Sunday, April 4, 2021

CHANAKYA


 சாணக்கியன். -- நங்கநல்லூர் J K SIVAN -


சகலகலா வல்லவன் கௌடில்யன் சொற்கள்.
* ஒரு காரியம் முடிகிற வரை அதைப் பற்றியே புத்திசாலி கப் சிப். வெளியில் சொல்ல மாட்டான்.
* அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
* நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி யறிவு இல்லாவிட்டால் அவன் வாசனையற்ற புஷ்பம்.

* கடலில் பெய்யும் மழையால் என்ன பிரயோஜனம்? பகலில் எரியும் தீபத்தால் கரெண்ட் பில் தான் எகிறும்., வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு வேஸ்ட். நோய் உள்ளவனுக்கு கொடுக்கு கல்யாண சாப்பாடு எப்படி உதவும்? முட்டாளுக்கு கூறும் அறிவுரை இப்படி தான். அவனுக்கு கற்றுக் கொடுக்கப்போய் நமது மூளை மழுங்கிவிடும்.

*அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

* பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

*பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.

*கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

*கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

*வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புல் தரையில் மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.

*பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப் படாமல் வாழ வேண்டும்.

*नात्यन्तं सरलैर्भाव्यं गत्वा पश्य वनस्थलीम् ।
छिद्यन्ते सरलास्तत्र कुब्जास्तिष्ठन्ति पादपाः ॥
nātyantaṃ saralairbhāvyaṃ gatvā paśya vanasthalīm ।
chidyante saralāstatra kubjāstiṣṭhanti pādapāḥ ॥
*எல்லா விஷயங்களிலும் நான் வளைந்து கொடுக்க மாட்டேன் , நீதி நேர்மை, பிரகாரம் தான் நடப்பேன் என்று இருக்காதே. சில நேரங்களில் சந்தர்ப்பங்களில் கொஞ்சம் உன்னை மாற்றிக் கொள்ளவேண்டும். காட்டில் நேராக நிற்கும் மரங்கள் தான் முதலில் வெட்டப்படும். வளைந்த கோணல் மரங்கள் கோடாலிக்கும் அரிவாளுக்கும் கொஞ்சகாலமாவது தப்பும்.
कः कालः कानि मित्राणि को देशः कौ व्ययागमौ ।
कश्चाहं का च मे शक्तिरिति चिन्त्यं मुहुर्मुहुः ॥

kaḥ kālaḥ kāni mitrāṇi ko deśaḥ kau vyayāgamau ।
kaścāhaṃ kā ca me śaktiriti cintyaṃ muhurmuhuḥ ॥

*அடிக்கடி நீ சோதித்துக் கொள்ளவேண்டியது ஞாபகமிருக்கட்டும். சரியான நேரம், சரியான நம்பகமான நண்பர்கள், சரியான தகுந்த இடம், சரியான முறையில் ஈட்டும் வருவாய், சரியான விஷயத்துக்கு மட்டும் செலவு செய்தல், நமக்கு அதிகாரம் எங்கிருந்து வருகிறது என்ற ஞானம். இதெல்லாம் அவசியம்.

यो ध्रुवाणि परित्यज्य अध्रुवं परिषेवते ।
ध्रुवाणि तस्य नश्यन्ति चाध्रुवं नष्टमेव हि ॥ ०१-१३

yo dhruvāṇi parityajya adhruvaṃ pariṣevate।
dhruvāṇi tasya naśyanti cādhruvaṃ naṣṭameva hi॥ 01-13
சாசுவதமான விஷயத்தை விட்டு அழியும் சமாச்சாரங்களில் ஈடுபடுவதால் நிரந்தரமானதை மட்டும் ஒருவன் இழக்கவில்லை, சந்தேகத்துக்கிடமில்லாமல் தற்காலிகமாக அவன் விரும்பும், தேடும் அநித்ய விஷயங்களையும் இழக்கிறான்.

श्लोकेन वा तदर्धेन तदर्धार्धाक्षरेण वा।
अबन्ध्यं दिवसं कुर्याद्दानाध्ययनकर्मभिः॥ ०२- 1३

ślokena vā tadardhena tadardhārdhākṣareṇa vā।
abandhyaṃ divasaṃ kuryāddānādhyayanakarmabhiḥ॥ 02-13

எவ்வளவு அழகாக ஒளவை சொல்லி இருக்கிறாள். ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். தினமும் ஏதேனும் ஒரு ஸ்லோகமோ, அதில் பாதி வரிகளோ, கால்பாகமோ, அல்லது ஏதேனும் ஒரு அக்ஷரமோ தெரிந்து கொள்ளாம லோ, சிறிதேனும் தான தர்மமோ, ஒரு பக்கமாவது படிப்போ, இல்லாமல் கழிய வேண்டாம். ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது ஏதாவது புதிதாக கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் இருக்காதே. .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...