Sunday, December 9, 2018

YAATHRA VIBARAM



​யாத்ரா விபரம்   J.K. SIVAN 
​திருவொற்றியூர் 


           





  அம்மனும் ஐயனும் 

புராதன  சிவாலய க்ஷேத்ரம் ஒன்று சென்னையிலிருந்து 10-12 கி.மீ. தூரத்தில் இருக்கிறதே
பார்க்கவேண்டுமானால்   நேரே திருவொற்றியூர் செல்லலாம். நமக்கு முன்னால் ஒருவர்  பல காத  தூரம் நடந்தே கம்புக்கு பதிலாக  கரும்பு ஊன்றிக்கொண்டு நடக்கிறாரே  அடையாளம்  தெரிகிறதா.   ஏதோ ஒரு நாட்டுப்புற தாடிக்காரர் என்று தப்பான எடை போடாதீர்கள்.  தப்பான எடையை  ரேஷன் கடையில், மளிகை கடைகளில் போட்டுவிட்டு போகட்டும். நாம் நல்லபடியே எடை போடுவோம் அது வேறுயாருமில்லை. பட்டினத்தார். சென்னைப்பட்டினத்தில் காவிரிப்பூம் பட்டினத்தார். அங்கே நம்மை போல் ஆலய தர்சனம் செய்ய மட்டும் வரவில்லை. தனக்கே ஒரு ஆலயம் இருக்கும்படி செய்துவிட்டவர்.

ஒரு மாமா பேரும் புகழுமாக இருக்கிறார் என்றால்  அவருக்குப்  பின்னால் யாரோ ஒரு சக்திவாய்ந்த மாமி இருக்கிறாள் என்று புரியும், தெரியும் அல்லவா. இந்த தியாகராஜர் இங்கே திருவொற்றியூரில் வெற்றிக்கொடி நாட்டி சீரும் சிறப்புமாக இருக்க காரணம் திரி சக்திகளில் ஒருவளான வடிவுடை அம்மன் இங்கே அவரோடு ஆலயத்தில் அருள் பாலிப்பதால் தான். 
ஆயிரம் வருஷங்கள் வயதான இந்த ஆலயம்  பல்லவர்களால் கட்டப்பட்ட 7ம்  நூற்றாண்டு
பாடல் பெற்ற ஸ்தலம்.  பின்னர் 11ம் நூற்றாண்டு சோழர்களால் விஸ்தரிக்கப்பட்ட   ஒரு ஏக்கர் பரப்புடைய  7 நிலை கோபுர கற்கோவில்.  திருவாரூர்  தியாகராஜருக்கு  இணையானவர் திருவொற்றியூர் தியாகராஜர். ராஜேந்திர சோழனின் ஏற்பாடு.

​காஞ்சிபுரத்தை  தொண்டைமான் ​ஆண்டபோது  வண்ணன் ஒண்ணன்  என்ற ரெண்டுகுறுநில மன்னர்கள்  எதிர்த்தார்கள். ஒரு பூதம் அவர்களை ஆதரித்ததால்  தொண்டைமான் அவர்களோடு போரிட்டு  தோற்றான்.  தொண்டைமான் விரோமச ரிஷியிடம் தனது குறையை சொல்லி வருந்தினான். அவர் ஒரு தர்ப்பையை கொடுத்து  ''அரசே  நீ இந்த தர்ப்பையோடு அந்த பூதங்களை எதிர்கொள் ஜெயிப்பாய்'' என்கிறார்.  நம்பிக்கையோடு தொண்டைமான் தர்ப்பையை தூக்கிக்கொண்டு பூதத்தோடு யுத்தம் செய்தான். அவன் எறிந்த தர்ப்பை ஒரு கூறிய மழுவாகி பூதத்தை துரத்த,  அது   ''வண்ணன் ஒண்ணனுக்காக'' உயிரை விட தயாரில்லை. அவர்களையே பலகாரம் செய்துவிட்டு  தப்பி ஓடியது.  தொண்டைமான் சிவபக்தன்.  திருவொற்றியூர்  தியாகராஜ சுவாமி ஆலயத்தை புதுப்பித்தான்.   அவன் உருவாக்கியவை தான் வடிவுடை அம்மன் சன்னதி, குணாலய விநாயகர், வட்டப்பாறை அம்மன், வளர்காளி அம்மன், அருள் ஜோதி முருகன், ஆகாசலிங்கம், சஹஸ்ர லிங்கம், 27 நக்ஷத்திரங்கள் சந்நிதி எல்லாமே.  சுற்றிலும் மதில் சுவர்,  கோபுரங்கள் உருவாக்கினான்.

காசியிலிருந்து  500 சிவலிங்கங்கள் கொண்டுவந்தான். 500 பிராமணர்களை காசியிலிருந்து வரவழைத்து ஆகம சாஸ்த்ர விதிப்படி புனருத்தாரணம் செய்தவன் .
நிலங்களை மானியமாக  வேதவ்ரித்தி, பட்டவ்ருத்தி, வைத்திய வ்ருத்தி, அர்ச்சனா வ்ருத்தி என்று பங்கிட்டு கொடுத்தான்.  கோவில் வளர்ந்தது. நிறைய கல்வெட்டுகள் இருக்கிறது.
ஆதி சங்கரர் வந்த ஆலயம்.  கண்டராதித்த சோழர் விளக்குக்கு   90 ஆடுகள், இளவிலக்குகள் கொடுத்தாராம்  -- கல்வெட்டு சொல்கிறழ்து. ஆட்டுக்கும் எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. எண்ணெய் ஆட்டுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆட்டு எண்ணெய்  தெரியாது.    வலங்கை தாசிகள்  சிவனுக்கும் இடங்கை தாசிகள்  அம்மனுக்கும் இங்கே  ஆடினார்களாம்.  சங்கரர் வந்தது  ஆகர்ஷிக்க,  மாலிக்காப்பூர் வந்தது அழிக்க. சுருட்டல் மன்னன். அப்பாவி அவன். தெரிந்து கொள்ளையடித்து கெட்ட பேர் வாங்கினான். இப்போது  கும்பலாக சேர்ந்து கொண்டு தெரியாமலே பல கோவில்களில் கொள்ளையாமே. தெரியாது...

மூலவர்  மண்ணாலான  ஆதிபுரீஸ்வரர். கவசம் அணிந்தவர்.  கார்த்திகை பௌர்ணமி கவசமின்றி காட்சி அளிக்கிறார்.  புனுகு, ஜவ்வாது சாம்பிராணி தைல  காப்பு.  அம்மன் உக்கிரம்  தணிய  ஆதிசங்கரர் ஒரு யந்த்ரம் ஸ்தாபித்து  அம்பாள் சௌம்ய ஸ்வரூபி இப்போது. அம்பாள் திருபுரசுந்தரி.

"வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே."
​''அடே பக்தா, உனக்கு வேதம் ஓதிய, ப்ரவாகமாய் ஓவென்று பெருகி ஓடிவந்த கங்கையை தடுத்து சிரத்தில் ஏந்திய சிவன் திருவடி பெறவேண்டுமா? ​ உள்ளத்தில்  கள்ளத்தை  எரித்து, உடலை புலன்களை  வென்று  சாம்பலாக்கிய ஞானிகளை த்தேடி  திருவொற்றியூரில்  சேர்ந்து கொள்''.  
எங்கும் மரம் செடி கொடி , காடுகளாக  சுகந்தவனம் என்று பேர் கொண்ட திருவொற்றியூரில் இப்போது கொஞ்சம் அசந்தால்  எண்ணூர்  துறைமுகம் செல்லும் எத்தனையோ பல சக்கர லாரிகளில் ஒன்று மேலே ஏறி மோக்ஷம் அனுப்பிவிட வாய்ப்பு அதிகம். .


​​

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...