Tuesday, December 4, 2018

TAMIL FILM 1948


வேதாள உலகம்    J.K. SIVAN


1948ல்  ஏவிஎம்   செட்டியார் ஒரு படம் எடுத்தார்.  ஒரு ல் இங்கிலிஷ் பட தழுவல். பம்மல் சம்பந்தமுதலியார்,  பி நீலகண்டன் ஆகியோர் அதை நாடகமாக்கினதுதான்.   டீ.ஆர். மஹாலிங்கம், சாரங்கபாணி,  சி.டீ. ராஜகாந்தம், கே.ஆர். செல்லம் நடித்தது. 
மச்ச தேச இளவரசன்  ராஜசிம்மன் ( மஹாலிங்கம்) தனது நண்பன் தத்தாத்ரேயனுடன் (சாரங்கபாணி) வேதாள உலகம் வருகிறான். அந்த ஊர் இளவரசி ராஜீவி ராஜசிம்மன் காதலர்களாகி இன்னொரு இளவரசி மோஹனாவுக்கும் அவன் மேல் காதல். கடைசியில் மோஹ னா  விட்டுக்கொடுத்து  ராஜீவியை ராஜசிம்மன் மணக்கிறான். இது தான் கதை. ஆனால்  படம் சக்கை போடு போட்டது.  மஹாலிங்கம் பாட்டு , சாரங்கபாணி நகைச்சுவை.நடுநடுவே  லலிதா பதமினி   குமாரி கமலா நாட்டியம்.  வழுவூர் ராமையா பிள்ளை நட்டுவாங்கம் 

கருப்பு வெளுப்பு படம், ஏராளமான  மாயா ஜாலங்கள்  விசித்திர காட்சிகள்...  நிறையவே  சந்தித்திருக்கிறார் செட்டியார். கூட்டம் சேர்க்க  கடைசி சில காட்சிகளை கலரில் எடுத்திருந்தார்  கெட்டிக்கார செட்டியார்.

காலம் மாறிவிட்டால்  காட்சிகள் மாறுகிறது என்கிறோமே. இந்த படத்தை பார்த்தபோது   மழையில் வெளியே போகமுடியாமல் கம்ப்யூட்டரில்   யூ டியூபில்  பார்த்தபோது அது  எனக்கு புரிந்தது.  மழை இல்லாவிட்டால், பொறுமையாக நான் இதை பார்த்திருப்பேனா என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல்  ''மாட்டேன்''  தான்.  என்னால் அந்த நகைச்சுவையை ரசிக்க முடியவில்லை. காட்சிகளோ, நடிகர்களோ, கவரவில்லை.   1948  மனப்பக்குவம் 2018ல்  எப்படியெல்லாம் மாறிவிட்டது...நகைச்சுவையின் பரிமாணம் முற்றிலும் மாறிவிட்டதா? எப்படி என்னை அறியாமல் சில காட்சிகளை காண்பதாக நினைத்து  கண்ணயர்ந்து இருக்கிறேன். வேதாள உலகத்தை விட்டு  வேறு எந்த உலகுக்கு சென்றேனோ ?

.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...