Thursday, December 13, 2018

PAVAIYUM PARANAMUM

மார்கழி மஹோன்னதம்   J.K. SIVAN 



மாதங்களில் நான் மார்கழி என்று ஏன்  மாதவன் சொன்னான் என்றால் எத்தனையோ காரணம் இருந்தாலும் ஒன்று நிச்சயம்.  ஹிந்துக்களில் பலர் எங்கிருந்தாலும், அன்று விடிகாலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு ஆலயம் செல்வார்கள் என்பதே ஒரு காரணம் என்பேன். தனது  பக்தர்களை இப்படி கண்டால் பக்தவத்சலனுக்கு பிடிக்காதா?

மார்கழி குளிரில் சுடசுட மடிநிறைய பொங்கல் இப்போதெல்லாம் கொடுப்பதில்லை.  அப்படி கொடுத்தால் அது உள்ளே இறங்காத படி இருக்கலாம்.

 சிறுமி ஆண்டாளை நினைக்காமல் மார்கழி இல்லை. திருப்பாவை டிவியில், ரேடியோவில்  (அநேக வீடுகள் ரேடியோவை இழந்து விட்டன) டேப் ரெகார்டரில்  MLV,  சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ,சில வீட்டில் அரியக்குடி  ராமானுஜ ஐயங்கார் மட்டுமே,  பாவை பாடுவார்கள்.  யார் யாரோ போர்வை போர்த்திக்கொண்டு பாவையை விளக்குவார்கள்.

நான் இந்த மார்கழி முழுதும் எனது பாவையும் பரமனும் தொடரை வெளியிடுவேன். ஆண்டாள் கோதை என இருவராக பிரித்து, ஒவ்வொரு பாசுரத்துக்கும்  வடக்கே ஆயர்குடி, கிருஷ்ணன் வீடு, யமுனை பின்னணி, யில் ஆண்டாளையும் அவள் தோழிகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பி  உலவவிட்டு, அதே பாசுரத்தை வில்லிப்புத்தூரில்  கோதையின் குரலில் ஒலிக்கவைத்து, அதன் அர்த்தத்தில் அகமகிழும் விஷ்ணு சித்தரை (பெரியாழ்வார்)நமக்கு அவர் புரிந்து கொண்ட உள்ளர்த்தத்தை சொல்ல வைத்து மகிழ்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...