Friday, December 28, 2018

THIRUVEMBAVAI

திருவெம்பாவை. 7    J.K. SIVAN

மணி வாசகர்

''அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.''

ஆண்டாளைப்  போலவே மணிவாசகரும், தூங்குகின்ற பெண்ணை துயில் எழுப்புபவர் .'''
இன்னுமா உனக்கு தூக்கம்.  உனக்கு இருக்கும் எத்தனையூயோ குங்கங்களில் இதுவும்  சேர்ந்திருக்கிறதோ.

இந்த சிவனைத்தெரியாதா உனக்கு.  எத்தனையோ தேவர்கள், முப்பத்து முக்கோடி பேர் என்று எண்ணி வைத்திருக்கிறார்களே, அவர்கள் எல்லோருக்கும் தெரிந்த,  எவராலும் அறிய வொண்ணா, விசித்ரன், ஈடிணையற்ற  பரமேஸ்வரன், ஆதி அந்தமில்லாத,   மூன்று லோகங்களும் புகழும்  கங்காதரனை விருப்பத்தோடு எழுப்பும் சங்கு டமருகம், மேளம்  எல்லாம்  ஒலிக்கிறதே, ஓம் நமசிவாய என்று நீயும் வாய் மணக்க அவனைப் பாட  வேண்டாமா.எழுந்திருக்க வேண்டாமா?  தென்னாடுடைய சிவனே போற்றி எங்கும் எதிரொலிக்க வேண்டாமா.  அவன் பேர் கேட்டாலே,  நெஞ்சம் உருக வேண்டாமா. எப்படி.  நெருப்பிடம்  நெருங்கும்  மெழுகு போல. அவனை எவ்வளவு பெருமையாக  என்  தலைவன், என்  துணைவன்,என் அரசன், ஆரமுதன், இன்னமுதன்  என  எல்லோரும்  வாயார பாடுகிறோம்.  அதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டு சும்மாவா படுத்திருப்பது. எழுந்து வா பெண்ணே.   இந்த   தூக்கம் எவ்வளவு பொல்லாதது.   அப்படியே ஆளை விழுங்கிவிடுகிறதே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...