Wednesday, December 19, 2018

AYARPADI



யாத்ரா விபரம்:    J.K. SIVAN 

       



     சென்னையிலும் ஒரு ஆயர்பாடி 

கிருஷ்ணன் மட்டுமா கருப்பு?  நாம்  அனைத்து இந்தியர்களும் கருப்பர்கள் என்று  தான் வெள்ளைக்காரன் அடையாளம் காட்டினான்.   black town  என்பது தான் அப்புறம் George town  ஆக மாறியது. வெகுகாலம் நாங்கள்  GT  Madras   என்று தான் அட்ரஸ் சொல்வோம். இப்போது எல்லாம் சென்னைமயம்.
சென்னையிலிருந்து ரொம்ப தூரம் கிடையாது பொன்னேரி. ரெண்டு மணி நேரத்தில் போய் சேர முடியும். சொந்த வண்டியில் போகும்போது இன்னும் கொஞ்சம் சீக்கிரமே போகலாம். பொன்னேரி என்பது ஜகஜக என்று நெரிசல் உள்ள ஒரு இடம் தான். இருந்தபோதிலும் எதிரே எந்த வண்டியிலும் மாட்டிக்கொள்ளாமல் ஒரு சிறு பாலம் அடியே நுழைந்து நீண்ட தெருவில் சற்று இடப்பக்கமாக போனால் ஒருவர் சாய்ந்து நின்று நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அவர் பெயர் கரி கிருஷ்ண பெருமாள். சில கிலோ மீட்டர்கள் தான் பொன்னேரியிலிருந்து.

தலையிலே பால் சட்டி. வலது கையில் பசுக்களை விரட்டும் குச்சி. இடது கை இடுப்பில். நாலு கை சங்கு சக்ரம் எல்லாம் இங்கே கிடையாது. தரையில் கால். மற்ற கோவில்களில் போல் பீடம் கிடையாது. வலது பக்கமாக சாய்ந்து நின்று கொண்டிருப்பவர். அந்த ஊர் பெயர் அழகாக இருக்கிறது. ஆய்ப்பாடி. திரு பட்டம் சேர்த்து திரு ஆய்ப்பாடி. அட சென்னைக்கு பக்கத்திலுமா ஒரு ஆயர்பாடி.! கோப கோபியர்கள் பசு மேய்த்து வாழும் ஊர்.

இந்த கோவிலை கட்டியவர் யார் என்ற வினாடி வினாவுக்கு விடை கரிகால் சோழன். ஆகவே பால் மாறாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, அல்லது வழக்கமாக சொல்வது போல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு கட்டிய கோவில் எனலாம். கிருஷ்ணனுக்கு கரி கிருஷ்ணன் என்ற பெயரில் பாதி கரிகால் சோழனுடையது. புரிகிறதா? புற்றிலிருந்து தோன்றியவர் என்று சொல்கிறார்கள். ஒரு பெரிய புற்று  ஒன்று இருக்கிறது. இன்னும் கோவிலில் பார்க்கலாம்.

மற்ற விஷ்ணு கோவிலில் இல்லாத ஒரு சிறப்பு இங்கு என்ன தெரியுமா? இரு பக்கத்திலும் ஒருவர் என்று இல்லாமல் ஸ்ரீ தேவி பூதேவி இருவருமே அவருக்கு இடப் பக்கத்தில் நிற்கிறார்கள். இன்னொரு சங்கதி. ராம லக்ஷ்மணர்கள் எப்போதும் எங்கேயும் ஆளுக்கொரு வில் வைத்துக் கொண்டு நிற்பதை பார்த்திருக்கிறோம். இந்த கோவிலில் லக்ஷ்மணன் இரு கை கூப்பி ராமனை வணங்கி நிற்கிறார். பாரத்வாஜ மகரிஷி வழிபட்ட ஸ்தலம். தாயார் சௌந்தரவல்லி. இந்த ஒரு கோவிலில் தான் வருஷத்திற்கு ஒரு தரம் சிவனும் விஷ்ணுவும் சந்திக்கிறார்கள்.

16 கால் மண்டபம். வெளியே பெரிய ராஜ கோபுரம். ஆச்சர்யமாக கரி கிருஷ்ண பெருமாள் போலவே, எல்லா தூண்களுமே சாய்ந்து நிற்கிறது. விழுவது போல் கட்டியிருக்கிறார்கள். விழவே விழாது.

ஒரு தரம் போய் பார்க்க வேண்டியது தானே.  அதுவும் மார்கழியில் !!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...