Sunday, April 4, 2021

VATHAPI

 பிள்ளையாரப்பன்  4   --   நங்கநல்லூர்  J K  SIVAN 


  ''   வாதாபி  ஜீர்ணாபி''  

கர்நாடகாவில்   வடக்கே, பாகல் கோட்டையில் உள்ள  பாதாமி  தான்  முன்பு  சாளுக்கியர் களின்  தலைநகரமான வாதாபி.    வாதாபி  எனும் ராக்ஷஸன்  அரக்கன் அகஸ்திய முனிவரால்  அங்கே  கொல்லப்பட்டதால்  வாதாபி என்று பெயர்.   அந்தக்   கதையை சுருக்கமாக சொல்கிறேன். இந்த கதை என்  மஹா பாரத கதைகளான   ''ஐந்தாம் வேதம்'' இரு  பாக,  புத்தங்கங்களில் உள்ளது.

மகரிஷி வைசம்பாயனர்  தொடர்ந்து ஜனமேஜயனுக்கு  அவனுடைய  முன்னோர்கள் பாண்டவர்களை பற்றி சொல்லும்போது  மஹாபாரதம் முழுதும் சொல்கிறார்:

"யுதிஷ்டிரன், லோமசர், தௌமியர் மற்றும் அனைவரும் பாண்டவர்களுடன்  சேர்ந்து  வெகு தூரம்  நடந்தபின் ஒரு நாள் விடிகாலை  நைமிஷாரண்யம்  அடைந்தார்கள்.   புனிதமான அந்த இடத்தில்  பித்ருக்கள், பிராம்மணர்கள் ஆகியோருக்கு ப்ரீதி செய்தார்கள். கன்யாதீர்த்தம், அச்வதீர்தம், கோ தீர்த்தம்ஆகியவையில் ஸ்நானம் செய்தார்கள். பிரயாகை, கங்கை யமுனை சங்கமத்தில் ஸ்நானம், வேதி  தீர்த்தம், கயா, மகாநதி, பிரம்ம ஸாரா என்றெல்லாம் தேடிச்  சென்று  மனதும் உடலும் குளிர ஸ்நானம் செய்து, தேவ, பித்ரு சகல  கடன்களை யும்  ஸ்ரத்தையாக செய்தார்கள். அங்கிருந்து  சற்று தூரத்தில் இருந்த  அகஸ்தியர் ஆஸ்ரமம் சென்றார்கள். . 

'' யுதிஷ்டிரா,  இதோ பார்தாயா,  இங்கு தான் அகஸ்தியர் வாதாபியைக் கொன்றார்'' என்று லோமசர் கையை நீட்டி ஒரு இடத்தை காட்டினார்.
 'மகரிஷி   வாதாபி  என்பது யார்?  ஏன் அகஸ்தியர் அவனைக் கொன்றார் என்ற விவரம்  கூறவேண்டும்''  என்றான் கதைப் பிரியன்  யுதிஷ்டிரன்.   லோமசர் நீளமாக சொன்ன ஒரு  கதையை  இங்கே சுருக்கமாக தருகிறேன் :

''மணிமதி நகரத்தில், இல்வலன் என்று ஒரு ராக்ஷசன். அவன் தம்பி வாதாபி. ஒரு முனிவரிடம் அந்த ராக்ஷசன் ''ஸ்வாமி,  எனக்கு இந்திரன் போல் ஒரு பிள்ளை வேண்டும். அனுக்ரஹம் செய்யுங்கள்'' என்றான். அவர் அவ்வாறு வரமளிக்க  வில்லை. இல்வலன் கோபம் கொண்டு அன்று முதல் ரிஷிகள்-பிராமணர்களைக்  கண்டபோதெல்லாம்  கொல்லத்  தொடங்கினான். கொல்வதில்  ஒரு  புதிய   நாடக முறையை  பின்பற்றி னான்.  அந்த  நாடக திட்டம் என்னவென்றால்,  இல்வலன்  வாதாபியை ஒரு கூரான கொம்புகளுள்ள  ஆடாக உருமாறச்  செய்வான். வாதாபியும் நினைத்த உருமாறும்  ராக்ஷஸன் அல்லவா? ஆகவே கொழுத்த ஆடாக மாறிவிடுவான்.

இல்வலன்  ரிஷிகளை  வரவழைத்து, உபசரித்து, அவர்களுக்கு போஜனம் செய்விப்பான். அந்த ஆகாரத்தில் வாதாபி உள்ளே இருப்பான். ரிஷிகள் வயிற்றில் அவன் ஆகாரமாகச்  சென்றவுடன், ரிஷிகளுக்கு  தாம்பூல  உபச்சாரம் செயது சிரமபரிகாரம் செய்விப்பான். பிறகு   இல்வலன் '' வாதாபி வெளியே வா'' என்பான். உடனே கூரான கொம்புள்ள ஆடாக ரிஷி- முனிவர்கள் வயிற்றை பிளந்து, கிழித்துக்கொண்டு வாதாபி வெளியே வருவான். ரிஷிகள்  வயிறு கிழிந்து ஸ்தலத்திலேயே  மரணமடைவார்கள். இல்வலன், வாதாபி இருவரும் சிரித்து  மகிழ்வார்கள். இது தான் இல்வலன்-வாதாபி  ரிஷி உபசார விளையாட்டு.  இப்படியே நிறைய ரிஷிகள்  மாண்டார்கள்.

இதற்கிடையில், அகஸ்தியர் தனது  முன்னோர்  சிலர்  கல்யாணம் செய்து கொள்ளாமல்   வம்ச விருத்தி அடையாததால்   அவர்களால்  பித்ருலோகம் செல்ல முடியவில்லையே.   '' புத்''   என்கிற நரகத்தில் உழல்வதை கண்டு தவிப்பதை அறிந்து  வருத்தமடைந்தார்.    உடனே லோபாமுத்ரையை மணந்துகொள்கிறார். அவளுக்கு தேவையான ஆபரணங்களை  அளித்தால் தான் அவளை மணக்க இயலும்.   அவரிடம் செல்வம் இல்லையே?. ஒரு அரசனை அணுக, அவன்  ''மகரிஷி  நீங்கள் இங்கே   இல்வலன்  என்ற மிகுந்த   பெரிய  செல்வந்தன் ஒருவன் இருக்கிறான்  அவனிடம் செல்லுங்கள். அவனைக் கேட்டால் வேண்டிய  செல்வம்  தருவான் என கூறியதால்  இல்வல னைத் தேடிச் செல்கிறார் அகஸ்தியர்.
''இல்வலன்  இல்லம் இது தானே...?
இல்வலன்  குள்ளமாக  குண்டாக எதிரே நிற்கும் அகஸ்தியரைப்  பார்த்தான். அகஸ்தியர் நல்ல கொழுத்த  ரிஷி இன்று வசமாக நம்மிடம்  தானே வந்து  அகப்பட்டிருக்கிறார் .  அவரைக் கொல்லலாம் என திட்டமிட்டான். அவனும் வாதாபியும்   வழக்கம்போல்  அகஸ்தியரை முகமலர்ந்து வரவேற்று,  உபசரித்து போஜனம் செய்விக் கிறார்கள்.  அவருடைய உணவில் வாதாபி   வழக்கம்போல்  உள்ளே புகுந்து அவர் வயிற்றை நிரப்பினான்.
''அகஸ்திய ரிஷியே , வயிறு நிறைய உண்டீர் களா?''திருப்தியா'' என்று பவ்யமாக கேட்டான் இல்வலன்.
''ஆமாம் அப்பனே மிகச் சிறந்த உணவு கொடுத்தாய், வயிறு நிறைந்தது '' என்று வயிற் றைத்  தொட்டு  நன்றாக   தடவிக் காட்டி னார் னார் அகஸ்தியர்
 
''அப்படியா சேதி, இப்போது பாருங்கள்''   என்று சிரித்து விட்டு
 ''வாதாபி வெளியே வா!!'' என்று வழக்கம் போல் கூப்பிட்டான் இல்வலன்.
 ஒரு ஏப்பம் தான் பதிலாக அகஸ்தியரிடம் இருந்து வந்தது''
''வாதாபி, வாதாபி. வா வெளியே'' என்று கத்தினான் இல்வலன்.
''ஏனப்பா எதற்கு  இங்கு  உன் தம்பி வாதாபி யைக்  கூப்பிடுகிறாய்,  இங்கே இல்லையே.  எங்கே அவன் ?
''நீங்கள் சாப்பிட்ட உணவில் கலந்து உங்கள் வயிற்றில் கூரான கொம்புகள் கொண்ட  ஒரு  பெரிய  ஆடாக உள்ளான். இப்போது உங்கள் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வருவான்.  அதைப் பார்க்க நீங்கள்  இருக்க மாட்டீர்களே ''  என்று சிரித்தான் இல்வலன்.
'' ஓ  அப்படியா.  என் உணவாக  வாதாபி என் வயிற்றில் இருந்தானா. அடேடே. அப்படி யென்றால் உன் தம்பி  வாதாபி  ஜீர்ணாபி'' --வாதாபி ஜீரணமாகி விட்டானே. எப்படி வருவான், அவன் தான் என் ரத்தத்தில் கலந்துவிட்டானே'' என்று சிரிக்கிறார் அகஸ்தியர்.

இல்வலன் நடுங்கிவிட்டான். கைகூப்பி அகஸ்தியரை வணங்கி நான் செய்த தவறுக்கு மன்னிக்கவேண்டும். எனக்கு கட்டளை யிடுங்கள்'' என்கிறான்.

''உன்னுடைய செல்வத்தை எல்லோருக்கும் பகிர்ந்து அளித்து உன் பாபத்திற்கு பரிகாரம் தேடு'' என்கிறார்.

அகஸ்தியரும்  லோபாமுத்ரைக்கு  ஆபரணங் கள் வழங்கி மகிழ்வித்து அவர்களுக்கு  சந்ததி பிறந்து அவரது முன்னோர்கள் ''புத்'' என்ற நரகத்திலிருந்து விடுபட்டனர். வாழ்த்தினர் என்று கதை முடிகிறது.

அகஸ்தியர் ஆஸ்ரமம் அருகே பாகீரதி நதி நீண்டு ஒரு பெரிய சர்ப்பமாக மலை முகடுகளிடையே பின்னிப் பின்னி ஓடுகிறது.

மஹா பெரியவா இந்த  வாதாபி  வி நாயகர் பற்றி சொல்வதை அடுத்த  பதிவில் அறிவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...