Tuesday, December 4, 2018

RAGAVENDRAR



ஸ்ரீ ராகவேந்திரர்     J.K. SIVAN 

மந்திராலய மஹான். 

                            இனி  ஜீவசமாதியில்

இது   நடந்தது  ராய்ச்ச்சூரில். தாழ்த்தப்பட்ட இனமாகக் கருதப்பட்ட ஒருவர் ராகவேந்திரரிடம் பேசுகிறார். 

அவரிடம்  ராகவேந்திரர்  ''நண்பா, இனிமேல்  நான் பூஜித்து வந்த மூல ராமருக்கு   நீயே  பூஜை செய்''
என்கிறார்.. அந்த மனிதர் நிறைய கடுகைக் கொண்டுவந்து பூஜை செய்கிறார். கடுகை விரத காலத்தில்  சேர்க்கக்கூடாது என ஒரு வழக்கம்.   அதை உடைத்து  கடுகைப் பயன்படுத்தும் வழிமுறையைக் கொண்டு வருகிறார் ராகவேந்திரர்.  அந்த பாக்கியசாலி பக்தர்  போகுமிடம் எல்லாம் ராகவேந்திரரின் பெருமைகளும் மகிமைகளும் கூடவே  தொடர்கின்றன. 
கடுகைப் பயன்படுத்தியதால் வெறுப்படையும் ஆசார்யர்களைக் கண்டிக்கிறார் ராகவேந்திரர்.

ஆதோனியில் வெங்கண்ணா என்ற  ஆடு மேய்ப்பவன் ராகவேந்திரரின் மகிமையால்  சுல்தான் மசூன் கானிடம் திவானாகிறார்.  ராகவேந்திரரின் சீடராகிறார்.  ராகவேந்திரருக்கு  பழங்கள் என்று மாம்சத்தை அளித்து   சோதித்த  சுல்தான்  அவை பழமானதை நிதர்சனமாக கண்ட சுல்தான் அவர் மஹிமை அறிகிறான்.  மன்னிப்பு வேண்டிய அவன்  உங்களுக்கு  தானமாக என்ன வேண்டும் எனக் கேட்க, ராகவேந்திரர்  மாஞ்சாலி கிராமத்தைக் கேட்கிறார். அது ஏற்கெனவே ஒரு ஹாஜிக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்றாலும், ராகவேந்திரர் அக்கிராமமே வேண்டும் எனக் கேட்க, சுல்தான் அந்த ஹாஜிக்கு வேறொரு கிராமத்தைக் கொடுத்துவிட்டு, மன்சாலியை ராகவேந்திரருக்குக் கொடுக்கிறார். அது பிரகலாதன் யாகம் செய்த இடம் என்பதால்  ராகவேந்திரர் அந்த இடத்தைக் கேட்டார்.  1671-ல் தான் சமாதி அடையும் இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். பின்னர் வேறொரு இடத்தை, தான் முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு அருகிலேயே தேர்ந்தெடுக்கிறார். முதலில் தேர்ந்தெடுத்த இடம், தனது அண்ணனின் கொள்ளுப் பேரப்பிள்ளையான வாதீந்தருக்கு இருக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார். (அப்போது வாதீந்தரருக்கு வயது 2.) தான் ஜீவ சமாதி அடையும் முன்பாக, தனது அண்ணனின் பேரப்பிள்ளையான யோகீந்திரரை மடாதிபதியாக்குகிறார்.

தேகத்தோடு பிருந்தாவனத்தில்  ஜீவ சமாதி அடையும் நாள் வந்தது.  பக்தர்கள் ஏராளமாக குவிந்தனர். அனைவரின் கண்களும் வெள்ளம் பெருகும் ஆறுகள்.   பக்தர்கள் 
 முன்னிலையில் “இந்து எனகே கோவிந்தா” என்று தொடங்கும் பாடலை இயற்றி  பாடுகிறார்.  “நாராயணா” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஜெபமாலைகள் உருள்கிறது.   அவரது கட்டளைப்படி கையிலிருந்த  ஜபமாலை மணிகள் உருள்வதை நிற்கிறதோ, எப்போது  மாலை  கையிலிருந்து நழுவி  கீழே விழுகிறதோ, அப்போது ஜீவ சமாதி பிருந்தாவன மேற்கூரையை மூடிவிடவேண்டும். அவ்வாறே, வெங்கண்ணா கடைசியாக, திறந்திருந்த  சமாதியின் உச்சி பகுதியை மூடிவிடுகிறார்.

ராகவேந்திரா சினிமாவில் கூட இந்த காட்சியை அற்புதமாக நடிகர் நடித்து  திரை அரங்குகளில் கண்ணீர் வெள்ளம். 

துங்கபத்திரை நதிக்கரையில்  ராகவேந்திரர் சமாதி அடைந்த மந்த்ராலயம் இருக்கிறது. 

ராகவேந்திரர் ஜீவசமாதி அடையும் நேரம் அவருடைய சிஷ்யர் அப்பண்ணா, துங்கபத்ரையின் மறு  கரையில் இருக்கிறார். நதியில் வெள்ளம்.  பிச்சாலயம்  அந்த ஊரிலிருந்து எப்படி மந்திராலயம் அடைவது?   குர் 

''குருநாதா,  நான் எப்படி உங்களை கடைசியாக தரிசனம் செய்வேன். மஹா பாவியாகி விட்டேனே.என் உயிர் போனாலும் போகட்டும் ஆற்றில் குதித்து உங்களை அடைவேன். உயிரை திரணமாக மதித்து ஆற்றில் இறங்குகிறார். குருநாதரின் நாம ஸ்மரணையோடு நீரில் இறங்கிய அப்பண்ணாவை ஜாக்கிரதையாக  மறுகரை சேர்க்கிறாள்  துங்க பத்ரை.   அப்பண்ணா வருவதற்குள்  ராகவேந்திரர் ஜீவ சமாதி மூடப்பட்டு விட்டது.  அப்பண்ணா சொல்லிக்கொண்டு வந்த நாம ஸ்மரண த்தில்  கடைசி ஏழு அக்ஷரம் மட்டுமே  பாக்கி 
அதை சொல்ல முடியாமல்  அப்பண்ணாவின் சோகம், துக்கம், ஏமாற்றம் தொண்டை அடைத்து விட்டது.

''குருநாதா  உங்களை கடைசியாக  பார்க்க முடியாதவனாக ஆகிவிட்டேனே''  கண்களில் நீர் பெறுக தலை சுற்ற  அரை மயக்கமாக அப்பண்ணா அங்கே நிற்க  ராகவேந்திரரின் ஜீவ  சமாதி  பிருந்தாவனத்தில் இருந்து 
“ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி”  என்று அந்த சுலோகம் நிறைவு பெறும்படியாக  ராகவேந்திரரின்  உரத்த குரல் கேட்கிறது. 

மந்த்ராலயத்தில் ராகவேந்திரர் சமாதிக்கு அருகிலேயே, அவரது அண்ணனின் கொள்ளுப் பேரனான வாதீந்திரரின் சமாதி உள்ளது. 

மந்த்ராலயம் செல்பவர்கள் முதலில் மாஞ்சாலி  கிராம தேவதை  மாஞ்சாலம்மாவை .தரிசிப்பது வழக்கம்.  கிராம தேவதை பற்றிய வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பது ராகவேந்திரருக்குத் தெரியும் . பக்தர்கள் இதை நினைவு கூறவேண்டும். ஆதோனியிலும் கிராம தேவதை வழிபாடு முக்கியமாக  கடைபிடிக்கிறார்கள்.
மீண்டும்  ராகவேந்திரரின் கடைசி அறிவுரைகள் சொல்லி முடிக்கிறேன்: 

* சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
* நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்.
* சாஸ்திரத்தை பின்பற்றாமல் தங்களைக் கடவுள் என்று கூறி அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது. சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
* கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது. கடவுளின் மேலாண்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள் தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றும் இன்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...