Friday, April 16, 2021

PESUM DEIVAM


 பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN



 ஒரு   பாம்பு குழந்தை பற்றி  மஹா  பெரியவா   தன்னுடைய   இளம் வயதில் அறிந்ததைப்பற்றி    எழுதி இருந்தது  அநேக  வாசகர்களுக்கு  அதுவும்  புதிதாக படிப்பவர்களுக்கு பிடித்திருந்தது   என்று  மகிழ்ச்சி.

மஹா பெரியவா அந்த பாம்புக் குட்டியின் கதையை மட்டும் உருக்கமாக சொல்லவில்லை!    ;எல்லா உயிர்களிடத்திலும்  பிரேமை,  அன்பு,  வாத்சல்யம் கொண்ட  உன்னத மஹான்  அவர்.  

 கொடிய விஷமுள்ள பாம்புகளையும் கூட, ரக்ஷித்த காருண்யமூர்த்தி, நம் பெரியவா….ஒரு   சம்பவம் நினைவூட்டுகிறேன்.

மஹாராஷ்ட்ராவில்  ஓரு பாழடைந்த மண்டபத்தில் பெரியவா தங்கியிருந்த .சமயம் அது.  ஒருநாள் பெரியவா முற்றிலும் அந்தர்முகமாக ஜபயோகத்திலிருந்தபோது, ஒரு பெரிய கருநாகம் அவருக்கு பின் பாங்காக குடை பிடித்து கொண்டிருந்தது…!

இன்று இதைப்  படிக்கும் நாம், ‘ஆஹா! பன்னகபூஷணா! பரமேஶ்வரா! அனந்தஸயனா! நமோ நாராயணா!…நாகம் குடை பிடிக்க லிங்கமூர்த்தியாக, ஸ்ரீமன் நாராயணனாக பெரியவா தர்ஶனம் தந்திருக்கிறார்..!‘ என்று ஸந்தோஷப்படலாம். ஆஹா! நமக்கு அப்படி அவரைப் பார்க்க பாக்யம் இல்லியே! என்று ஏங்கவும் ஏங்கலாம்.

ஆனால், அந்த க்ஷணத்தில் கன்னங்கரேலென்று, பளபளவென மின்னும் கண்களோடு, பெருஸ்ஸாக தன் படத்தை விரித்துக் கொண்டு, “ஸுப்பராயன்” பெரியவா தலைக்கு மேல் நிற்பதை நேரில் கண்ட  பெரியவாளின்  தொண்டர்களுக்கு   வியர்த்துக்கொட்டியது.  .பேச்சு வரவில்லை.  குலை நடுக்கம்.  பெரியவாளை  விஷநாகம்  தீண்டாமல் இருக்கவேண்டுமே  என்று கவலை.  

தாங்கள்  ஏதாவது  சப்தம் செய்து,  கையை காலை அசைத்தால் கூட    அந்த சின்ன அதிர்வில் 
அவ்வளவு பெரிய   கொடிய விஷநாகம் குருநாதனை தீண்டிவிடக்கூடுமே என்பதால் அலமாந்து போய் நின்றனர்!

“ஈஶ்வரோ ரக்ஷது! அவரை… அவரே…. ரக்ஷது”

பெரியவாளிடமே மானஸீகமாக ப்ரார்த்தனை பண்ணிக் கொண்டு நின்றனர்.

நல்ல காலமாக கொஞ்ச நேரம் அப்படியே படமெடுத்தாடி விட்டு, அந்தப் பாம்பு இறங்கி, அங்கிருந்த ஒரு த்வாரத்தின் வழியாக போய் விட்டது.

பெரியவா ஜபம் முடிந்து எழுந்ததுதான் தாமதம்! பாரிஷதர், அந்த த்வாரத்தை அடைக்க முற்பட்டார்.

” இரு! இரு!….என்ன பண்ற?”….

” நல்லவேளை…பெரியவா..! ஒரு பெரிய்ய நாகப்பாம்பு ! இத்தன நேரம் ஒங்க பின்னாடி தலைக்கு மேல ஜோரா படமெடுத்து ஆடிண்டிருந்துது…! பயங்கரமா இருந்துது பெரியவா! அது இந்த பொந்துக்குள்ளதான் போச்சு..! அதான் இனிமே வராம….”

அவரை முடிக்க விடாமல் பெரியவா சொன்னார்…

“அதுக்காக?   ரொம்ப நன்னாருக்கே!    நீ சொல்றது.   பாரு..! நாம என்னமோ நேத்திக்கு வந்தோம். நாளக்கே இங்கேர்ந்து போய்டுவோம்.  நாம  யாத்ரீகர்கள்.  நாம வரதுக்கு முன்னாலேயும்  அதுக்கு    அப்புறம் இனிமேலேயும்   இந்த எடம் என்னென்னவோ ஜீவராஸிகளுக்கு   .தான் சொந்த வாஸஸ்தலமா இருக்கு. .! இனிமேயும் இருக்கப்போறது! நடுவாந்த்தரத்துல நாம அதுகள் எடத்துல வந்து பூந்துண்டது போறாதுன்னு…… அதுகள் வர   போகிற  வழியை  அடைக்கணுமா.?     நம்மாத்துக்குள்ள வந்து வழிப்போக்கன்   எவனாவது பூந்துண்டவன், நாமல்லாம்… உள்ள வரப்படாதுன்னு கதவை அடைச்சா எப்டி இருக்கும்? பொந்தை அடைக்கற தெல்லாம் ஒண்ணும் பண்ணாதீங்கோ!   பேசாம  போங்கோ''    
அது போன த்வாரத்தை அடைப்பதை தடுத்துவிட்டார்.

“நமக்கு அது ஒரு ஹிம்ஸையும் பண்ணாதபோதே, “இனிமே பண்ணும்”ன்னு இப்பவே நாமளாவே…. நெனச்சுண்டு, அதுகளை ஹிம்ஸை பண்ணினா என்ன ஞாயம்?”   ரமணர்  மஹா பெரியவா  இது போன்ற மஹான்கள்   கிட்ட எல்லா ப்ராணிகளிலும் தைரியமா சொந்தம் கொண்டாடிண்டு  வரும்.  அவர்  ஒண்ணும்  அதுகளை  பண்ணமாட்டார்னு நன்னா தெரியும்.

ஒரு நாள், பெரியவா கொஞ்சம் விஶ்ராந்தியாக அமர்ந்திருந்த போது, பெரியவாளை அடிக்கடி தர்ஶனம் செய்ய வரும் ஒரு பக்தர் வந்து நமஸ்காரம் பண்ணினார்.

பெரியவா அவரிடம் ஸஹஜமாக ஏதோ பேச ஆரம்பித்தார். பேச்சுவாக்கில்.. ஸ்ரீமடத்தின் மற்றொரு பக்தரைப் பற்றி பெரியவா அவரிடம் ஏதோ கேட்டதும், அவரைப் பற்றி தூஷணை பண்ணினார்…..

யாரிடம்?…….
பெரியவாளிடமே!…..
“அம்மாடி! அவனா? அவன் ஶுத்தக் கார்கோடகனாச்சே…!..”
யார் முன்னால் என்ன பேசுகிறோம் என்பதை மறைப்பதே மாயை!….

பெரியவா அவரை அமைதியாகப் பார்த்தார்…..
“அப்போ…நீ  அவன். நல்லவன்-னு சொல்றியா?…” என்கிறார்.
பக்தருக்கோ….. பயங்கர ஷாக்! ஒண்ணும் புரியவில்லை!
“இல்ல… பெரியவா! மனுஷனுக்கு ஒடம்பு பூரா….பயங்கர வெஷம்! அதான்….. பயங்கர வெஷமுள்ள கார்கோடகன்-ன்னு சொன்னேன்…”
“அப்டியா சொன்ன?…. நா… எப்டி எடுத்துண்டேன்னா…. ஒனக்கு ப்ராதஸ்மரண ஸ்லோகம் தெரியுமோ?…”
….தெரியாது…. பெரியவா!”

“கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்ய ச
ரிதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலிநாஶனம்……

கார்கோடகன், தமயந்தி, நள   மஹாராஜா ரிதுபர்ணன்…. இவாளை நெனச்சிண்டாலே… பாபம், கலிதோஷம்…. போய்டுமாம்! அவாள்ளாம்…   அவ்வளவு   புண்யவான்களா இருக்கப்பட்டவா…! தெரியுமோ?…”

தூஷித்தவரோ…. தர்ம ஸங்கடத்தில் நெளிந்தார்!……

“ஆக…. அவன்… ரொம்ப நல்லவன்னு நீயே சொல்லிட்ட! அப்டித்தான?...”

“நா….. தப்பா, சொல்லிட்டேன்…..தெரியாம சொல்லிட்டேன்…பெரியவா!…”

  இன்னும் மஹா பெரியவா  --   நாக சம்பந்த விஷயங்கள்   பற்றி கொஞ்சம்   சொல்கிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...