Tuesday, February 23, 2021

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்  --    நங்கநல்லூர்  J K  SIVAN 

சத்யகாம  ஜாபாலி கதை 


அக்ஷர லக்ஷம்  என்று கேள்விப்பட்டதுண்டா?  ஒவ்வொரு  எழுத்துக்கும்  லக்ஷம் ரூபாய் இல்லை, பொன்  கொடுத்தாலும் அது ரொம்ப ரொம்ப குறைவு. அப்படிப்பட்ட  அக்ஷரங்களை உபயோ கித் த  மஹா புருஷர்கள் இந்த புண்ய  பாரத தேசத்தில்  இருந்தார்கள். நம் காலத்தில்  அப்படி ஒருவர்  மஹா பெரியவா.  அவர் சொன்ன சில கருத்துகளை பாருங்கள். அதன் ஆழம், உண்மை பொதிந்திருப்பது புரியும்.

''குரு என்பவர் தான் நம்மை நல்வழிப்படுத்து பவர்.  முதல் குரு  அம்மா.   அப்பா அப்புறம் தான் பேசத்தெரிந்த பிறகு  வளர்ந்த பின் குரு.  அம்மாவின் கர்ப்பத்தில் இருக்கும்போது, அவள் சாப்பிடும் ஆகாரம், நீர்  மூலமாக   நாம்  உண்டு உயிர் வாழ்ந்து வளர்ந்து வெளிவந்தவர்கள்.  அவள் குணம் நமக்கும் உள்ளது.  அவள் நல்வழி யில் நடந்தால் நாமும் ஆட்டோ மேட்டிக் காக automatic நல்லவர்கள். அப்புறம்  வளர்ந்தபின் புராணம், இதிகாசம், கதைகள் சொல்லி, ஸ்தோத்ரம்  நீதி பாடல் எல்லாம் சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்திய  முதல் குரு. இது தெரிந்ததால்   ஆதி சங்கரர்  முதலில் அம்மாவை வைத்து  ''மாதா பிதா, குரு தெய்வம்'' என்று வரிசைப்படுத்தினார். 

அம்மா தான் முதல் குருஸ்தானத்தில் இருப்பவள்  என்பதற்கு இது  ப்ரமாணம். அம்மாவின் பேர் சொல்லி    ப்ரஹதாரண்யக உபநிஷத்தில்  ஏராளமான ரிஷிகளை   அடையாளம் சொல்லி இருக்கு.  சாந்தோக்ய உபநிஷத்தில் ரெண்டு ரிஷியை அப்படி காட்டி இருக்கு.

ஆசை ஒரு தீராத தாகம். ‘த்ருஷ்ணா ' என்றால் தாகம், ஆசை என இரண்டையும் குறிக்கும்  சொல். . புத்தர் ஆசையை ‘த்ருஷ்ணா' என்று  சொன்னதைத்தான் ‘தன்ஹா' ‘தன்ஹா'  என்று  பாலி மொழியில் எழுதி இருக்கிறது. 

 கிருஷ்ணனை   ‘தேவகி சுதன், தேவகி புத்ரன் ' என சொல்வது வழக்கம்.  வஸுதேவர் பிள்ளை என்பதால் வாசுதேவன் என்று பெயர்.  125 வயஸு ஆயுஸிலும் முதல் பாகத்தில் வஸுக்கள்தான் ப்ராணாதாரமாக இருப்பது. ஆனாலும் தம்மு டைய மாயையால்,  தேவகி புத்ரன் என  கிருஷ்ணன்  தம்மை ரிஷிக்குச்  சொல்கிறார்.

கிருஷ்ணாவதார  வித்து  எதுவோ அதை வஸு தேவர் மனஸிலே தரித்து தேவகியின் மனஸுக்கு அனுப்பி வைத்ததால்  பௌதிக கர்ப்பம்   இல்லா மல் மானசீக ரீதியில்  தேவகி புத்திரனாக கிருஷ் ணன் அவதரித்ததாக  பாகவதம்  சொல்கிறது. சரீர சம்பந்தத்தால் அவர்களை அப்பா அம்மா என்று  காட்டவில்லை.  என்றாலும்  தேவகி வாஸ்தவமாகவே கர்ப்பவதியாக இருந்து தான் கிருஷ்ணனைப் பெற்றாள் . மாத்ரு ஸ்தானம் அவளுக்கு  ஞாயம்.  

அம்மா பேரில் உபநிஷத்தில் அறிமுகமான  இன்னொருத்தர்  ‘ஸத்யகாம ஜாபாலர்' என்கிற  ரிஷி. அம்மாவோடேயே  இளவயதில் வசித்தவர்.  அப்பா,  சத்யகாமன்  பிறக்கு முன்பே ‘போய் '   விட்டாரோ, அல்லது  வீட்டை விட்டு  ஓடிப் போனா ரோ என்னவோ?  தன் வய

ஸொத்த பிள்ளைக ளெல்லாம் குருகுலவாஸம் பண்ணிக் கொண்டு ப்ரஹ்மசர்யம் அநுஷ்டித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து   சத்யகாமன்  தானும்  குருகுலவாசம் பண்ண  விரும்பினான்.    

அம்மாவிடம் தன் ஆசையைச் சொல்லி, குரு குலத்தில் ஆச்சார்யர் கேட்பார் என்று  தனது கோத்ரம் எது வென்று கேட்கிறான் சத்யகாமன். 

“அப்பா, கொழந்தே  எனக்கு  உன்  கோத்ரமும் தெரியலை, ஒண்ணும் தெரியலை!  வேண்டு மானால் ஒண்ணு வேணா பண்ணு. என் பேர் ஜாபாலா. என் பிள்ளையானதுனால என் பேரை வெச்சு  ஜாபாலன். ஒனக்குப் பேர் ‘ஸத்ய காமன்'னு வெச்சிருக்கு. அதனால குருகுல   ஆச்சார்யர்  கேட்கும்போது  உள்ளதை உள்ளபடி சொல்லி உன்னை ‘ஸத்யகாம ஜாபாலன்'னு தெரிவிச்சுக்கோ" என்றாள்.

ஸத்யத்தில் பற்றும், ப்ரியமும்  தான்  ''ஸத்ய காமம்''.  அந்த  தாய் மகன்  நிஜம் பேச வேண்டும் என்று  விரும்பி   மகனிடம்  இன்ன கோத்ரம் என்று பொய்யாக ஒன்றைச்  சொல்லவில்லை.   தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை. 

ஆச்சார்யர்  ஹாரித்ரும கௌதம  ரிஷியிடம் போய் ஸத்யகாமன் என்ற பேருக்கேற்ப அந்த சிறுவன்  அம்மா  சொன்னபடி  ''நான் ஸத்யகாம ஜாபாலன் என்று  பெயர் சொல்லி  நமஸ்காரம் பண்ணினான். அவனிடம் கேட்டு விஷயமறிந்த குரு  இவனே   சிறந்த   உயர் குலத்தோன் என்று  சத்ய காமனுக்கு குரு  உபநயனம் பண்ணி  வைத்து   அவரது  சிஷ்யனாகச் சேர்த்துக் கொண் டார். அம்மா  பேரில்  வம்சம் சொல்கிற வழக்கம்  பழங்காலத்தில் இருந்தது.  

சிஷ்யன் எப்படி ஸத்ய்ஸந்தனாக இருக்கணும், மானாபிமானம் விட்டு இருக்கணும், வித்யைக் காக தாஹம் கொண்டவனாக இருக்கணும் என்பதெல்லாமும்  படிப்பினையாகிறது.  அப்படிப்பட்ட, ஒருவன் விரும்பியபோது உபதேசம்  தருவது குருவுக்கும் பெருமை.  ''சான்றோர்க்குப் பொய்யாவிளக்கே விளக்கு' .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...