Tuesday, April 27, 2021

SURDAS

 ஸூர்தாஸ் --  நங்கநல்லூர்   J K  SIVAN   ---


40.    மோசமானவர்களில் முக்கியமானவன் நான்....

ஸூர்தாஸ்   ஏதாவது  எழுதவேண்டும்  என்று யோசித்து  தீர்மானித்து  எழுதியவை அல்ல அவர் பாடல்கள். அற்புதமான  காட்சிகளை அவர் மனக்கண்ணால் காணவைத்து  ''இதை  அப்படியே  எழுது பார்க்கலாம்''   என்று கண்ணன் இயக்கியவை.  

குறிப்பிட்ட நேரம் என்று இல்லமால்  எந்நேரமும் அவர் மனதில் கண்ணன் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருந்ததால் இருவருக்குமே  உறக்கம் இல்லாததால்   நமக்கு நிறைய  ஸூர்தாஸ்  பாடல்கள் கிடைத்ததற்கு நான் புண்யசாலிகள்.
அவர் பேசிய மொழி நமக்கு தெரியாதது ஒரு குறையல்ல.  எந்த மஹாநுபாவனோ, பாவர்களோ, ஹிந்தி  ஆங்கிலத்தில் அவற்றை  ஒருவாறு மொழிபெயர்த்து  எழுதி வைத்து நமக்கு  நிஜத்திற்கு பதில் நிழல் கிடைத்திருக் கிறது.   இதுவே இவ்வளவு ருசி என்றால் அவர்  இயற்றிய,  பாடிய,  பிரிஜ்பாஸி, எனும்   வ்ரஜபாஷா தெரிந்தால் நாம்  எவ்வளவு பாக்யசாலிகளாக இருப்போம்.

சிலர் யுத்தத்தில் அம்புகள் துளைத்து காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தி வலியில் துடிப்பார்கள். ஆனால் சிலரோ சூர்தாசரின் கிருஷ்ண பக்தி பாடல்களின் சக்தியால் இதயம், மனம் எல்லாம் கிருஷ்ணா பக்தியால்  சல்லடைக்கண்ணாக துளைக்கப்பட்டு  ஆனந்த சாகரம்  கண்ணீரில்  பெருக  இன்பத்தில்  திளைப்பார்கள் 

சூரதாஸர் 1478ல் பிறந்தவர்.  1581-1585 கால கட்டத்தில் மறைந்தவராம். அக்பர்  காலத்தவர்  .


ஒருமுறை ஸ்ரீ வல்லபாச்சார்யர் வ்ரஜ் கிராமம் வந்தபோது  ஸூர்தாஸ் கௌகட் என்ற ஊரில் இருப்பதை அறிகிறார். ஸூ ர்தாஸ் அருகே இருந்த  சில பக்தர்கள்,  சிஷ்யர்கள்,    ''குருநாதா, ஸ்ரீ வல்லபாச்சார்யர் இங்கே வந்திருக்கிறார் '' என்கிறார்கள். கண் பார்வை இல்லாத  ஸூர்தாஸ்  ''அப்படியா, எவ்வளவு பெரிய மஹான் அவர், என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர் பாதத்தில் விழுந்து வணங்க வேண்டும் என்கிறார் ..

''ஸூர்தாஸ்  , உங்கள் கிருஷ்ண பக்தி என்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது. வாருங்கள் உட்காருங்கள் என்று அவரை கையால் அணைத்து அமரச் செய்கிறார்  வல்லபாச் சார்யர்.  

 ''சுவாமி உங்கள் வாயால் நேராக ஒரு கிருஷ்ணன் பாடல் பாடி கேட்கும் பாக்யம் எனக்கு அருளவேண்டும் '' என்று வேண்டுகிறார்.   ஸூர்தாஸ் என்னபாடினாரோ, ஆங்கிலத்தில்  எனக்கு கிடைத்தது இது.  

   சூர் தாசரைப்பற்றி  இது வரை அறியாதவர்க ளும் சரி  தெரிந்தவர்களும் சரி,   மிக ஆவலோடும்  ஆர்வமோடும்  என்னுடைய  கட்டுரைகளை படிக்கும்போது  நான் பட்ட ஸ்ரமம்  இன்ப  அனுபவமாக இனிக்கிறது. 18-20மணி நேரம் தினமும் உழைப்பவனை  இன்னும்  நேரம் கிடைக்குமா  என்று தேட வைக்கிறது. எனக்கே தெரிகிறது.  நான் நிறைய   பெரிய பெரிய  விஷயங்களை ஒரே  நேரத்தில் கையாள்கிறேன் என்று,  ஸ்ரீமத் பாகவதம், மஹா பாரதம், மகா பெரியவா,  ஸ்லோகங்கள், சூர் தாசர், கிருஷ்ண  கர்ணாம்ருதம், கீத கோவிந்தம், சித்தர்கள், ஆச்சார்யர்கள்,  தாகூர், ரமணர், விவேகானந்தர் ...திவ்ய க்ஷேத்ரங்கள், சிவாலயங்கள், ஆச்சார்யர்கள் வாழ்க்கை, சிறந்த கவிஞர்கள், எழுத்தாளர்களின் அமர படைப்புகள்  .. என்று என்னென்னவோ....  ஏதோ நம்மால்  சில நல்ல காரியங்கள் எளிமையாக தர முடிந்தால்  அதை மனப்பூர்வமாக செய்வோமே   என்ற நப்பாசை....  உடல் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது.  வயது,   விருத்தாப்பியம்  (82)   ஒரு முக்கிய காரணமாகி விட்டது.  இரும்பு மனது அதை லக்ஷியம் செய்யவில்லை... கிருஷ்ணன் ஒத்துழைக்கிறான். தொடர்கிறேன்...

சூர் தாஸர்  கண்ணை இழந்தவர் என்று நாம் தான்  சொல்கிறோம்.    அவர் கண்ணில்லா மலேயே கண்ணனை கண்ணார  அகத்தில் கண்டவர் அவர்.   அவர் கண்ணன் மேல்  ப்ரிஜ்பாஸி மொழியில் பாடியது   ஸுரஸாகர்  என்று ஹிந்தியில் இருக்கிறது.  கிருஷ்ண சமுத்திரம்.  எனக்கு ப்ரிஜ் பாஸி   தெரியாவிட்டால்  என்ன?  ஆங்கிலத்தில் படித்து  புரிந்துகொண்டு  தமிழில்  முடிந்தவரை எளிமையாக தருகிறேன்.   அப்படித்தானே  தாகூரின்  கீதாஞ்சலி, அவருடைய  அமர  கதைகளை கொடுத்தேன்.  

தன்னை முழுதாக  இழந்து  கிருஷ்ணனோடு  மூச்சாக கலந்தவர் ஸூர் தாசர். அதனால் தான் அவர்  சொற்களில் கிருஷ்ணனை நாம்  உணரமுடிகிறது.  பாரதியாரை, கம்பரை, தமிழிலே தானே அனுபவிக்க முடியும்.  நமக்கு  பிரிஜ் பாஸி தெரியாததால்  சூர் தாசரை நிறைய பேருக்கு அறிமுகமில்லை.   வடக்கே  சூர்தாஸ்  என்றால் சூரியன், துளசிதாஸ்  என்றால்  சந்திரன்,  வடுகன் கேசவ தாஸ்  என்றால்  நக்ஷத்திரம்  என்று  பக்தர்கள்  சொல்வார்கள்;

“ Kindhaun sur ko sar lagyo  kindhaun sur ki pir Kindhaun sur ko pada lagyo   Bmdhyaun sakal sarir ”

என் அப்பனே கிருஷ்ணா, என் தெய்வமே,  நான் யார் என்று உனக்கு தெரியாதா? பஞ்சமகா பாதகங்களை செய்தபாபிகளுக்கு நடுவே  நான் முடிசூடா சக்கரவர்த்தி.. நான் செய்த பாவங்களோடு  ஒப்பிட்டால் அவர்கள் அனைவருமே  கற்றுக் குட்டிகள்.  நான் கருவில் இருக்கும்போதே பெரிய மஹா பாபி.

அஜாமிளன் எனும்  கொடிய வேடுவன்,   மற்றும்  வேசி ஒருவள், உன்னையே  கொடிய விஷம் தடவிய தனது முலையில் பால் அருந்த செய்து கொல்ல  வந்த பூதகி ஆகியோருக்கெல்லாம்  கருணாசாகரமாக நீ முக்தி அளித்தாய். என்னை கவனிக்கவே மாட்டேன் என்கிறாயே?. 

எனக்கு நெஞ்சே வெடித்து  விடும் போல் இருக்கிறதே.  நான்  மறுபடியும் சொல்கிறேன் கிருஷ்ணா, நான் மஹா பாவி, கொடியவன், என்னைவிட  அதிக பாபங்கள் செய்தவன் இருக்கவே முடியாது. என் போன்றவர்களை அல்லவோ நீ அருள்  புரிந்து ரக்ஷிக்க வேண்டும்.  இன்னும்  உன் கடைக்கண் பார்வை கூட என் மேல் படாமல்  எனக்கே  அவமானம் அதிகமாகி மண்டையைப்  போட்டு விடுவேனோ என்று தோன்றுகிறது. 

பகைவனுக்கும் அருளும் பகவானே, என்னைவிட  உன் கருணையை  எதிர்பார்த்து  வாடும் ஒருவன் உண்டா சொல் ? ''    

 வல்லபாச்சார்யர்  மனம் குளிர்ந்து சூர்தாசருக்கு மஹாபாரதம், பாகவதம் எல்லாம் உபதேசிக் கிறார்.  அற்புதமாக  அவற்றை ஸ்ரவணம் பண்ணி  மனதில்  இறுக்கி பிடித்து வைத்துக் கொள்கிறார்  சூர்தாசர் அவை அத்தனையும்  ஒவ்வொரு சம்பவமாக  கவிதைகளாக  நமக்கு கிடைத்திருக்கிறதே.

 முகலாய சக்ரவர்த்தி  அக்பர்  கொஞ்சம் நல்லவன் போல் இருக்கிறது.  அப்படித்தான் அவனைப் பற்றி சரித்திரங்கள் சொல்கிறது.
   இசை ஞானம் கொண்டவன். பக்தி பாடல்களை தான்சேன் பாடிக்காட்டும் போது  ரசிப்பான். கண்களில் நீர் பெருகும் இதயம் கொண்டவன்.
ஒருநாள்  மாலை அரண்மனையில் அக்பர் முன் அமர்ந்து தான்சேன் சில பாடல்களை பாடுகி றான்.  நடுவே ஒரு பாடல்.  அது தான்சேன்  சூர்தாஸ் பாடி க் கேட்ட  அவனுக்கு பிடித்த பாடல். அது தான் மேலே  சொன்ன பாட்டு:  

அக்பருக்கு  சூரதாசரை அழைத்து  பாடவைக்க விருப்பமாகி  ஆள் அனுப்புகிறான்.   சூர்தாசர்  '
'சக்ரவர்த்தி  எனக்கு  கண்ணனை நினைத்து  அவன் எதிரே அமர்ந்து இங்கே ஆலயத்தில் பாடினால் தான்  பாடவரும் '' என்று  மறுக்கிறார். இப்படித்தானே  பிற்காலத்தில்  தியாகராஜ ஸ்வாமிகளும்  தஞ்சாவூர் மராத்திய ராஜாவிடம் எனக்கு  நீ தரும் நிதியை விட ராமன் சந்நிதி போதுமே என்று சொன்னதும்.

0 lord, 1 am the crown amongst the sinners.
The others are just the beginners
I have been born a crook.
To Ajamil, the hunter, and to the whore
■even to poison-breasted Putana you granted salvation.
You have shown favors to all but me. This hurts.
I claim, emphatically, confidently that nobdy else IS as capable of sinning as 1 have been.
Still amidst the sinners, and crooks,
I; Sur, die of shame, for not having had your favor.
Who else, deserves your grace More than I?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...