Tuesday, December 18, 2018

JAYADEVAR ASHTAPADHI


மஹநீயர்கள் J.K. SIVAN
ஜெயதேவர்


'வேறே வார்த்தை போடுகிறேன் கொண்டுவா....''

''வசந்த முல்லை போல வந்து அசைந்து ஆடும்.'' என்ற ஒரு பாடல் ஞாபகத்துக்கு வருகிறதா? அதில் பாடுவதற்கு முன்பு ஒரு வசனம் வரும்... இந்த புறா ஆடவேண்டுமானால் நீ பாடவேண்டும்.....'' அதை எதற்காக நினைவு கூர்கிறேன் என்றால் அப்படி தான் ஜெயதேவரும் பத்மாவதியும் வாழ்ந்தார்கள். அவர்களது ஒவ்வொரு மூச்சுமே கிருஷ்ண பக்தி தோய்ந்தது.

ஜெயதேவரின் அஷ்டபதி தாளக்கட்டுடன் கேட்பதற்கு இனிமையாக, ஆடுவதற்கு ஏற்றதாக அமைந்திருப்பதன் ரகசியம். பத்மாவதி சிறந்த நாட்டியபெண்மணி. ஜெயதேவர் சிறந்த கவிஞன். அவரது சொற்
களுக்கு அபிநயம் பிடிக்கிறாள், அவரோ அவள் அடவுக்கு, அசைவுக்கு வார்த்தைகளை செதுக்குகிறார். பொருள் நயம் கேட்கவே வேண்டாம். ராதையும் கிருஷ்ணனும் பாடி ஆடும் காட்சிகள் அங்கே அஷ்டபதியாகி
விட்டன.

கிருஷ்ணனையும் ராதையையுமே மனதில் பூரணமாக நினைத்து அவர்களது பிருந்தாவன வாழ்க்கையையே, கண்மூடி தியானித்து மனதில் கண்டு ஜெயதேவர் ஸ்லோகங்கள் தயாராகிறது.

அடிக்கடி கிருஷ்ணனுக்கும் ராதைக்கும் சண்டை, கோபம் எல்லாம் வரும். அந்த கோபம் ப்ரணய கலகம் என்று பெயர் கொண்டது.

ஒருநாள் ராதை ஸ்ரீகிருஷ்ணரிடம் கோபித்துக் கொள்வதாக ஒரு காட்சி ஜெயதேவர் மனதில் தோன்றுகிறது

ராதையின் கோபத்துக்கு காரணம் கிருஷ்ணன் முதல்நாள் வேறு ஒரு கோபியுடன் வெளியே சென்றுவிட்டு வருகிறான். அதனால் கோபித்துக் கொண்ட ராதை கிருஷ்ணனை வெறுக்கிறாள். பேசவில்லை, சந்திக்கவில்லை. கண்ணன் விடுவானா. '' ராதே உனக்கு கோபம் ஆகாதடி.'' பாட்டு அங்கே தான் முதலில் உருவாயிற்றோ? .கண்ணன் தான் சமாதான தூதுவன் ஆயிற்றே. மெதுவாக ராதாவை சமாதானம் செய்கிறான். '

'எனக்கு நீயின்றி வேறு யார் உண்டு, ஒருவரையும் தெரியாதே. என் மார்பில் இருக்கும் சந்தனமும், குங்குமமும் நீ தடவி விட்டது தான். மறந்து போயிற்றா? உங்கொப்புராணை'' என்று கிருஷ்ணன் ராதையின் தலையிலடித்து சத்தியமிடுகிறான். அவன் சமாதானம் செய்தால் ராதா ''கூல்'' (COOL) ஆக மாட்டாளா?

பழங்காலத்தில் ஒரு முரட்டு பழக்கம் உண்டாம். சத்தியம் செய்பவன் தான் சொல்வது உண்மை என நிரூபிக்க, சிவப்பாகி கொதித்தித்து ஜொலிக்கும் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை கையில் .போய் என்பதை நிரூபிப்பதற்குப் பழுக்க காய்ச்சிய இரும்பை கையில் பிடிக்க வேண்டும். கொடிய நாகம் பசியோடு ஒரு குடத்தில் விட்டிருப்பார்கள். அதில் கையை விட்டு பாம்பை தொட வேண்டும். அவன் சத்ய சந்தனாக இருந்தால் பாம்பு கடிக்காது. இரும்பு சுடாது.

ஆகவே கண்ணன் ''ராதா, நான் பாம்பு இருக்கும் சொம்பில் கையை விடட்டுமா அப்போது நீ என் பேச்சை நம்புவாயா? . அப்படியென்றால் ஒரு பாம்பு கொண்டுவா. இல்லை என்றால் ஒரு கம்பியை நெருப்பில் போடு. பழுக்க காய்ந்து சிவக்கட்டும். அதை கையில் பிடித்து சத்யம் செயகிறேன் அப்போதாவது நீ நம்புவாய் இல்லையா?'' என்கிறான்.

''அந்த கதை எல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள் கிருஷ்ணா.. நீ பாம்புப் படுக்கையிலேயே படுப்பவன். சூரியனைவிட ஒளி வீசக்கூடிய ஒரு சுதர்சன சக்கரத்தை கையில் வைத்திருப்பவன் . ஆகையால் அவற்றால் உன்னை எதுவும் செய்ய முடியாது” என்கிறாள் ராதா.

‘‘தேவர்கள் மீது சத்தியம் செய்கிறேன்,’’ என்றான் கண்ணன்

‘‘தேவர்கள் எல்லாருமே உனக்கு அடிமை. அவர்கள் எப்படி உனக்கு எதிராக பேசுவார்கள்?’’ என்றாள் ராதை.

''ராதா எனக்கு என்ன செய்வது என்றே புரிய வில்லையே. பேசாமல் ‘நான் சொல்வது உண்மை என்னை நம்பு '' என்று
உன் காலில் விழுந்து சரணாகதி செய்கிறேன்”

இந்த இடத்தை எழுதும்போது ஜெயதேவருக்கு கை வெடவெடவென்று நடுங்கியது. சர்வ ஜீவராசிகளும் சரணாகதி செய்யும் ஸ்ரீ கிருஷ்ணனை ஒரு கோபி, சாதாரண பெண், ராதையிடம் சரணாகதி செய்வதாகசொன்
னாலோ , எழுதினாலோ எவ்வளவு பாபம், பக்தர்கள் மனம் எப்படி புண்படும்?????? போதும் இதை எப்படி மாற்றுவது என்று யோசித்து பிறகு தொடர்வோம் என்று எழுதுவதை நிறுத்தினார். பனை ஓலையை பட்டுத் துணியில் சுற்றி மடித்து பூஜையறையில் வைத்துவிட்டு நீராடுவதற்காக நதிக்குப் புறப்பட்டார்.

என்னவோ தோன்றியது நதிக்கரையில் ஜெயதேவருக்கு.....திடீரென்று நீராடாமல் ஆஸ்ரமத்துக்கு திரும்பிய ஜெயதேவர், மனைவியிடம், ‘‘பத்மாவதி! நான் பாதி எழுதி வைத்த அந்த ஓலையை எடு! வேறு வரி எழுதலாம் என்று தோன்றியது. எழுதிவிட்டுப் போகிறேன்”. பூஜை அறையில் அமர்ந்தார்.

பத்மாவதிக்கு அவருடைய குரலே அன்பு குழைவுடன் இருப்பதாகத் தோன்றியது. ஓலையைக் கொண்டுவந்து கொடுத்தாள். அதை எழுதி பூர்த்தி செய்து விட்டு முன்போலவே பட்டுத்துணியில் சுற்றி ''இந்தா பத்மா, இதை பூஜை அறையில் வை. '' என்று கொடுத்து விட்டு ஆற்றங்கரைக்கு மீண்டும் ஸ்னானம் செய்ய சென்றார். நீராடியபின் நித்ய கர்மா னுஷ்டானங்களை முடித்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் எழுதுவதற்கு அமர்ந்தார்.

அப்போது .......

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...