Tuesday, December 4, 2018

CONVERSATION



புரியாத பேச்சு....J.K. SIVAN

கொசு சின்னதா இருந்தும் ரொம்ப படுத்துறது. காது கிட்ட வந்து ஒரு ராகம்.. என்ன அதுன்னு யோசிக்கறதுக்குள்ளே, மூக்குக்குள்ளே புகுந்து தும்மல் மாத்தி தும்மல். இன்ஜெக்ஷன் போடறாமாதிரி காலிலே ரெண்டு கடிக்கிறது. அதை அடிக்க காலையே அடிச்சுக்க வேண்டி இருக்கு. அதுக்குள்ளே எப்படி தான் கழுத்திற்கு பின்னாலே போய் கடிக்குமோ?

''ஒண்ணுமே புரியலே உலகத்துல '' சந்திரபாபு குரல் டிவி யில் ஹாலில் ஒலிக்கிறது. என்ன ஒரு கம்பீர குரல். வெள்ளைக்காரன் தமிழிலே பாடறமாதிரி. ஒல்லியா உயரமா முகத்துக்கு பொருந்தாத பெரிய சப்பை மூக்கு. நீள வாய். ரொம்ப எடுபடாத காமெடி... நான் ஒரு முட்டாளுங்க.. பாடிக்கொண்டு தெருவெல்லாம் போயிருக்கேன். அப்போ தெரியலே, இப்போ வெக்கமா இருக்கு. நான் முட்டாளுன்னு தெருவெல்லாம் சொல்லிண்டே பாடிண்டே போன உண்மையான முட்டாள் என்னைப்போல எவ்வளவோ பேரு தமிழ் நாடு பூரா.

என் சிந்தனை அறுந்தது. எதிரே.. வழுக்கை தலை கோபால் ராவ் வேஷ்டியை டப்பா கட்டு கட்டிண்டு வாயெல்லாம் பல்லில்லாமலேயே ஒரு வித சிரிப்பு. ஒரு கையிலே மணத்தக்காளி கீரை கட்டு. இன்னொன்று கையிலே பையில் காய்கறிகள். பொட்டலங்கள். ராவ் ரெண்டு தெரு தள்ளி இருக்கான். பால்ய சிநேகிதன். நாரதர் மாதிரி எப்போ வருவான் என்ன கலகம் பண்ணுவான்னு தெரியாது.
''ஒய் என்னாச்சு உமக்கு. மூணாம் பேஸ் அடிச்சுண்டு இருக்கு மூஞ்சி '' கோபால் ராவ் ரொம்ப கிண்டல் காரன்.
''என்னடா கோவாலு புரியாத மாறி பேசறே. நீ எந்த உலகத்திலே இருக்கே?''
''எதைச் சொல்றே நீ -- ரிசல்ட் பாத்தியா?'' எலெக்ஷன் ரிசல்ட் வந்துட்டுதே.. அதை பத்தி சொல்றான். எங்கெங்கோ .பட்டி தொட்டி எல்லாம் புது புது பேர்கள்.... கோபால் ராவ் ஒரு கட்சி பிரமாதமாக ஜெயித்து நமக்கு நல்லது செய்யப்போகிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அது கண்ணுக்கே தெரியலே.
''பெயில் ஆயிட்டோமனு வருத்தமா கோவாலு ? பாஸ் பண்ணவேண்டியவனோ, யவளோ, பாஸ் ஆயிட்டதுக்கு நீ ஏன் வருத்தப் படறே. நீ தானாகவே மாம்பழம் மேலிருந்து கைலே வந்து விழும்னு காத்திண்டிருந்தே. அவனோ அவளோ மண்ணை தோண்டி விதையை நட்டு, காத்திருந்து மரம் பெரிசாயி, மரத்தை வெட்டிட்டு, சில கன்னுகளை மட்டும் நட்டுட்டு, பழத்தை மரத்திலேர்ந்து பறிச்சுண்டுட்டான். எத்தனை வருஷம் கஷ்டப்பட்டிருப்பா இதுக்கு ? அது ஏன் தெரியலை உனக்கு?
அது சரியா?
யாருக்கு இது தெரியணுமோ அங்கே அதுக்கு தெரியாதபோது நீ என்னடா பண்ணமுடியும்?
ஏன் எனக்கு சம்பந்தம் இல்லையா?
''ஆமா ...நீ பம்மல் சம்பந்தம்? காசு இருக்கா உன்கிட்டே? அதிகாரம் இருக்கா, மனத்துணிவு இருக்கா,தைரியம் இருக்கா? மூளை தான் இருந்ததா?
''ஏன் நான் படிச்சவன் இல்லையா?''
''உன் படிப்பை உடைப்பிலே போடு. ஷேக்ஸ்பியர், காளிதாசன், கம்பன் எல்லாம் யாருக்கு வேணும்? அஞ்சு க்ளாஸ் போதும். இல்லேன்னா அதுகூட வேணாம். பிழைக்க தெரியணும். பொய் பித்தலாட்டம்,இருந்தா போதும். ஏமாத்த தெரியுமா உனக்கு? துரோகம் செய்வியா, கத்துண்டுஇருக்கியா? இனிமேயாவது கத்துக்க துப்பு இருக்கா ?''
''டேய் .. டேய்.. கோவாலு, என்ன சரமாரியான என்னென்னமோ சொல்றே. தலை சுத்தறதே.''
''திமிங்கிலம் சின்ன சின்ன ஒடச்ச கடலைக்கு பிசுக்கோத்துக்கு ஆசைப்படாது. அவ்வையாரைக்கேள். சொல்லுவா. '' ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு''
'' என்னாடா இப்படி ஒரே பூடகமா பேசறே''.
''நாடகம் பூடகமாத்தான் இருக்கணும். எல்லாமே முன்னாலேயே தெரிஞ்சா நினைச்சபடி நடக்குமா, நிறைய துப்பறியும் கதை படிக்கிறியே. குற்றவாளி யாருன்னு மூணாம் பக்கத்திலேயே தெரிஞ்சுட்டா முன்னூறு பக்கம் எவண்டா படிப்பான்?''
''என்னென்னவோ நடக்கும் , அப்படி ஆகும் இப்படி ஆகும் என்று எல்லாம் கேட்டு மகிழ் ந்தேனே.
''உனக்கு காது பெரிசு. அதான் நிறைய பூ சுத்தறதுக்கு சௌரியமா இருக்கு. கழுதைன்னு, ass , டாங்கி என்று ஏன் உன்னை சொல்றா தெரியுமா. காது பெரிசு. நிறைய பூ சுத்தலாம். உனக்கு பிடிக்குமே.''
'' சரி இப்போ என்ன நடக்கும் என்கிறே?''
''நிறைய எங்க பாத்தாலும் காசெல்லாம் பிடிச்சு பாங்கில் போட்டியே. உனக்கு எவ்வளவு கிடைச்சுது?
. பட்ஜெட் வந்ததே. உனக்கு என்ன பெரிசா கிடைச்சுது? . இத்தனை நாளா வாயை வயத்தை ஒடுக்கி நீ சேர்த்த பணத்துக்கு இத்தனை காலம் நீ வாங்கிய 10-- 9.5 பர்சன்ட் 6 பெர்சன்ட் ஆனது தான் மிச்சம். விலை வாசி எங்கயாவது இறங்கித்தா? முருங்கக்கா 10 ரூபா. முனியம்மா வீட்டுக்கு போனா சும்மா குடுப்பா ஒண்ணு'' .
''டே போறும் என்னை குழப்பாதே. இப்போ என்ன பண்ணனும் ?''
''இனிமே ஒட்டு போடுன்னு யாராவது சொன்னா நீ ஓடிப்போயிடு. உனக்கு ஒட்டு உரிமை இல்லை. ''
''அப்படின்னா?
''ஒட்டு போட்டா நியாயம் கேக்க உரிமை இல்லை ன்னு அர்த்தம்.''
''அக்ரமம் அக்கிரமம் நீ சொல்றது.
''போய் ஏதாவது ஒரு நரசிம்ம ராவ் கிட்டே கேளு. பதிலே சொல்லமாட்டார். சிங்குக் கிட்டேயாவது சொல்லு. உணர்ச்சி இல்லாம கொஞ்சமா சிரிப்பார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...