவருக்கு உங்களோடு சேர்ந்து எனது பாராட்டுகள் வாழ்த்துக்கள்:

ஒருவன்  வாழ்க்கையின்  எல்லையில் நின்று   எல்லோரிடமும்   விடைபெறுகிறான். இனி அவனுக்கு வேறு உலகத்தில் அனுமதி. அங்கும்  இந்த நண்பர்கள் கிடைப்பார்களா??

நண்பர்களே,  ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கு.  விடைபெறுகிறேன்.ஆஹா  எப்படிப்பட்ட  அழகான   வாழ்க்கை உங்களால் எனக்கு கிட்டியது. ஒவ்வொரு கணமும் இனிமையான மறக்கமுடியாத இன்பகரம்.  குறை யொன்று மில்லை கண்ணா என்று அவனிடமும் உங்களிடமும்  பாடுகிறேன்.  ஏதாவது எனக்கு  துன்பம், வலி, துயரம் இருந்திருந்தால் அதெல் லாம் இனி இங்கேயே விட்டுவிட்டு செல்கிறேன்.
எப்போதெல்லாம்  என் மனம் துவண்டதோ, எனக்கு சோர்வு தட்டியதோ, அப்போதெல்லாம் என் இதயத்துக்கு புத்துணர்வு, பூரண  அன்போடு  தந்து, என்னை அரவணைத்த என் ஆன்மாவை மகிழ்வித்த அந்த கருணைக் கரங்களுக்கு கோடானு கோடி நன்றி.

என் வாழ்வில் நான் பெற்ற  விலைமதிப்பில்லாத செல்வம் என் நண்பர்களே நீங்கள் தான். என்னை என்றும் ஊக்குவித்து, வழி நடத்திய  பெருந்தகை களை, காலத்தை வென்றவர்கள் நீங்கள். காலம் என்னை வென்றால் எனக்கென்ன கவலை?
விடைபெறுகிறேன்  என்  நட்பென்னும் தெய்வங் களே,   நான் மகிழ்ச்சியோடு, ஆனந்தமாக  சிரித்து விடைபெறுகிறேன். இங்கு சிந்த வேண்டி யது ஆனந்தக்  கண்ணீர் ஒன்று தான். அதுவும் நான்  நன்றி உணர்ச்சி மேலீட்டால். நீங்கள் அழத்தேவையே இல்லையே.  நான் விரும்புவது என்றும் உங்கள் புன்னகை மாறா முகங்களைத் தான்.  நீங்கள் விரும்பியவர் உள்ளத்தில்  என்றும் குடியிருக்கும்போது அங்கு மரணமே இல்லை. என்னை நினைக்கும்போதெல்லாம்  நான் எங்கோ மகிழ்ச்சியில் உங்களை இருகரம் கூப்பி  நன்றியோடு வணங்குவேன்.


Farewell My Friends
It was beautiful
As long as it lasted
The journey of my life.
I have no regrets
Whatsoever said
The pain I’ll leave behind.
Those dear hearts
Who love and care...
And the strings pulling
At the heart and soul...
The strong arms
That held me up
When my own strength
Let me down.
At the turning of my life
I came across
Good friends,
Friends who stood by me
Even when time raced me by.
Farewell, farewell My friends
I smile and
Bid you goodbye.
No, shed no tears
For I need them not
All I need is your smile.
If you feel sad
Do think of me
For that’s what I’ll like
When you live in the hearts
Of those you love
Remember then
You never die.

  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...